Tuesday, April 9, 2024

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 10


அயோத்திபுனிதப்பயணம்
பதிவு - 10

பயண அனுபவக் குறிப்புகள்:

🕉️எங்களுடைய குழுவின்  பயணத் திட்டத்தின் படி நாங்கள் சென்ற முதல் நாள் அன்று மாலையில் சிலர் புறப்பட்டு லால் ஜோக் சென்று,  ஆர்த்தி பார்க்க சென்று விட்டார்கள் 6 மணி அளவில் ஆர்த்தி நடைபெறுகிறது. 
பலர் ராமர் ஆலயம் மட்டும் பார்த்து தரிசித்துவிட்டு வந்து விட்டார்கள்.

 🕉️நாங்கள் அனுமன் ஆலயம் தரிசித்து பின் ராமர் ஆலயம் சென்று ராமர் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கடைத்தெரு வழியாக லால் செளக்  வந்து அங்கிருந்து இ பஸ் மூலமாக TENT சிட்டி வந்து அடைந்தோம்.

🕉️இரவு உணவு முடித்துவிட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கி விட்டோம்.
இரவில் சற்று அதிக குளிர் இருந்தது. 

🕉️மறுநாள், விடியற்காலையில் TENT CITY யில் குளித்து காலை உணவு முடித்து ஆலயம் சென்றனர்.

🕉️நாங்கள் TENT CITY யிலிருந்து புறப்பட்டு லால் செளக் பகுதி சென்று அருகில் உள்ள சூரிய காட் என்ற இடத்தில் சராய் நதியில் குளித்தோம்.

 🕉️பிறகு அங்கிருந்து ஹனுமன் ஆலயம் சென்றோம் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது. நாங்கள் அருகில் உள்ள சில ஆலயங்களை தரிசித்து பின் ராமர் ஜென்ம பூமி சென்று விட்டு திரும்பினோம்.

🕉️ராமர் வளாகத்தை ஒட்டிய சிவன் கோயில் அதன் அருகில் ஒரு மிகப்பெரிய ஆலயம் வளாகம் அதில் ஒரு அன்னதான தர்மசத்திரமாக அதை வைத்திருக்கிறார்கள் வித்தியாசமான முறையில் பூசை நடந்தது ஒரு குழந்தை இராமரையும் வைத்து  தொட்டியில் வைத்து ஆட்டினர்கள். சிறு சிறு சன்னதிகள் ஏராளமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் பூசை ஆராதனை. அதன் பின் அன்னதானம் பெரிய அளவில் நடைபெறுகிறது.

🕉️அதற்கு மிக அருகிலேயே ராமர் ஜென்மபூமி ஆலயத்தின் முன் பகுதி உள்ளது.

🕉️நாங்கள் மீண்டும் ராமர் ஆலயம் பகலில் சென்று தரிசனம் செய்துவிட்டு அங்கு இருந்த மற்ற சில ஆலயங்களையும் தரிசனம் செய்தோம். நாங்கள் அயோத்தி மாநகரில் உள்ளஹனுமான் ஆலயம், ராமஜென்ம பூமி, தசரத் மகால், கனக்பவன், ராஜத்வார் ஆலயம், சராயு நதிக்கரை பகுதிகள், மற்றும் ராஜ்காட் என்ற இந்தபகுதியில் உள்ள சில ஆலயங்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது.

🕉️இரண்டாம் நாளில் மேல் குறிப்பிட்ட ஆலயங்களை தரிசித்து, ராமஜென்மபூமி தரிசித்து விட்டு பிரதான சாலை வழியாக,
அனுமார் ஆலயம் தாண்டி, திரும்ப லால் செளக் என்ற இடத்திற்கு வந்தோம்.  .

🕉️அங்கிருந்து நாம் தங்கியிருக்கும் TENT சிட்டிக்கு இலவச பஸ் வந்து நிற்கும்.அந்த பஸ்ஸில் புறப்பட்டு TENT சிட்டி வரலாம்.

🕉️லால் செளக் பகுதியில் ஷேர் ஆட்டோ / ஆட்டோ இவைகள் கிடைக்கின்றன. சிலர் இ-பஸ் மிகவும் கூட்டமாக இருக்கிறது என்று கருதுவதால் அதில் தனியாக பயணித்தும் TENT சிட்டிக்கு வந்து விடுகிறார்கள்; வழியிலேயே,  அயோத்தி பேருந்து நிலையமும், டூரிஸ்ட் பஸ்கள் நிறுத்தும் இடமும் அமைந்துள்ளது.

🕉️இதையெல்லாம் தாண்டி சுமார் ஒரு 5 கிலோ மீட்டர் தூரத்தில் TENT சிட்டி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

 🕉️சில ஆலயங்கள் புனரமைப்பு பணிகளில் இருந்தது.  மீண்டும் லால்ச்சோ பகுதிக்கு வந்து அங்கிருந்து நாங்கள் தங்கி இருந்த TENT சிட்டிக்கு வந்து சேர்ந்தோம்.

🕉️மாலையில் புறப்பட்டோம். இரவு ரயில் வண்டி புறப்பாடு இருந்ததால் உடனடியாக உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தோம்.

🕉️அங்கேயே எங்களுக்கு ஒரு இலவச பிரசாதப்பை வழங்கப்பட்டது அந்த சிறு பையில் ராமர் ஆலயத்தை பற்றியும் ஒரு சிறிய டப்பியில் சராயு புண்ணிய நதிமனல் வைத்தும், சிறிய பாட்டிலில்  தீர்த்த நீரும்  ஒரு பையில் வைத்து கொடுத்தார்கள்.

🕉️அங்கே லட்டு பிரசாதம் விலைக்கு விற்கிறார்கள். இராமர் படம், ஆலயம் பற்றிய படங்கள் சில பொருட்கள் எல்லாம் தேவை என்றால் இங்கேயே  வாங்கிக் கொள்ளலாம்.

 🕉️நாங்கள் கூடாரத்தை விட்டு வெளியில் வந்து எல்லோரும் ஒருங்கிணைந்து, ரயில்வே நிலையம் வந்து சேர்ந்தோம்.

 🕉️அயோத்தி தாம் ரயில்வே நிலையம் வந்ததும் எங்களுக்கான ரயில் வருவதற்கு உரிய நேரம் வரை காத்திருப்பு  இடத்தில் தங்குவதற்கு வசதி செய்திருந்தார்கள்.

🕉️அது ஒரு பெரிய கூடார அமைப்பு தற்காலிக கூடார அமைப்பில் உள்ளது. அங்கே தங்கி இருந்து ரயில் வந்ததும் புறப்பட்டோம்.
5.03.2024 என்று சரியான நேரத்திற்கு ரயில் விழுப்புரம் வந்து இறங்கினோம்.

🕉️அதிர்ஷ்ட வசமாக இறைவனுடைய அருளால் திருவாளர் சந்திரசேகரன் அய்யா  அவர்கள் எமச்கு நட்பானார் அவர் மூலமாக இந்த வாய்ப்பு எமக்கு கிடைத்தது. அவருக்கு எமது இதயம் நிறைந்த நன்றியை என்றும் காணிக்கை செலுத்துவோம்.🙏🏼🙇🏼

🕉️மிகவும் பண்பாளர் இனிய போற்றத்தக்க மனத்தினர்.  கடுகளவும் சினம் கொள்ளாமல் அனைவரையும் ஒன்றிணைத்து எங்களை வழிநடத்தி இந்த பயணத்திற்கு  முழுமையாகவும் சிறப்பாகவும் நடத்தி கொடுத்தார்.

🕉️இது  நம்முடைய பூர்வ ஜென்ம விதி பலன்களாலும் முன்னோர்கள் அருளாலும்,  இறையருளால், எனக்கு இந்த வாய்ப்புக்கிடைத்தது என்று முழுமையாக நம்புகிறேன்.

 🕉️அற்புதமான பயணம் எங்கள் குழுவில் எல்லோரும் மிகவும் திருப்தியாக ஆலயம் சென்று அயோத்தியில் உள்ள ராமர் ஆலயம் தரிசித்தோம். அங்குள்ள சராயு புண்ணிய நதியில் குளித்தோம் மற்றும் சுற்றியுள்ள ஆலயங்களும் தரிசித்தோம்.

🕉️எல்லோரும் மிக மிக மன திருப்தியுடன் எல்லா நிகழ்வுகளும் அவரவர்கள் எண்ணங்களின் விருப்பப்பப்படி மன நிறைவுடன் தரிசனம் கிடைத்தது.

🕉️ இந்தப்பயணத்தில், ஏராளமான அனுபவங்களும், நல்ல இறை உணர்வு சிந்தனைகளும், அருமையான நட்புகளும் எனக்கு கிடைத்தது.

🕉️இந்த ஏற்பாடை திரு சந்திரசேகர் அய்யா அவர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைத்து இதை செய்து முடித்துள்ளார் அவருக்கு மீண்டும் எங்கள் நமஸ்காரம்.  நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியப்படும்.

🕉️ நமது பாரத புன்னிய பூமியில் உள்ள இன்னும் இன்னும் எத்தனையோ புராதானமான ஆலயங்கள் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. இறைவனிடம் மனமுருகி தூய அன்புடன் பத்தி வைத்தால்,  இறைவன்  கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது சத்தியவாக்கு.

🕉️எனது அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நன்றி🙏

29.02.2024 – 5.03.2024
#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–
🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱


WHATSAPP CHANNEL....

Face Book....



INSTAGRAM


Twitter

My Blog....
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 9


பதிவு - 9

✨அயோத்தியின் மற்ற முக்கிய இடங்கள்:

-சுக்ரீவ கோட்டை, 
-சசியா ராம் கோட்டை, 
-ஜானகி மகால் பெரிய இடம், ராம்கோட் 
- ராம் குகை தாலோபாலி
- அனுமன் குகை
- தசரதன் அரண்மனை
- ராதா கிருஷ்ணா கோவில் ரானோ பாலி
- கோகுல்தம்
-அஷ்ரபி பவன் கோவில்
- ராஜ்துவார் கோவில் 
-மோதி ஹரி கோவில் 
-மணி ராம் கன்டோன்மென்ட்
- திகம்பர் அகாரா 
- கர சேவபுரம் பட்டறை கோவில்  
-ராம் ஜானகி கோவில் 

விழாக்கள்

தீபோத்ஸவம்:

🛐அயோத்தியின் பிரதான வரலாற்று மத ஆன்மீகம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு உத்திரப்பிரதேச அரசு 2017 ஆம் ஆண்டு முதல் 
மாநில சுற்றுலாத்துறையின் முயற்சியால் சரயு நதியின் கரையில் அடிவாரத்தின் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றி தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக 
தீபோத்ஸவம் நடத்துகிறது. இது கின்னஸ் புக் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை பிடித்துள்ளது.

🛐சௌராசி சுக்ல ராம நவமி அன்று கோசி பரிக்கரமா

🛐கார்த்திக் சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி அன்று 14 கோசி பரிக்கராமா

🛐கார்த்திக் ஏகாதசி அன்று பஞ்சகோசி பரிகரமா

🛐Antgrihi Parikrama தினந்தோரும் :
இந்த பரிக்கமா வசிஷ்ட குண்டத்தில் தொடங்கி ஹனுமன்கர்ஹியில் இருந்து தெற்கு நோக்கு செல்கிறது.
இது ஸ்ரீ வசிஷ்ட ஆசிரமத்தில் முடிவடைகிறது. இந்தச் சுற்றில் அயோத்தியின் அனைத்து முக்கிய கோவில்கள் மற்றும் கோவில்கள் அடங்கும்.

🛐சைத்தாரா ராம் நவமி (மார்ச் – ஏப்ரல்
🛐ஷ்ரவன் ஜுலா கண்காட்சி (ஜூலை – ஆகஸ்ட்)
🛐கார்த்திக் பூரணிமா (நவம்பர்)
🛐ஸ்ரீராம் விவா உத்தராயண் ஜெயில் (நவம்பர் – டிசம்பர்)
🛐வளர்க் யாத்திரை (சுகுன்) கண்காட்சி
🛐பரத்குண்ட் இறந்தார்.
🛐குப்தார் காட் கண்காட்சி
🛐சேற்று நிலம் (மஹி ) சேற்று
- உக்ரைன் கண்காட்சி

மேலும், பார்க்க வேண்டிய அருகிலுள்ள இடங்கள்.

பாலர்க் தீர்த்தம் சூரிய குண்ட் 
🛐(சுமார் 4 கி.மீ.) பதினான்காவது கோசி பரிக்கிரமா பாதையில் அமைந்துள்ளது.
இங்கு ராஜா தர்ஷன்சிங் சூரியக்கடவுளின் கோவிலையும், பெரிய சூரிய குண்டத்தையும் கட்டினார்.  இங்கு ஆண்டு தோறும் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

நந்தகிராம், பாரத்குண்ட் 
🕉️(சுமார் 14 கி.மீ).அயோத்தியில் உள்ள சுல்தான்பூர் தோட் மீது அமைந்துள்ள நம்பிக்கையின்படி ஸ்ரீ ராமன் வனவாசத்திலிருந்து திரும்பிய பிறகு பாரதிஜி இங்கு தவம் செய்தார். அன்றிலிருந்து அது நந்தி கிராம் (பாரத் குண்ட்) என்று அழைக்கப்படுகிறது.
இங்கு பாரதி ஜி கோயிலும் உள்ளது.
மகெளடா, மக்பூமி 
🛕(சுமார் 2 கி.மீ) :
இங்குதான் தஜ்ஜா தசரதன் புத்ரேஷ்டி யாஜ் செய்ததாக நம்பப்படுகிறது.

🛕சிருங்கி ரிஷி ஆசிரமம் 
(சுமார் 32 கி.மீ)
அயோத்தியின் மாயா பஜார்
தண்டா சாலையில் மகபூப் கஞ்சில் சரயு நதிக்கரையில் சுனி ரிஷியின் பழமையான கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ராம நவமி அன்று திருவிழா

 🛕 வாராஹி தேவி, 
உத்தட்டி பவானி
இங்கு வடபவானி எனப்புகழ் பெற்ற வராஹி தேவியின் பழமையான ஆலயம்

🛕சுவாமி நாராயணன் கோவில், சாபியா (40 கி.மீ)
சுவாமி நாராயண் கோவில் சாபியாவில் அமைந்துள்ளது.

பொது :

🛕 நகரில் பெரும்பாலும் தனியார் Trust அமைப்பினர் உரிமை கொண்ட கட்டிடங்கள் அதிகம் உள்ளது ; பல் வேறு கட்டடங்கள் /ஆலயங்கள் சீர் செய்யப்பட்டும், புதியவடிவில் நவீனங்கள் செய்யப்பட்டும் வருகின்றன. 
🛕வரும் காலங்களில் அயோத்தி நகரின் எல்லா இடங்களிலும், பல்வேறு புரானங்களின் அடிப்படையிலும், சரித்திர தொடர்பான இடங்களும் புதுப்புது விஷயங்களுடன் புதிய ஆலயங்கள் / கட்டிடங்கள் மக்கள் சென்று பார்த்து வர அனுமதிக்கப்படுவார்கள்.

🛕மிக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதை நாம் நேரில் காணமுடிகிறது. 

🛕சுமார் 10 – 15 ஆண்டுகளில் இதன் வேக வளர்ச்சியின் உச்சத்தைக் காணலாம்.   இப்புராதான புண்ணிய நகரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசுகள் செயல்படுகிறது.

🛕உலகத்தின் புராதான நகரங்களின் மிக மிகமுக்கிய நகராக உருவாக்க பெரும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

🛕அயோத்தி நகர், சுற்றுப் பகுதிகள் Infrastructure வளர்ச்சியின் வேகம் மிகவும் அதிகரித்து வருகிறது.

🛕பக்தர்கள் மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிலிருந்து, பார்வையாளார்கள், பூகோள, சரித்திர ஆராய்ச்சியாளர்கள், நவீன நகரமைப்பு வடிவாளர்கள் ஏராளமானோர் வந்து இந்நகரின் புராணபெருமை, புகழ் சிறப்பு தரும் வகையில்  பங்காற்றல் செய்து வருகிறார்கள்.

🛕பாரதத்திற்கு மீண்டும் பெருமை, புகழ், பொருள் அள்ளித்தரும் நகரமாக அயோத்தி மாறிவருகிறது

பயண அனுபவக்குறிப்புகள் அடுத்த பதிவில் .....

#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 8

பதிவு - 8

கனக்பவன்
🏫அயோத்தி மாநகரின் மிக முக்கிய கட்டிடங்களில் இதுவும் ஒன்று.

🏫 #கனக்பவன்

“ #கனக்பவன்” என்பது திரேதாயுகத்தில் ஸ்ரீ ராமரும் அன்னை சீதாவும் வாழ்ந்த தங்க முலாம் பூசப்பட்ட அரண்மனை.

 🏫துவாபர் சகாப்தத்தின் தொடக்கத்தில். ராமரின் மூத்த மகனான மஹாராஜ் குஷ், தனது தந்தையின் நினைவாக அதை மீண்டும் கட்டினார். துவாபர யுகத்தின் மத்தியில். மகாராஜ் ரிஷப் தேவ் அதை மீண்டும் கட்டினார். துவாபரத்தின் முடிவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு வந்தார்.

🏢கலியுகத்தில், மகாராஜா விக்ரமாதித்யா முதன்முதலில் யுதிஷ்டிர் காலத்தில் கட்டினார். பின்னர் அது விக்ரம் மகாராஜ் சமுத்திரகுப்தாவால் விரிவுபடுத்தப்பட்டு சரி செய்யப்பட்டது. 

🏫துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் இது அழிக்கப்பட்டது.

 🏫தற்போதைய பிரமாண்டமான ‘கனக் பவன் கோவிலின்’ கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேகம், 
ஓர்ச்சா மாநில அரசர் எச்.எச்.மகராஜ் சவாய் மகேந்திர சர் பிரதாப் சிங் ஜூதேவின் மனைவியான ராணி விருஷபன் குன்வர் என்பவரால் புனரமைத்துக்கட்டப்பட்டுள்ளது.

🏫கோயிலின் கருவறையில் ஸ்ரீ ராமர் மற்றும் அன்னை சீதையின் பழமையான சிலைகள் உள்ளன.

🏫வருகை தரும் பக்தரின் வலது புறத்தில் முதல் ஜோடி சிலைகளை மகாராணி விருஷபன் குன்வர் நிறுவியுள்ளார்; 

🏫பார்வையாளரின் இடது புறத்தில் உள்ள இரண்டாவது ஜோடி சிலைகள் மகாராஜா விக்ரமாதித்யாவால் நிறுவப்பட்ட பழமையான கோவிலில் இருந்து வந்தவை.

🏫மேலும் மூன்றாவது ஜோடி சிலைகள் ஸ்ரீ கிருஷ்ணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.

⛳பலரும் வந்து கண்டு செல்கிறார்கள்.

⛳மதிய நேரத்தில் உணவு இடைவெளியில் மூடப்படுகிறது.

✨சில புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

✨இந்த இடம் இரண்டு மாடி கட்டிடம்,
✨உள்ளே மிகப்பெரிய வளாகம் ஒரு கினறு உள்ளது. மாடியில் பல வேறு அறைகள் உள்ளன. ஒரு அறையில் படுக்கை அமைப்பு பிரம்மாண்டமாக உள்ளது.

கணக்பவன் முன் உள்ள கல்வெட்டு:

 ⛳இந்த கல்வெட்டு ராமநவமி நாளில், 13 ஏப்ரல், 2019 அன்று ஸ்ரீ பிரிஷமன் தரம்சேது பிரைவேட் டிரஸ்ட் தலைவர் மகாராஜா சாஹேப் திகம்கர் ஸ்ரீ மதுகர் ஷா ஜூதேவ் மற்றும் துணை ஜனாதிபதி ராஜா சாகேப் அயோத்தி ஆகியோரால் எழுதப்பட்டது. 

ஸ்ரீ விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அஜய் குமார் சாவ்ச்சாரியா இதை நிறுவினார்.

நாகேஷ்வர்நாத் ஆலயம்

✨இது ஒரு நதி அடிவாரத்தில் உள்ள ஆலயம், ராமரின் மகன் குஷ் அவர்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இன்னும் பதிவுகள்.......
#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 7

பதிவு -7

தசரத் மகால்
 
🏢அனுமன் ஆலயம் முன்புறம் சென்று சற்று வடக்கில் தசரத மகால் என்ற இடம் உள்ளது. இந்த இடம் தசரத சக்கரவர்த்தியின் அரண்மனைப் பகுதி என்கிறார்கள்.

🏢முன்பகுதி ஒரு அழகிய முன் முகப்பு வளைவுடன் கூடிய பெரிய Compond அதைக்கடந்து உள்ளே சென்றால், வலது புறம் ஒரு ஹனுமன் ஆலயம். அதைத் தொடர்ந்து, மகால் முன்பகுதி நுழைவுப் பாதை சற்று அகலமானது.
🏢அதைக் கடந்தால், பெரிய முற்றப்பகுதி எதிரில் தசரதன் மாளிகை மிக அலங்காரமாக, வண்ணமயமாக அமைக்கப்பட்டு உள்ளது. மாடிப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை.

🏢முன்பகுதியில் 3 பிரிவு சன்னதிகளில் ஒவ்வொன்றிலும், ராமலெட்சுமன சீதா சிலைகள், மற்றும் உள்ள இடங்களிலும் சிலைகள் அமைத்துள்ளனர்.
ஏராளமானோர் இங்கே வந்து செய்கிறார்கள்.
Phone, Camera Allowed.
நுழைவுக்கட்டணம் எதும் இல்லை.
🏢புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
🏢இந்த இடத்திலிருந்தும் ராமர் ஆலயம் செல்லலாம்.
🏢தசரத் மகால் வழியாகவும் மேலும் சில ஆலயங்கள் செல்லலாம்
🏢மேலும், இதற்கு இடது புறம் செல்லும் ஒரு சாலையில், 200 மீ. தூரத்தில் கனக்பவன் என்ற இடம் செல்லலாம். இதன் அருகிலும், சில சிறு, பெரிய புராண ஆலயக்கட்டிங்கள் உள்ளன. 

தொடரும் . பதிவுகள்......

#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–


அயோத்திபுனிதப்பயணம் - பதிவு - 6

பதிவு - 6

நாங்கள் தரிசித்த அயோத்தியில், மேலும் சில ஆலயங்கள் பற்றிய குறிப்புகள்.

ஸ்ரீ ராஜத்வார் கோவில்

⛳அனுமன் கோயிலில் முன்புறம், சற்று உயரமான குன்று போன்ற பகுதியில் ஒரு ஆலயம் உயர்ந்த கோபுரத்துடன் சுமார் 50 – 60 படிகள் உயரம் செல்ல வேண்டும்.

⛳அதில் ஒரு புராண ராமர் ஆலய வளாகம் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது.

⛳இந்த ஆலயம் மேலே சென்று தரிசிக்கும் போது அங்கே கிடைத்த குறிப்புகள்.

⛳ஸ்ரீ பிரதாப் தர்மசேது அறக்கட்டளை (அயோத்திராஜ்)

ஸ்ரீ ராஜத்வார் ஆலய வரலாறு :

 ⛳அயோத்திதாமின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலின் கட்டுமானம் அயோத்தி மஹாராஜா ஸ்ரீ தர்ஷன் சிங்கால் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவில் ஸ்ரீ ராமரின் அரசவையாக செயல்படுகிறது அறத்தின் உருவகம். கோயிலின் கருவறைக்குள், ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோருடன், சங்கர், விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் விநாயகர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. வால்மீகியின் இதிகாசமான ராமாயணமும், கோஸ்வாமி துளசிதாஸின் ராமசரித்மனாஸும் த்ரேதாயுகத்தில் உள்ள அரச நுழைவாயிலை அவர் பிறந்த இடத்திற்கு (இன்றைய ராம்கோட் பகுதி) தெளிவாக விவரிக்கின்றன, 

⛳இது பேரரசர் தசரதனால் ஆளப்பட்டது மற்றும் ஸ்ரீ ராமரின் அரண்மனை இருந்தது. தற்போது, ராம்கோட் பகுதியில், ஸ்ரீ ராஜத்வார் மந்திர், ஸ்ரீ ஹனுமன்கர்ஹி கோயில், ஸ்ரீ கனக் பவன், ஸ்ரீ தசரத் மஹால், மற்றும் ஸ்ரீ ராம்ஜன்மபூமி ஆகியவை உள்ளன.

⛳ராம்கோட் பகுதிக்குள் நுழைந்ததும், முதலில் ஸ்ரீ ராஜத்வார் கோயில் மற்றும் ஸ்ரீ ஹனுமன்கர்ஹி கோயில் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து ராம்கோட் பகுதியின் மற்ற புராண மற்றும் வரலாற்று கோயில்களுக்குச் செல்லலாம். 

⛳இந்த கோவில் அயோத்தியில் மிக உயர்ந்த தங்க சிகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

⛳இந்த கோவிலின் முக்கிய திருவிழாவானது ஸ்ரீராமரின் பிறந்தநாளான சைத்ரா ராம நவமி அன்று கொண்டாடப்படுகிறது. 

⛳இந்த கோவிலின் நிர்வாகத்தை ஸ்ரீ பிரதாப் தர்ம சேது அறக்கட்டளை, ராஜ் சதன், அயோத்தியால் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, அறக்கட்டளையின் மதிப்பிற்குரிய தலைவர் (அயோத்தி மன்னர்) மதிப்பிற்குரிய ஸ்ரீ விம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா ஆவார்.

தொடரும்.... பதிவுகள்....

#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 5

பதிவு - 5.

ஸ்ரீராமஜென்மபூமி - அயோத்தி - பாலராமர் ஆலயம் : 

🙏இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி, உலக இந்து மக்களின் எழுச்சி நாளாகவும், மகிழ்ச்சி நாளாகவும் அமைந்தது. 

🛕பலவேறு விஷயங்கள் கடந்து, புதிய ஆலயம் புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

🛕தற்போது உள்ள ஆலய அமைப்பு : 

🛕ஆலயம் பாரம்பர்யமிக்க அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

🛕ஆலய நீளம் (கிழக்கு மேற்காக) 390 அடி, அகலம் 250 அடி, உயரம் 161 அடி . 

🛕3 தளங்கள் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உள்ளது. மொத்தம் 392 துண்கள், 44 வாசல்கள் 

🛕தற்போது, தரை தள கர்ப்பக்ரஹத்தில் பிரபு ஸ்ரீராம பிரானின் குழந்தை வடிவம் உள்ளது. இவரை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு, தரிசித்து வணங்கி வருகிறோம். 

🛕முதல் தளத்தில் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக மண்டபம் கட்டி பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 
🛕மொத்தம் 5 மண்டபங்கள்,
நாட்டிய மண்டபம், ரங்கமண்டபம், தரிசன மண்டபம், ப்ராத்தனா மண்டபம், கீர்த்தனா மண்டம். 

🛕தூண்களில் இறைவன் உருவங்கள், மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலைகள். 

🛕நுழைவு வாயில் முன்பு 32 படிகள் உயரம் 16.5 அடி இதன்மேல் ஏறி பிரதான நுழைவு வாயிலை அடையலாம். 

🛕மாற்றுதிறனாளிகள், மற்றும் முதியோருக்கு ரேம்ப் மற்றும் லிப்ட் வசதிகளும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

🛕4 பக்கங்களிலும், கோட்டைச் சுவர்கள் 732 மீ நீளம், 4.25 மீ அகலம்.
கோட்டையின் 4 மூலைகளில், முறையே சூரியன், சிவன், கணபதி, தேவி பகவதி ஆகியோருக்கான ஆலங்கள் கோட்டையின் தெற்கு முகமாக ஹனுமானும், வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்கள். கட்டப்பட்டு வருகின்றன. 

🛕ஆலயத்தின் தென் பகுதியில் உள்ள சீதை கிணறு புரைமைத்து கட்டிட்ட பணிகள் நடைபெறுகின்றன. 

🛕கோட்டையின் வெளியே, தென்திசையில் வால்மீகி, வசிஷ்ட்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி, அகத்திய மகரிஷி, குகன், சபரிமாதா, மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்கள். 

🛕தென்மேற்கில் குபேரன் குடிலில் சிவாலய புனர்பிரதிஷ்டை, மற்றும் ராமபக்த ஜடாயுவின் பிரதிஷ்டைகள் உள்ளன. 

ஆலய வளாகம் (முன்பகுதி) 

🛕ஸ்ரீராம ஜென்ம பூமி வளாகம் பாதை முழுதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு கடைகள், புராதான கட்டிடங்கள், ஆலயங்கள் இவற்றை சீரமைத்துள்ளனர். மேலும் மேலும் அழகுபடுத்தும் சீர் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. 

🛕ஸ்ரீராமஜென்மபூமி ஆலயம் செல்லும் பக்தர்கள் கூட்டம், பெரிய கூட்டம். 

🛕லால் செளக் சென்று, அருகில் உள்ள சராயு நதிக்கரையில் உள்ள, வழியிலும், அயோத்தி ரயில் நிலையத்திலிருந்து நேரடியாகவும் ஜென்மபூமி வரலாம். 

🛕சாலைகளில் ஆலயம் தரிசிக்க நடந்து செல்லும் வழிதனியாகவும், தரிசித்து வெளியேறும் வழி தனியாகவும் கட்டுப்பாட்டுடனும், கண்காணிப்புடனும் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. 

🛕ஆலயம் அருகில் சென்றதும்.
நாம் எடுத்துச் செல்லும் சிறு பைகள், தவிர, பெரிய பொருட்கள் வைப்பதற்கு தனி Cloak Room உள்ளது. (இருந்தாலும் நாங்கள் எந்த பெரிய பையையும் எடுத்துச் செல்லவில்லை) 

🛕முதல் நுழைவாயில் நுழையும் போது நம்மையும், நமது கைப்பை முதலியவற்றை சோதனை இடுகிறார்கள் அதன் பின் உள்ளே செல்ல வேண்டும். 

🛕முதல் பகுதியில் தற்காலிக ஏற்பாடாக, நமது காலணிகள் வைப்பதற்கு தனி தனி ஸ்டால்கள் சுமார் ஒரு 20 எண்ணிக்கையில் உள்ளது. 

🛕செல்போன் வைப்பதற்கு சுமார் 20 தனி கவுண்டர்கள் மிக நேர்த்தியாக வரிசைப்படி வைத்து உள்ளார்கள். எல்லாம் இலவசம். 

🛕நாம் நம்முடைய காலனிகளை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் எந்த கவுண்டர் No. மற்றும், ஏ,பி என்ற பிரிவு உள்ளது. அந்த நம்பர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
வழங்கப்படும் இந்த டோக்கனிலும் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

🛕அதேபோல செல்போன் வைப்பதற்கு 20 கவுண்டர்கள் இருக்கின்றன. 

🛕அவற்றிற்கும் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன அந்த கவுண்டர் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும் நமது செல்போனை வாங்கி அதை அவர்கள் உள்ளே சென்று வாக்கரில் வைத்து பூட்டிவிட்டு நம்மிடம் சாவியை கொடுத்து விடுகிறார்கள். அந்த சாவியில் Locker நம்பர் உடன் எந்த கவுண்டர் என்பதற்கான அட்டையும் இருக்கும் பத்திரமாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். 

🛕முக்கிய குறிப்பு : செல்போன் கொண்டு போய் நீங்கள் வைத்தீர்கள் என்றால் டெலிவரி எடுக்கும் பொழுது
cell phone Passward போட்டுத் திறக்க கூறுகிறார்கள். வேறு /மாற்று நபர் மூலம் எடுத்துச் செல்வதை தடுக்க இந்த ஏற்பாடு. எனவே, cell phone யார் Tocken போடுகிறார்களோ, அவர்களே சென்று வாங்குது நல்லது. 
ஆலய பகுதி :
🛕சமதளத்திலிருந்து, 10 படிகள் உயரம் ஏறிய பிறகு மேலும் 10 படிகள் உயரம் ஏறி அதற்குப் பிறகு மேலும் ஒரு ஐந்து படி உள்ளது.
🛕முதலில் ஒரு முன் மண்டபம் அடுத்தது நடுமண்டபம் அடுத்து உள் மண்டபம் அடுத்தடுத்து உள்ளது. 
 🛕கலை அம்சத்துடனும் இந்த மண்டபங்கள் எழிலாக உள்ளன. நாம் பார்த்துக் வியந்து கொண்டே செல்லலாம். கருவரையில் உள்ள பாலராமர் நமக்கு முதல் மண்டபத்தில் இருந்து நமக்கு காட்சி தருகிறார்.
🛕வரிசை உள் நுழையும் வழியில் செல்லும் பொழுது நான்கு வரிசை பிரிவு இருக்கும். அதில் நடுவில் உள்ள இரண்டு வரிசைகளில் ஏதேனும் ஒன்றில் செல்வது மிகவும் நல்லது; அதில் அதிக கூட்டம் இருக்கும்; மேலும், மிக மெதுவாக நகரும். ஏனென்றால்; இந்த நடு வரிசைகளில் செல்பவர்களுக்கு கருவறையில் உள்ள பாலராமர் சிலை நன்றாகத் தெரியும்.
🛕கடைசியில் உள்ள இரண்டு பக்கமும் உள்ள வரிசை பாதையில் சென்றால் கூட்டம் விரைவாக செல்லலாம். கருவரை உள் மண்டபம் சென்ற பிறகே பெருமாள் தெரிவார். 
🛕 வரிசைகளின் இடையில் இரும்புக் குழாய் பதித்து பிரித்து விட்டு இருப்பார்கள்.  
🛕ராமர் சிலை மிக அற்புதமாக அழகாக பக்தி பரவசத்துடன் இருக்கிறது. நாம் தரிசித்து கொண்டே செல்லலாம். கருவறை முன் மண்டபங்கள் வரை நம்மை அனுமதிக்கின்றார்கள். கூட்டம் எவ்வளவு இருந்தாலும் மெதுவாக சென்று கொண்டே இருப்பதால் நாம் விரைவாகவும், மிக நன்றாகவும் தரிசனம் செய்து விடலாம்.
🛕தரிசனம் செய்துவிட்டு அந்த கருவறை மண்டபம் முன் உள்ள மண்டபத்தில் உள்ள அலங்கார வளைவுகளை வேலைப்பாடுகள் நுணுக்கங்களை ரசித்துக் கொண்டே ராமர் பகவானையும் வேண்டிக் கொண்டே நாம் உள்ளே சென்று தரிசித்து மண்டபத்திற்கு வெளியில் வரவேண்டும். மெதுவாக படி இறங்கி கீழ்ப்பகுதிக்கு வந்து விடலாம்.

🛕ராமர் ஆலயம் உள்ளே சென்று தரிசித்து வெளியில் வர சுமார் 30 – 40 நிமிடங்களில் ஆகிறது. அவ்வளவு கூட்டமும் வேகமாகவே நகர்ந்து செல்கிறது. தரிசித்த பின் வெளியில் வந்து கொண்டேயிருக்க வேண்டும்,

🛕வளாகத்தின் பல பகுதிகள் ஆலயக் கட்டிடப்பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

🛕வெளியில் வரும் பொழுது நமக்கு ஒரு வெயிட்டிங் ஹால் இருக்கிறது அங்கே காத்திருந்து நம் உடன் வந்தவர்களை இணைத்துக் கொள்ளலாம். அங்கு தூய்மையான கழிப்பறை வசதிகள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கு தகுந்தார் போல் உட்காருவதற்கு நாற்காலிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 🛕அங்கேயே அந்த பகுதியிலேயே நாம் செல்போன் திரும்ப பெற்றுவிடலாம் நாம் எந்த கவுண்டரில் கொடுத்தோமோ அந்த கவுண்டர் உடைய இன்னொரு பகுதி இந்த பகுதியில் வரும் எனவே அந்த பகுதிக்கு உரிய கவுண்டரில் கொண்டு சென்று நமது டோக்கனை கொடுத்தால் சாவியை கொடுத்தால் அவர்கள் செல்போனை எடுத்துக் கொண்டு நம்மிடம் தந்துவிடு திருப்பித் தந்து விடுவார்கள். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

 🛕இந்தக் கட்டிடத்தில் ஒரு மெடிக்கல் சென்டர் வைத்திருக்கிறார்கள். இலவச தூய்மையான கழிப்பறை வசதிகள் இங்கு உண்டு. 

🛕இந்த கட்டடத்தை விட்டு வெளியில் வந்து நமது காலணிகளையும் எடுத்துக் கொள்ளலாம்; அதற்கும் சற்று வெளியில் நடந்து, வெளியில் வந்தால் கிளாக் ரூம் வந்துவிடும் அங்கு வைத்திருக்கும் நமது பெரிய பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறும் வழியில் நாம் சுமார் ஒரு 50 மீட்டர் தூரம் வெளியில் நடந்து வரவேண்டும்.

🛕 வளாகத்தின் வெளியில் வரும் வழியில் தமிழக கோயில் போல் கட்டப்பட்டுள்ள ஒரு வெங்கடாஜலபதி சீனிவாச ஆலயம் ஒன்றும் உள்ளது.

 🛕அது சற்று உயரமான மாடி படிக்கட்டுகள் கொண்டதாக இருப்பதால் முடிந்தவர்கள் சென்று தரிசனம் செய்து திரும்பலாம்.

 🛕தனியார் ஆலயமாக இருப்பதால், திறந்திருக்கும் நேரம் விசாரித்து அல்லது திறந்திருக்கும் பொழுது தரிசிக்கலாம்.

🛕வெளியில் உள்ள பிரதான சாலையில் எப்பொழுதும் அதிக கூட்டமாக உள்ளது.

🛕ஜென்ம பூமி ஆலயம் வெளி சாலையில் இருந்து நேரடியாக ரயில்வே நிலையம் செல்வதற்கு ஒரு பிரதான வழி இருக்கிறது.

🛕மேலும் நாம் கிழக்கு புறம் சென்றால் அகலப்படுத்தப்பட்ட சாலையில் லால் செளக் என்ற இடத்தை அடையலாம் வழியில் ஹனுமன் ஆலயம் உள்ளது. நடந்து மட்டுமே செல்ல முடியும். 

🛕 இந்த பகுதியில் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் எந்த பெரிய வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை காவல்துறை கண்காணிப்பு அதிகம் உண்டு. 

🛕இரண்டு புறங்களும் ஏராளமான கடைகள் உள்ளன. ஒரு சில இடங்களில் அன்னதானம் எல்லா வேளைகளிலும் நடைபெற்று வருகிறது. 

🛕தனியார் அமைப்பு மூலமாக நாம் வரும் வழியில் உள்ள பல்வேறு சிறிய பெரிய மிக புராதனமான கட்டிடங்கள் / ஆலயங்கள் இப்பொழுது புனரமைக்கப்பட்டு வருகின்றன. அவைகள் இன்னும் சில ஆண்டுகளில் அந்த புராதானமான கட்டிடங்கள் கோயில்கள் ஆலயங்களும் பிரபலமாகி வழிபட செல்வார்கள் என்று தோன்றுகிறது.

பதிவுகள் தொடருகின்றன....

#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 4

பதிவு - 4

ஸ்ரீ ஹனுமான் ஆலயம் 🛕

✨லால்செளக்கிலிருந்து Rs.20/- கொடுத்தால், மின் Auto மூலம், அனுமன் கோயில் வளாகம் மிக அருகில் இறக்கி விடுகிறார்கள். 

✨அங்கிருந்து நடை தூரத்தில் அனுமன் ஆலயம் உள்ளது. 
சிலர் ஷேர் ஆட்டோ மூலமாகவும் Rs.25 / - (ஒரு நபருக்கு) கொடுத்து ஒரு சுற்றுப்பாதையில் அனுமன் ஆலயம் மிக அருகில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். 

💥அனுமன் ஆலயம்:
மகாராஜாவிக்ரமாதித்தியாவால் கட்டப்பட்ட ஆலயம். ஆலயம் அழிக்கப்பட்டு மக்களால் ஹனுமன் திலா என்று அழைக்கப்பட்ட இடம், நவாப் காலத்தில், டிகைத் ராய் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது.  
தற்போது ஹனுமாங்ஹரி என்று உள்ளது. 

🌟இராமர் ஆலயம் அருகில் உள்ள இந்த ஆலயத்தை ராமர் ஆலயம் தரிசிக்கும் முன் அவசியம் இதையும் தரிசிக்க வேண்டும் என்று. கூறுகிறார்கள். 

🌟அனுமன் ஆலயம் உயரமான இடத்தில் உள்ளது. இந்த ஆலயம் முதலில் 30 படிகள் மேலே ஏறிய பிறகு முன் மண்டபம் ஒன்று உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒரு 10-15 படிகள் மேல் ஏறினால் ஆலயம் கருவறை மண்டபம் அடைந்து விடலாம். 

🌟ஆலயம் ஒரு பெரிய மண்டப அமைப்புடன் உள்ளது. நடுவில் கருவறை அதில் சிறிய அனுமன் சிலை உள்ளது. பின்புறம் ராமர், பட்டாபிஷேகம் உருவம் உள்ள சிலைகள் வெள்ளி கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

🌟இந்த கருவறை மண்டபத்தை ஒட்டிய பிரகார மண்டபத்திலும் பூசைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது. 

🌟அயோத்தியில், மிக மிக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த இடத்தில் தான் கூடுகிறார்கள். 

🌟காவல்துறை மிக அருமையாக, கண்ணியத்துடனும், மிகக் கட்டுப்பாடுடனும் வழிநடத்தினார்கள். 

🌟நமக்கு அனுமன் கோயில் சென்று தரிசனம் செய்யும் நேரம் சற்று அதிகமாக உள்ளது. மேலும் அனுமன் ஆலயம் அனைத்து பக்தர்களும் வந்து செல்வதாலும் ஒரு நெருக்கடியான இடத்தில் இருப்பதாலும், கூட்டம் அதிகம் இருந்தவாரே உள்ளது. 

🌟ஹனுமன் ஆலயத்தை தரிசித்து பின் வெளிவருவதற்கு தனி வழி உள்ளது. அதன் வழி நாம் வெளியில் வரலாம். 

🌟ஹனுமன் ஆலயம் தரிசித்து பிறகு அந்த ஆலயத்தின் பின்புறம் வெளியே செல்ல ஒரு சிறிய வழி உள்ளது. அதன் வழியாக சென்று ராமர் கோயில் செல்லும் பாதையை அடைந்து விடலாம். 

பதிவுகள் தொடருகின்றன....

#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 3

பதிவு - 3.

LAL CHOWK 

💫அயோத்தி மாநகரின் தற்போதைய மிக முக்கிய இடம்.
பாரதத்தின் புகழ்பெற்ற திருமதி லதா மங்கேஷ்வரி அவர்கள் நினைவின் பெயரில் இந்த இடம் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

💫அனைவரின் முக்கிய கவனத்தைக் வரும் வகையில் ஒரு பெரிய வீணை சிலை வைக்கப்பட்டுள்ளது. 

💫இந்த இடம் நகரின் முக்கிய பகுதியாக இருப்பதால் வரும் வழி மிகவும் அகலப்படுத்தி இருபுறமும் இராமாயண கதை நிகழ்வுகளை 3D வடிவத்தில் காட்டி, . சிலைகளாக அமைத்து வருகின்றனர்.
💫இராமர் சூரியவம்சத்தை சார்ந்தவர் என்பதால், சூரியனின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 

💫மேலும், பிரதான சாலை நெடுகிலும், 9 அடி உயரமுள்ள சூரிய வடிவ புதிய மின்னொளி விளக்குகள் உள்ள 20க்கு மேற்பட்ட விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

💫🛣️சாலையின் சுமார் 2 கி.மீ.க்கு, நடைபாதைகள் அமைத்தும், அழகுபடுத்தியும், வருகிறார்கள்.
இந்த இடத்திற்கு அப்பால் எந்த பெரிய வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. 

💫🛺எனவே மக்கள் இங்கிருந்து நடந்து அல்லது ரிக்க்ஷாவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
இந்த இடத்திலிருந்து 1.8. கி.மீ. தூரத்தில் ராமர் கோயில் உள்ளது 1.5 கிலோமீட்டர் தூரத்தில் ஹனுமான் ஆலயம் உள்ளது. 

💫🛺நாம் இங்கிருந்து ஷேர் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் இந்த இடங்களுக்கு சென்று வரலாம். 

சரயு நதி 

💦சரயு நதி மிகவும் புண்ணியம் பெற்றது, இராமர், மற்றும் அவருடன் இணைந்து நதியில் இறங்கி சொர்க்கம் சென்றதாக புராணம். 

💦லால் சவுக் என்ற இடத்திற்கு மிக அருகாமையில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் சரயு நதிக்கரை (நயாகாட், சூரியா காட்) உள்ளது. பெரும்பாலோர் அங்கு சென்று நீராடி பின் ஆலயம் தரிசனம் மேற்கொள்கிறார்கள். 

💦இந்த பகுதியில் உள்ள ஆலயங்கள், விஷேச படித்துறைகள், லெட்சுமணன் ஆலயம் முதலிய பல புரான கட்டிடங்கள் உள்ளன;
அதையும் தரிசித்துக் கொண்டு பிறகு அனுமன் மந்திர் மற்றும் ராமர் கோயில் சென்று வருகிறார்கள். 

💦மேலும் சரயு நதியில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஆர்த்தி நடைபெறும் அற்புதக் காட்சி பார்ப்பதற்காக மக்கள் மாலையில் இங்கு அதிகம் கூடுகிறார்கள். 

💦ஆர்த்தி நடைபெறும் இடங்கள், மற்றும் சரயு நதிக்கரை படிகள் முழுவதும் மிகவும் புதிய வடிவில் மாற்றி பல்வேறு விதங்களில் வசதிகள் செய்து வைத்துள்ளார்கள். 

💦சரயு நதியில் நீராடுதல், மற்றும் போட்டிங் வசதிகள், மற்றும் பூசைகள் செய்யவும் மிக அதிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பதிவுகள் தொடரும்.....

#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம் பதிவு - 2

https://www.facebook.com/share/p/PwjdvTr9ufugFbC9/?mibextid=oFDknk
பதிவு - 2.
                              🎪TENT CITY☕🎪

💥இரயிலில் இறங்கி E-Bus மூலமாக TENT CITY சென்றோம். 
சுமார் 150 ஏக்கர் நிலத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இடம். யாத்ரீகர்கள் இலவசமாக இங்கே தங்க எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

💥🎪பல மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து தங்க தனித்தனி பகுதியில் கூடாரங்கள், தனித்தனி Beds, போர்வை ரஜாய் , தலையணை வழங்கப்படுகிறது. 
ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் தங்கவேண்டும்.
பொது REST Rooms, குளியல் அறைகள், தனித்தனியாக பிரித்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

💥🎪ஒவ்வொரு பகுதியிலும், 6 பேர் தங்கும் தனி தொகுப்பு கூடாரங்கள் தனியாகவும்,மற்றும் சுமார் 200 பேர் குழுவாக தங்கும் பெரிய கூடாரங்கள் தனியாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

💥🎪அனைத்து மனல்,களிமன் பகுதிகளிலும் தரைகள் முழுதும் Mate போடப்பட்டு இருந்தன. ஊர்திகள் செல்லும் இடங்களில் இரும்பு தகடு (plates) போடப்பட்டுள்ளன. 

💥🎪ஒவ்வொரு பிரிவுகளுக்கும், தனித்தனியாக சமையல், உணவுக்கூடங்கள், தண்ணீர் வசதிகள், தனியாக மின் வசதி, Mobile Tower வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

💥Information Centre ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  

💥🎙️ஒலிபெருக்கி மூலம் பொது அறிவிப்புகள், வழிகாட்டி அறிவுரைகள், செய்து உதவுகிறார்கள். 📢

💥மாநிலம் வாரியாக அமைக்கப்பட்டு, அவரவர்களை ஒன்றாக தங்க வைத்துள்ளதால், மொழி பிரச்சனைகள் குறைவு. 

🌟மிகவும் பிரமாண்டமான பிரமிக்கத்தக்க ஏற்பாடுகள். 

💥சமையல் /அன்னதானக் கூடம். மிகப்பெரிய கூடாரம் நடுவில் அமைக்கப்பட்டு காலை 6 மணி முதல் இலவசமாக காபி, Snakes, உணவு வழங்கப்பட்டு வருகிறது.🍱

💥இந்த பணிக்காக நாடு முழுவதிலிருந்தும் விரும்பி வரும் பக்தர்கள், சுயசேவர்களாக வந்து தொண்டு செய்கிறார்கள். 

💥2.03.2024 அன்று மதியம் , TENT CITY அடைந்ததும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கூடாரங்களில் உடமைகளை வைத்துக் கொண்டோம். Fresh up செய்து கொண்டு, மாலை 4.00 மணி அளவில் கூடாரத்தில் பொருட்களை வைத்து விட்டு, விலை உயர்ந்த பொருட்கள், Cell, பணம் இவற்றை கையில் எடுத்துக் கொண்டு தனித்தனி குழுவாக இராமர் ஆலயம் உள்ள அயோத்தி மாநகர் சென்றோம். 

💥முதலில், இலவச E - Bus மூலம் LAL Chowk என்ற இடத்திற்கு சென்றோம்.

பதிவுகள் தொடரும்.....
#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–

அயோத்திபுனிதப்பயணம்பதிவு - 1.பயண அனுபவக் குறிப்புகள்(29.02.2024 - 5.3.2024)

#அயோத்திபுனிதப்பயணம்
பதிவு - 1.
பயண அனுபவக் குறிப்புகள்
(29.02.2024 - 5.3.2024) 

சுப்ராம். அருணாசலம்

வணக்கம்🙏🏻 

🕉️ஆலயங்கள் சென்று தொழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
நாம் எந்த ஒரு தலத்திற்கு செல்வதாக இருந்தாலும், இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்பதை நாம் பலமுறை அனுபவத்தில் உணர்ந்து இருக்கின்றோம். 

🛐 பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 106 மட்டுமே நிலவுலகில் நாம் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியும். 

🌟பாரதத்தின் பெருமைமிகு புராதன புண்ணிய திவ்யதேசம். 

அயோத்தி மாநகரம்: 

🛕அயோத்தி, மதுரா, ஹரிதுவார், காசி, காஞ்சிபுரம், உஜ்ஜியினி, துவாரகை இந்த ஏழு தலங்களும் முக்தியை அளிக்கும். 

🛕அயோத்தி என்பது பிரம்மாவின் வடிவம், யா - என்பது விஷ்ணுவின் வடிவம் மற்றும் தா - என்பது ருத்திரன் வடிவம். 

🛕ராமாயணம், ராமசரிதமானஸ், என்ற இந்து புராணங்களிலும், ஜெயின, பௌத்த நூல்களிலும், முக்கியத்துவம் பெற்றது.
24 சமன தீர்த்தங்காரர்களில், ஐந்து பேர்கள் பிறந்த இடம். ஜெயின நூல்களில் இக்ஷ்வாகு பூமி என்று குறிப்பிடுகின்றனர். இக்ஷ்வாகு வம்சத்தின், சூரியன்வன்ஷி மன்னர்கள் முதல், மௌரியர், நந்தா மற்றும் குப்தர்கள் வரை பேரரசர்கள் பலர் கண்ட பூமி. 

🛕சனாதான தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த இடம் மிக முக்கியமான புண்ணியஷேத்திரமாக விளங்குகிறது. 
 

⭐இங்கு வந்து இப்புண்ணிய நகரை தரிசனம் செய்வதையே பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். 

⭐அகிலத்தின் நாயகரான இராமர் பிறந்து வளர்ந்த இப்புண்ணிய பூமி, பாரதத்தின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சராயு என்ற நதிக்கரையில் உள்ளது.

பயண அனுபவக் குறிப்புகள். 

🛐அயோத்தி மாநகர் ஶ்ரீராமஜென்மபூமி ஆலயம் பல வருடங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து இருந்தோம். 

🛐இறைவன் ஆலய தரிசனங்களில் வித்தியாசமான அனுபவம். சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு கடும் சோதனைகளுக்குப் பிறகு, கடுமையான இரும்பு கூண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட வரிசையில் சென்று இரும்பு கூண்டுக்குள் நாம் இருந்தவாறு இந்த ஆலயம் வழிபாடு செய்தோம். 

🛐பாரத மன்னிற்கு பெருமை தரும் ஸ்ரீராமர் ஆலயத்தை இரும்புக் கூண்டில் இருந்தவாறு தரிசனம் செய்து வந்த அவலநிலையில் அன்று இந்த ஆலயத்தின் நிலை இருந்தது. இந்து மக்களின் புண்ணிய பூமியில் புராண இந்து ஆலயத்தின் நிலை அன்று அவ்வாறு இருந்து.

🕉️நம் பூமி நமது இறைவனை தரிசிக்க கடும் போராட்டம் அன்று இருந்தது. 

🛐தற்போது, பல்வேறு கடும் முயற்சிகளுக்குப் பிறகு, பாரத மக்களுக்கு, தங்கள் சனாதன தருமத்தின் பெருமை போற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

🛐பலவித கடும் முயற்சிகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பூமியை நாட்டின் தலைவரான ஸ்ரீ ராமரின் ஜன்ம பூமியாக ஏற்கப்பட்டு, பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்படத் துவங்கியது. 

🛐நமது இறைவனின் ஆலயம் புனரமைப்பு செய்து வழிபடும் காலம் மீண்டும் வந்துள்ளது. 

🛐2024 பிப்ரவரி 22 அன்று பாரத மன்னிற்கு பெருமை தரும் நாள்.
நமது பாரத புன்னிய பூமியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் நம் பாரத பிரதமர் ஶ்ரீமான் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில், ஏராளமான புன்னிய புருஷர்களின் தியாகத்தாலும், பெருமுயற்சியாலும், மீண்டும் ஸ்ரீராமர் ஆலயம் புனருத்தாரனம் செய்து, ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 

🕉️ வாழ்வில் ஒரு முறையாவது இராமர் அவதரித்த இந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு வந்து, இங்கு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ள பாலராமரை கண்டு தரிசிப்பதுவே ஆன்மீக லட்சியம் என்று ஒவ்வொரு இந்து மக்களும் நம்புகிறார்கள்.
🕉️பொதுவாக ஒரு ஆலயம் புனரமைப்பு / கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 48 நாட்களுக்குள் சென்று தரிசனம் செய்வது சிறப்பு என்று கூறுவார்கள். 

🕉️ மீண்டும் அயோத்தி பயணம் செல்ல வேண்டும் என்று விரும்பிய போது பல முயற்சிகளும் தொடர்ந்து எடுத்து வந்தோம். பல முறை முயற்சி செய்தும் அயோத்திக்கு செல்ல உரிய நேரத்தில் ரயில் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. 

🕉️அதிர்ஷ்டவசமாக எம்முடைய நண்பர் மூலமாக இந்த பயணத்திற்கு எமக்கு அனுமதி கிடைத்தது. விழுப்புரத்தைச் சார்ந்த திரு சந்திரசேகர் ஐயா அவர்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்து எமக்கும் வாய்ப்பு வழங்கினார். 

🌟🚞 நாங்கள், ASTHA SPECIAL TRAIN ல், 29.02.2024 அன்று புறப்பட்டு அயோத்திக்குப் புனித பயணம் செய்து பாலராமர் ஆலயம் தரிசனம் செய்து வந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன். 

🌟தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த
சுமார் 1300 பக்தர்களை ஒரே குழுவாக முன் பணம் கட்டி Registration செய்து, தனி ரயில் மூலமாக பக்தர்களை ஒருங்கிணைத்து 
Mobile செயலிகள் மூலம் முறைப்படுத்தி அறிப்புகள் செய்து செயல்படுத்தி அழைத்துச் சென்றார்கள். .

🌟புறப்படும் போது ஒரு ID Card ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. அதை சரிபார்த்தும் Train ல் Check செய்யப்பட்டு அவரவருக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் பயணம் செய்தோம்.  

🌟ID Card பயணம் நிறைவுவரை கட்டாயம் உடன் வைத்திருக்க அறிவுருத்தப்படுகின்றனர். 

🌟🍱☕ரயில் பயணிகளுக்கு ஒவ்வொரு நாளும் 3 வேளைகளும் நல்ல உணவு, இருவேளை காபி, Tea, Biscuits மற்றும் குடி தண்ணீர் 1Bottle வழங்கப்பட்டது. 

🌟🛏️Train ல் Non-A/C Coach ஆக இருந்தாலும், A/C Coach ல் வழங்கப்படுவது போல, அனைவருக்கும் கம்பளி போர்வை, மற்றும் போர்வை விரிப்புடன் ஒரு தலையணையும் தரப்பட்டது. 

🌟மாவட்ட வாரியாக, ஒவ்வொரு Coach ற்கும், தனித்தனி Team Managers, Guides, Security, Coordinators, & Catering Staff முதலியவர்களைத் தேர்வு செய்து, முறையான முன் ஏற்பாடுகள் செய்து நல்ல திட்டமிட்டு, செயல்பாடுகளை ஒருங்கிணைந்து செய்தார்கள். மிகவும் நன்றி🙏🏼.

🌟🚄அனுமதிக்கப்பட்ட பயணிகளைத் தவிர புறப்பட்ட இடம் தொடங்கி திரும்ப வந்து சேரும் வரை, வேறு யாரும் ரயில் பயணத்தில் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட Station ல், Railway வசதிக்காக மட்டுமே நிறுத்தப்படுகிறது. மேலும், எந்த Station சென்று நிறுத்தப்பட்டாலும், முழு பாதுகாப்பு உள்ளது. தேவையில்லாமல் யாரும் காரணமின்றி எங்கும் ஏறவோ இறங்கவோ அனுமதி கிடையாது. Police கண்காணிப்புடன் உடன் இருந்தனர். 🦸

🌟1.03.2024 ரயில் பயணம் புறப்பாடு 

🌟2.03.2024 அன்று மதியம் 1.00 மணி அளவில் அயோத்திதாம் என்ற ரயில்வே நிலையம் சென்றடைந்தோம். 

Ayodhya Dham ரயில் நிலையம் 

💥மிகவும் நவீன வசதிகள் கொண்டு, புதுமையாக பொலிவுடன் இருந்தது.
ரயில் நிலையம் முழுவதும் பொதுமக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
ரயில்வே காவல் துறை அதிகாரிகள் கூட உணர்வுபூர்வமாக பூரிப்புடன் வரவேற்பில் கலந்து கொண்டனர். 💐

💥சிறப்பு ரயில் மூலம் செல்பவர்களுக்கு, ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில், வெளிப்புறத்தில், பல வசதிகள் கொண்ட பெரிய தனி கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது; ஒரு தனி போக்குவரத்து சிறப்பு அலுவலம், (Transport Managent Cell) உருவாக்கப்பட்டிருந்தது. 🚍

இலவச E Buses 🚍

💥ரயில்வே நிலையம், மற்றும், சுமார் 5 கி.மீ. தூரத்தில் யாத்ரீகர்கள் இலவசமாக தங்குவதற்காகவே, உருவாக்கப்பட்டிருக்கும் TENT CITY என்ற தற்காலிக கூடம்; அங்கிருந்து LAL CHOWK என்ற இடத்திற்கும் சென்றுவர இலவசமாகவே நூற்றுக்கணக்கான E Bus ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 🚍

அடுத்தப் பதிவு ......
#அயோத்திபுனிதப்பயணம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
🛕🛐🔱🙏🏼🇮🇳🕊️🧘🌏🏔️–