#திருமுறைகாட்சி
#சம்பந்தர்அமுதம்
காட்சி - 6
(முதலாம் திருமுறை
பதிகம்: 78 பாடல். 3.)
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... ...'
என்ற ஒரு ஒரு பிரபல பாடல்
அடுத்த வீட்டு சமாச்சாரங்களை எட்டிப் பார்த்து பலவித உணர்வுகளை ஏற்படுத்தி அல்லது ஏற்படுத்திக் கொண்டு அல்லல்படுவது மனிதர்களுக்கு வழக்கம்.
காலங்காலமாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது பற்றிய ஒரு கனவன் மனைவி சம்பவம் இப்பாடலில் வரும்.
நம் மனிதர்களில் தம் வீட்டு பிரச்சனைகளை விட இது போல அடுத்த வீட்டு பிரச்சனைகளில் அதிகம் ஈடுபாடு கொள்வர் பலர் உள்ளனர்
அதுவும் அடுத்த இடத்தில் நடக்கும் சண்டை என்றால்... ரொம்ப முக்கியமான வேலையைக் கூட விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க நினைக்கும்.
நம்மால் சமாதானப் படுத்த முடியாது என்று தெரிந்தும் வீனே மூக்கை நுழைப்பார்கள் சிலர்.
இப்படி ஒரு சண்டை காட்சியும் அதை வேடிக்கைப் பார்ப்பவர்கள் யார் என்றும்
திருமுறைப் பாடல் ஒன்றில் வரும் இது பற்றிய காட்சியில் பார்ப்போம்.
நம்முடைய பக்தி இலக்கியங்களில் பக்தி மட்டுமல்லாது, ஏராளமான வாழ்வியல் யதார்த்தங்கள், தமிழ் மொழியின் இலக்கண மான்புகளும் ஏராளமாகப் புதைந்துள்ளது. அவற்றை கண்டுணர்ந்து மக்களிடம் பரவ செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் காரணத்தால் இந்த சிறு முயற்சி.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
இது மனிதர்கள் பற்றியது அல்ல.
மீன்கள் பற்றியது. மீன்களில் பல வகை உண்டு. சேற்றில் வளரும் கயல், வாளை, முதலிய பல்வேறு வகைகள் உண்டு.
கயல் சற்று சாது, வாளை சற்று முரட்டுத்தனம் உடையது. சேறு பகுதியில் குதித்து விளையாடுகிறது. கயலும், வாளையும் சேர்ந்து காணப்பட்டாலும், அவை ஒன்றுக்கு ஒன்று முட்டி மோதி போர் செய்து கொண்டிருக்கிறது.
இதன் அருகில்
ஒரு ஆண் குரங்கும் ஒரு பெண் குரங்கும் கூடி உற்று நோக்கி இந்த மீன்களின் சண்டையை மிக ஆர்வத்துடன் அதன் போக்கை வேடிக்கை பார்ப்பதற்கு அங்கே
கூடியிருந்தது.
இதோ அந்த தேவார பாடல் பற்றிய குறிப்பு.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
தமிழ் ஞானசம்பந்தர் திருவிடைச்சுரம் (திருவடி சூலம்) என்ற தொண்டை நாட்டுத் தலத்தை அடைந்து அவ்வூரின் சிறப்பு பற்றியும், அங்குள்ள இறைவரைப் பற்றியும் ஒரு பதிகம் பாடுகிறார். பத்துப் பாடல்களில் ஐந்து வகையான,
மருதம், முல்லை, பாலை, குறிஞ்சி, நெய்தல் நிலச் சிறப்புக்கைளயும் வடித்துள்ளார்
காலம் : 7ம் நூற்றாண்டு
இடம் : திருவிடைச்சுரம் (திருவடி சூலம்)
சுவாமி : ஞான புரீஸ்வரர்
அம்பிகை : இமய மடக்கொடியம்மை.
தேவாரம் : முதலாம் திருமுறை
பதிகம்: 78 பாடல். 3.
பாடல் :
ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை உடையர்
நடுஇருள் ஆடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன் மிளிர்வன கயல்இள வாளை
செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையோடு உழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.
பொருள் :
கங்கையை முடியில் வைத்த இளம் அழகர். கூற்றுவனை உதைத்தவர், நள்ளிருளில் ஆடுபவர், கொன்றை சூடியவர் இறைவர்.
இவர் வசிக்கும் எழில் மிக்க இடைச்சுரத்தில்
சேற்றில் கயல்களும், வாளை மீன்களும் முட்டிக்கொண்டு போர் செய்வதைப் போன்ற காட்சியை ஆண்குரங்கும் பெண் குரங்கும் கூர்ந்து நோக்கும்
என்று விளக்கி எழில் திகழ் சாரலில் இடைச்சுரத்தில் மேவிய ஈசனார் வண்ணம்தான் என்னே! என்று வினவுகின்றார். விளக்குகிறார்.
மந்தி - பெண்குரங்கு
ஏற்றை - ஆண்குரங்கு.
இதை மருத நிலச் சிறப்பாக கூறுவர்.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
இந்தக் காலத்திலும் அடுத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செயல்களை உற்று நோக்கும் குனம் மனிதர்களிடையேயும்
பரவியுள்ளது.
இது நல்லதா தீமையானதா என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்வதே சரியானது. இல்லையா.
யாதார்த்த வாழ்வியல் காட்சிகளை பக்தி இலக்கியத்தில் வைத்து அமைத்துள்ள ஆளுடையபிள்ளையின் சிறப்பையும் சிந்திக்க வேண்டும்.
வணக்கம்,
நன்றி.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
என்றும் அன்புடன்.
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.

No comments:
Post a Comment