ராம் GHAT -உஜ்ஜியினி ஆலயங்கள்:
10.03.2021.
உஜ்ஜியினியில் உள்ளது ஷிப்ரா நதி
ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஒரு முக்கிய ஸ்தான கட்டம். ராம் GHAT.
சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.
புராதானமானது.
தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.
12 ஆண்டுகளுக்கு 1 முறை கும்பமேளவிழா நடைபெறுவது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை கும்பமேளா விழாவின் போது லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள்.
பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக
நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன.
பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது.
தினம் மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள்.
எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது.
இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது.
மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும் மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.
பொதுவாக உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.
(விடியற்காலையில் சென்று நீராடி ஸ்ரீமகாகாளேஸ்வரரை தரிசித்தோம்)
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment