Tuesday, April 9, 2024

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 10


அயோத்திபுனிதப்பயணம்
பதிவு - 10

பயண அனுபவக் குறிப்புகள்:

🕉️எங்களுடைய குழுவின்  பயணத் திட்டத்தின் படி நாங்கள் சென்ற முதல் நாள் அன்று மாலையில் சிலர் புறப்பட்டு லால் ஜோக் சென்று,  ஆர்த்தி பார்க்க சென்று விட்டார்கள் 6 மணி அளவில் ஆர்த்தி நடைபெறுகிறது. 
பலர் ராமர் ஆலயம் மட்டும் பார்த்து தரிசித்துவிட்டு வந்து விட்டார்கள்.

 🕉️நாங்கள் அனுமன் ஆலயம் தரிசித்து பின் ராமர் ஆலயம் சென்று ராமர் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கடைத்தெரு வழியாக லால் செளக்  வந்து அங்கிருந்து இ பஸ் மூலமாக TENT சிட்டி வந்து அடைந்தோம்.

🕉️இரவு உணவு முடித்துவிட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கி விட்டோம்.
இரவில் சற்று அதிக குளிர் இருந்தது. 

🕉️மறுநாள், விடியற்காலையில் TENT CITY யில் குளித்து காலை உணவு முடித்து ஆலயம் சென்றனர்.

🕉️நாங்கள் TENT CITY யிலிருந்து புறப்பட்டு லால் செளக் பகுதி சென்று அருகில் உள்ள சூரிய காட் என்ற இடத்தில் சராய் நதியில் குளித்தோம்.

 🕉️பிறகு அங்கிருந்து ஹனுமன் ஆலயம் சென்றோம் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது. நாங்கள் அருகில் உள்ள சில ஆலயங்களை தரிசித்து பின் ராமர் ஜென்ம பூமி சென்று விட்டு திரும்பினோம்.

🕉️ராமர் வளாகத்தை ஒட்டிய சிவன் கோயில் அதன் அருகில் ஒரு மிகப்பெரிய ஆலயம் வளாகம் அதில் ஒரு அன்னதான தர்மசத்திரமாக அதை வைத்திருக்கிறார்கள் வித்தியாசமான முறையில் பூசை நடந்தது ஒரு குழந்தை இராமரையும் வைத்து  தொட்டியில் வைத்து ஆட்டினர்கள். சிறு சிறு சன்னதிகள் ஏராளமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் பூசை ஆராதனை. அதன் பின் அன்னதானம் பெரிய அளவில் நடைபெறுகிறது.

🕉️அதற்கு மிக அருகிலேயே ராமர் ஜென்மபூமி ஆலயத்தின் முன் பகுதி உள்ளது.

🕉️நாங்கள் மீண்டும் ராமர் ஆலயம் பகலில் சென்று தரிசனம் செய்துவிட்டு அங்கு இருந்த மற்ற சில ஆலயங்களையும் தரிசனம் செய்தோம். நாங்கள் அயோத்தி மாநகரில் உள்ளஹனுமான் ஆலயம், ராமஜென்ம பூமி, தசரத் மகால், கனக்பவன், ராஜத்வார் ஆலயம், சராயு நதிக்கரை பகுதிகள், மற்றும் ராஜ்காட் என்ற இந்தபகுதியில் உள்ள சில ஆலயங்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது.

🕉️இரண்டாம் நாளில் மேல் குறிப்பிட்ட ஆலயங்களை தரிசித்து, ராமஜென்மபூமி தரிசித்து விட்டு பிரதான சாலை வழியாக,
அனுமார் ஆலயம் தாண்டி, திரும்ப லால் செளக் என்ற இடத்திற்கு வந்தோம்.  .

🕉️அங்கிருந்து நாம் தங்கியிருக்கும் TENT சிட்டிக்கு இலவச பஸ் வந்து நிற்கும்.அந்த பஸ்ஸில் புறப்பட்டு TENT சிட்டி வரலாம்.

🕉️லால் செளக் பகுதியில் ஷேர் ஆட்டோ / ஆட்டோ இவைகள் கிடைக்கின்றன. சிலர் இ-பஸ் மிகவும் கூட்டமாக இருக்கிறது என்று கருதுவதால் அதில் தனியாக பயணித்தும் TENT சிட்டிக்கு வந்து விடுகிறார்கள்; வழியிலேயே,  அயோத்தி பேருந்து நிலையமும், டூரிஸ்ட் பஸ்கள் நிறுத்தும் இடமும் அமைந்துள்ளது.

🕉️இதையெல்லாம் தாண்டி சுமார் ஒரு 5 கிலோ மீட்டர் தூரத்தில் TENT சிட்டி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

 🕉️சில ஆலயங்கள் புனரமைப்பு பணிகளில் இருந்தது.  மீண்டும் லால்ச்சோ பகுதிக்கு வந்து அங்கிருந்து நாங்கள் தங்கி இருந்த TENT சிட்டிக்கு வந்து சேர்ந்தோம்.

🕉️மாலையில் புறப்பட்டோம். இரவு ரயில் வண்டி புறப்பாடு இருந்ததால் உடனடியாக உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தோம்.

🕉️அங்கேயே எங்களுக்கு ஒரு இலவச பிரசாதப்பை வழங்கப்பட்டது அந்த சிறு பையில் ராமர் ஆலயத்தை பற்றியும் ஒரு சிறிய டப்பியில் சராயு புண்ணிய நதிமனல் வைத்தும், சிறிய பாட்டிலில்  தீர்த்த நீரும்  ஒரு பையில் வைத்து கொடுத்தார்கள்.

🕉️அங்கே லட்டு பிரசாதம் விலைக்கு விற்கிறார்கள். இராமர் படம், ஆலயம் பற்றிய படங்கள் சில பொருட்கள் எல்லாம் தேவை என்றால் இங்கேயே  வாங்கிக் கொள்ளலாம்.

 🕉️நாங்கள் கூடாரத்தை விட்டு வெளியில் வந்து எல்லோரும் ஒருங்கிணைந்து, ரயில்வே நிலையம் வந்து சேர்ந்தோம்.

 🕉️அயோத்தி தாம் ரயில்வே நிலையம் வந்ததும் எங்களுக்கான ரயில் வருவதற்கு உரிய நேரம் வரை காத்திருப்பு  இடத்தில் தங்குவதற்கு வசதி செய்திருந்தார்கள்.

🕉️அது ஒரு பெரிய கூடார அமைப்பு தற்காலிக கூடார அமைப்பில் உள்ளது. அங்கே தங்கி இருந்து ரயில் வந்ததும் புறப்பட்டோம்.
5.03.2024 என்று சரியான நேரத்திற்கு ரயில் விழுப்புரம் வந்து இறங்கினோம்.

🕉️அதிர்ஷ்ட வசமாக இறைவனுடைய அருளால் திருவாளர் சந்திரசேகரன் அய்யா  அவர்கள் எமச்கு நட்பானார் அவர் மூலமாக இந்த வாய்ப்பு எமக்கு கிடைத்தது. அவருக்கு எமது இதயம் நிறைந்த நன்றியை என்றும் காணிக்கை செலுத்துவோம்.🙏🏼🙇🏼

🕉️மிகவும் பண்பாளர் இனிய போற்றத்தக்க மனத்தினர்.  கடுகளவும் சினம் கொள்ளாமல் அனைவரையும் ஒன்றிணைத்து எங்களை வழிநடத்தி இந்த பயணத்திற்கு  முழுமையாகவும் சிறப்பாகவும் நடத்தி கொடுத்தார்.

🕉️இது  நம்முடைய பூர்வ ஜென்ம விதி பலன்களாலும் முன்னோர்கள் அருளாலும்,  இறையருளால், எனக்கு இந்த வாய்ப்புக்கிடைத்தது என்று முழுமையாக நம்புகிறேன்.

 🕉️அற்புதமான பயணம் எங்கள் குழுவில் எல்லோரும் மிகவும் திருப்தியாக ஆலயம் சென்று அயோத்தியில் உள்ள ராமர் ஆலயம் தரிசித்தோம். அங்குள்ள சராயு புண்ணிய நதியில் குளித்தோம் மற்றும் சுற்றியுள்ள ஆலயங்களும் தரிசித்தோம்.

🕉️எல்லோரும் மிக மிக மன திருப்தியுடன் எல்லா நிகழ்வுகளும் அவரவர்கள் எண்ணங்களின் விருப்பப்பப்படி மன நிறைவுடன் தரிசனம் கிடைத்தது.

🕉️ இந்தப்பயணத்தில், ஏராளமான அனுபவங்களும், நல்ல இறை உணர்வு சிந்தனைகளும், அருமையான நட்புகளும் எனக்கு கிடைத்தது.

🕉️இந்த ஏற்பாடை திரு சந்திரசேகர் அய்யா அவர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைத்து இதை செய்து முடித்துள்ளார் அவருக்கு மீண்டும் எங்கள் நமஸ்காரம்.  நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியப்படும்.

🕉️ நமது பாரத புன்னிய பூமியில் உள்ள இன்னும் இன்னும் எத்தனையோ புராதானமான ஆலயங்கள் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. இறைவனிடம் மனமுருகி தூய அன்புடன் பத்தி வைத்தால்,  இறைவன்  கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது சத்தியவாக்கு.

🕉️எனது அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நன்றி🙏

29.02.2024 – 5.03.2024
#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–
🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱


WHATSAPP CHANNEL....

Face Book....



INSTAGRAM


Twitter

My Blog....
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...