பதிவு - 5.
ஸ்ரீராமஜென்மபூமி - அயோத்தி - பாலராமர் ஆலயம் :
🙏இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி, உலக இந்து மக்களின் எழுச்சி நாளாகவும், மகிழ்ச்சி நாளாகவும் அமைந்தது.
🛕பலவேறு விஷயங்கள் கடந்து, புதிய ஆலயம் புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
🛕தற்போது உள்ள ஆலய அமைப்பு :
🛕ஆலயம் பாரம்பர்யமிக்க அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
🛕ஆலய நீளம் (கிழக்கு மேற்காக) 390 அடி, அகலம் 250 அடி, உயரம் 161 அடி .
🛕3 தளங்கள் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உள்ளது. மொத்தம் 392 துண்கள், 44 வாசல்கள்
🛕தற்போது, தரை தள கர்ப்பக்ரஹத்தில் பிரபு ஸ்ரீராம பிரானின் குழந்தை வடிவம் உள்ளது. இவரை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு, தரிசித்து வணங்கி வருகிறோம்.
🛕முதல் தளத்தில் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக மண்டபம் கட்டி பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
🛕மொத்தம் 5 மண்டபங்கள்,
நாட்டிய மண்டபம், ரங்கமண்டபம், தரிசன மண்டபம், ப்ராத்தனா மண்டபம், கீர்த்தனா மண்டம்.
🛕தூண்களில் இறைவன் உருவங்கள், மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலைகள்.
🛕நுழைவு வாயில் முன்பு 32 படிகள் உயரம் 16.5 அடி இதன்மேல் ஏறி பிரதான நுழைவு வாயிலை அடையலாம்.
🛕மாற்றுதிறனாளிகள், மற்றும் முதியோருக்கு ரேம்ப் மற்றும் லிப்ட் வசதிகளும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
🛕4 பக்கங்களிலும், கோட்டைச் சுவர்கள் 732 மீ நீளம், 4.25 மீ அகலம்.
கோட்டையின் 4 மூலைகளில், முறையே சூரியன், சிவன், கணபதி, தேவி பகவதி ஆகியோருக்கான ஆலங்கள் கோட்டையின் தெற்கு முகமாக ஹனுமானும், வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்கள். கட்டப்பட்டு வருகின்றன.
🛕ஆலயத்தின் தென் பகுதியில் உள்ள சீதை கிணறு புரைமைத்து கட்டிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
🛕கோட்டையின் வெளியே, தென்திசையில் வால்மீகி, வசிஷ்ட்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி, அகத்திய மகரிஷி, குகன், சபரிமாதா, மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்கள்.
🛕தென்மேற்கில் குபேரன் குடிலில் சிவாலய புனர்பிரதிஷ்டை, மற்றும் ராமபக்த ஜடாயுவின் பிரதிஷ்டைகள் உள்ளன.
ஆலய வளாகம் (முன்பகுதி)
🛕ஸ்ரீராம ஜென்ம பூமி வளாகம் பாதை முழுதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு கடைகள், புராதான கட்டிடங்கள், ஆலயங்கள் இவற்றை சீரமைத்துள்ளனர். மேலும் மேலும் அழகுபடுத்தும் சீர் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
🛕ஸ்ரீராமஜென்மபூமி ஆலயம் செல்லும் பக்தர்கள் கூட்டம், பெரிய கூட்டம்.
🛕லால் செளக் சென்று, அருகில் உள்ள சராயு நதிக்கரையில் உள்ள, வழியிலும், அயோத்தி ரயில் நிலையத்திலிருந்து நேரடியாகவும் ஜென்மபூமி வரலாம்.
🛕சாலைகளில் ஆலயம் தரிசிக்க நடந்து செல்லும் வழிதனியாகவும், தரிசித்து வெளியேறும் வழி தனியாகவும் கட்டுப்பாட்டுடனும், கண்காணிப்புடனும் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
🛕ஆலயம் அருகில் சென்றதும்.
நாம் எடுத்துச் செல்லும் சிறு பைகள், தவிர, பெரிய பொருட்கள் வைப்பதற்கு தனி Cloak Room உள்ளது. (இருந்தாலும் நாங்கள் எந்த பெரிய பையையும் எடுத்துச் செல்லவில்லை)
🛕முதல் நுழைவாயில் நுழையும் போது நம்மையும், நமது கைப்பை முதலியவற்றை சோதனை இடுகிறார்கள் அதன் பின் உள்ளே செல்ல வேண்டும்.
🛕முதல் பகுதியில் தற்காலிக ஏற்பாடாக, நமது காலணிகள் வைப்பதற்கு தனி தனி ஸ்டால்கள் சுமார் ஒரு 20 எண்ணிக்கையில் உள்ளது.
🛕செல்போன் வைப்பதற்கு சுமார் 20 தனி கவுண்டர்கள் மிக நேர்த்தியாக வரிசைப்படி வைத்து உள்ளார்கள். எல்லாம் இலவசம்.
🛕நாம் நம்முடைய காலனிகளை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் எந்த கவுண்டர் No. மற்றும், ஏ,பி என்ற பிரிவு உள்ளது. அந்த நம்பர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
வழங்கப்படும் இந்த டோக்கனிலும் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
🛕அதேபோல செல்போன் வைப்பதற்கு 20 கவுண்டர்கள் இருக்கின்றன.
🛕அவற்றிற்கும் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன அந்த கவுண்டர் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும் நமது செல்போனை வாங்கி அதை அவர்கள் உள்ளே சென்று வாக்கரில் வைத்து பூட்டிவிட்டு நம்மிடம் சாவியை கொடுத்து விடுகிறார்கள். அந்த சாவியில் Locker நம்பர் உடன் எந்த கவுண்டர் என்பதற்கான அட்டையும் இருக்கும் பத்திரமாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
🛕முக்கிய குறிப்பு : செல்போன் கொண்டு போய் நீங்கள் வைத்தீர்கள் என்றால் டெலிவரி எடுக்கும் பொழுது
cell phone Passward போட்டுத் திறக்க கூறுகிறார்கள். வேறு /மாற்று நபர் மூலம் எடுத்துச் செல்வதை தடுக்க இந்த ஏற்பாடு. எனவே, cell phone யார் Tocken போடுகிறார்களோ, அவர்களே சென்று வாங்குது நல்லது.
ஆலய பகுதி :
🛕சமதளத்திலிருந்து, 10 படிகள் உயரம் ஏறிய பிறகு மேலும் 10 படிகள் உயரம் ஏறி அதற்குப் பிறகு மேலும் ஒரு ஐந்து படி உள்ளது.
🛕முதலில் ஒரு முன் மண்டபம் அடுத்தது நடுமண்டபம் அடுத்து உள் மண்டபம் அடுத்தடுத்து உள்ளது.
🛕கலை அம்சத்துடனும் இந்த மண்டபங்கள் எழிலாக உள்ளன. நாம் பார்த்துக் வியந்து கொண்டே செல்லலாம். கருவரையில் உள்ள பாலராமர் நமக்கு முதல் மண்டபத்தில் இருந்து நமக்கு காட்சி தருகிறார்.
🛕வரிசை உள் நுழையும் வழியில் செல்லும் பொழுது நான்கு வரிசை பிரிவு இருக்கும். அதில் நடுவில் உள்ள இரண்டு வரிசைகளில் ஏதேனும் ஒன்றில் செல்வது மிகவும் நல்லது; அதில் அதிக கூட்டம் இருக்கும்; மேலும், மிக மெதுவாக நகரும். ஏனென்றால்; இந்த நடு வரிசைகளில் செல்பவர்களுக்கு கருவறையில் உள்ள பாலராமர் சிலை நன்றாகத் தெரியும்.
🛕கடைசியில் உள்ள இரண்டு பக்கமும் உள்ள வரிசை பாதையில் சென்றால் கூட்டம் விரைவாக செல்லலாம். கருவரை உள் மண்டபம் சென்ற பிறகே பெருமாள் தெரிவார்.
🛕 வரிசைகளின் இடையில் இரும்புக் குழாய் பதித்து பிரித்து விட்டு இருப்பார்கள்.
🛕ராமர் சிலை மிக அற்புதமாக அழகாக பக்தி பரவசத்துடன் இருக்கிறது. நாம் தரிசித்து கொண்டே செல்லலாம். கருவறை முன் மண்டபங்கள் வரை நம்மை அனுமதிக்கின்றார்கள். கூட்டம் எவ்வளவு இருந்தாலும் மெதுவாக சென்று கொண்டே இருப்பதால் நாம் விரைவாகவும், மிக நன்றாகவும் தரிசனம் செய்து விடலாம்.
🛕தரிசனம் செய்துவிட்டு அந்த கருவறை மண்டபம் முன் உள்ள மண்டபத்தில் உள்ள அலங்கார வளைவுகளை வேலைப்பாடுகள் நுணுக்கங்களை ரசித்துக் கொண்டே ராமர் பகவானையும் வேண்டிக் கொண்டே நாம் உள்ளே சென்று தரிசித்து மண்டபத்திற்கு வெளியில் வரவேண்டும். மெதுவாக படி இறங்கி கீழ்ப்பகுதிக்கு வந்து விடலாம்.
🛕ராமர் ஆலயம் உள்ளே சென்று தரிசித்து வெளியில் வர சுமார் 30 – 40 நிமிடங்களில் ஆகிறது. அவ்வளவு கூட்டமும் வேகமாகவே நகர்ந்து செல்கிறது. தரிசித்த பின் வெளியில் வந்து கொண்டேயிருக்க வேண்டும்,
🛕வளாகத்தின் பல பகுதிகள் ஆலயக் கட்டிடப்பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
🛕வெளியில் வரும் பொழுது நமக்கு ஒரு வெயிட்டிங் ஹால் இருக்கிறது அங்கே காத்திருந்து நம் உடன் வந்தவர்களை இணைத்துக் கொள்ளலாம். அங்கு தூய்மையான கழிப்பறை வசதிகள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கு தகுந்தார் போல் உட்காருவதற்கு நாற்காலிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
🛕அங்கேயே அந்த பகுதியிலேயே நாம் செல்போன் திரும்ப பெற்றுவிடலாம் நாம் எந்த கவுண்டரில் கொடுத்தோமோ அந்த கவுண்டர் உடைய இன்னொரு பகுதி இந்த பகுதியில் வரும் எனவே அந்த பகுதிக்கு உரிய கவுண்டரில் கொண்டு சென்று நமது டோக்கனை கொடுத்தால் சாவியை கொடுத்தால் அவர்கள் செல்போனை எடுத்துக் கொண்டு நம்மிடம் தந்துவிடு திருப்பித் தந்து விடுவார்கள். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
🛕இந்தக் கட்டிடத்தில் ஒரு மெடிக்கல் சென்டர் வைத்திருக்கிறார்கள். இலவச தூய்மையான கழிப்பறை வசதிகள் இங்கு உண்டு.
🛕இந்த கட்டடத்தை விட்டு வெளியில் வந்து நமது காலணிகளையும் எடுத்துக் கொள்ளலாம்; அதற்கும் சற்று வெளியில் நடந்து, வெளியில் வந்தால் கிளாக் ரூம் வந்துவிடும் அங்கு வைத்திருக்கும் நமது பெரிய பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறும் வழியில் நாம் சுமார் ஒரு 50 மீட்டர் தூரம் வெளியில் நடந்து வரவேண்டும்.
🛕 வளாகத்தின் வெளியில் வரும் வழியில் தமிழக கோயில் போல் கட்டப்பட்டுள்ள ஒரு வெங்கடாஜலபதி சீனிவாச ஆலயம் ஒன்றும் உள்ளது.
🛕அது சற்று உயரமான மாடி படிக்கட்டுகள் கொண்டதாக இருப்பதால் முடிந்தவர்கள் சென்று தரிசனம் செய்து திரும்பலாம்.
🛕தனியார் ஆலயமாக இருப்பதால், திறந்திருக்கும் நேரம் விசாரித்து அல்லது திறந்திருக்கும் பொழுது தரிசிக்கலாம்.
🛕வெளியில் உள்ள பிரதான சாலையில் எப்பொழுதும் அதிக கூட்டமாக உள்ளது.
🛕ஜென்ம பூமி ஆலயம் வெளி சாலையில் இருந்து நேரடியாக ரயில்வே நிலையம் செல்வதற்கு ஒரு பிரதான வழி இருக்கிறது.
🛕மேலும் நாம் கிழக்கு புறம் சென்றால் அகலப்படுத்தப்பட்ட சாலையில் லால் செளக் என்ற இடத்தை அடையலாம் வழியில் ஹனுமன் ஆலயம் உள்ளது. நடந்து மட்டுமே செல்ல முடியும்.
🛕 இந்த பகுதியில் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் எந்த பெரிய வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை காவல்துறை கண்காணிப்பு அதிகம் உண்டு.
🛕இரண்டு புறங்களும் ஏராளமான கடைகள் உள்ளன. ஒரு சில இடங்களில் அன்னதானம் எல்லா வேளைகளிலும் நடைபெற்று வருகிறது.
🛕தனியார் அமைப்பு மூலமாக நாம் வரும் வழியில் உள்ள பல்வேறு சிறிய பெரிய மிக புராதனமான கட்டிடங்கள் / ஆலயங்கள் இப்பொழுது புனரமைக்கப்பட்டு வருகின்றன. அவைகள் இன்னும் சில ஆண்டுகளில் அந்த புராதானமான கட்டிடங்கள் கோயில்கள் ஆலயங்களும் பிரபலமாகி வழிபட செல்வார்கள் என்று தோன்றுகிறது.
பதிவுகள் தொடருகின்றன....
#அயோத்திபுனிதப்பயணம்
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–
No comments:
Post a Comment