#utrakant_tour_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#நைனித்தால்_ஏரி (Nainital Lake) 8.4.2022
🌟இந்தியப் புராணங்கள் சிலவற்றுள் நைனிடால் காணப்படுவதாக நம்பப்படுகிறது. ஸ்கந்த புராணங்களின் மணஸ்கந்தில் நைனிடால் ஏரி, திரி-ரிஷி-சரோவர் என்றழைக்கப்படுகிறது, அத்ரி, புலஸ்தயா மற்றும் புலகா ஆகிய மூன்று ஞானிகள் (அல்லது ரிஷிகள்) குறிப்புகளில் காணப்படுகிறது,
🌸இவர்கள் நைனிடாலில் தண்ணீர் இல்லாதிருப்பதைக் கண்ட பின்னர் தற்போது ஏரி (சரோவர் = ஏரி) இருக்கும் இடத்தில் நீளமான துளை ஒன்றைப் போடுகின்றனர். பின்னர் திபெத்தில் இருக்கும் புனித ஏரியான மானசரோவரிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து நிரப்புகின்றனர். இந்த மரபுவழிக் கதையின்படி "சிறிய மானசரோவரான" நைனி ஏரியில் மூழ்குவது பெரிய ஏரியில் மூழ்குவதற்கு இணையான தகுதியைத் தருகிறது.
🌺கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இது அமைந்துள்ளது. ‘தால்’ என்றால் ஏரி. (அதுவே ‘டால்’ என்று உச்சரிக்கப்படுகிறது). ஊரை சுற்றி ஏரிகள் இருப்பதால் அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
❄️இவ்வேரி, இந்தியாவின் வட மாநிலமான உத்திரகாண்டில் இமாலயத்தின் வெளிப்புற குமோன் மலைப்பிரதேச பகுதியிலுள்ள, நைனித்தால் எனும் நகரருகே இயற்கை நன்னீர் ஏரியாக அமைந்துள்ளது. மேலும், அழகமைப்புக் கலையுடன், சிறுநீரக வடிவம் அல்லது பிறை வடிவம் போன்ற அமைப்புடன் கூடிய இது, தென்கிழக்கு இறுதியில் ஒரு ஆறு முதலானவற்றின் வடிகால் வசதியுடன் உள்ளது.
🌹ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இயற்கையழகு மனதை கொள்ளை கொள்ளும். படகு சவாரி ரம்மியமாக இருக்கும். பனிமூட்டம் கொண்ட மலைச் சிகரங்களும், வானுயர்ந்த மரங்களும், பறவைகள் எழுப்பும் இனிய ஓசைகளும், ஜிலுஜிலுவென சிலிர்த்து ஓடும் நீர் நிலைகளும், ஆங்காங்கே மலையிலிருந்து குதித்து விழும் நீர்வீழ்ச்சிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும்.
#பயணஅனுபவக்குறிப்புகள்
ஏரியில், படகு சவாரி செல்ல பல இடங்கள் உள்ளன. நயினா தேவி ஆலயம் அருகில் உள்ள படகுத்துறைக்கு நாங்கள் சென்று படகில் சவாரி செய்தோம்.
Life jacket அணிந்து 1 மணி நேரம் சுமார் 3 கி.மீ சுற்றி வரலாம். தனிக்கட்டனம்.
இயற்கையாக அமைந்த மலைத்தொடரில் அமைந்துள்ள ஆழமான ஏரி. அற்புதமாக இயற்கை காட்சிகள். ஏரி மிக ஆழம் தெளிவான நீர். அவசியம் சென்று ரசிக்கலாம்.
🍁ஊரின் வடிகாலும் இதுவே என்பதையும் பார்க்க முடிகிறது. தூய்மை செய்து கழிவுநீர் விட முடியுமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
🙏🏻நன்றி🙏🏻
8.04.2022
#ஆலயதரிசனம்
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment