Friday, October 30, 2020

வினாஉரை_பதிகங்கள் #திருமுறைகளில்தமிழமுதம்: பதிவு: 5.3

பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : இரண்டாம் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏1.
இரண்டாம் திருமுறை
 பதிகம்:2.137
தலம் : பூந்தாராய் 
பாடல் முதலடி: 'செந்நெல்' 
பண்: இந்தளம்
பதிக சிறப்பு:
I' 'சொலீர்' என்று அனத்துப் பாடலிலும் கேள்வி வைத்துள்ளார்.
1.செஞ்சடையில் பாம்பு வைத்தது,
2.இடப வாகனம் ஏறியது,
3.யானை தோல் உரித்தது,
அங்கத்தில் பங்கமாக அர்த்தநாரியாக இருப்பது,
4.காமனை சாம்பல் பொடியாக்கியது,
5. கங்கையை சடையில் வைத்தது,
6. காதில் குழையும், தோடும் அணிந்தது.
7. அரக்கன் ஆற்றலை அழித்தருள் செய்தது;
8. மாலும், அயனும் தேடியும் 
காணதது.
9. பிறமதத்தவர், பொருளற்றதை
உரைப்பது ஏன்.
இவ்வாற்றலுக்கும், அருளுக்கும் என்ன காரணம் என்பதாக  'சொலீர்' என்று ஒவ்வொரு திருப்பாடலிலும் வினா
கேட்டுபாடல் அமைத்துள்ளார்.

II. மேலும், முதல் இருவரிகளில் தலத்தின் சிறப்பை  விளக்கும் முகமாக அதன் இயற்கை வளத்தையும், வனப்பத்தையும், மிக அழகாக சுட்டிக் காட்டி, இப்படிப் பட்ட பூந்தாராய் என்னும் தலத்தில் வசிக்கும் இறையே என்று குறிப்பையும் கூறி வியக்க வைக்கும் பாடல்கள் சிறப்பு வாய்ந்தது.
Ill.  திருக்கடைக்காப்பில்
"மகர வார் கடல் வந்தனவும் மணற் கானல்வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில்மிகு பூந்தாராய்ப்

பகவனாரைப் பரவு சொல்மாலைப் பத்தும் வல்லார்

அகல்வர்  தீவினை நல்வினை யோடுடன் ஆவரே."

பொருள் :
சுறாமீன் விளங்கும் கடல் மணல் சேரும் சோலைகளுடைய புகலியின் சம்பந்தன், எழில்மிகு பூந்தராய் பதியின் இறைவரைப் போற்றிய இத் தமிழ் சொல் மாலையாக விளங்கும் பாடல்களை பாட தீவினை அகன்று நல்வினை பெறலாமே; என்று பதிகப் பலனையும் கூறிப்பிட்டுள்ளமையும் சிறப்பே.

2.🌺🌷
இரண்டாம் திருமுறை 
பதிகம்:138
தலம் : திருவலஞ்சுழி 
பாடல் முதலடி: 'விண்டெலாமர்'
பண் : இந்தளம்
பதிகச் சிறப்பு:
1. ஒவ்வொறு பாடலின் முதல் இருவரிகளும் திருவலஞ்சுழி தலத்தின் சிறப்பை, வனப்பத்தை, வளத்தை, இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களின் காட்சிகளை ஓவியமாகக் காண்பித்து, இப்படிப்பட்ட தலத்தில் வாழுகிறார் நம் இறைவன்; என்று நமக்கு உணர்த்துவதையும், நாம் உணர வேண்டும்.

2. சொலீர்....என்று எல்லாப் பாடல்களிலும் இறைவனை நோக்கி வினா எழுப்புகிறார்.

3. இறை அருட் செயலான, பிரம்ம கபாலம் ஏந்த விரும்பியது, பலி கொண்டது, ஏன் என்று இறைவனை  வேண்டியருளுகிறார். 

மேலும். 
4.திருக்கடைக்காப்பில்.
"வீடு ஞானமும் வேண்டுதிரேல்            விரதங்களால்
வாடின் ஞானமென்னாவதும்
எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன் 
செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானவல்லார் அடி
சேர்வது ஞானமே."

பொருள் :
வெறும் விரதங்களால் வீடு பேறு, முக்தி அடையமுடியாது. தமிழ் ஞானசம்பந்தர் பாடலை செந்தமிழ் கொண்டு இசையோடு பாடினால், ஞானம் கிடைக்கும்  முத்தி அடை முடியும் என்கிறது சிறப்பு.

3.🌹🌷🌺
 இரண்டாம் திருமுறை பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
பதிகச் சிறப்பு.

1. ஒவ்வொரு பாடல்களின் முதல் இரு வரிகளிலும், 
திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்று
இறைவரை விளித்து அவர்தம் அருட்பேராற்றலை வியந்து வினவுகிறார்.
1. பன்றி வடிவ அரக்கனை அழித்து, வேடுவத்திருக்கோலம் பூண்டு உமாதேவியுடன் நின்றது
2.காமனை பாணம் எய்து காய்ந்தது.
3. உமாதேவியுடன் காட்சியளித்தது.
4. உமாதேவியரை ஒரு பாகத்தில் வைத்தது.
5. பிச்சை ஏற்க நடந்தது
6. யானையைத் கையால் தாக்கி அழித்தது.
7. கொன்றைமலர் சூடியது
8. அரக்கன் தலைகளையும், கரங்களையும், நெறித்த திறன் மற்றும்,
9.9 வது பாடலில்
'காலெடுத்த திரைக்கை
கரைக்கெறி கால் சூழ்
சேலடுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே'.
(கால் = காற்று)
கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளிவீசுகிறது = கவிநயம் வியந்துணரத்தக்கது.

திருமால் உனது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்தி நிற்குமாறு, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம் என்று வினவுகிறார்.
10. சாக்கியர், சமணர்களின் பயனற்ற திறத்தினை நீக்கியது.

மேலும்.
திருக்கடைக்காப்பில் வரும்
'திக்குலாம் பொழில் சூழ்தெளிச்
சேரி எம் செல்வனை

மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய

தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித் 

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே,'

என்றார்.
பொருள்:

பொழில் சூழ்ந்த தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பரமனை, காழி ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத் திருப்பதிகத்தினை மனதார நாவினால் சொல்லினாலே தேவர் சூழ இருப்பார் என்று உரைத்தார்.

4. 🌹🌷🌺🍁
இரண்டாம் திருமுறை
பதிகம்:140
தலம் :-திருவான்மியூர் 
பண் : இந்தளம்
பாடல் முதலடி : 'கரையுலாங் கடலிற்'
பாடல் சிறப்பு:
1. பாடல்களின் முதல் இருவரிகள் தலத்தின் இயற்கை வளம், உயிர் காட்சிகள், மனிதர்கள், குறிப்பாக மங்கையர் பக்திப்பாங்கு, இவற்றின் சிறப்பைக் குறிப்பிட்டு, இத்தலத்தில் வசிக்கும் இறைவரை அழைத்து வினாவுகிறார்..
1. ஒவ்வொறு பாடலிலும் 'சொலீர்.'.. என்று குறிப்பிட்டு
வினவுகிறார்.

1. அம்மை அப்பராக - அர்த்தநாரியாக விளங்குவதன் பொருள்;
2. செம்மையான திருமேனி கொள்ளச் செய்தது;
3. யாணையை உரித்து தோலைப் ஆடையாகப் போர்த்தியது, நெருப்பை கரத்தில் கொண்டு நடனம் புரிந்தது
4.நஞ்சுண்டு வானவர்க்கு இன்னருள் புரிந்தது.
5. செஞ்சடையில் விண்பிறை வைத்தது
6. முப்புரத்தை எரியூட்டிய வல்லமை
7. சனகாதி முனிவர்கட்கு வேதப் பொருளுரைத்தது.
8. பூதகணங்கள், பேய்கள் சூழ நடனம் ஆடுவதும்
9. தாருகாவனத்து மாதர்கள் இல்லம் சென்று பலியேற்றது
10. சமணர், சாக்கிய, பிற 
மதத்தவர் பொய்யுரை பகர்வது

இவை எல்லாம் ஈசன் அருளியது ஏன் என்று வினாவின் வழி அறிவுருத்தும் பாடல்களாக அமைத்தருளியுள்ளார்.
மேலும், 
திருக்கடைக்காப்பில்,
'மாதொர் கூறுடைநற்றவ
ணைத்திரு வான்மியூர்

ஆதியெம்பெருமானருள்
செய்ய வினாவுரை

ஒதியன்றெழு காழியுண்
ஞானசம் பந்தன் சொல்

நீதியால் நினைவார் நெடு
வானுலகு ஆள்வரே. '
என்றார்.
பொருள் :
'எம்பெருமானை, அருள் செய்யும் பொருட்டு வினாவுரையாக ஓதும் காழியாரின் இப்பதிகம் ஒதுவார், வானுலகை ஆள்வார்கள்'. என்று அமைத்துள்ளார்.

5-🌸🏵️💮🌼🌷
இரண்டnம் திருமுறை
பதிகம்:165 
தலம் - திருப்புகலி
பாடல் முதலடி - 'முன்னிய'
பண் : இந்தளம்
பாடல் சிறப்பு :
1. திருவிராகப் பதிகம்.

2. இது  12 பெயர்கள் கொண்ட
சீர்காழி தலத்தின் ஒரு  பெயரான திருப்புகலி என்னும் தலப் பெருமையையும் கூறும் பதிகம்.

3.முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமையையும், அருட்சிறப்பையும் வைத்து, ஈசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், அடுத்துவரும் இருவரிகளில் தலப் பெருமை உரைத்து திருப்புகலியாமே என்று  என்ற பதில் அமைப்பில் பாடல் அமைத்துள்ளமை சிறப்பு.
பொருள் :
மூவுலகிலும் சிறப்பு வாய்ந்த தலைவர் வசிக்கும் பதியாது என்றும்,
பாடும் பக்தர்கள் விரும்பிடும் இடம்; 
இறைவன் உமையோடு வீற்றிருக்கும் பதி; 
அறுவகை சமயத்திற்கும் அருள்புரியும் ஈசன் பதி;  
நஞ்சினை உண்டவன் உறையும் பதி;
 வல்வினை தீர்த்தருளும் மைந்தன் இடம்;
 இராவணை அடக்கியருள் செய்த அண்ணல் இடம்;
 பிறையும், அரவமும் வைத்தாடும் ஈசன் உறையும் பதி;
பிற சமய மொழிகளை ஏற்காத அரும் ஞானிகள் வாழும் ஊர் எது என்றும் இறைவரின் அருள்செயல்களை விவரித்து அவர் வசிக்கும் ஊர் எது என்பது வினாவாகவும்,

இதற்கு விடையாக, பதியின் சிறப்புகளாக
தேவர்கள் துதி செய்து வணங்கும் திருப்புகலி என்றும்
தாமரை மலரின் வளம் நீர் வளம், சோலைகளின் மண் வளம் நிறைந்த ஊர்,
சிவகணத்தவர் கூடியிருந்து போற்றும் ஊர்,
செழுமையான வயல்கள் நிறைந்த ஊர்.
தென்னைமரத்திலிருந்து தேன் பெருகும் வளம் மிக்க ஊர்,
செல்வ செழிப்பு மிகுந்தவூர்.

திருப்புகலியாமே என்று;
ஒவ்வொரு பாடல்களிலும், இறைவரின்  சிறப்பை உணர்த்தி அவர் உறையும் இடம் எது என்று வினாவி, அதற்கு பதில் தரும் வகையில்  தலத்தின் இயற்கை வளம், உயிர்வளம், தலப் பெருமையை விளக்கி அது திருப்புகலியாமே என்று விடையாக அமைத்திடுவார்.
திருக்கடைக்காப்பில்,

'செந்தமிழ் பரப்புறு 
திருப்புகலி தன் மேல்

அந்தமுதலாகி நடுவாய பெருமானைப்

பந்தனுரை செய்தமிழ்கள் 
பத்தும்இசை கூர

வந்தவணம் ஏத்துமவர்
வானமுடையாரே ''

என்று பதியின் சிறப்பு போற்றி வினா விடையமைப்பு பதிகம் அருளியுள்ளார்.

6.🍂🍀🍁🌻🌸🌹
இரண்டாம் திருமுறை
பதிகம்: 170
தலம் : திருப்பழுவூர்
பாடல் முதலடி : 'முத்தன்மிகு '
பண் : இந்தளம்.
பாடல் சிறப்பு:
1. இது திருவிராக அமைப்புடைய பதிகம்.
2. இந்தப் பதிகம் பழுவூர் என்ற பதியின் சிறப்பை வினா விடையாக ஏற்றி அருள்செய்துள்ளார்.
3. முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமை வைத்து, அவ்வீசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், மற்ற இருவரிகளில் பதியின்  சிறப்பு அமைத்து அப்பதி பழுவூரே என்ற பதிலமைத்து பாடல்களை தந்தருளியுள்ளார்.
பொருள்:
1.திரிசூலம் கொண்ட ஈசன் உரையும் இடம்?
சித்தர் வாழும் பழுவூரே.

2.முடியில்அரவம் வைத்த பெருமான் இடம்?
மாளிகையில் வசிக்கும் மகளிர் பாடல் இசைக்கும் பழுவூரே.

3..முப்புரம் எரித்தவர் இடம்?
மகளீர் மகிழ்ந்து நடனமாடுமூர்.

4.எண் எழுத்து, இசைக்கு முதற்
பொருளானவர் வசிக்குமிடம் ?
மலையாளர் தொழுது எத்தும் பழுவூரே.
5. மயானத்தில் நடனம் புரிபவர் இடம்?
வேத மொழி சொல்லும் மறையாளர் வாழும் ஊர். 

6.முப்புரம் எரித்தவர், யானையுரித்தவர்  இடம்?
பாவையர்கள் கற்பொரு பொலிந்த  ஊர்.
7. தக்கன் யாகம் அழித்தவர் இடம்?
மாதர்கள் தழையப் பெருகி வழிபடும் ஊர்.

8.கண்டத்தில் விடம் வைத்த,
இராவணனை அடக்கிய அப்பன் இடம்?
சோலைகளும், வயல்களும் நிறைந்த பழுவூர்.
9.மாலும், நான் முகனும் தேடியும் தோன்றாதவன் தழலாய் ஓங்கியவன் உறையும் இடம்?
வேதம் நாலும் உணர்ந்தவர் கூடி மகிழுமூர்.
10. சமனர், பெளத்தர்கள் சொல்கின்ற பொருத்தமில்லா மொழிகளை வெறுக்கும் ஈசன் உறைவிடம்
தாழை, தென்னை, பாக்கு செழித்தோங்கும் ஊர்.
மேலும்,
11. திருக்கடை காப்புப் பாடலில்...

'அந்தணர்கள் ஆனமலை யாளர் அவர் ஏத்தும்.

பந்தமலி கின்ற பழு வூர் அரணை ஆரச்

சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி

வந்த வணம் ஏத்துமவர் வானமுடையாரே.'

மலைநாட்டவர் பக்தியுடன் வந்து வழிபடுகின்ற ஈசனை ஞானம் உணர்ந்த ஞானசம்பந்தன் சொல்லி உரைத்தவாறு ஏத்தி வழிபடுகின்றவர்கள் தேவர்களாவர்; என்று உரைத்தார்.
🌸 🏵️🙏🙇‍♀️🌼🙇🌼🙏🏵️🌸📚🌹
💥இதுகாறும், இரண்டாம் திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

Thursday, October 22, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் வினாஉரை பதிகங்கள்

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.2.
4.வினாஉரை பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️ன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.2.1
4.வினாஉரை பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : முதல் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏
திருப்பதிகம்: 
முதலாம் திருமுறை:
பதிகம் : 4.
தலம்: - திருபுகலியும்திருவீழிமிழலையும்:
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:  
'மைம்மரு பூங்குழல்'.

பதிக சிறப்பு:
1. ஒவ்வொரு பாடலிலும்,
'புகலி நிலாவிய புண்ணியனே' என்று சிறப்பித்தும்,
'என் கொல் சொல்லாய்.'
என்று கேள்வி எழுப்பியும் அமைத்துள்ளார்.
🌹
2. பாடல்: 7 ல்
'காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கிக்
காம்பன தோளியோடும் கலந்து

பூமரு நான்முகன் போல்வார் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே

ஈம வனத்து எரியாட்டு உகந்தி
எம்பெருமான் இது என் கொல்சொல்லாய்

வீமரு தண்பொழில்சூழ் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.'

பொருள் சிறப்பு:
உலகத்தோர் திருமணத்திற்கும், இறைவன் இறைவி திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு.
காமன் இன்றி சிவசக்தி திருமணம் நடைபெற்றது சுட்டப்படுகிறது.

பூமரு = மலர்மேல் உறைபவன்
ஈமவனம் = இடுகாடு,
வீமரு = மலர்கள் சூழ்ந்த.
11வது பாடல் திருக்கடைக்காப்பில்:

விண்ணிழி கோயில் விரும்பி மேவும் 
வித்தகம் என் கொல் இது என்று சொல்லிப்

புண்ணிய ணைப்புகலிந்நிலாவு
பூங்கொடி யோடு இருந்தானைப் போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
நான் மறைஞானசம் பந்தன் சொன்ன

பண்ணியல் பாடல்வல்லார்கள் இந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.

பொருள் சிறப்பு:
இறுதி வரியில், 
'வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்ற குறள் தெளிவு.
🌷

2.
முதல் திருமுறை: பதிகம்: 1.6.
தலம்: - திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:   'அங்கமும் வேதமும்'

பாடலில் வரும்  சிறப்பு: 
1 ஒவ்வொரு பாடலிலும் 'மைந்த சொல்லாய்'  என்றமைந்துள்ளது.
2. திருமருகலில் இருந்த சம்பந்தரைச் சந்தித்த சிறு தொண்டர் தம்  பதிக்கு வருமாறு கோர, சம்பந்தருக்கு செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் காட்சி தந்த போது அருளிய பதிகம்.
🌺
3.
முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

பதிக சிறப்பு
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.
10வது பாடலில் 
'தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்  தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பனோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே'

பொருள் சிறப்பு:
அடியவர்கள் வேண்டுதலின் பொருட்டும், மற்றும் சுபகாரிய களை மேற்கொள்ளவும் 'எடுக்கும் விழவு' எனவும், இறைவன் திருநட்சத்திரங்களில், நாள்களில் 
(திருவாதிரை, பூசம் மற்றும்  பிரதோஷம் போன்ற நாட்கள்) நடத்தும் திருவிழாக்கள் மக்களைக் காத்தலையொட்டி நடைபெறுவதால் . இரும்பலி இன்பினோடு' எனப்பட்டது. காத்தல் செய்யும் திருவிழாக்கள் இன்பம் தரவல்லது என்பதாம்.

(பொருள் : சாதியில் நீங்கிய = பாரம்பரியத்திலிருந்து மாறிய
நடுக்குற = அதிர்ச்சியுற, 
இரும்பலி இன்பினோடு = இன்பத்தின் அளவு மிகுந்த இன்பம் இரு = பெரிய  பலி = காக்கும் தன்மை   அடுக்கும் பெருமை = பெருமைகளின் திரட்சி)

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

Tuesday, October 6, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் #சைவத்திருமுறைகள் #அமைப்பு_சிறப்புக்கள் பதிவு : மூன்று

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : மூன்று
🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🙏
          🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
          🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🎪🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
   
        🌈#அமுதப்பதிகங்கள்   
              #அமைப்புச்சிறப்புகள்

 🔯திருஞானசம்பந்தரின் பதிக அமைப்பு முறை பற்றிய பொதுவான சில குறிப்புகள்:

🔱திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின்அருட்செயல்பாடுகளை,அற்புதங்களை உணர்த்தியவர்;  மறுபுறம், 
தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட புதுமையான பாடல்கள் அமைப்பையும் முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. 
இவை 226 தலங்கள் பற்றியருளியது.
மொத்தம் 386 பதிகங்கள்.
ஒரு பதிகத்தில் 10, அல்லது 11 அல்லது 12 பாடல்கள் அமையப்பெற்றிருக்கின்றன.
23 பண்களில் அமைக்கப் பெற்றுள்ளது.

🙏🛐🙆‍♀️⛺🏔️🎎⛰️🕉️🙇‍♀️🔱🙆🏻‍♂️🛐🙏

📚
#பாடல்_பொருள்_அமைப்பு:

📚தமிழ் ஞானசம்பந்தர் தம் பதிகங்களில்பெரும்பாலும் 10 முதல் 12 பாடல்களை கொண்டு ஒவ்வொரு பதிகமும்  அமைந்துள்ளார் என்று அறிந்தோம்.

அதில் ஏழாவது  பாடல்களில் பதியின் சிறப்பு, தல சிறப்பும் பெருமையைக் கூறியும்,

 ஏழு அல்லதுபத்தாவது பாடல்களில் பிற மதங்களில் குறிப்பாக சாக்கிய, சமன, மதங்களின் இழிந்தக் கொள்கை, சைவத் தமிழர் வாழ்விற்கு ஏற்க முடியாத அவர்தம் பண்பாடுகள் பற்றியது.
அவர் தம் மதச் செருக்கை அடக்கியது குறித்தது.

எட்டாவது பாடலில் இறைவன் இராவணை  ஆணவத்தை அடக்கி அருள் புரிந்தது பற்றியும்; 

ஒன்பதாவது பாடலில் நான்முகன் மற்றும் திருமாலின் சிவ பக்தியையும்; அவர்கள் சிவன் அடி முடி தேடியதும்,

பத்தாவது அல்லது பதினொன்றாம் பாடல்களில், அல்லது பதிகத்தின் கடைசி பாடலில் பதிக பயன் பொருளும் அருளும் கொண்டு அமைத்துள்ளார்.

சம்பந்தர் தம் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலை #திருக்கடைக்காப்பு என்று சிறப்பிக்கப்பட்ட பாடலாகக் கொள்வர் அறிஞர்கள்.

🙆‍♂️🙇‍♀️🔱🔯✡️⚛️🕉️🔱⚛️✡️🔱🙇‍♂️🙆‍♀️
  
#திருக்கடைக்காப்பு:

ஒவ்வொரு பதிகத்திலும்,
பத்தாவது அல்லது பதினொன்றாம் பாடல்களில், அல்லது பதிகத்தின் கடைசி பாடலில் 
பதிக அமைப்பு, 
பாடல் பயன் பொருளும் 
சிவஅருள் பெறும் முறையும் 
கொண்டு, அமைத்திருப்பது மிகச்சிறப்பு.

#திருக்கடைக்காப்பு பாடலாக
"கடவுள் வழிபாட்டின் பயனைத் தமது    அனுபவத்தின் வைத்து ஆசிரியர் செவ்விதினுரைத்தார்''* 
 
'ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாட்டின்கண் சம்பந்தப்பெருமான் தமது திருப்பெயரை நிறுவியது, காரணம்:

'ஒரு திருப்பதிகத்தையேனுங் கற்பார்க்குந் தமது சிவானுபவப் பயனை நன்கு அறிவுறுத்தக் கருதிய பெருங் கருணையே அன்றி தம்புகழ் விளக்கவன்றும் இறைவர் புகழை ஞால முழுதும் விளக்கக் கருதியே அருளினார்.' 

என்பதும்,

'இதனைத் தற்புகழ்ச்சியாகக் கூறுவோர் தமது அறியாமையைப் புலப்படுத்தியவராவர்'.  என்பதும் அறிஞர்கள் முடிவு.

மேலும்,

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதால் ஊர்தோறுஞ் சென்று திருப்பதிகமருளிச் செய்தமையால் ஒவ்வொரு திருப்பதிகத்தையே கற்றவர்க்கும் உண்மை விளங்குதற் பொருட்டு ஒவ்வோர் பதிகத்துஞ் சித்தாந்தப் பொருளையுந் தமது அனுபவப் பயனையும் அறிவுறுத்தினார்", 

🙆‍♂️🙇‍♀️🔱🔯✡️⚛️🕉️🔱⚛️✡️🔱🙇‍♂️🙆‍♀️
🕉️
#சைவசித்தாந்தப்பொருளுணர்வு :

சம்பந்தர் பதிகங்கள் ஞான அருள் தரும் சைவசித்தாந்தத்தின் அங்கமாக, பொருள்கள் நுண்ணுணர்வாக உணர்த்தப்  பெற்றுள்ளது என்று ஞான ஆசிரியர்கள் கணிப்பு.

'சித்தாந்த சிவஞானபோதத்தில் பெறப்படும்
1. பிரமாணவியல்
2. இலக்கணவியல்
3. சாதனவியல்
4. பயனியல்
என்ற நான்கியற் பொருள்களும் உணர்த்தப்பட்டுள்ளது' 

என்பார் தமிழியல் ஆராய்ச்சியாளரும், சட்ட நூற் புலமையும் பெற்றவருமான பேராசிரியர்
திரு.கா. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள்.
💥🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💥
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️     

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🎪🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🎪🛐
பதிவு : ஒன்று:
https://m.facebook.com/story.php?story_fbid=4497008673707688&id=100001957991710
பதிவு : இரண்டு :
https://m.facebook.com/story.php?story_fbid=4525547420853813&id=100001957991710

Friday, October 2, 2020

காந்திக்கு அஞ்சலி

🙏காந்திக்கு அஞ்சலி செய்வோம்🙏 
      🇮🇳🌐🔯🇮🇳🌐🇮🇳🔱🌐🔯🇮🇳🌐🇮🇳

☸️அஹிம்சையால் அதிகாரத்தை
⚡அகற்ற முடியும் என்று

🌐அகிலத்திற்கே உணர்த்திய
🕉️ஆன்மீக அரசியல் தலைவர்.

🔥தகனம் செய்யப்பட்டது
     உடல் மட்டுமா?

🌠உயிர்த்தெழுந்தால் ... ஏற்போமா?
    
       🙏👣👥👣👤🐾👥👣👤🐾👥🙏
  🌻(உடல் தகனம் செய்யப்பட்ட இடம் 🌻 (2015 ல் தரிசித்த போது)
                     🎭🙈🙉🙊🐵🎭


🙏🙇🏻‍♀️🙏🙆‍♂️🙏🙆‍♀️🙏🙇‍♂️🙏
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇🏻‍♀️🙏🙆‍♂️🙏🙆‍♀️🙏🙇‍♂️🙏

Thursday, October 1, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் #சைவத்திருமுறைகள் #திருஞானசம்பந்தர்அருட்பதிகங்கள் பகுதி - இரண்டு

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
பகுதி - இரண்டு.
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                       
                     🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

  1.          #திருஞானசம்பந்தர் :

🌀🌟கி.பி.6 ம் நூற்றாண்டு இறுதியில் சீர்காழிப் பதியில்  கருவிலே திருவுடையவராய் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் திருமகனாய் திருஞானசம்பந்தர் அவதரித்தார்.

💥மூன்று வயதில் இறையருள் பெற்று ஞானப்பால் உண்டவர். பல அருள் காரியங்கள் செய்தவர்.
இதனால், 
'சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானமும்;
'பவமதனை யற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமும்; '
'உணர்வரிய மெய்ஞ்ஞானமும் ஒருங்குணர்ந்தனர்.

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள், நம் அருட் செல்வர் ஞானசம்பந்தரை, முருகனின் அவதாரமாய்  போற்றி வணங்கி பாடல்களை அருளிச் செய்துள்ளனர்.

📑தம்மை தமிழ் விரகன், தமிழ் ஞானசம்பந்தன் என்றும் தன்னைக் கூறிக் கொண்ட, சிவனருட் பிள்ளையார்தாம் இயற்றிய பாடல்களில் தமிழின் ஒப்பற்ற உயர்வை, இலக்கண, இலக்கிய, இசை நுணுக்க சிறப்புகளை, தமிழனின் கலாச்சார செறுக்கை, பண்பாடுகளின் சிறப்பை வெளிப்படுத்தி, இழந்த தமிழரின் பக்தியுடன் கூடிய நல்ல பண்பாட்டை, இறையருள் நம்பிக்கைக் கொண்டு மீட்டு வளர்த்தார், என்றால் அது மிகையாகாது.

✳️இனிமையான இசை கலந்து அற்புத பாடல்களை பதிகங்களில் அமைத்துக் கொடுத்த இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;

அவ்வழி நின்று நாமும் போற்றுவோமே
🙏🏻🕉️🙇‍♀️🙏🏻🙇‍♂️🙏🏽🙆‍♂️🙏🏼🙆‍♀️🙏🏻🙇‍♀️🙏🏻🙇‍♂️🕉️🙏🏾

      2.         #அருட்பதிகங்கள்:

📕இலக்கிய வகைகளில் :... 8, 10, 100 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதை பதிகம் என்பர்.

📝பதிகம் என்ற அமைப்பை முதன்முதலில் உருவாக்கியவர் காரைக்காலம்மையார். (திருவலாங்காட்டு மூத்த பதிகம்).

📃யாப்பு = அந்தாதி, தாண்டகம், வெண்பா, அகவல், விருத்தம், இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை இன்னும் பிற.
இதில் 10, 11, 12 பாடல்கள் அமையுமாறு வைத்து பதிகமுறையில் பாடல்கள் அருளிச் செய்தவர்.

"மூவரருளிய தேவாரக் காலம் பிறகே சிற்றிலக்கியங்கள் எழுந்தன" - பேராசிரியர் மா.ச. அறிவுடை நம்பி.

⚡மேலும்  பதிகத்தின் மூலம் தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், நல்லொழுக்கம், சைவ நம்பிக்கை வளர்த்து, போலி சமயக் கொள்கை செருக்கழித்து, தமிழர் வாழ்வில் பல அற்புதங்களையும் செய்து இறைவரின் நற் கருணையையும் அருட்திறத்தையும் நிறுபித்துக்காட்டினர்.

🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

3.      🏵️#சம்பந்தர்பதிகப்பேறுகள்:

🔰சம்பந்தர் பதிகங்கள் மூன்று வகையான வழிபாட்டிணை வலியுறுத்துகிறது.
🔯குரு, ⚛️லிங்க, 🕉️சங்கம் (அடியார் திருக்கூட்டம்) இவை முதற் கொண்டு
⏺️மூர்த்தி,
⏺️தலம்,
⏺️தீர்த்தம்
ஆகியனவற்றை உணர்த்துகின்றன.
🔹தலவாசம் செய்தல்,
🔹தலத்தை வலம் செய்தல்,
🔹தீர்த்தம் ஆடுதல்,
🔹மூர்த்தியை வணங்குதல்
என அடியவர்களின் வழிபடும் நிலையை நன்கு உபேதசம் செய்வதாக அமைத்துள்ளார்.

📓திருமுறைகளில் திருஞானசம்பந்தர் அருளியத் திருப்பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்தனர். இதைத் திருக்கடைக் காப்பு என்று கூறிப் போற்றப்பட்டு  வருகிறது.

🎖️திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. இவை 226 தலங்கள் பற்றி 386 பதிகங்களில், 23 பண்களில் அமையப்பெற்ற 4146 பாடல்கள் மட்டுமே

⚛️இவை மொத்தம் 386 பதிகங்களாகும்.
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
    4.          🔰#பதிகப்பலன்கள் :

1. அருட் சுரங்கம்,
2. இம்மை நல்வாழ்வு,
3. மறுமை வாணாள்வது
4. சிவ லோகம் சார்வது,
5. திருவடிப்பேறு பெறுவது
6. நோய் நீக்கம்
7. கல்வி
8. செல்வம்
9. ஆயுள்
இவை எல்லாம் நாம் பெற்றுவரும் பலன்களாகும்.

இது மற்றுமின்றி,
சிவானந்த அனுபவம்
சித்தாந்தத் தத்துவம்
தமிழ் இலக்கிய, இசை, சொல் வளம்
கற்றுணரலாம்.
💥🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💥

💥இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙇‍♀️🙆‍♀️

இதுபற்றி மேலும் சிந்திப்போம்

🙇‍♂️🙆‍♂️ 
                           🙏நன்றி🙏🏻  
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்🙏🏻
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾
பதிவு : ஒன்று.
https://m.facebook.com/story.php?story_fbid=4497008673707688&id=100001957991710
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

சிந்தனை வளம் - இறை உணர்வு

சிந்தனைவளம்:  இறை உணர்வு 
  🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏

'என்செயலே என்றென்றி யற்றுவதும் என் செயலும்

உன்செயலே என்றென்று உணர்த்துவதும் - நின் செயல்

தாகுமே என்ன அடியேற் குணர்த்தலும் நீ

ஆகுமே சொக்கநாதா.'

- 76. சொக்கநாத வெண்பா.
ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளியது.

🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏🛐

பொருள் :
'சொக்கநாதப் பெருமானே, எதைச் செய்தாலும் அதை நான் என் செயலாகவே மயங்கிச் செய்தலும் அவ்வாறின்றி, "எல்லாம் உன் செயலே" என நான் உணர்வது மட்டுமின்றிப் பிறர்க்கும் உணர்த்துவதும் உனது அருளால் ஆவனவே என்பதை அடியேன் உணர்கின்றேன். அவ்வுணர்வைத் தருபவனும் நீயேயன்றோ.'

- மகாவித்வான்
அருணை வடிவேல் முதலியார்.

🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏🛐
நன்றியுடன் பகிர்வு :
என்றும் அன்புடன்

சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏

சிந்தனை வளம் - மூப்பின் வலி

சம்பந்தர்அமுதம் - மூப்பின் வலி

🛐🏔️🏰⛺🙏🏻🙇‍♂️🙆‍♂️🙆‍♀️🙇🏻‍♀️🙏🏔️🏰🗻⛺🛐

🚶இளையோர் ஏற்க,
👵முதியோர் உணர:

🛌மூப்பு எய்தி உடல் சோர்வுற்றிருக்குங்காலை
⛺திருக்கோயிலுக்குச் செல்வதும்,
🗣️திருநாமங்களைச் சொல்வதும்,
👂செவிமடுப்பதும்,
🙆‍♂️தரிசித்து மகிழ்வதும்,
😖இடர்பாடு உண்டாதலை உணர்த்தி சரியை வழிபாட்டு நிலை
🚶இளமைக் காலத்தில் வலியுறுத்திய பாடல்:
🛐🙏🏼🙇‍♂️🙆‍♀️🙆‍♂️🙇‍♀️🙏🏻🛐
🕉️ஞானசம்பந்தர் அருளியது.

"பல் நீர்மை குன்றிச் செவி கேட்பிலா
படர் நோக்கில் கண் பவளந் நிற

நல்நீர்மை குன்றித் திரை தோலொடு
நரை தோன்றும் கால நமக்காதன் முன்

பொன் நீர்மை துன்றப் புறந்தோன்று நற்
புனல்பொதிந்த புன்சடையினான் உறையும்

தொல் நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.
                                                               (639)

-முதல் திருமுறை
59 - திருத்தூங்கானை மாடம் (திருப்பெண்ணாகடம்)
பாடல் 6.
🛐🙏🏼🙇‍♂️🙆‍♀️🙆‍♂️🙇‍♀️🙏🏻🛐
☸️பொருள் :

♿பலவிதமான சிறப்புக்கள் குறைவுபடத் தோன்றுமாறு
👂செவிகளின் கேட்கும் திறம் குறையவும், 

👁️கண்கள் மங்கிப் பார்க்கும் திறன் தளர்ச்சி கொண்டும், 

🛌உடல் வலிமை குன்ற

👴 நரையும்,
👓👀திரையும் தோன்றவும்,
ஆகிய யாவும் மூப்பின் வலிமையல் நிகழ்கின்றது.

🙆‍♀️இந்நிலைக்கு ஆளாகும் முன்  🏔️பொன் மயமாய்ப் பொருந்தி காட்சி நல்கும், 

🗻கங்கை தரித்த சடையை உடையவனாகிய ஈசன் உறையும், 

🏞️நீர்மல்கு கடந்தை நகரில் 

⛺தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.🙇‍♂️🙆‍♀️
🛐🏔️🏰⛺🙏🏻🙇‍♂️🙆‍♂️🙆‍♀️🙇🏻‍♀️🙏🏔️🏰🗻⛺🛐
             முதியோர் தின வாழ்த்துக்கள்:
                            (01.10.2020)
                     🛐🙏🏼🙇‍♂️🙆‍♀️🙆‍♂️🙇‍♀️🙏🏻🛐
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🏔️🏰⛺🙏🏻🙇‍♂️🙆‍♂️🙆‍♀️🙇🏻‍♀️🙏🏔️🏰🗻⛺🛐

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...