மத்திய பிரதேசத்தில் உள்ள பாரதத்தின் மிக முக்கியமான தலம்.
இங்கு பல கோவில்கள் நிறைந்து உள்ளது. புனிதமான ஷிப்ரா நதி இவ்வூரில் உள்ளது. கரையெல்லாம் பல பல கோவில்கள் உண்டு. 84 லிங்கங்கள். பல புராண, புராதான ஆலயங்கள் நிறைந்த ஊர்.
ஏழு மோட்ச நகரங்களுள் இதுவும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. மற்ற தலங்கள்.
புராணம்:
சுதார்வா என்ற ஜைன அரசன் தான் அவந்திகை என்ற இந்த நகருக்கு உஜ்ஜயினி என்று பெயர் வைத்தார்.
முக்கிய தீர்த்தமாகிய சிப்ரா நதியில் மூழ்கி நீராடி மகாகாளரை வணங்க வேண்டும்.
காளி தரிசனம் செய்ய வேண்டும்.
உத்+ஜைன =ஜைன சைமயத்தை உத்தம நிலைக்கு கொண்டுவந்த நகரம்
தேவாமிர்தம் சிந்திய 4 புண்ணிய இடங்களில் இதுவும் ஒன்று.
12 ஆண்டுகளுக்கு 1 முறை கும்பமேளவிழா நடைபெறுகிறது.
இங்குதான் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் முதலியோர் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றனர்.
சிவபுராணத்தில் அவந்தி மாநகரில் விலாசன் என்ற சிவபக்தன் சிவபூசை செய்து கொண்டிருந்தபோது, இரத்தின மாலை என்ற மலையில்
வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன்,
பூசைப்பொருள்களை எரிந்து தாக்கினான். சிவன் கோபம் கொண்டு அரக்கனை வீழ்த்தினார்.
மக்கள் வேண்டுதலை ஏற்று,
மகாகாளர் என்ற பெயரில் லிங்க உருவில் இங்கு சிவன் இருக்கிறார்.
மாகாகாளேஸ்வரம் :
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.
இந்த லிங்கமானது தென்புறம் பார்த்து உள்ளது.
இதன் கருவரையில் ஸ்ரீ பார்வதிதேவி, ஸ்ரீ சுப்பிரமணியர், நந்தி இவர்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
இவ்வாலயம் 3 அடுக்குகள் கொண்டது. கீழ் அடுக்கில் மகாகாளேஸ்வரர் தென்புறம் நோக்கியும்.
2வது தரைதளத்தில் ஓம்காரேஸ்வரரும்,
அடுத்த மேல் அடுக்கில் நாக சந்திரேஸ்வரரும் உள்ளனர்.
வேறு பல சன்னதிகளும் சுற்றிலும் உள்ளன.
விடியற்காலையில் சுடுகாட்டு சாம்பல் கொண்டு செய்யப்படும் விபூதி அபிஷேகம் மிகவும் சிறப்பு.
இந்த பிரதான ஆலயத்தைச் சுற்றிலும் மேலும் பல லிங்கங்களும் சன்னதிகளும் உள்ளன.
முக்கியமான ஆலயமாக இருப்பதால் மிகப்பெரிய பாதுகாப்பும் கட்டிட அமைப்பும் உள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் சாரி சாரியாக வந்து வழிபடுகிறார்கள்.
இவருக்கு பால் அபிஷேகம், செய்தும், விதவிதமான அலங்காரங்கள் செய்தும் ஆர்த்தி வழிபாடு நடைபெறுகிறது.
மிகப்பெரிய (q Rows) வரிசைகள் அமைத்தும், படிகள் அமைத்தும் உள்ளனர். சிறப்பு வழிபாடு செய்பவர்கள் தனி பணம் கட்டி கருவரை உள்ளே சென்று தொட்டும் வணங்குகிறார்கள்.
பல நிமிடங்கள் தொடர்ந்து பூசை செய்தும், ஆர்த்தி செய்கிறார்கள்.
மக்கள் குரல் ஒலி எழுப்பியும், கைகளைத் தட்டியும் ஒலி எழுப்புவது வித்தியாசமான வழிபாடு.
கைப்பேசி அனுமதிக்கப்படுவதால் எல்லோரும் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும் வித்தியாசமாகப்பட்டது.
ஆலயம் உள் செல்லவும், வெளியில் வரவும் தனித்தனி பாதைகள்.
மகாகாளேஸ்வரர் தரிசித்தபின் கூட்டம் நெரிசல் இல்லாமல் மற்ற சன்னதிகளை தரிசிக்கலாம்.
இன்னும் பல சிறப்புகள் உள்ள இவ்வாலயத்தை இரண்டாவது முறையாக தரிசனம் செய்யக் கூடியது இறையருளே.
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
முதல் பதிவு..
இந்த பதிவு. படங்களுடன் காண:
No comments:
Post a Comment