Tuesday, September 20, 2022

UTTARAKANNT_TOUR_2022 RISHIKESH#ரிஷிகேஷ் - 14.04.2022

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - பதிவு - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயத்தின் அடிவாரத்தில் இருக்கும் இந்நகர், ஹரிதுவாருக்கு வடக்கில் 20 கி.மீ.தூரத்திலும், டேராடூன் நகருக்கு 45 கி.மீ. தென்கிழக்கிலும் உள்ளது.

இமயமலையிலிருந்து, கங்கை நதி பாய்ந்து ஓடி வரும் வழியில், வடக்கு கிழக்காக, 5 கிலோமீட்டர் அளவில் ரிஷிகேஷ் நகரம் அமைந்துள்ளது.

தவ முனிவர் யாகத்தின் பலனாய், கடவுள் ஹரிஷிகேஷ் தோன்றினார் என்றும், இதனால் இந்த இடத்தை ரிஷிகேஷ் என்றும் வழங்கப்படுகிறது.

ராமன் ராவணனை வதம் செய்த பாவத்திற்காக யாகம் செய்த இடம்.
லெட்சுமணன், கங்கை நதியை தாண்டுவதற்காக இங்கு ஒரு கயிற்றுப் பாலம் அமைத்து அதன் மூலம் எதிர் கரை அடைந்ததிருக்கிறார் என்பது புராணம்,

இந்தக் கயிற்றுப்பாலம், 1889ல் மாற்றி அமைக்கப்பட்டது.
1924 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தப் பாலம் அழிந்ததும், 1927 ல், புனரமைக்கப்பட்டது.

மிகப்பழமையான இந்நகர், ஞானிகளும், யோகிகளுக்கும், இந்து ஆன்மீகவாதிகளுக்கும், முக்கிய ஷேத்திரமாக விளங்குகிறது.

இந்த இடத்திலிருந்து தான், சார்தாம் யாத்திரை துவங்கும்.

இமயமலையில் உள்ள, புராதானமான இடங்களான, 

யமுனோத்திரி,- யமுனை நதி உற்பத்தியாகும் இடம்,

கங்கோத்திரி - கங்கை நதி உற்பத்தியாகும் இடம்,

கேதாநாத் - சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில்,
இமயத்தில் உள்ள இடம்.

பத்திரிநாத் - விஷ்ணு பகவானின் 108 தலங்களில் சிறப்புவாய்ந்த தலம்.

இந்த நான்கு மலைத்தலங்களுக்கும் பக்திப் பயணம் செல்வதை சார்தாம் (சார் = நான்கு; தாம்=மலை) நான்கு மலை யாத்திரை என்று கூறுவார்கள்.

ரிஷிகேஷ்தான் முதன்மைத் தலம். இமயமலையின் நுழைவுப் பகுதியாகவும் உள்ளது.

பக்தர்கள் ஹரிதுவார், வந்து பிறகு ரிஷிகேஷ் வழியாகத்தான் இந்த தலங்களைத் தரிசித்து வருகிறார்கள்.

நான்கு மலை யாத்ரா சென்று வருபவர்களுக்கு ஓய்வு எடுக்க ரிஷிகேஷ் நகரைத் தேர்வு செய்கிறார்கள்.

2015 செப்டம்பர் மாதம்,
பாரத இந்தியாவின் தேசிய புராதான - புனித - நகர்களாக ஹரிதுவார் மற்றும் ரிஷிகேஷ் நகரங்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த மிகப் புனித நகரில், அசைவ உணவுகள் விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார்கள்.

ரிஷிகேஷில் ஏராளமான புராதான
ஆலயங்களும், யோகா மடங்களும் அமைந்துள்ளது. 

தற்போது, இங்கு வியாபாரத்தலமாகவும் மாறி வருகின்றது. கைவினைப் பொருட்கள், பக்தி ஆன்மீக பூசை பொருட்கள் விற்பனைக் கேந்திரமாகவும் உள்ளது.

உலகத்தின் யோகாகலையின் தலைநகராக தற்போது விளக்குகிறது.
யோகா பயிற்சியிற்காக, உலகம் முழுவதிலிருந்தும் இங்கு வருகிறார்கள்.

லெட்சுமணன் ஜூலா என்ற இடத்தின் அருகில் புராதானமான லெட்சுமணன் ஆலயமும், ராம்ஜுலா அருகில் சத்ருக்கன் ஆலயமும் அமைந்துள்ளது.

லெட்சுமன் ஜூலா :
ராமன் ராவணனை வதம் செய்த பாவத்திற்காக யாகம் செய்த இடம்.

லெட்சுமணன், கங்கை நதியை தாண்டுவதற்காக, கயிற்றுப் பாலம் அமைத்திருக்கிறார் என்பது புராணம்,

இந்தக் கயிற்றுப்பாலம், 1889ல் மாற்றி அமைக்கப்பட்டது.

1924 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தப் பாலம் அழிந்ததும், 1927 ல் ஆரம்பித்து 1923 ல் கட்டி முடித்து புனரமைக்கப்பட்டது.

கங்கை நதியின் கிழக்குக்கரையில், உள்ள ஜோன்க் எந்த இடத்திற்கும், மேற்குக் கரையில் உள்ள தபபோவன் என்ற இடத்திற்கும் இடையில் இந்த தொங்கு பாலம் அமைந்துள்ளது.

சுமார் 450 அடி நீளம் கொண்டது.
இது பாதசாரிகளுக்கு மட்டும் உரியது; என்றாலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துகிறார்கள். 

லெட்சுமணன் பாலம் என்பது, ரிஷிகேஷ் நகரின் வடக்கு புறத்தில் கங்கை நதியின் மீதுள்ள ஒரு தொங்கும் பாலம். 

ரிஷிகேஷ் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.

ராம் ஜூலா என்ற மற்றும் ஒரு பாலம், லெட்சுமன் ஜுலாவிற்கு 2 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது.

பயண அனுபவக் குறிப்புகள்:
14.04.2022:
இன்று நாங்கள், ஹரிதுவாரில் தங்கியிருந்தோம். சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, ஸ்ரீ சுபகிருது வருடம் பூசை கொண்டாடினோம்.

விடியற்காலையில் கங்கையில் குளித்து , காலை உணவை 8.30 மணி அளவில் முடித்துக்கொண்டு ரிஷிகேஷ் புறப்பட்டோம்.

2015 ல் ஏற்கனவே ரிஷிகேஷ் வந்தபோது இருந்த சாலை நினைவுகள் வந்தது.

இப்போது மிகவும் அகலமான, அருமையான சாலையாக உள்ளது.
போக்குவரத்தும் மிகவும் அதிகம். சுமார் 30 கி.மீ. தூரத்திற்கும் அதிக கூட்டம்.
 Sona நதிக்கு மேல் ஒரு மேம்பாலம் சிறப்பாக போடப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்ல, புலிகள் வாழும் காடுகள் அருகில் உள்ளதால், காட்டு விலங்குகளுக்கு எவ்வித துயர் இல்லாமல், மிக உயரமான அளவில் மேம்பாலம் காடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.  
மிக கடுமையான எதிர்ப்பு, போராட்டம், அரசியல்கள், தாண்டி, நீதிமன்ற உத்தரவுகள்படி, பல முயற்சிகளுக்குப் பிறகு, இந்தப் பாலங்கள், பாதைகள் அமைத்துள்ளனர்.

இப்போது, ஹரிதுவார் தாண்டி, ரிஷிகேஷ், அருகே ஒரு ரயில்வே ஸ்டேஷன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷிகேஷ் நகரம் போக்குவரத்திற்கு மிகவும் நெருக்கடியானது.
நாங்கள் முதலில் ரிஷிகேஷ் வடக்கு புறத்தில் உள்ள தபோவனம் என்ற பகுதிக்கு சென்றோம்.

புராதானமான லெட்சுமணன் ஆலயம் (ANCIENT LAKSHMANAN TEMPLE)
லெட்சுமணன் ஜூலா பாலம் செல்வதற்கு முன்பாக உள்ள சாலையில் சென்று கங்கையின் அருகில் உள்ள
மிகப்புராதானமான லெட்சுமணன் ஆலயம் (ANCIENT LAKSHMANAN TEMPLE)
சென்று தரிசித்தோம்.
ஆலயம் முகப்பில் பழமையான ஒரு வளைவுடன் இருந்தது.
உட்புறம் 3 பகுதிகள். ஒரு பகுதியில்

விநாயகர், லெட்சுமணன், பொம்மை சிலைகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு ஒரு அறையிலும்,
 மற்றும் ராமர், சீதை, 
தனியாகவும், ஹனுமான் சிலை, மற்றும் 
ஸ்ரீ நாரத், ஸ்ரீ பத்ரி நாத், ஸ்ரீ லக்ஷ்மி, சிலைகளும் உள்ளன.
தனி மண்டபத்தில் ஸ்ரீ லெட்சுமி மகராஜ் அவர்கள் சிலையும் இருந்தது.

பளிங்கு சிலையில் வடிக்கப்பட்ட
(வர்ணி வேஷ ரமணீய தரிசனம்) ஸ்ரீ ஸ்வாமிநாராயண பகவான்
அதி அற்புதமாக இருந்தது.

யோகா அல்லது meditation செய்யும் வகையில் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மிகப்பழமையான தலவிருஷ்டம் கங்கையை ஒட்டிய பகுதியில் இருந்தது.
மிகப் புராதானமான லெட்சுமணன் ஆலயம் என்று எழுதிவைத்திருந்தார்கள்.

இவற்றையெல்லாம், பார்த்து தரிசனம் செய்துவந்தோம்.

அகிலேஸ்வர் மகாதேவர் ஆலயம். 

இது ஒரு தனி ஆலயம், ரிஷிகேஷில் அமைந்துள்ள இன்னொரு பழமையான ஆலயம். இது புதுப்பிக்கப்பட்டு புதிய கட்டிட அமைப்பில் உள்ளது.

கருவரை மன்டபத்தில் சுமார் 12 அடி உயரமான லிங்கம் உள்ளது.
இது தனி உள் மண்டபத்தில் உள்ளது. 
ஒரு நந்தியும் இணைத்து,
அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும், சிறுசிறு அறைகள்/ மாடங்களில், விநாயகர், ராதா, கிருஷ்ணர், பார்வதி, லெட்சுமி, துர்க்கை, மற்றும் மாடியில் ஒரு தனி ஹனுமான் சன்னதி. உள்ளது.

அடுத்து தனியாக ஒரு பாதரச சிவலிங்கம் சன்னதியும் உள்ளது.

இதை அடுத்து வழியில் ஆதிபத்திரி ஆலயம், மடங்கள், Hotel ல்கள் நிறைய இருக்கின்றன.

லெட்சுமணன் ஜூலா 

ரிஷிகேஷ் வந்தவுடன், ஒரு பேருந்து நிலையம் அருகில் பேருந்தை
 நிறுத்தி விட்டு, நாங்கள் நடந்துகொண்டே அங்கிருந்த ஆலயங்களை தரிசித்து
விட்டு, லெட்சுமணன் ஜூலா என்ற தொங்கு பாலத்தை அடைந்தோம்.

இது கங்கையின் மீது தபோவனம் பகுதிக்கும், எதிரில் உள்ள ஜோன்க் என்ற பகுதிக்கும் இடையில் உள்ளது.

இந்த இடம், லட்சுமணன் கயிற்றால் அமைத்தது என்பது புராணம். 
1889 ல் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.
284 அடி உடைய தொங்குபாலம் ராஜ்பகதூர் சுராஜ்மல் என்பவரால் முதலில் கட்டப்பட்டு, அக்டோபர் 1924 ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துப் செல்லப்பட்டதும், அவரது மகனார், ராஜ்பகதூர் ஷிவ் பிரசாத் துல்ஷன் என்பவரால் 1927 - 29 PWD துறையின் மூலமாக மறுகட்டமைப்பில் 450 அடிக்கு உருவாக்கப்பட்டு, 1930 முதல் பயன்பாட்டில் உள்ளது. 

இந்தப் பாலம் தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தில் அதிகம் வந்துள்ளது.

இந்தப் பாலம் வழியாக சென்று வருவதற்கு எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. கட்டியவர் தன் பெற்றோரின் ஞாபகார்த்தமாக சீரமைப்பும் செய்தும் உள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது ஒரு மிக முக்கிய இடமாக ரிஷிகேஷில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நாங்கள் இதன் வழியாக நடந்து சென்று அக்கரைப்பகுதியை அடைந்தோம்.

த்ரயம்பகேஷ்வர் மகாதேவ் ஆலயம்
இந்தக் கட்டிடம் ரிஷிகேஷ் நகரின் அடையாளக் கட்டிடமாக மாறி வருகிறது.

பிரமிக்கதக்க வகையில் அமைந்துள்ளது.
கங்கையின் கிழக்குப் பகுதியில், நதியின் ஓரத்தில் இந்த 13 மாடி கட்டிடம் உள்ளது.

கங்கையின் கரையில் மிக உயரக் கட்டிடமாக உள்ளது.

முதல் இரண்டு அடுக்குகளில் ஏராளமான கடைகள் இருந்தாலும், மற்ற அடுக்குகளில் தனித்தனியாக அறைகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில், சிவன், விஷ்னு, ராதாகிருஷ்ணன், லெட்சுமிநாராயணர், விநாயகர், ஹனுமன் முதலிய ஏராளமான சுவாமிகளின் திரு உருவங்கள், சேர்த்தும், தனித்தனியாகவும், வைக்கப்பட்டுள்ளது. 

 பல அறைகளில் வியாபார கடைகளும்,. பூசை பொருட்கள் முதலிய ஆன்மீகப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.
சில அறைகள் காலியாகவும் உள்ளது.

எந்தவித மின்தூக்கி அமைப்பும் இல்லை
ஒவ்வொரு மாடியாக படிகளில் ஏறித்தான் செல்ல முடியும்.

மேல்மாடியில் த்ரயம்பகேஷ்வர் மகாதேவ் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேல்புறம் செல்ல செல்ல, ரிஷிகேஷ் நகரும், ஆர்பரித்து வரும் கங்கையாரும் காண்பதற்கு, உண்மையில் ஓர் அற்புதக் காட்சி.

உச்சி மாடி வரை ஏறி சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். எந்தவிதக் கட்டனமும் இல்லை.

முழுவதும் பார்க்க முடியாதவர்கள் முடிந்தவரை சென்று கண்டு களித்து வரலாம். கட்டாயம் இல்லை.

அருகில் சிறு சிறு ஆலயங்கள், Hotel கள், சத்திரங்கள், மடங்கள், ஆஸ்ரம்கள் வரிசையாக உள்ளன.

ராம் ஜூலா
அடுத்து அந்தப் பகுதியில் இருந்து 2 கி.மீ.தூரத்தில், தென்புறம் ராம் ஜூலா என்ற தொங்குபாலம் இருக்கும் இடம் செல்ல ஒரு Auto மூலம் வந்தோம். (முயன்றால், நடந்தும் வரலாம்)

தெற்குப் பகுதியில் உள்ள ராம் ஜூலா தொங்கு பாலம் மிகவும் Busy யானது. இதன் இரு புறங்களும் ஏராளமான ஆஸ்ரமங்கள், மடங்கள், Hotel கள் உள்ளன.

ராமேஸ்வரர் ஆலயம் :
பாலம் கிழக்குப்புறம் மிகப்பழமையான சிறப்பான ராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. வட்ட வடிவமாக கட்டிட அமைப்பு இருந்தாலும், நடுவில் உள்ள கருவரையில், பெரிய லிங்கம், உடன் சிறிய விநாயகர், கலையமைப்புடன் உள்ள வெள்ளை பளிங்கு நந்தியும் மிக அழகிய முறையில் உள்ளது.  
அழகிய முறையில், தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
இதை தரிசித்து விட்டு, சற்று தூரம் சென்று, அமைக்கப்பட்டுள்ள நீண்ட படித்துறையில் பெருகி ஓடிவரும்
கங்கை நதியில் நீராடினோம். 
 
கீதாபவன்,:
கீதாபவன் ஒரு முக்கியமான ஆஸ்ரமங்களில் ஒன்று. மிகப் பெரியது. உட்புறம் மரங்களும், செடி மலர்களும் ஒரு தோட்டம் போல அமைத்து நடுவில், 
ஸ்ரீ லெட்சுமிநாராயண மந்தீர் அமைந்துள்ளது. மாடியிலும், கீழ்ப்பகுதிகளிலும் சுமார் 1000 அறைகள், சாது, சன்னியாசிகளுக்கு விடப்பட்டுள்ளது. உணவுடன் தங்குமிடமும் இலவசம் என்று கூறுகிறார்கள்

ஆலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நடுவில் நீள் சதுர வடிவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதன் உத்திரப் பகுதியில், மிக அழகிய முறையில் ஸ்ரீகிருஷ்ணரின், வாழ்க்கையை சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன.
ஆலயமும், ஆஸ்ரமத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இங்கு இயங்கிவந்த கீதாபிரஸ் ஆன்மீகப் புத்தக நிலையம் இந்தியா முழுவதுமே, புகழ்பெற்றது. சென்ற முறை ரிஷிகேஷ் வந்தபோது, சில புத்தகங்கள் வாங்கியது நினைவுக்கு வந்தது. தற்போது N மூடப்பட்டுள்ளது 

மேலும், சீதாராம் மந்தீர், முதலிய ஆலயங்கள் தரிசித்தோம்.

பிறகு அங்கிருந்து படகில் மேற்கு கரையை அடைந்தோம். படகில் ஒரு முறை செல்ல ரூ 10/- ம் இருமுறை இருகரைக்கும் சென்று வர ரூ 18/- கட்டணம் உண்டு. 

நாம் நடந்து செல்ல விரும்பினால், அருகில் உள்ள ராம் ஜூலா தொங்கு பாலம் வழியாகவும் சென்று வரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கு கரையை அடையும் இடத்தில் சத்ருக்கன் ஆலயம் உள்ளது. உலகில் சத்ருக்கனுக்கான இரண்டு ஆலயங்கள் மட்டும் உள்ளதாகவும், ஒன்று கேரளா (108 - திவ்யதேசத்தில் வருகிறது) விலும், மற்றொன்று ரிஷிகேஷத்திலும் உள்ளதாக குறிப்பு உள்ளது.

ரிஷிகேஷ் குறுகிய நெருக்கமான, போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால், பஸ் முதலிய பெரிய வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதையும், கட்டுப்பாடுகளும் நிறைய உண்டு என்பதால் மேல்கரையை அடைந்ததும், தனி Auto பிடித்து, எங்கள் சுற்றுலா பஸ் உள்ள இடத்திற்குச் சென்றோம். 

அங்கிருந்து மதியம் ஹரிதுவார் Hotel வந்துசேர்ந்தோம்.
மாலையில், சில ஆலயங்கள் ஹரிதுவாரில் தரிசனம் செய்தோம்.

(இவற்றின் அனுபவ விபரங்கள் பற்றி ஏற்கனேவே பதிவிட்டு உள்ளேன்)

அன்று இரவு Haridwar வந்து Hotel லில் தங்கினோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(14.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#RISHIKESH

பதிவு -2 லெட்சுமணன் ஆலயம்


பதிவு - 3. ரிஷிகேஷ் -
அகிலேஷ்வர் மகாராஜ் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள்.
லெட்சுமன் ஜூலா அருகில்
14.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710

#ரிஷிகேஷ் - பதிவு - 4 - : லெட்சுமணன் ஜூலா மற்றும்
த்ரயம்பகேஷ்வர் ஆலயம் - 13 மாடிக் கட்டிடத்தில் உள்ள ஆலயங்கள்

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710
#ரிஷிகேஷ் பதிவு - 5
கிழக்கு கரை ஆலயங்கள்.
ராமேஷ்வரர், மற்றும் அப்பகுதி மடவிளாகம்
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710


#ரிஷிகேஷ் - பதிவு 6
கங்கை கிழக்குப் பகுதி - கங்கை நதி - நீராட்டு துறைகள் - கீதாபவன் - மற்ற இடங்கள்
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710


#ரிஷிகேஷ் - பதிவு - 7
மேற்கு கங்கைகரைகள், சத்துருக்கன் ஆலயம்.
ரிஷிகேஷ் நகரம் - ஹரிதுவார் வரை.
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#RISHIKESH
#ரிஷிகேஷ் - 
#HARIDWARபதிவு - 
14.04.2022
#ரிஷிகேஷ்

https://m.facebook.com/story.php?story_fbid=8139119682829884&id=100001957991710


No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...