Tuesday, April 20, 2021

அப்பர் அமுதம் - திருமுறைக்காட்சி - 6.25. (பாடல் 253)

#திருமுறைகாட்சி
#அப்பர்அமுதம்
கற்பனையே இது எனக் கருத்தினில் கொள்க.

ஆரூரார் தரிசனம்.

கதிரொளி கடுமை கரைந்து போயிற்று
மிச்ச வெப்பம் சில கீற்றாய் ஒளிர்ந்தது.
திருக்கோவில் ஆலயமணி ஒலித்தது.

'முசுகுந்த அர்ச்சனையாம் மாலையில் கோவிலில் கூட்டம் மொய்த்திருக்கும் 
சென்று நாம் அப்போது தரிசனம் செய்யலாம் என்று எண்ணி தனியனாய் புறப்பட்டேன்.

அடைபட்டிருந்த கிழம் எங்கோ புறப்பட்டுவிட்டதே என்றே பதைத்து
எதிர்வந்தாள் என் உறவு.

முசுகுந்த அர்ச்சனை தரிசனம்
கண்டு வருவேன் என்ற கூறி
வேக நடை எடுத்தேன்.

சன்னதித்தெரு திரும்ப
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்
கண்களினால் கண்டவுடன்
 கரங்கள் இரண்டும் கைகூப்பின ஆவலினால்
'ஆரூரா தியாகேசா' 
மனம் மெல்ல முனு முனுத்தது.

கோபுரவாசல் அடைந்தபோது எங்கும்
பெருங்கும்பல் வழி அடைத்த மக்கள் ஒழுங்கமைதியில்லா மகளீர் கூட்டம்

ஓவியம்போலிருந்த ஒப்பனை மிக்க
மகளிரணி கூட்டமொன்று
சளசளவென்ற பேச்சொலி முழங்க வந்தது.
கவனமெல்லாம் தம் தம் கைப்பேசி மீது.

சடசடவென வந்தவர் தாம் சட்டெனவே
தட்டிவிட்டனர் 
என் காலினை 
நான் வீழ தங்கிப் படித்தது 
கல் தூணொன்று.

பின் வந்து முன் செல்லக் கடந்தவர்தாம்
என் மீது குறைரைப்பார்

'ஏன் பெரிசு இந்த வயதில் வீட்டில் இருக்கலாகாதா  வந்தென்செய்தாய்'? என்று ஏளனமாய் கேட்டிடுவார்.

'ஏனம்மா நீங்களுமே பாதையிலே
கண் வைத்துக் கவனமாய் வந்து விட்டால்
இந்த நிலை வந்திடுமோ',
என்று பதிலுரையாய் எண்ணிவிட்டேன் பட படவென்று வார்த்தைகளினால் கொட்டிவிட்டால்
'வீண் வம்பு வந்திடுமே  நமக்கு இது ஆகாது'  என்று மனம் எண்ணி வாய் மூடி தயங்கி பின் செல்வேன்.

அதிலொருத்தி அழுத்தமுடன்கூறிடுவார்
போகும் காலம் வந்திட்ட போதிலுமே போகாமல் இருக்கின்றீர், ஏன் பெரிசு இருக்கின்றீர் இங்கு வந்து இடைஞ்சல் செய்கிறீர்கள் என்றெல்லாம் ஆர்பரித்தனர்.

மாயக் கூட்டம் அந்த மகளீர் கூட்டம் கூறிய வார்த்தைகளால்
 சற்றே என் மனமும் சங்கடபட்டது உண்மையிது. சற்றே
தடுமாறி பேதலித்தது.

சிதறிட்ட மனம் ஒன்றிடவே உள் கோபுரம்
சென்றடைந்தேன்.
புதிய கொடிமரம் புனரமைத்து இப்போது எழுப்பியுள்ளார் அது வணங்கி
குழப்பம் நீங்கிடவே புற்றிடங்கொண்டார் தாள் வணங்கி உட் புகுவேன்.

முசுகுந்த அர்ச்சனையில் தியாகேசப்பெருமான் வணங்கி நின்றோம். 
தேவர்கள் முடிவணங்கி பூசை செய்யும் தெய்வம் அல்லவா.

மனம் பின்சென்றது

அக்காலம் அறியாத சிறு வயது. 

மாயை மறைத்திருந்திட்டிருந்த காலமது
ஆரூரார் பெருமான் அருள் உணராக் காலம்.
ஏரோட்டம் தேரோட்டம் என்றெல்லாம் எதுகை மோனைப் பேசி எள்ளிநகையாடிய காலமது.
தில்லைநடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் ஒருமையிலே உரைப்பேசி பொறுப்பெற்று வெற்றுப் பெருமை பேசியிருந்த கருப்புக்காலம்

உண்மை உணர்ந்து உருப்படவே 
நாள் வந்தது
காலத்தின் கோலத்தால் மாயை எதுவென புரியும் காலம் வந்தடைந்தோம். 
உண்மைபகுத்தறிவு எதுவென்று
பக்குவம் உணர்ந்தபோது
பாதி வயதும் வாழ்வும் முடித்திருந்தேன்.
கதறி அழுதாலும் காலம் வருமோ
இளமை வருமோ கேட்டிடுவீர் இளைஞர்களே காலத்தோடு வந்து நின்று கடவுளை நீ கண்டு வணங்கிடுவீர்.

இன்று வந்த மாய(யு)வதிகளால்
 மனம் புன்பட்டதெல்லாம் மிச்ச விணைகள்தான் என்று உணர்ந்தேன்.

மணி ஒலித்தது
கவனம் மீண்டது

தியாகேசர் சன்னதி
கண்ணீர் மல்க தலைவணங்கி 
உற்று பார்த்தேன் ஒளி ஆராதனை
உளமார நினைக்கின்றேன் 
உன்னையே வணங்கி நின்றேன்
வினை நீக்கம் வேண்டுமென்றேன்.

பின் உள்சென்று தரிசித்து வெளிவந்தேன்
பிரகார சுற்றில்
நாவுக்கரசரின் ஞானப் பதிகம் பாடல் ஒன்றுகண்டு கருத்தினில் வைத்தேன்

- தேவாரம். 6ம் திருமுறை
25. திருவாரூர் திருத்தாண்டகம்
பாடல் (253)

எழுது கொடியிடையார் ஏழை மென் தோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே
பண்டு தான் என்னொடு பகைதான் உண்டோ

முழுதுலகில் வாணவர்கள் முற்றுங் கூடி முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் 
ஆரூர் தானே.

(நெஞ்சமே மகளிரும்  நகை கொண்டு நம்மை இகழும் முன்னர், வாணவர்கள் வணங்கும் ஆரூரானை வணங்கிடுங்கள்)
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
மனம் மெல்ல முனு முனுத்தது.

கோபுரவாசல் அடைந்தபோது எங்கும்
பெருங்கும்பல் வழி அடைத்த மக்கள் ஒழுங்கமைதியில்லா மகளீர் கூட்டம்

ஓவியம்போலிருந்த ஒப்பனை மிக்க
மகளிரணி கூட்டமொன்று
சளசளவென்ற பேச்சொலி முழங்க வந்தது.
கவனமெல்லாம் தம் தம் கைப்பேசி மீது.
சடசடவென வந்தவர் தாம் சட்டெனவே
தட்டிவிட்டனர் என் காலினை நான் வீழ தங்கிப் படித்தது கல் தூணொன்று.

பின் வந்து முன் செல்லக் கடந்தவர்தாம்
என் மீது குறைரைப்பார்
என் பெரிசு இந்த வயதில் வீட்டில் இருக்கலாகாதா? இங்கு வந்தென் செய்தாய். என்று ஏளனமாய் கேட்டிடுவார்.

ஏனம்மா நீங்களுமே பாதையிலே
கண் வைத்துக் கவனமாய் வந்து விட்டால்
இந்த நிலை வந்திடுமோ
என்று பதிலுரையாய் எண்ணிவிட்டேன் பட படவென்று வார்த்தைகளினால் கொட்டிவிட்டால்
வீண் வம்பு வந்திடுமே நமக்கு இது ஆகாது என்று மனம் எண்ணி வாய் மூடி தயங்கி பின் செல்வேன்.

அதிலொருத்தி அழுத்தமுடன்கூறிடுவார்
போகும் காலம் வந்திட்ட போதிலுமே போகாமல் இருக்கின்றீர், ஏன் பெரிசு இருக்கின்றீர் இங்கு வந்து இடைஞ்சல் செய்கிறீர்கள் என்றெல்லாம் ஆர்பரித்தனர்.

மாயக் கூட்டம் அந்த மகளீர் கூட்டம் கூறிய வார்த்தைகளால்
 சற்றே என் மனமும் சங்கடபட்டது உண்மையிது. சற்றே
தடுமாறி பேதலித்தது.

சிதறிட்ட மனம் ஒன்றிடவே உள் கோபுரம்
சென்றடைந்தேன்.
புதிய கொடிமரம் புனரமைத்து இப்போது எழுப்பியுள்ளார் அது வணங்கி
குழப்பம் நீங்கிடவே புற்றிடங்கொண்டார் தாள் வணங்கி உட் புகுவேன்.

முசுகுந்த அர்ச்சனையில் தியாகேசப்பெருமான் வணங்கி நின்றோம். 
தேவர்கள் முடிவணங்கி பூசை செய்யும் தெய்வம் அல்லவா.

மனம் பின்சென்றது

அக்காலம் அறியாத சிறு வயது. 

மாயை மறைத்திருந்திட்டிருந்த காலமது
ஆரூரார் பெருமான் அருள் உணராக் காலம்.
ஏரோட்டம் தேரோட்டம் என்றெல்லாம் எதுகை மோனைப் பேசி எள்ளிநகையாடிய காலமது.
தில்லைநடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் ஒருமையிலே உரைப்பேசி பொறுப்பெற்று வெற்றுப் பெருமை பேசியிருந்த கருப்புக்காலம்

உண்மை உணர்ந்து உருப்படவே 
நாள் வந்தது
காலத்தின் கோலத்தால் மாயை எதுவென புரியும் காலம் வந்தடைந்தோம். 
உண்மைபகுத்தறிவு எதுவென்று
பக்குவம் உணர்ந்தபோது
பாதி வயதும் வாழ்வும் முடித்திருந்தேன்.
கதறி அழுதாலும் காலம் வருமோ
இளமை வருமோ கேட்டிடுவீர் இளைஞர்களே காலத்தோடு வந்து நின்று கடவுளை நீ கண்டு வணங்கிடுவீர்.

இன்று வந்த மாய(யு)வதிகளால்
 மனம் புன்பட்டதெல்லாம் மிச்ச விணைகள்தான் என்று உணர்ந்தேன்.

மணி ஒலித்தது
கவனம் மீண்டது

தியாகேசர் சன்னதி
கண்ணீர் மல்க தலைவணங்கி 
உற்று பார்த்தேன் ஒளி ஆராதனை
உளமார நினைக்கின்றேன் 
உன்னையே வணங்கி நின்றேன்
வினை நீக்கம் வேண்டுமென்றேன்.

பின் உள்சென்று தரிசித்து வெளிவந்தேன்
பிரகார சுற்றில்
நாவுக்கரசரின் ஞானப் பதிகம் பாடல் ஒன்றுகண்டு கருத்தினில் வைத்தேன்

- தேவாரம். 6ம் திருமுறை
25. திருவாரூர் திருத்தாண்டகம்
பாடல் (253)

எழுது கொடியிடையார் ஏழை மென் தோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே
பண்டு தான் என்னொடு பகைதான் உண்டோ

முழுதுலகில் வாணவர்கள் முற்றுங் கூடி முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் 
ஆரூர் தானே.

(நெஞ்சமே மகளிரும்  நகை கொண்டு நம்மை இகழும் முன்னர், வாணவர்கள் வணங்கும் ஆரூரானை வணங்கிடுங்கள்).

🙏🙇🏽‍♂️🙏🙇🏼🙏🙇🏼‍♂️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்,

Monday, April 19, 2021

அப்பர் அமுதம் - திருமுறைக் காட்சி

#அப்பர்அமுதம்:
திருமுறைக் காட்சி

அது ஒரு பெருங் கிணறு 
அதனுள் இருந்தது ஒரு சிறு ஆமை. பிறந்தது முதல் அதற்கு அதுவே உலகம். 

 இதைவிட பேரிடம் புவி எங்கும் இல்லை என்று அலப்பறை செய்து வாழும்.

ஒரு நாள் பெரும் மழை 
அருகிலிருந்த கடல் பொங்கியது. 
கடலாமையொன்று கரை ஒதுங்கி
தவறி விழுந்தது அக்கிணற்றில்.

புதுவரவு வந்ததும் கர்வம் கொண்டு 
 எங்கிருந்து வந்துள்ளாய் நீயென
கிணற்றாமை கேட்டது

அருகில் இருக்கும் பெருங்கடல் பற்றிரைத்து அங்கி இருந்தேன்
என்று கடலாமை கனிவுடன் பதிலுரை தந்தது.

இதைக் கேட்டு கைக்கொட்டி 
இக்கிணற்றை விடவா பெரியது அது
இதற்கு இணையா அப்பெருங்கடல்
என்று பலவாறு கூறி எள்ளிநகையாடியது.

அகங்காரம் பெருங்கடல் பற்றிய குறையறிவு கொண்ட கூவத்தின் (கிணற்று ஆமை)
அறியாமை அறிந்து அமைதி கொண்டது
கடலாமை.

இது போன்றே மாந்தர் பலர்
மாதேவன் கருணைக் கடல் பற்றி
அறியாமல் பாவங்கள் செய்திடுவார்.
அவர் உணரார்.

என்பர் அப்பர் பெருமான்.
(சித்திரை: சதயம்: அப்பர் அய்க்கியம்)
கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவ லோடு ஒக்குமோ கடல் 
என்றல் போல்
பாவ காரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவ தேவன் சிவன் பெருந் தன்மையே.
 
- - தேவாரம்.5.100.10
பதிகம்: பொது : ஆதிபுராணத் திருக்குறுந்தொகை.
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

நேப்பாள புனித பயணம் - 2019 பகுதி - 3

நேப்பாள புனித பயணம் 2019  (06-04-2019 - 17.04.2019)
பகுதி - 3

காசி : தில் பாண்டேஸ்வரர் ஆலயம்

நாங்கள் தங்கியிருந்த ஹனுமான் காட் பகுதியிலிருந்து சற்று அருகில் உள்ள கோவில் Battary Ricksha மூலம் நன்பர்களுடன் சென்றோம். மாடியில் ஒரு மிகப் பெரிய லிங்கம் வருடா வருடம் வளர்ந்து வருவதாக நம்பிக்கை. கீழ் பகுதியில் ஒரு சிவலிங்கம் மோட்ச லிங்கம் இங்கு வேண்டினால் இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமாம். இறந்தவர்களுக்காக வேண்டுதல் செய்தாலும் அவர்களுக்கும் சொர்க்கம் கிடைக்குமாம். ஒரு பெரிய அரச மரம் சிவன் முகம் கல்லால் ஆனது. இங்கு வணங்கி பின் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நடந்து வந்து விட்டோம். பொதுவாக காசி முழுவதுமே சிறிய சிறிய சந்துகள் கோவில்கள் . பழக்கம் ஆனால் எல்லாக் கோவில்கஞக்கும் நடந்து சென்று வரலாம். சென்ற முறை பெரியவர் ஒருவர் மூலம் பல்வேறு புராதானமான கோவில் களுக்கு நடந்தே குறுக்குவழியில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மீண்டும் Hotel வந்து மதிய உணவு முடித்து காசிவிசுவநாதர் விசாலாட்சி அன்ண பூரணி தரிசனம் செய்து கங்கா ஆர்த்திக்கு சென்று முழுமையாக பார்த்து விட்டு கால பைரவர் சென்று தரிசித்து Room சென்றோம்.
காசிகோவிலை சுற்றியுள்ள இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள் . பெரிய சிறிய அழகிய கோவில்களை மறைத்து பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினால் அற்புத ஆலயங்கள் வெளிப்படுகிறது. முழுமையாக அகற்றினால் புராதான காசி உலகத்தின் மிகப் புனித இடமாக மாறும். தொடக்கம் நன்றாக உள்ளது. காசியில் மாறுதல் தெரிகிறது.

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
படங்கள்

நேப்பாள புனித பயனம் 2019 - பகுதி - 2 - காசி -

நேப்பாள புனித பயனம் 2019  (06-04-2019 - 17.04.2019)
பகுதி - 2 
நேப்பாள புனித பயனம் 2019 (06-04-2019 - 17.04.2019)
பகுதி - 2 

காசி :
வாரணாசி என்ற காசிக்கு சில முறை சென்றிருந்தாலும் அலுக்காத கங்கா குளியல் விஸ்வநாதர் தரிசனம் எல்லாம் வழக்கம் போல தான்.
சென்னையிலிருந்து செல்லும் கங்காசாகர் EXPRESS முழுதுமே காசி தரிசனத்திற்கு செல்பவர்களாகவே இருந்தார்கள். 2 Tier AC கம்பார்ட்மெண்ட். கிடைத்ததால் சவுரியமான பயணம் .6 .04 .2019 மாலை புறப்பட்டு 8 .04 .2019 காலை காசி அடைந்தோம். 
ஹனுமான் காட் அருகில் உள்ள HOTEL TAMIL NADU Room தங்கினோம். அருகில் ஹரிச்சந்திரா காட் அடுத்து கேதார் காட் கேதார் காட்டில் நீராடினோம்.படி ஏறி கேதார் ஆலயம் சுவாமி தரிசனம். கங்காவில் வெள்ளம் என நீர் புரண்டு ஓடவில்லை. மிக குறைவுதான். கேதார் ஆலயம் நமது நாட்டுக்கோட்டை நகரத்தாரால் அமைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. தரிசனம் முடிந்து மேற்குவாசல் வழியே வந்தோம். அருகில் திருப்பனந்தாள் முத்துக்குமரசாமி மடம் உள்ளது. நேரே ரூம் வந்து தயாராக இருந்த காலை உணவு முடித்து சில நன்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஆதி சங்கரரால் பிரதிஸ்ட்டிக்கப்பட்ட காஞ்சி காமகோடி மடம் சார்ந்த பஞ்சாயத னேஸ்வரர் ஆலயம் தரிசனம் செய்தோம். அருகில் பாரதியார் சிலை அமைத்துள்ளார்கள். சற்று அருகில் உள்ள ஹனுமான் காட் என்ற இடத்தில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு சென்றோம் தனி தனி சன்னதியில் சிவன், ஹனுமான், லெட்சுமி நாராயணன் முதலிய சுவாமிகள் பக்கத்தில் சங்கர மடத்தில் உள்ள ஆலயத்திற்கும் சென்றோம். அங்கிருந்து Battary Rikshaய மூலம் தில் பாண்டேஸ்வரர் என்ற ஆலயம் சென்றோம்.
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏💐🙏💐🙏💐🙏
படங்கள்

நேப்பாளப் புனித பயணம் - பத்ரிநாத் யாத்திரை - (06.04.2019 - 17-04-2019) பகுதி 1.

நேப்பாள புனித பயணம் 2019 
  (06-04-2019 - 17.04.2019)
பகுதி - 1

அருள்மிகு சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் திருவருளால் நேப்பாளத்தில் உள்ள முக்கிய திருத்தலங்கள் யாத்திரை 6 .04 .2019 ல் தொடங்கி 17.04.2019 வரை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
இந்த யாத்திரையில் முதலில் காசி சென்று தொடங்கினோம். பிறகு சுனோலி லும்பினி
மாணக்கணாமா போக்ரா ஜோம்சம் சென்று முக்திநாத் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். பிறகு காட்மண்டு சென்று பசுபதிநாதர் மற்றும் பல இடங்களை தரிசனம் செய்து வரும் வழியில் கோரக்கநாதர் தரிசனம் செய்து திரும்பினோம். இந்த யாத்திரையில் ஏற்பட்ட சில அனுபவக் குறிப்புகைளை தங்களுக்கு அவ்வப்போது பதிவு செய்கிறேன். நன்றி.
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏💐🙏💐🙏💐🙏
படங்கள்:

Wednesday, April 14, 2021

விக்ரமாதித்தியர் ஆலயம் - ஜோதிர்லிங்கதரிசனம் 2021 - உஜ்ஜயினி ஆலயங்கள்

#உஜ்ஜியினிஆலயங்கள்
பதிவு : 7.

விக்ரமாதித்யர் ஆலயம்:

பாரதம் மறக்கமுடியாத இந்து அரசர்களில் இவரும் ஒருவர், வீரம், தயாளம், மதிநுட்பம் உடைய அரசர்.
உஜ்ஜயினியை மிகச்சிறப்பாக ஆண்ட புகழ் பெற்ற அரசர் விக்கிரமாதித்தியர்.
 தன் தலையை பக்தியால் வெட்டிக்கொண்டவர்.

விக்ரமாதித்தியர் அரசர் சிலைகள் உள்ள ஆலயங்கள் இரண்டு உள்ளன.

மிகப்பழைய ஆலயம் ஒன்று
ஸ்ரீ ஹரிசித்தி மாதாவை பிரதானமாக வழிபட்ட விக்ரமாதித்தியருக்காக
ஹரிசித்தி மாதா ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் பிரியும் நேர் பாதையில் செல்ல வேண்டும்.  
ஒரு பெரிய கட்டிடத்தில் (ஆலய அமைப்பில்) மிகப்பெரிய விக்கிரமாதித்த அரசர் அரசவையில் உள்ளது போல் அமைத்துள்ளார்கள்.

 அரச சபையில் இருந்த அனைத்து பட்டி, மந்திரிகள், 32 பதுமைகள், எல்லோரும் அவர் கீழ் அமர்ந்து சபை நடத்துவது போல உள்ளது. நாம் அச்சிறிய சாலையில் நின்றே தரிசிக்க வேண்டும்.

வேதாளம், விக்கிரமாதித்தன் கதை, 32 பதுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

புதிய விக்கிரமாதித்திய அரசர் சிலை
ருத்ர சாகர ஏரியில் ஒன்று புதியதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு சுற்றுலா வருகையை அதிகப்படுத்தும் விதமாக இந்த ஏரியினை அழகுபடுத்தி மிகப் பெரிய கட்டிட வேலையும் நடந்து வருகிறது.

10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
படங்கள்:

Tuesday, April 13, 2021

ஹாசித்தி மாதா - உஜ்ஜியினி ஆலயங்கள் - ஜோதிர்லிங்கதரிசனம் 2021 பதிவு. 6.

#உஜ்ஜியினிஆலயங்கள்
 பதிவு: 6
ஹரிசித்திமாதா ஆலயம்:

மகாகாளேஸ்வரர் ஆலய வளாகத்திலிருந்து சுமார் 500 மீ.தூரத்தில் உள்ளது. 51 சக்தி பீடத்தில் ஒன்றக வணங்கப்பட்டு வருகிறது.  அம்மனின் elbow விழுந்த இடம். 
 கொடுமையான அரக்கர்களை அழித்தவர் இந்த அம்மன் என்று கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 
இந்த சக்தி பீடம் அமைப்பு சற்று உயரமான இடத்தில் நடுவில் உயரக் கருவறை மண்டபம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் இடதுபுறம் ஒரு சிறிய சிவனாலயம் சேர்ந்துள்ளது. எதிரில் தனி விநாயகர் சன்னதியும், தலவிருட்சம் ஒன்றும் உள்ளது.

பாதாள காளி சன்னதியும் அமைந்துள்ளது. அசுரன் தலையை வெட்டிய இடம். பூசை செய்ய தனி வழி உண்டு. பக்தர்கள் தரிசனம் செய்ய மேல் பகுதியில் 3 தனித்தனி துவாரங்கள் உள்ளன. அதன் வழியே தரிசனம் செய்ய வேண்டும்.

இரண்டு அற்புதமான மிக உயரமான கல்விளக்குத் தூண்களில் மாலையில் விளக்கு ஏற்றுகிறார்கள்.
சிறிய ஆலயமாக இருந்தாலும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.

மிக முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
10.03.2021

#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முந்திய பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5419530171455529&id=100001957991710

Sunday, April 11, 2021

பாரதமாதா ஆலயம் - உஜ்ஜியினி பதிவு - 5 ஜோதிர்லிங்கதரிசனம்2021

#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்

பதிவு-5
பாரதமாத ஆலயம் :

மகாகாளேஸ்வரர் ஆலயத்தின் தென்புறம் ஒரு பெரிய புதிய ஆலயம் கட்டப்பட்டு, பாரதமாதாவின் சிலை நடுநாயகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இருபுறமும் படிகள் ஏறி தரிசிக்க வேண்டும். நடுவில் பாரதத்தின் இயற்கை அமைப்புடன் நதி, மலை முதலியவற்ற செயற்கையாக அமைத்து விளக்கம் எழுதி அழகுடன் வடிவமைத்துள்ளார்கள்.
மிகப்பெரிய வளாகம்.
இதனையும் உள்ளடக்கி ஒட்டி அமைந்துள்ள ருத்ர சாகரம் என்ற ஏரியில் நடுநாயகமாக விக்கிரமாதித்த அரசரின் உருவ சிலையும் உள்ளது.
இவ்வளாகம் முழுதும் ருத்த சாகரம் ஏரியுடன் இணைத்து பெரிய சுற்றுலா கட்டிட அமைப்பு செய்து வருகிறார்கள்.
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
படங்கள்:

Friday, April 9, 2021

உஜ்ஜியினிஆலயங்கள் - . Shree Bade Ganesh ஜோதிர்லிங்கதரிசனம்2021

#உஜ்ஜியினிஆலயங்கள் 
பதிவு : 4

Shree Bade Ganesh:

மகாகாளேஸ்வரர் ஆலயம் மிக அருகில் வடக்கு பகுதியில் உள்ள சிறிய சிறப்பான ஆலயம்.
உள் நுழைந்ததும் மிக மிகப் பெரிய உருவத்தில் கணபதி உள்ளார்.

ஆலயத்தின் உட்பகுதியில் பஞ்சமுக ஹனுமான் உலோகத்தால் அமைக்கப்பட்டு நடுநாயகமாக ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார்.

இடைவெளியில் ஒரு தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்மன் வைத்து அதை அசைத்தும், தொட்டும் வழிபாடு நடைபெறுகிறது. 
இவ்வாலயம், மகாகாளேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது.
இதுவும் பிரார்த்தனை ஆலயம் போன்று வழிபடுகிறார்கள்.

10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
பதிவு : 3
https://m.facebook.com/story.php?story_fbid=5404498276292052&id=100001957991710

உஜ்ஜயினி - ராம் GHAT - ஜோதிர்லிங்கதரிசனம் 2021

ராம் GHAT -உஜ்ஜியினி ஆலயங்கள்:
10.03.2021.
உஜ்ஜியினியில் உள்ளது ஷிப்ரா நதி
ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஒரு முக்கிய ஸ்தான கட்டம். ராம் GHAT.
சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.
புராதானமானது.
தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.
12 ஆண்டுகளுக்கு 1 முறை கும்பமேளவிழா நடைபெறுவது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு 
 ஒருமுறை கும்பமேளா விழாவின் போது  லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள். 
பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக
நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன.  
பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது.
தினம் மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள்.
எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. 
இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது.
மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும்  மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.
பொதுவாக  உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.
(விடியற்காலையில் சென்று நீராடி ஸ்ரீமகாகாளேஸ்வரரை தரிசித்தோம்) 
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, April 7, 2021

ஜோதிர்லிங்கதரிசனம் 2021 உஜ்ஜியினி மகாகாளேஸ்வரர்

உஜ்ஜயினி :
மத்திய பிரதேசத்தில் உள்ள பாரதத்தின் மிக முக்கியமான தலம்.
இங்கு பல கோவில்கள் நிறைந்து உள்ளது. புனிதமான ஷிப்ரா நதி இவ்வூரில் உள்ளது. கரையெல்லாம் பல பல கோவில்கள் உண்டு. 84 லிங்கங்கள். பல புராண, புராதான ஆலயங்கள் நிறைந்த ஊர்.
ஏழு மோட்ச நகரங்களுள் இதுவும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. மற்ற தலங்கள்.

புராணம்:
சுதார்வா என்ற ஜைன அரசன் தான் அவந்திகை என்ற இந்த நகருக்கு உஜ்ஜயினி என்று பெயர் வைத்தார்.

 முக்கிய தீர்த்தமாகிய சிப்ரா நதியில் மூழ்கி நீராடி மகாகாளரை வணங்க வேண்டும்.
 காளி தரிசனம் செய்ய வேண்டும்.

 உத்+ஜைன =ஜைன சைமயத்தை உத்தம நிலைக்கு கொண்டுவந்த நகரம் 

தேவாமிர்தம் சிந்திய 4 புண்ணிய இடங்களில் இதுவும் ஒன்று.

12 ஆண்டுகளுக்கு 1 முறை கும்பமேளவிழா நடைபெறுகிறது.

இங்குதான் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் முதலியோர் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றனர்.

சிவபுராணத்தில் அவந்தி மாநகரில் விலாசன் என்ற சிவபக்தன் சிவபூசை செய்து கொண்டிருந்தபோது, இரத்தின மாலை என்ற மலையில்
வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன்,
 பூசைப்பொருள்களை எரிந்து தாக்கினான். சிவன் கோபம் கொண்டு அரக்கனை வீழ்த்தினார். 
மக்கள் வேண்டுதலை ஏற்று, 
மகாகாளர் என்ற பெயரில் லிங்க உருவில் இங்கு சிவன் இருக்கிறார்.

மாகாகாளேஸ்வரம் :

12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.

இந்த லிங்கமானது தென்புறம் பார்த்து உள்ளது.
 இதன் கருவரையில் ஸ்ரீ பார்வதிதேவி, ஸ்ரீ சுப்பிரமணியர், நந்தி இவர்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

இவ்வாலயம் 3 அடுக்குகள் கொண்டது. கீழ் அடுக்கில் மகாகாளேஸ்வரர் தென்புறம் நோக்கியும்.
2வது தரைதளத்தில் ஓம்காரேஸ்வரரும், 
அடுத்த மேல் அடுக்கில் நாக சந்திரேஸ்வரரும் உள்ளனர்.

வேறு பல சன்னதிகளும் சுற்றிலும் உள்ளன.

விடியற்காலையில் சுடுகாட்டு சாம்பல் கொண்டு செய்யப்படும் விபூதி அபிஷேகம் மிகவும் சிறப்பு.

இந்த பிரதான ஆலயத்தைச் சுற்றிலும் மேலும் பல லிங்கங்களும் சன்னதிகளும் உள்ளன.

முக்கியமான ஆலயமாக இருப்பதால் மிகப்பெரிய பாதுகாப்பும் கட்டிட அமைப்பும் உள்ளது. 

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் சாரி சாரியாக வந்து வழிபடுகிறார்கள். 

இவருக்கு பால் அபிஷேகம், செய்தும், விதவிதமான அலங்காரங்கள் செய்தும் ஆர்த்தி வழிபாடு நடைபெறுகிறது. 

மிகப்பெரிய (q Rows) வரிசைகள் அமைத்தும், படிகள் அமைத்தும் உள்ளனர். சிறப்பு வழிபாடு செய்பவர்கள் தனி பணம் கட்டி கருவரை உள்ளே சென்று தொட்டும் வணங்குகிறார்கள்.

 பல நிமிடங்கள் தொடர்ந்து பூசை செய்தும், ஆர்த்தி செய்கிறார்கள்.
மக்கள் குரல் ஒலி எழுப்பியும், கைகளைத் தட்டியும் ஒலி எழுப்புவது வித்தியாசமான வழிபாடு.

கைப்பேசி அனுமதிக்கப்படுவதால் எல்லோரும் கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதும் வித்தியாசமாகப்பட்டது.

ஆலயம் உள் செல்லவும், வெளியில் வரவும் தனித்தனி பாதைகள்.

மகாகாளேஸ்வரர் தரிசித்தபின் கூட்டம் நெரிசல் இல்லாமல் மற்ற சன்னதிகளை தரிசிக்கலாம்.

இன்னும் பல சிறப்புகள் உள்ள இவ்வாலயத்தை இரண்டாவது முறையாக தரிசனம் செய்யக் கூடியது இறையருளே.
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
முதல் பதிவு.. 

இந்த பதிவு. படங்களுடன் காண:

Saturday, April 3, 2021

திருத்தலங்கள் தரிசனம் APRIL - 2021 கீழ்வேளுர், கடம்பர வாழ்க்கை, இளங்கடம்பனூர்

கீழ்வேளுர்
அ/மி. ஸ்ரீசுந்தர குஜாம்பிகை ஸ்ரீ அட்ச லிங்கேஸ்வரர். (கேடிலியப்பர் ஆலயம்),  
பிரசித்திப் பெற்ற அஞ்சு வட்டத்தமாள் பங்குனி உற்சவம் நடைபெற்று வருகிறது.
🌼கீழ்வேளுர் பாடல் பெற்ற தலம்
🏵️அட்சயலிங்கேஸ்வரர். பீடம் மட்டுமே உள்ளது. 🌸குவளை பகுதியால் மூடி தரிசனம்.
🌺நடராஜர் வலது பாதம் தூக்கி ஆடும் வித்தியாசமான அமைப்பு.
🌷மாடக்கோவில்
🥀ஏராளமான சுவாமி சன்னதிகள் கொண்டது.
🌹நவக்கிரகங்கள் ஆலய தெமேற்கு மூலையில் வடக்குப் பார்த்த அமைப்பு.
☘️பிரகதீஸ்வரர், காயாரோகணேஸ்வர், 
மற்றும் பஞ்ச லிங்கங்கள் எல்லாம் தனித்தனி சன்னதிகள்.
🍁அ/மி. அஞ்சு வட்டத்தம்மாள் ஆலயம் உட்பிரகாரத்தில் வடகிழக்கில், வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

31.03.2021
#அற்புதஆலயம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

கடம்பரவாழ்க்கை:
 1. நாகப்பட்டிணம் - கீழ்வேளூர் சாலையில் வரும் ஆழியூரிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

2. நாகூரிலிருந்து ஆழியூர் செல்லும் பாதையில் சிராங்கம்புலியூர் அருகில் தேமங்கலத்திலிருந்து செல்லும் பாதையில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

முருகன் வணங்கிய பஞ்ச கடம்பத்தலங்களில் இதுவும் ஒன்று.

புராதனமான தலம். தற்போது புதிய முறையில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சியம்மன் ஆலயம்.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு பார்த்தும் அமர்ந்த ஆலயம்.
தனித்தனி கருவரை மண்டபங்கள் இணைக்கப்பட்டு ஏகமண்டபமாக புதிய முறையில் கட்டப்பட்டுள்ள ஆலயம்.

சுற்றுப் பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி சிறப்பான அமைப்புடன் உள்ளார்.

 விநாயகர், சுப்ரமணியர், மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீவரதராஜபெருமாள் மற்றும் கருடாழ்வார், ஆஞ்சனேயர் இணைந்த தனி சன்னதிகளும் உள்ளன.

பைரவர் இரண்டும், சந்திரன் சன்னதிகளும் சிறிய அளவில் உள்ளது.

அர்ச்சகர் நாகையிலிருந்து வருகிறார்.
சிறிய ஆலயத்தை ஊர்மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பராமரித்து வருவது சிறப்பு.
01.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

இளங்கடம்பனூர்:
பஞ்ச கடம்ப தலங்களில் ஒன்று.
நாகூர் - ஆழியூர் செல்லும் வழியில் உள்ள சிற்றூரில், அமைந்துள்ளது; அ/மி சோழிஸ்வரமுடையார், ஸ்ரீசெளந்தரநாயகி அம்பாள் ஆலயம்.
கிழக்குப் பார்த்த ஆலயம்.
3 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. ஆலயம் பிற்காலத்தில் எடுத்து கட்டியுள்ளார்கள். 
சுவாமி, அம்பாள் தனித்தனி கருவறை அமைப்பில் இருந்தும், ஏகமண்டபத்தால் இணைத்துள்ளனர். ஒரே பிரகாரம், விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர். தனித்தனி கருவறை மண்டபங்கள்.
சிறிய கிராமமாக இருப்பதால், பக்தர்கள் வருகை சுமாராக இருப்பினும் பரமரிக்க ஊர்மக்கள் ஒன்றுகூடி இன்னும் முயற்சி செய்தால் ஆலயம் நல்ல நிலையை கட்டாயம் எட்டும்.
01.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஜோதிர்லிங்கதரிசனம் 2021 பதிவு : 1. 10.03.2021 - உஜ்ஜயினி

வணக்கம் 
#ஜோதிர்லிங்கதரிசனம்2021 அனுபவக்குறிப்புகள்.

தனி ரயிலில் TRAVEL TIMES மூலம்
 IRCTC ரயில் Tour ஏற்பாடு  சில ஜோதிர்லிங்கள் தரிசனம் செய்துவந்த அனுபவங்கள் இந்த பதிவுகள்:

10.03.2021.
 உஜ்ஜயினி Railway Station அடைந்ததும், தனி பேருந்தில் அழைத்துச் சென்று விடியற்காலையில் நீண்ட Hall கொண்ட சத்திரம் இடத்தில் தங்க வசதி செய்திருந்தனர்.
(நாங்கள் பக்கத்தில் இருந்த Hotel லில் தனியாக Room Rs.1750 4.AM to 4.AM. 3 Beded Room. Attached bathroom, Non A.C.)
தங்கிக் கொண்டோம்.

10.03.2021.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து விடியற்காலையில் Ramkund Shipra River சென்று நீராடி வந்தோம்.
காலை உணவு முடிந்து,
பிறகு மகாகாளேஸ்வரர் தரிசனம்.
ஆலயம் வெளியில் வந்து
கணபதி ஆலயம்,
பாரதமாத ஆலயம்
தரிசித்து வந்த பின்
அங்குள்ள ஆலங்களை Auto மூலம் சென்று பார்த்துவந்தோம். 
6 ஆலயங்கள் Rs.150
1 Bhatrihari Caves
2.மங்களநாத் மந்தீர்
3.காலபைரவர்
5. Sri Sethiman Ganesh temple
6.Gadhkaika Mata (பிரார்த்தனை ஸ்தலம்)
மேற்படி ஆலயங்கள் தரிசனம் முடிந்து, (Meals  and rest)

மாலையில் கால்நடையாகவே சென்று கீழ்கண்ட ஆலயங்கள் தரிசித்தோம்.
ஊர் முழுதும் சிவராத்திரி உற்சவம் மிக சிறப்பான கொண்டாடம்.
காவல் துறையும், அரசும் பலத்த பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தியிருந்ததனாலும், கூட்டம் அதிகம் இருந்ததாலும். ஊரின் மிகப் பெரிய திருவிழா களை எங்கும் இருந்தது. 

1.SAKTHI PEEDAM - HARSIDDI MADHA
2. விக்ரமாதித்தியன் Temple
3. Ram Temple
4.Shree Rudrashwar Mahadev (mini temple)
மீண்டும் ஹரிசித்தி மாதா ஆலயம் மற்றும் பெரிய கணபதி ஆலயம் தரிசித்தோம். 
தங்கி இருந்த இடம் அருகில் உள்ள vighnharta Ganapati temple. விநாயகர் ஆலயம் தரிசித்து மீண்டும் இரவு 
Night tiffen இரவு தங்கல்.

11.03.2021

Early Morning (room vacated)and went temple area சிவராத்திரி உற்சவம் மிகமிக அதிக கூட்டம் பக்தர்கள் எங்கும் ஆலய வளாகம் சுற்றி பெரிய பெரிய TV மூலம் கருவறையில் நடப்பதை LIVE ஆக ஒளிபரப்பிக்கொண்டே இருந்தார்கள். அபிஷேகம், ஆராதனைகள் நடந்தபோது பக்தர்கள், குறிப்பாக இளைஞர்கள் பெரும்பாலும் ஆடியும், கைத்தட்டியும் உற்சாகமாக வணங்கியது புதிய அனுபவம்.
அரசின் பலத்த பாதுகாப்பு வரிசை ஒழுங்கு சிறப்பாகஏற்பாடுகள் செய்திருந்தனர்.
காலை 6. மணி அளவில் தங்குமிடம் வந்து காலை உணவு முடித்து Auto மூலம் பஸ் பார்க்கிங் சென்று
ஓம்காரேஸ்வரர் புறப்பட்டோம். 
வழியில் உணவு. ஓம் காரேஸ்வரர் சென்று தரிசனம் முடித்து இரவு நேரடியாக ரயிலுக்கு சென்றுவிட்டோம்.
(அடுத்த பதிவில்)
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...