Monday, October 25, 2021

ஜய்ப்பூர் - ஜந்தர்மந்தர் - SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
#JANTHARMANDIR
#ஜந்தர்மந்தர்💥* 

1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவியின் தொகுப்பாகும். நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, விண்மீன்களின் இடத்தை தடமறிவது, கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிக்காக கணிப்பு கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் என்னும் அரசரால், அவரது அப்போதைய தலை நகரான ஜெய்ப்பூர் நகரத்தில் கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும். இது அப்போதைய மொகலாய தலைநகரான தில்லியில் அவர் தமக்காக கட்டமைத்ததை ஒட்டி அமைக்கப்பட்டது. தில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களையும் சேர்த்து, இதைப் போன்று மொத்தமாக ஐந்து இடங்களில் அவர் இத்தகைய கட்டமைப்புக்களை நிறுவினார். இவை அனைத்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியதாகும். 

நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. 

ஒவ்வொன்றும் நிலத்தில் பதிக்கப்பட்ட மற்றும் 'குவிமையப்படுத்தும் கருவி'யாகும். மிகப்பெரும் கருவியான சாம்ராட் இயந்திரம் 90 அடிகள் (27 m) உயரம் கொண்டு, அதன் நிழல் ஒரு நாளின் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. அதன் முகப்புறம் ஜெய்ப்பூர் நகரின் அட்சக்கோடான 27 அலகுக் கோணமாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள இந்து சத்திரி (சிறிய விதானம்) கிரகணங்கள் மற்றும் பருவகாலங்களை அறிவிக்கப் பயன்படுகிறது. 

உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் கல் மற்றும் பளிங்கைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கருவியும், பொதுவாகப் பளிங்கின் உட்புறம் குறித்துள்ள, வான் ஆய்வு வரையறை அளவைக் கொண்டுள்ளது. மிகத் துல்லியமாக அமைந்த வெண்கல வில்லைகளும் பயன்படுத்தப்பட்டன. 1901ஆம் ஆண்டு முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் 1948ஆம் ஆண்டு ஒரு தேசியச் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 

ஜெய் சிங்கின் ஜந்தர் மந்தரின் ஊடாகச் செல்லும் ஒரு சுற்றுலா, திண்மையான வடிவவியற் கருவிகளின் ஊடாக நடந்து சென்று, வானுலகை ஆய்வதற்கான வடிவமைக்கப்பட்ட ஒரு வான் ஆய்வுத் தொகுப்பை அறியும் தனித்துவமான ஒரு அனுபவமாகும். 

இந்தக் கருவிகள் பெரும்பாலும் மிகப் பெரும் கட்டமைப்புகளாக உள்ளன. 

இவை கட்டமைக்கப்பட்டுள்ள வரையறை அளவையே அவற்றின் துல்லியத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், கதிரவனின் புற நிழலானது 30 மில்லிமீட்டர் அளவிற்குக் கூட அமைந்து சாம்ராட் இயந்திர சூரியக்கடியாரத்தின் ஒரு மில்லிமீட்டர் அளவிலான அதிகரிப்பிற்கு யதார்த்தமான முக்கியத்துவம் ஏதுமின்றிச் செய்யக்கூடும். மேலும், இத்துணை மாபெரும் அளவிற்குக் கட்டமைக்க, இதனைக் கட்டமைத்த தொழிலாளர்கள் அனுபவமற்று இருந்தனர் மற்றும் அடித்தளத்தின் அமிழ்தல் அவற்றைப் பின்னர் அணிபிறழச் செய்து விட்டது. எடுத்துக் காட்டாக, ஒரு சூரியக் கடியாரமான சாம்ராட் இயந்திரம் ஜெய்ப்பூர் நகரின் பகுதி சார்ந்த நேரத்தை இரண்டு விநாடிகள் வரை துல்லியமாக அறிவிக்கப் பயன்படுகிறது. 

சாம்ராட் இயந்திரம் எனப்படும் ராட்சச சூரியக் கடியாரம் (உச்சக் கருவி) உலகிலேயே மிகப் பெரிதான சூரியக்கடியாரமாக 27 அடி உயரத்தில் நிற்கிறது. பார்வைக்கு இதன் நிழல் ஒரு நொடிக்கு 1 மில்லி மீட்டர் அல்லது ஒரு நிமிடத்திற்கு கையின் பரப்பளவு (ஆறு செண்டிமீட்டர்) அளவு நகர்கிறது. 

பார்வையாளர்கள் பலருக்கும் இது பரவசமான அனுபவமாகும். 

இன்று, இந்த வான் ஆய்வுக்கூடம் புகழ் வாய்ந்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இருப்பினும், உள்ளூர் வானவியலாளர்கள், அவர்களது இத்தகைய அதிகாரம் கேள்விக்குறியதாக இருப்பினும், உழவர்களுக்குப் பருவ நிலையை முன்னறிவிக்க இன்னமும் இதனைப் பயன்படுத்துகின்றனர். 

வானவியல் மற்றும் வேத காலத்து சோதிடவியல் மாணவர்கள் இந்த ஆய்வுக் கூடத்தில் சில பாடங்களைக் கற்கிறார்கள். வேத உரைகளைத் தவிர, வேத காலத்து கருத்தாக்கத்தின் இன்னமும் நடப்பில் இருப்பதான ஒரே மாதிரிக் கட்டமைப்பு என்றும் இந்த வான் ஆய்வுக் கூடத்தினைக் கூறலாம். 

இராம் இயந்திரம் போன்ற சிறிய கருவிகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டமைப்பு வடிவமைப்பு புதுமை மற்றும் செய்முறை ஆகியவற்றில் புதுமையைப் பறை சாற்றுகின்றன.
💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. 

பயண அனுபவக் குறிப்புகள்: 

ஜந்தர்மந்தர், HAWA MAHAL, CilTY PALACE இந்த மூன்று இடங்களும் ஒரே இடத்தில் அருகருகே உள்ளன. மூன்றுக்கும் ஒரே இடத்திலோ அல்லது, அந்தந்த கட்டிங்களின் முன்புறமோ
நுழைவு கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். Aadhaar Card வைத்துக் கொள்வது நலம். City Palace நுழைவுக் கட்டணத்தில் முதியோருக்கு சலுகை உண்டு. 

அருகில்,  Car, Bus பார்க்கிங் ஏரியா இருப்பதால், வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு நமக்கு பொது instruction கொடுத்துவிட்டு - எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு - பார்க்கிங் இடத்திற்கு வந்து விடசொல்லு விடுகிறார்கள். நாமும் அனைத்து இடங்களையும் நடந்தே சென்று பார்த்துவிட்டு, City Palace அருகில் உள்ள parking place க்கு வந்துவிடலாம்.  சுற்றிப் பார்த்துவிட்டு சிலர் Auto விலும் வந்து சேர்ந்துவிடுகிறார்கள்.
#ஜந்தர்மந்தர்:
அக்காலத்தில், இந்தியர்களின் வானியல் மதிநுட்பம், திறனை நிச்சயம் நாம் உணர இந்த இடங்களை சென்று அவசியம் காணவேண்டும். 

ஜந்தர்மந்தர் நுழைவுக்கட்டணம் ரூ 50/- அனைவருக்கும். 

கட்டிடங்கள் பல்வேறு கணக்கியல் கோணத்திலும் வடிவங்களிலும் இருப்பதால், நிச்சயம், இளைஞர்கள், மாணவர்கள் அவசியம்  Guide உடன் சென்று பார்க்க வேண்டிய அவசியமான இடம். 

ஒரு சிறிய அலுவலகம், Museum, வழிகாட்டிட Video காட்சிகள் எல்லாம் அமைத்துள்ளனர். 

ஒரு சிறிய காலபைரவர் ஆலயம் ஒன்றும் உள்ளது. 

சுற்றிப் பார்த்து வரும் இடத்தில் ஒரு Restarant மற்றும் Rest Room வசதியும் செய்துள்ளனர். 

இந்தியாவின் பாரம்பரிய முக்கிய சுற்றுலா இடங்களில் இது வியக்க வைக்கும் இடம்.
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்


ஜெய்ப்பூர் - ஜல்மகால் - SPLENDORS OF INDIA

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
#JALMAHAL
#ஜல்மகால் 💥* 

#ஜல்மகால் அல்லது நீர் அரண்மனை :

 இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். ஜல் மகாலை ஜெய்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய்சிங் 18ம் நூற்றாண்டில் நிறுவினார். 
ஜெய்ப்பூர் - தில்லி நெடுஞ்சாலையில், ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் ஜல் மகால் உள்ளது.
300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன் சாகர் ஏரியில் அமைந்த நீர் அரண்மனை, இராசபுத்திர - முகலாயக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. 

ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரன்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவும், அதிக பட்சமாக 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும். 

ஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது. 

ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், 23.5 சகிமீ பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.
ஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 
4-9-2021

மிகப்பெரிய எரியின் நடுவில் அமைக்கப் பட்டுள்ள அரண்மணை என்பதால் அங்கே செல்ல முடியவில்லை.

கரையிலிருந்து படம் மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். நடுவில் உள்ள அரண்மனைக்கு செல்ல அனுமதியும் இல்லை.
கரை ஓரம் மிகப்பெரிய சுற்றுலா இடமாக உள்ளது, அரண்மனையை பின்னால் வைத்து உடனடி புகைப்படம் எடுத்துத் தருவதற்கு ஏராளமானோர் உள்ளனர். 

ராஜபுதன ஆடைகள், வண்ணத் தொப்பிகள் அணிந்து அனைவரும் படம் எடுத்துக் கொள்கின்றன.  
சாலை ஓரக்கடைகள் ஏராளம். பலவித பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் அளவில் நீள பாதை ஓரத்தில் இவைகள் நடைபெறுகின்றன. 

பிரதான சாலையை ஒட்டியே இருப்பதால், வாகனங்களை ஓரமாக நிறுத்தி விடுகிறார்கள். நல்ல சுற்றுலா இடமாக உள்ளது. 

இதைப் பார்த்துவிட்டு City யில் உள்ள பிரதான Hand Crafts கட்டிடத்தின் உள்ளே சென்று மதிய உணவு உண்டோம். 

பளிங்கு கற்களால் ஆன சிலைகள் விற்கப்படும் இடம். இந்த செய்யப்படும் விதம் கண்டோம்.
Screen Print செய்யும் பகுதி, விற்பனை பகுதியில் பெரிய அளவில் கைவினை பொருட்கள், துணிகள் கடை இருந்தது.
சால்வைகள், போர்வை, கம்பளி ஆடைகள், வேட்டி, புடவைகள், துண்டு, சிறிய பெரிய கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஜெய்ப்பூர் - அமர்கோட்டை - SPLENDORS OF INDIA - Part 2.

SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR  CITY TOUR
#AMERFORT
4-09-2021 

#அமர்கோட்டை   / ஆம்பர்கோட்டை💥* 
பகுதி - 1

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில்
ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆம்பர் / ஆமேர் எனும் ஊரில், ஆரவல்லி மலைத்தொடரில் மாதோ ஏரியுடன், அரண்மனைகளுடன் கூடிய ஆம்பர் கோட்டை அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் – தில்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஆம்பர் கோட்டை உள்ளது. 

மலை உச்சியில் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும்.சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது. 

பாம்பு வடிவ படிக கற்களுடன் கூடிய ஆம்பர் கோட்டையின் முன்புறத் தோற்றம்
கட்டிய காலம்1592 

மணற்கல் மற்றும் பளிக்குக் கல்
ஆம்பர் கோட்டை பல வடிவ பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. 

கோட்டை பல அரண்மனைகளும், ஒரு ஏரியும் கூடியது.   இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது. 

கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை 

திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை,
திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, 
கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , 
செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை 

என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது. 

இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது. 

ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையில் கணபதி ஆலயம், நுழைவாயில் அருகில் உள்ளது; 
சிலா தேவியின் உருவச்சிலை முக்கியமானது. 

பவானியின் பல்வேறு காட்சிகளுடன் வெள்ளிக் கதவு இருக்கிறது
பவானி எனும் அம்பாளின் பெயரால் இக்கோட்டைக்கு ஆம்பர் கோட்டை எனும் பெயராயிற்று என்றும் குறிப்பிடுகின்றனர். 

துவக்கத்தில் ஆம்பர் கோட்டை மீனாக்கள் எனும் மீனவ குலத்தவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. இப்பகுதியை மீன்னாக்களிடமிருந்து கைப்பற்றி  முதலாம் ராஜா மேன்சிங் எனும் இராஜபுத்திர மன்னரால்  1550 முதல் 1614 வரை ஆளப்பட்டது. 

💥*தகவல்கள் உதவி:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 

அரண்மனை பகுதிகளை முழுதும் சுற்றிக் காட்ட வழிகாட்டிகள் உண்டு. அவர்களுக்கு தனி கட்டணமும் உண்டு. 

நுழைவுக்கட்டனம் ரூ 50/ அனைவருக்கும்.
வெளிநாட்டவர் சுற்றிப் பார்க்கத் தனிக்கட்டணம். மாணவர்களுக்கு கட்டண சலுகைகளும் உண்டு. 

ஜெய்ப்பூரில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இவ்வூர் வரை பேருந்தில் கொண்டு வந்து விட்டார்கள். 

இவ்வூரிலிருந்து மலைமேல் இருக்கும் கோட்டைப் பகுதிக்கு Share Auto / ஜீப் மூலம் செல்ல வேண்டும். நிறைய Autos / ஜீப் உள்ளது. சுமார் 8 பேர் வரை ஏற்றிச் செல்கிறார்கள். போக வர மொத்தம் 500 ரூபாய்க்கட்டணம். 8 பேரும் பிரித்துக் கொள்ளலாம். 

சுமார் காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை சுற்றிப் பார்த்தோம்.
நான்கு மாடிகள் உள்ள கோட்டை.
பகுதி பகுதியாக கீழ்தளம் அமைத்துள்ளார்கள். 

நுழைவு பகுதி, வரவேற்பு பகுதி, பொதுமக்கள் அரங்கு, முக்கிய விருந்தினர் அரங்கு, மகளீர் இருப்பிடங்கள் என்று பல பகுதிகள் உள்ளன. மாடிக்குச் செல்ல குறுகிய படிகள் உள்ளன. சரிவான பாதைகளும் உள்ளன. 

எல்லா இடங்களும் சிவப்பு மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
வண்ண வண்ண ஓவியங்கள், மற்றும் அழகிய அமைப்பில் மார்பிள் கற்கள் ஏராளமாக உள்ளன.  

பெண்கள் பகுதியில் தனி துளசி மாடம், வழிபாடு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிலாதேவி ஆலயம் என்று முன்புறத்தில் சிறிய ஆலயமும் உள்ளது. வெற்றிக்கு வழிவகுத்ததால், ராஜா இதை வழிபட்டு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வந்தார். 

எல்லா அறைகளும் காற்றோட்டம், வெளிச்சம் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

கோட்டை வாயில் குறுகிய சிக்கலான அமைப்பில் உள்ளதால், வரும் எதிரிகளை எளிதாக கண்டு, அழிக்க பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கும், குகைகள் இருக்கின்றன. 

அக்கால கழிப்பறை கட்டிட அமைப்புகள் உட்பட அனைத்து பகுதிகளும் அப்படியே உள்ளன. 
சில இடங்கள் பலவித பழமையான பொருட்களை அப்படியே காட்சிக்கு வைத்துள்ளனர். 

மிகவும் வயதானவர்கள், அரண்மணை பகுதியில் எல்லா இடங்களுக்கும் செல்வது சிரமம். 

எனவே, முன் பகுதியில், தரைத்தளத்தில் உள்ள அரண்மனை Hall முதலியவற்றைப் பார்த்துவிட்டு திரும்புகின்றனர். 

ஆடைகள், மணிகள், பலவிதமான கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் சிலவும் இருக்கின்றன. 

புகழ்பெற்ற ராஜஸ்த்தான் உடைகளை உடுத்தியும், தலைத் தொப்பி முதலியவைகளை அணிந்து கொள்ளச் செய்தும், புகைப்படம் எடுத்துக் கொடுக்கிறார்கள். 

அரண்மனை பின்னனியில் ராஜபுதன ஆடைகளை அணிந்து படம் எடுத்துத் தருவதற்கு ஏராளமானோர் இருக்கின்றனர். 

ரூ 20 முதல் ரூ 200 வரை கட்டணம் செலுத்தி, ஆடைகளையும், தொப்பிகளையும், ஆண்கள், பெண்களுக்கு விதவிதமாக அணிந்து கொண்டு படம் எடுத்துக் கொள்கிறார்கள். 

அதிக வெய்யில் இருப்பதால், சிறிய அழகிய அக்கால அமைப்பில் அழகிய வண்ண குடைகள், வண்ண தொப்பிகள் விற்பனைகளும் நடைபெறுகிறது.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


ஜெய்ப்பூர் - SPLENDORS OF INDIA - Part 1

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#JAIPUR
4.9.2021 
பகுதி - 1

ஜெய்ப்பூர்💥* 

செய்ப்பூர் அல்லது ஜெய்ப்பூர் (Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது. 

முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் ஆம்பர் இராச்சிய மன்னர் இரண்டாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில், 1727ல் ஜெய்ப்பூர் நகரம் நிறுவப்பட்டது. 

ஜெய்பூர் இராச்சியம் (Jaipur State) 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர். 

ஜெய்பூர் இராச்சிய மன்னர்கள் முதலில் ஆம்பர் கோட்டையைக் கட்டி இராச்சியத்தை நிர்வகித்தனர். இராச்சியத்தின் பாதுகாப்பிற்காக, பின்னர் தலைநகரத்தை செய்ப்பூர் 
நகரத்திற்கு மாற்றி ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை கட்டினர். மேலும் ஹவாமஹால், ஜல்மகால் மற்றும் ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) முதலிய அழகிய கட்டிடங்கள் நிறுவினர்.
மேற்கு இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். 

#பயணஅனுபவக்குறிப்புகள் 

4.09.2021 2.30.AM.
DURGAPURA Railway Station
#GEETHABHAWAN
3.09.2021 அன்று ஜோத்பூரிலிருந்து புறப்பட்டு 4-09-2021 அன்று விடியர்காலை 2.30 மணி அளவில் ஜெய்பூர் மிக அருகில் உள்ள DURGAPURA Railway Station வந்து சேர்ந்தோம். 

இங்கிருந்து #கீதாபவன் GEETHA BHAWAN என்ற இடத்திற்கு பஸ்ஸில் வந்தோம். 

இது ஒரு Trust க்கு சொந்தமான இடம். இங்கு வந்து தங்கினோம். 
இங்கு சுமார் 3 பெரிய Hall கள் உள்ளன. 
இங்குதான் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர். 

10 தனி அறைகளும் இருக்கின்றன.
அதில் ரூ 1500 கொடுத்து 4 பேர் தங்கிக்கொண்டோம். 

காலையில் எழுந்து குளித்து 8.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலா இடங்களான,
1. #அமர்கோட்டை/ஆம்பர்கோட்டை💥*
2. #ஜல்மகால்
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு நகர் பகுதியில் உள்ள Handicrafts வளாகத்தில் மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் மதியம் முதல் மாலை வரை
3. #ஜந்தர்மந்தர்
4. #ஹவாமஹால்
5. #நகரஅரண்மனை
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு
மீண்டும் Geethamahal வந்து இரவு தங்கி 5.09.2021 காலை 8.30 அளவில் புறப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள
#பிர்லா மந்திர்,
#கணேஷ்மந்திர் , #துர்க்காமந்திர்
முதலிய இடங்களைப் பார்த்துவிட்டு,
DURGAPURA Railway Station வந்து மதியம் #உதயப்பூர் புறப்பட்டோம். 

பொதுவாக ஜெய்பூர் நகரத்தில் காணப்படும் பெரும்பாலான கட்டிடங்கள் வீடுகள், வணிகக் கட்டிடங்கள் அப்பகுதியில் கிடைக்கும் சிவப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும், சிவப்பு மார்பிள் கற்களால் இருப்பதால், இவ்வூரை Pink City என்று கூறிப்பிடுவது பொருந்தும்.
இந்து வழிபாட்டு ஆலயங்கள் சிறிய பெரிய அளவில் ஏராளமாக இருக்கின்றன.
பிரதான மற்றும் குறுகிய சிறிய சாலைகளிலும் சிறிய சிறிய இந்து வழிபாட்டு ஆலயங்கள் இருப்பதையும், மக்கள் வழிபாடு செய்து வருவதையும் கண்டோம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, October 13, 2021

ஜோத்பூர் சுற்றுலா- பதிவு - 4 உமைத்பவன் அரண்மனை

ஜோத்பூர் சுற்றுலா 
பதிவு: 4
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR

பயண அனுபவ குறிப்புகள்:

மெஹ்ரென்கார்ஹ் கோட்டை சுற்றிப் பார்த்த பின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடங்களையும் பார்த்தோம் அன்று மதியம்:
3.9.2021 மாலை: 3.00 - 5.30
மதிய உணவிற்குப் பிறகு அடுத்து சென்ற இடம்:
*⚛️
#உமைத்பவன் அரண்மனை:

🏢இந்தியாவின் அதிக கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரண்மனைகள் பலவற்றுள் மிகவும் அண்மைகாலத்ததாகவும் இருக்கிறது. இதன் ஏராளமான கலை வேலைப்பாடு நினைவுச்சின்னமானது.

💒தற்போதும் அங்கு ஒரு அரசர் வாழ்ந்து வருவது போன்ற கற்பனையை நமக்கு ஏற்படுத்துகிறது.

⛪ஒரு நீண்ட பஞ்ச காலத்தின் போது பொது நிவாரணம் மற்றும் பணியாளர் செயல்திட்டமாக இந்த அரண்மனைக் கட்டப்பட்டது.

🏢அரண்மனையின் கட்டுமானப் பணியின் போது ஒரு மில்லியன் சதுர அடிக்கு (90,000 m²) மேலான தரமான சலவைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சிட்டார் மணற்கல் என அழைக்கப்படும் ஒரு சிறப்புவகை மணற்கல் அரண்மனைக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அது ஒரு சிறப்பான விளைவைக் கொடுத்தது. இந்தக் காரணத்திற்காக உள்ளூர் மக்களால் இது சிட்டார் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது.

💒இதன் கட்டமைப்பின் பாணியானது அழகான மேல்மாடம், கவர்ச்சிமிக்க முற்றங்கள், பசுமைத் தோட்டங்கள் மற்றும் மதிப்புவாய்ந்த அறைகளுடன், இந்தோ-சாராசெனிக் கட்டடக்கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

🏬இந்தச் செயல்திட்டத்திற்கு 15 ஆண்டு காலங்களுக்கு மேல் (1929-1943) 3,000 கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த அரண்மனையைக் கட்டிய மகாராஜா உமைத் சிங்கின் (1876-1947) பெயரே பிறகு இதற்கு இடப்பட்டது.

⛪இவர் கட்டடக் கலைஞர்களுக்கான பிரிட்டிஷ் ராயல் கல்வி நிறுவனத்தின் அவைத்தலைவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது அரசக் குடியிருப்பு, பாரம்பரியமானத் தங்கும் விடுதி மற்றும் அருங்காட்சியகம் எனப் பிரிக்கப்பட்டது. இது மொத்தமாக 347 அறைகளைக் கொண்டுள்ளது. இது உலகத்தின் மிகப்பெரிய தனியாளர் குடியிருப்பாகும். பழங்கால அறைக்கலனுடன் இங்குள்ள 98 குளிர்சாதன அறைகளும் நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியில் உள்ளதைப் போன்று அனைத்து வசதிகளும் இக்குடியிருப்பில் உள்ளன.

#பயணஅனுபவக்குறிப்புகள்

♻️ரயில்வே நிலையத்திலிருந்து இந்த அரண்மனைக்கு Bus ல் சென்றோம்.
🔆சாலையிலிருந்து உயரமானப் பகுதியில் இந்த அரண்மனைக் கட்டிடம் உள்ளது.
🔆இங்கிருந்து ஜோத்பூர் நகர் மிக அழகியதாக தெரிகிறது.
🔆அரண்மனையின் ஒரு சிறுபகுதி மட்டும் Museum ஆக மாற்றப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் ரூ 30 சிறுவர்களுக்கு ரூ 10ம் வசூலிக்கப்படுகிறது.

🔆அரண்மனையில் ஒரு பெரிய Hall மற்றும் ஒரு பகுதியில், அரசர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்கள்.
🔆அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள், முக்கியமான நடுவாயில் உட்பட TAJ COROMANDEL HOTEL நிறுவனத்திடம் உள்ளது.
🔆சுற்றிக் காண்பிக்க Guideகளும் இருக்கிறார்கள். Guide charges தனி.
🔆வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள 🔆பெரிய புல் தரை அழகியாய் பராமரிக்கப்படுகிறது.
🔆அரசர்கள் உபயோகித்த பல்வேறு, பழமையான கார்களை அணிவகுத்து வைத்துள்ளார்கள்.
🔆ஒரு சிறிய உணவுக் கடையும் உள்ளது.

💥இதைப் பார்த்தபின்பு ரயில்வே நிலையம் வந்து அன்று மாலை ஜெய்ப்பூர் புறப்பட்டோம்.

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR

*⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=6352697404805463&id=100001957991710


ஜோத்பூர் சுற்றுலா - பதிவு - 3 JASWANTTHADA - ஜஸ்வந்தாடா

ஜோத்பூர் சுற்றுலா  
பதிவு: 3
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR 

பயண அனுபவ குறிப்புகள்:

மெஹ்ரென்கார்ஹ் கோட்டை சுற்றிப் பார்த்த பின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடத்திற்கு சென்றோம். 

#JASWANTTHADA
*⚛️
#ஜஸ்வந்த்தாடா 

⚜️'ஜோத்பூரின் தாஜ்மகால்',  என்று அழைக்கப்பட்டு வரும் இவ்விடம் ஒரு கட்டடக்கலை சார்ந்த
ஒரு நினைவுச்சின்னம் 1895 ல் காலம் சென்ற மகாராஜா இரண்டாம் ஜஸ்வந்த்சிங் என்பவருக்காக, அவர் மகன் மகராஜா சர்தார் ஆட்சிகாலத்தில் வெள்ளை  பளிங்குனால் கட்டப்பட்ட மிக அழகிய, பிரமிப்பான நினைவிடமாகும்.
1899 - 1906ல் கட்டப்பட்டது. 

⚜️இந்த நினைவுச்சின்னம் முழுவதும் கடுஞ்சிக்கலான சிற்பப் படைப்புகளுடன் சலவைக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் மிகவும் மெலிதாகவும் சிறப்பாகப் பளபளப்பாக்கப்பட்டும் உள்ளன. அதனால் சூர்யோதயத்தின் போது அதன் மேற்பரப்பு முழுவதும் நடனத்தைப் போன்ற மிதமான அழகொளியை பிரதிபலிக்கின்றன. 

🔆இந்த நினைவுச்சின்னத்தினுள் இரண்டு சமாதிகளும் உள்ளன. மகாராஜாக்களின் படங்கள் வைக்கப்பட்டும், வணங்கப்பட்டும் வருகின்றன. 

⚜️ஒரு குன்று போல இருக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி நுழைவிடம் வரை உள்ளது. 

⚜️மேற்கு புறத்தில் சிறிய குளம் ஒன்றும் உள்ளது. 

⚜️இந்த இடங்களை அழகிய பூங்கா போன்று வடிவமைத்துப் பராமரித்து வருகிறார்கள். 

⚜️ராஜபுதன மகாராஜாவின் வாரிசுகளும் இங்குதான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இங்கிருந்து, மெகரான்கார்க் கோட்டையும் காட்சியளிக்கின்றது. 

⚜️இந்த ஜஸ்வந் தாடா என்னும் இடத்தின் நுழைவுவாயிலில், குதிரையுடன் இருக்கும் மகாராஜா சிலை அற்புத வடிவமைப்பு. 

⚜️தற்போது உள்ள இந்த மகாராஜாவின் அரச வாரிசு குடும்பம் இதை பராமரித்து வருகிறது. 

⚜️1995 வரை மாநில அரசின் கட்டுப்பாடுகளில் இருந்த இவ்விடத்தை மெகரான் கார்க் மியூசியம் டிரஸ்ட் அமைப்பு  தற்போது எடுத்து பாதுகாத்து வருகிறது. 

⚜️நுழைவுக்கட்டணம் உண்டு ரூ 30/- அனைவருக்கும். Guide வேண்டுமென்றால் தனி கட்டனம் கட்ட வேண்டும். 

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால். 

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR

ஜோத்பூர் சுற்றுலா - பதிவு - 2. மெஹ்ரென்கார்ஹ் கோட்டை

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR 
(03.09.2021 FRIDAY)
பதிவு : 2
ஜோத்பூர் நகர் சென்று நாங்கள் கண்ட சுற்றுலா இடங்கள்:
*⚛️
1. மெஹ்ரென்கார்ஹ் கோட்டை
MEHRANGARH FORT and MUSEUM 

⚜️சோத்பூர் நகரத்தின் புறநகர்பகுதியில் 125 மீ உயர மலைக்குன்றின் மீது தடித்த சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. அமைந்துள்ளது. சிறப்புவாய்ந்த மெஹ்ரன்காஹ் கோட்டையானது (சோத்பூர் கா கிலா), இந்தியாவின் மிகவும் கம்பீரமான மற்றும் பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். 

⚜️ கோட்டையின் உட்புறம் ஏராளமான அரண்மணைக் கட்டிடங்கள் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. 

⚜️ இந்தக் கோட்டை முதலில் ரத்தோர் குலத்தலைவர் ஜோத்பூரை நிறுவிய ராவ் ஜோதாவால் 1460ல் தொடங்கப்பட்டது. எனினும் பெருமளவில் இந்தக் கோட்டையானது ஜஸ்வந் சிங்கின் (1638-78) காலத்தில் கட்டப்பட்டது.
இந்தக் கோட்டையின் சுவர்கள் 36 மீ உயரம் வரையிலும் 21 மீ அகலத்திலும் உள்ளன. இவை கொஞ்சம் நேர்த்தியான அழகுடையக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. 

⚜️இந்தக் கோட்டையின் அருங்காட்சிய இல்லங்களானது; மூடு பல்லக்குகள், அம்பாரிகள், அரச தொட்டில்கள், நுண்ணிய ஓவியங்கள், இசைசார் கருவிகள், ஆடைகள் மற்றும் அறைகலன்களுடன் ஒரு நேர்த்தியான தொகுப்புகளைக் கொண்டுள்ளன. 

⚜️ மெஹ்ரன்காஹ் கோட்டையின் மதிற்சுவர்கள் மிகச்சிறந்த காப்பக பீரங்கிகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அது நெஞ்சை அள்ளும் நகரத்தின் இயற்கைக்காட்சியையும் கொண்டுள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள்
🔆நாங்கள் ரயில்வே நிலையத்திலிருந்து தனித்தனி பேருந்துகளில் இந்த இடத்திற்கு சென்றோம். இது ஒரு உயரமான மலைக்குன்று பகுதி பேருந்துகள், மற்ற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஒழுங்குமுறையில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

🔆பொதுவாக, இந்த வளாகம் முழுவதும்,
security நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
எல்லா சுற்றுலாத்தலங்களும் அந்தந்த Trust மூலம் தனியார் Security வசதியுடன் கட்டுப்பாட்டுடன்தான் உள்ளது. 

🔆அரண்மனை வாசல், Car/Bus parking Area விலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு சாய்தள மலைப்பாதையில் சென்று, நுழைவு வாயிலை அடைய வேண்டும். 

🔆நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு ரூ200/- . Sr. Citizen, மற்றும், மாணவர்கள் Concession, உண்டு.
ஆதார் கார்டு காண்பித்து ரூ 100/ நுழைவுக் கட்டணம் செலுத்தினோம்..
கோட்டையின் உச்சிக்கு செல்ல Elevator வசதி செய்யப்பட்டுள்ளதால், அதற்கு ரூ50/- தனிக்கட்டணம் செலுத்தினோம்.
Guide வேண்டுமென்றால் தனி கட்டனம் கட்ட வேண்டும். 

🔆நடந்தும் கோட்டையின் உச்சிவரை செல்லலாம். 

🔆உச்சி சென்றடைந்ததும். கோட்டையிலிருந்து ஜோத்பூர் நகரம் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது. 

🔆உச்சியில் கோட்டையில் விளிம்புப் பகுதிகளில் பலவித பீரங்கிகள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

🔆அரண்மனை உட்பகுதிகள் ஏராளமான அறைகள் நேர்த்தியாக பராமரித்து வருகிறார்கள்.
🔆பெரும்பாலான அறைகளில், அரசர்கள்
பயன்படுத்திய பலவிதமான பொருட்களையும், அவைகளின் உபயோகத்திற்கு தக்கவாறு, தனித்தனியாக, வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

🔆ஏராளமான அறைகள், அனைத்தும் அழகிய மார்பில் கற்கள். நுணுக்கமான வேலைப்பாடுகள். கண்டு மிகவும் வியப்படைந்தோம். 

🔆ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக (மாடியாக) ப் பார்த்து விட்டு கீழே இறங்கினோம். 

🔆படிகள் குறுகியதாக இருப்பதால், பல இடங்களிலும் நிதானமாக, பார்த்து வர வேண்டும். 

🔆கீழ்புறத்தில், தனித்தனிப் பகுதிகளில் 3 ஆலயங்களும் உண்டு. அவைகள் தனித்தனி Hall போன்றும் மற்றும் கருவரைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

🔆கைவினைப் பொருள்கள், கலைப்பொருட்கள், துணி வகைகள், மணிமாலைகள் என வகைப்படுத்தப்பட்டு சிறிய கடைகளும், ஒரு சிறிய உணவு கூடமும் இருக்கிறது. 

🔆கோட்டை மிக நீண்டதாகவும், உயரமாகவும், பெரியதாகவும் உள்ளது. 

🔆மலைக்குன்று முழுவதும் கோட்டையின் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக மிகவும் கடினமான பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். 

🔆அனைத்துப்பகுதிகளும், தூய்மையாகவும், பழமை மாறாத அமைப்பிலும், அருமையாக கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளனர். 

🔆உச்சியில் உள்ள அறைகளை சுற்றிப் பார்த்து கீழ் தளம், தரைத்தளம் வந்தோம்.
நுழைவு வாயில், அமைப்பு, கதவுகள், மிக பிரமாண்டம், மிக சிக்கலான, குறுகிய நுழைவாசல்கள், எதிரிப்படைகள் உள்ளே
நுழைவதை கட்டுப்படுத்த இவ்வாறு, அமைத்துள்ளார்கள். 

🔆அக்கால அரசர்கள் வாழுமிடங்களைப் பார்த்து வியந்தோம். 

♻️அடுத்து இக்கோட்டையின் அருகாமையில் உள்ள ஜஸ்வந்த்தாடா என்ற இடத்திற்கு சென்றோம். 
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR 

*⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

Monday, October 4, 2021

ஜோத்பூர் சுற்றுலா - SPLENDORS OF INDIA - JODHPUR - பதிவு - 1

ஜோத்பூர் சுற்றுலா
பதிவு - 1.
03.09.2021 FRIDAY
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#Rajasthan
#JODHPUR

#பயணஅனுபவக்குறிப்புகள்:

சுற்றுலாவின் அடுத்தகட்டமாக நாங்கள் ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த, புகழ் பெற்ற பெருநகரங்களான,
#JODHPUR , #JAIPUR , #UDAYAPUR
(ஜோத்பூர், ஜெய்ப்பூர், உதயப்பூர்)
என்னும் பெருநகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்த்தோம்.
*⚛️
#Rajasthan
இராஜஸ்த்தான் பற்றிய சில தகவல்கள்:

🌟இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. ஜெய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது.

⚜️இதுதவிர உதயப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகியன முக்கிய நகரங்கள் ஆகும்.

⚜️இராஜஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும்.

⚜️இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளும், அதனுள் கலைநயத்துடன் கட்டப்பட்ட அரண்மனைகளும்,  இந்து, சமன கோயில்களும், துர்கை கோயில்களும் இந்தியக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

நினைவுச்சின்னங்கள்:

🌟எண்ணற்ற வரலாற்று நினைவுச்சின்னங்கள் பல நகரங்களிலும் இந்தப் பிரதேசத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளன. அவற்றில் சில நினைவுச்சின்னங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
3.9.2021
முதலில் நாங்கள் சென்ற நகரம்.
#JODHPUR
*⚛️
ஜோத்பூர்

⚜️ஜோத்பூர் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது.

⚜️இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது ஆங்கிலேய ஆட்சியில் முந்தைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும் மார்வார் என அறியப்படும் அரசாட்சிப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது.

⚜️டெல்லியில் இருந்து குஜராத்திற்கு செல்லும் முக்கிய சாலை இணையும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

⚜️சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் கோயில்கள், தார் பாலைவனத்தின் வித்தியாசமான இயற்கைக்காட்சி அமைப்பு ஆகியவை இந்நகரின் சிறப்பாகக் கூறப்படுகிறது.

🔆50 ஆண்டுகாலப் போர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மாநிலத்தின் செல்வத்தை சீரழித்தன.

🔆பிரிவினையின் போது ஜோத்பூரை ஆட்சி செய்த ஹன்வண்ட் சிங் இந்தியாவுடன் சேர்வதற்கு விரும்பவில்லை. ஆனால் இறுதியில் சுதந்திர இந்தியாவில் ஜோத்பூரின் தலைநகர மையத்தின் பின்னால் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்பான தலைமையில் இந்நகரம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 

⚜️மாநில மறுஅமைப்பு சட்டம் 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது

#பயணஅனுபவக்குறிப்புகள்
3.9.2021 - வெள்ளி :
ஜோத்பூர் நகரத்தின் புறநகர் பகுதியில் உள்ள ரயில்வே நிலையம்.
Bhagat Ki Kothi Railway Station:

🌀குஜராத்தில் உள்ள கடலுள் இருக்கும், நிஷ்களந் மகாதேவ் ஆலயம் தரிசனம் முடிந்து 2.09.2021 அன்று
Bhavnagar Terminal Railway Station சென்று, அன்றிரவு புறப்பட்டு அடுத்த நாள் 3.09.2021 அன்று காலை ராஜஸ்தான், ஜோத்பூர் அருகில் உள்ள Bhagat Ki Kothi Railway Station வந்தடைந்தோம்.

♻️இந்த Railway station  ஜோத்பூர் Railway Station அடுத்து உள்ளது. அதிக கூட்டம் இல்லாதது.  நிலையம் Very Neat and Clean ஆக பராமரித்து வருகிறார்கள்.
வாகனங்கள் வந்து செல்ல வசதியும் உள்ளது. எங்கள் ஒவ்வொரு Coachக்கும் தனி தனி பேருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். இங்கிருந்து
#MEHRANGARHFORTANDMUSEUM
(தனி பதிவு)
#ஜஸ்வந்தாடா
(தனி பதிவு)
முதலிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி பார்த்து விட்டு திரும்ப  அழைத்து வந்து மதியம் உணவு இங்கேயே அளிக்கப்பட்து.  மீண்டும் மதியம்
#உத்பவன்அரண்மனை 
(தனி பதிவு)
சென்று சுற்றிப் பார்த்த பிறகு இங்கே மாலையில் இங்கிருந்து இரவு புறப்பட்டு 4.9.2021 அன்று ஜெய்ப்பூர் சென்றோம்.

தொடரும்...பயணங்கள்.... பதிவுகள்...

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
JODHPUR

*⚛️தகவல்கள்:
wikipedia, மற்றும் பல வலை தள பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=6308015675940303&id=100001957991710


KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...