Friday, May 20, 2022

UTTARAKANNT TOUR - ஜாகேஸ்வரர். (9-10.04.2022)

UTTARAKANNT TOUR 2022
பயண அனுபவக் குறிப்புகள்

🛕#ஜாகேஸ்வரர். 1
(9-10.04.2022)

🛕ஜாகேஸ்வரர் என்ற புனித தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில், Kumaon பகுதியில் Almora மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🏔️இந்த இடம் சுமார் 6140 அடி 1870mts உயரத்தில் இமாலயத்தில் உள்ளது.
நயினிட்டால், நகரிலிருந்து, சுமார் 100 கி.மீ. மற்றும், Almora நகரிலிருந்து 36 கி.மீ. தூரம், வட கிழக்கில் உள்ளது.

🔱மத்திய இமயமலைப்பகுதியில், பன்னெடுங்காலமாக கைலாசமலை தரிசனம் செய்ய செல்லும் பாதையில் இப்பகுதி உள்ளது.

⚜️இவ்வாலயங்கள் இப்பகுதியின் ஜோதிர்லிங்கங்கள் என்றே வழங்கப்படுகிறது.

🛕வைத்திநாதர் என்ற மற்றொரு புகழ் பெற்ற ஆலயம் இங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🛕மிக மிக புராதானமாக ஆலயங்கள் நிறைந்த பகுதி. 
எப்போது இந்த ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வரலாற்று, அல்லது கல்வெட்டு மற்ற உறுதியான சான்றுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

🏯எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், இவ்வாலயங்கள் சுமார் 1400 வருடங்களுக்கு முற்பட்டதே என்று நம்பப்படுகிறது.

🌟சிலர் கருத்துப்படி ஆதி சங்கரர் ஸ்தாபித்தார் என்றாலும், 
கட்டிட அமைப்புகள், அவருடைய காலத்திற்கு 100 வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஊர்ஜிதம் செய்கிறார்கள்..

🛕இமயமலையின் இந்தப் பகுதியில் சுமார் 151 ஆலயங்கள் உள்ளன அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டு, இவைகள் 7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தவைகள் தான் என்று உறுதிப்படுத்தப்படுள்ளது. 

🛕இவைகள் Group of Temples எனப்படும் ஒரே இடத்தில் பல ஆலயங்களைக் கொண்ட அமைப்பாகும்.

🌼இந்த ஆலயங்கள், பல நூறு வருடத்திற்கு முன்பு இந்தியாவின் பகுதிகளிலிருந்து இந்த இடங்களுக்கு வந்து இவ்வாலயங்களை அமைத்து வழிபட்டதால், இதை உத்திரகாசி என்றும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

🍁சில ஆலய அமைப்புக்கள், கட்டிடக் கலை நுட்பங்களைக்கொண்டு 7ம் நூற்றாண்டு முதல் 12 நூற்றாண்டுகளிலும், சில ஆலயங்கள், பிற்காலத்திலும் கட்டப்பட்டது.
என்று நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். 

🥀இது போன்று Group of temples இந்தியாவில் மத்திய பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள புவனேஸ்வரர் அருகில் உள்ள ஆலயங்கள் அமைப்பை ஒப்புநோக்கத்தக்கது.

⚜️வடஇந்திய நாகரா கட்டிடக்கலை அமைப்பையும், சில ஆலயங்கள் மத்திய மற்றும் தென் இந்திய கட்டிடக்கலை அமைப்பையும், பிரமிடு போன்ற கட்டிட அமைப்பையும் சார்ந்த கற்கோவில்கள்,
இங்கே சுமார் 200 ஆலயங்கள் உள்ளன. 
சிவன், சக்தி, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

🌟அனைத்து ஆலயங்களும் ASI இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🛕#ஜாகேஸ்வரர்ஆலயங்கள் :

🛕இரண்டு முக்கிய ஆலயப் பகுதிகள் ஜாகேஸ்வரில் உள்ளன.

1. ஜாகேஸ்வரர் ஆலயங்கள்.
2. தான்டேஸ்வரர் ஆலயங்கள். 
இரண்டுக்கும் சுமார் 2 - 3 கி.மீ.தூரம் உள்ளது.

🛕ஜடாகங்கா என்ற நதிக்கரையில் இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. 

🥀தேவதாரு, பைன் மரக்காடுகள், மலைகள் சூழ்ந்த இப்பிரதேசம் காண மிக ரம்மியமாக உள்ளது.
 
🛕மேலும் சில பிரசித்திப் பெற்ற ஆலயங்களும் அருகில் உள்ளன.

இங்கு மேலும், சில ஆலயங்கள் இருப்பினும் மிகவும் அதிகமாக சுமார் 124 ஆலயங்களைக் கொண்டு பிரசித்துப் பெற்றது ஜாகேஸ்வரர் ஆலயமே.

 🛕தண்டிஸ்வரர் ஆலயத்தில் பல ஆலயங்கள் பழமையால் சிதலமடைந்து மூடப்பட்டுவிட்டன எனக் கூறப்படுகிறது.

#ஜாகேஸ்வரர்_மகாதேவர்_ஆலயம்:

🛕இவ்வாலயத்திற்கு உள்ளே நுழைய, பிரதான சாலையை ஒட்டியே இரண்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உள்நுழைந்ததும், இவ்வாலயங்களை தரிசிக்கும் வழிகளும், முறைகளும், படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

🛕சுமார் 124 சிவலிங்கங்கள் ஒரே ஆலயத்துள் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ளன. இவைகள் பல்வேறு சன்னதிகள், கோபுர அமைப்புகளுடன் உள்ளன. முழுவதும் கற்றளிகள். அடுக்குக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

தண்டி ஆலயம்,
குபேரர் ஆலயம்,
மிருத்யுஞ்சயர் ஆலயம்
நந்தாதேவி ஆலயம்
நாகதுர்க்கா ஆலயம்
நவகிரக ஆலயம்

🛕ஜாகேஸ்வரர் ஆலயத்தில், சிறியதும், பெரியதும், பலவகைகளில் சதுர அமைப்பில் அடிப்பகுதி காணப்படுகின்றது. 

🛕அடிப்பகுதி நான்குபுரமும் உயர்ந்த சுவர்கள். மேல் பகுதி பிரமீடு அமைப்புகள். உச்சிப் பகுதியில் தாமரை பீடமும், கலசமும் கற்றளிகளாக உள்ளன. 

 சில முக்கிய கோபுரங்கள் தனி சிங்கம் அல்லது தனி ரிஷபம் காவல் தெய்வம் போல அமைத்துள்ளமை சிறப்பு. எல்லாமே கற்றளிகள். 
🛕ஆலய முன் கோபுர பகுதிகளிலும், நிலைப் படிகளிலும், பல்வேறு கலைநுட்பமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ள. சிறிய சிறிய அளவுகளில் நுட்பமான சிலை அமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.

🛕இவைகளில் வீனாதார சிவன், கனேசர், மகாலெட்சுமி, சப்தமாதார்கள், யோக தட்சினாமூர்த்தி, உருவங்கள், முன்று முகம் கொண்ட சிவவடிவம், எல்லாம் கற்களால் வடிக்கப்பட்டுள்ளது.

🛕இவைகள் 7,8ம் நூற்றாண்டுகளை ஒட்டிய காலம் என்று கூறுகிறார்கள்.

#ஜாகேஸ்வரர் ஆலயம்:

🛕இங்குள்ள அணைத்து ஆலயங்களுக்கும் நடுநாயகமாக, மிக முக்கிய இடத்தில் பெரிய ஆலயமாக உள்ளது. கருவறை மேற்கு பார்த்து அமைந்துள்ளது. இவ்வாலயம் ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகின்றது.

🛕ஆலயம் முன்புறம் சிறிய நந்தி. 
நுழைவு பகுதியில், இருபுறமும் உயரமான, பெரிய அளவிலான துவார பாலகர்கள்.

🛕இடது துவார பாலகர் கரத்தில் கபாலம் ஏந்தியுள்ளார். மற்ற கரங்களில் சில ஆயுதங்கள் தாங்கியுள்ளார்.
வலது துவாரபாலகர், பெரிய நாகத்தைப் பிடித்துள்ளர். மற்ற காரங்களில் ஆயுதங்கள். உள்ளன.

🛕மனித வாழ்வுநிலையற்றது, மரணத்தை வெல்லவும், வினை நீங்கவும், இவ்வாலயத்தில் உள்ள சிவனை நாம் வணங்க வேண்டும் என்பது இவை உணர்த்தபடுகிறது.

🛕அடுத்து உள் மண்டபம் சற்று பெரிது. பக்தர்கள் இருந்து வழிபாடு செய்வதற்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

🛕உள் மன்டபம் தாண்டினால், மேற்கு பார்த்த சிவன் கருவறை,
சற்று விஸ்த்தாரமாக உள்ளது.
சிறிய ஜோதிர்லிங்கம். ஆவுடைப்பகுதி, தரையுடன் ஒட்டி உள்ளது. நாம் அருகில் உள்ள பாத்திரத்தில் உள்ள நீரை மொண்டு, சிவனை அபிஷேகம் செய்யலாம்.

🛕நமது ஊர்களில் உருத்திராட்சங்களைப் பயன்படுத்தி, சிறிய அளவில் பந்தல் போல; உருத்திராட்சத்தைக் கொண்டு, லிங்கம் அமைப்பார்கள் அது போல. அழகாக நாகாபரணம் மற்றும். அலங்கரங்கள், மேலிருந்து ஒரு தாமரை மலர் மூடி போல வெள்ளியால், அமைத்துள்ளார்கள். லிங்க சிவனை பாதுகாத்து வருகிறன, இவைகள்.

🛕இந்த ஆலய கருவரையின் அமைப்பு மட்டும் நான்குபுறமும் பலகனி உடையது. 

மத்திய இமாலயப் பகுதியில் உள்ள முக்கிய ஜோதிர்லிங்கமாகக் வணங்கப்படுகிறது. ஆதியிலிருந்து, கைலாசமானசரோவர், பத்திரி, கேதார், ஆதி கைலாச யாத்திரையில் இவ்வாலயம் முக்கியத்துவம் உடையது என்கிறார்கள்.

🏯ஆலய நாற்புர சுற்று சுவர்கள் சற்று உயரமானது. மேல்பகுதி பிரமீடு அமைப்பில் உள்ளது. உச்சிக் கோபுரம் மரத்தினால் மூடி போன்று அமைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த அமைப்புகள் பிற்காலத்திய அரசர்கள் செய்துள்ளார்கள் என்ற குறிப்புள்ளது. 

🛕இவ்வாலயம் சுற்றிலும் சிறிய, நடுத்தர லிங்கங்களை வைத்து சிறுசிறு கற்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

🛕இவ்வாலயத்தில் உள்ள ஜாகேஸ்வரர் என்னும் யோகேஸ்வரரை உளமார வணங்கினால், என்றும் யோகத்தையும் தந்து, நமது வாழ்வின் வினை நீக்கம் தந்து, மகிழ்வான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

🛕இவ்வாலயத்தின் முன் பண்டாக்கள் அமர்ந்து கிரியைகள் / யாகங்கள் ... முதலியவைகள் செய்து தருகிறார்கள். 

🛕ஜாகேஸ்வரா ஆலய தென் பகுதியில் இவ்வாலயம் பின்புறம் (கிழக்கு புறம்) இரண்டு தனி தனி ஆலயங்கள் ஒவ்வொன்றிலும், தனித்தனியாக லிங்கங்கள். தென்புறம் ஒரு ஆலயமும் இருக்கிறது. அனைத்து ஆலயத்தின் முன் பகுதிகளிலும், சிறிய அளவில் மகாலெட்சுமி, விநாயகர், தெட்சினாமூர்த்தி முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

🛕தென்கிழக்கு மூலையில் மிகப்பெரிய தேவதாரு மரம் உள்ளது. அதைச் சுற்றி பீடம் அமைத்துள்ளார்கள்.

🛕அனைத்து ஆலயங்களின் கோபுர உச்சிப் பகுதிகள் தாமரைமலர் பீடம் மற்றும் கற்கலசங்களுடனும் இருக்கிறது. முக்கிய கோபுரங்களில் ரிஷபம் அல்லது சிங்கம் போன்ற ஒரு அமைப்பும் உள்ளது.

🛕ஜகேஸ்வரர் ஆலயம் தென் பகுதியில்,
ஜடாகங்கா என்ற ஆறு உள்ளது. ஆலயத்திலிருந்து, ஆற்றுக்குச் செல்ல சிறிய படிகளுடன் ஒரு வழியும் இருக்கிறது.

🛕ஆலயத்தின் தென் பகுதியில், ஒரு சிறிய குளம் கருங்கற்கள் படிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் புன்னியகுளமாகக் கருதுகிறார்கள். குளம் நீர் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது.

🛕ஜாகேஸ்வரர் ஆலயம் எதிரில் ஒரு அனுமன் ஆலயம், இன்னும், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பெயரில் பல ஆலயங்கள் இருக்கின்றன.

🔱மிருத்யுஞ்சயர் மகாதேவர் ஆலயம்,
இந்த ஆலயம், ஜாகேஸ்வரர் ஆலய அடுக்கில் ஜாகேஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து. மிகப்பெரிய ஆலயமாக உள்ளது.

🛕மிகப் பெரியது. கிழக்குப் பார்த்த ஆலயம். முன்புறம் சிறிய மண்டபத்துடன் கூடிய நந்தியுடன் 4 கற்றூன்களுடன் கூடிய முன்மண்டபம், அடுத்து சற்று பெரிய உள் மண்டபம் அதில் வலது புறம், ஒரு விநாயகர் சிலை அடுத்து உள் கருவரை மண்டபத்தில் நல்ல கம்பீரமான உருவத்தில் சிவலிங்கம். ஆவுடைப்பகுதி தரைமட்டத்திலிருந்து சிறிதே உயரமானது.
சிவபெருமானுக்கு நாக அலங்காரத்துடன் அம்சமாக காட்சி தருகிறார். நாம் மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம்.
தினம்தோறும் மிக அருமையாக பூசைகள் முறையாக நடைபெற்று வருகிறது. 

🙏மிருத்யுஞ்சய மகாதேவர் எமபயம் போக்குபவர், மரண அவஸ்த்தை தவிர்க்கவும், ஆயூள் யோகத்திற்கும், மிருத்யுஞ்சய மகாதேவரே காரணகர்த்தாவாக இருப்பதால், இவரை வழிபட வேண்டியது மிகச் சிறப்பு.

🛕முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம் ஜாகேஸ்வரர் ஆலங்களில் பெரியது ஆகும், இதன் அமைப்பைக் கொண்டே இவரின் முக்கியத்துவம் தெரியும்.

🛕இவ்வளவு சிறப்பு மிக்க புராதான ஆலயத்தில் மிருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபட்டால் மிகமிக நல்லது என்பதால், சுற்றுலா இயக்குநர் திரு பாலு சார் அவர்களின் முயற்சியால், எல்லோரும் சேர்ந்து 10.04.2022 அன்று விடியற்காலையில் இவ்வாலத்திலேயே அனைவரும் இணைந்து மிருதயுஞ்சய ஹோம பூசை செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. 

 🛕#ஸ்ரீபுஷ்டிதேவி ஆலயம்:

🌟இவ்வாலயம் கிழக்கு நோக்கி மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு பின்னாலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் கருவரை கிழக்கு நோக்கியது. ஸ்ரீபுஷ்டிதேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதுவும் கற்கோவில் ஆலய கோபுரம் வித்தியாசமாக இருந்தது. பொதுவாக, தேவி ஆலயங்கள் முன்புறம் பட்டையாகவும் கோபுர உச்சிப் பகுதி நீண்ட பகுதியாகவும் இருபுறமும், சிங்கம் அல்லது ரிஷபம் போன்ற சிலை அமைப்பும் உடையதாக இருக்கிறது.

🌟மேலும், தன்டேஸ்வரர், நயினா தேவி, நவகிரக ஆலயம், எல்லாம் தனித்தனியாக உள்ளது.
ஆலயம் உள்நுழைவுப் பகுதி தாண்டி மிருத்யுஞ்சர் ஆலயம் முன்புறம் காலதேவர் (பைரவர்) ஆலயமும் உள்ளது.

🌼பல ஆலயங்கள், புனரமைப்பு இல்லாமல், சிதைந்தும் உள்ளது, வெட்டவெளியில் சில சிவலிங்கங்கள், சில ஆலயங்களில், எவ்வித சிலைகள் இல்லாமலும் உள்ளது.

🛕#குபேரர் ஆலயம்:

ஜாகேஸ்வரர் ஆலயம் தரிசித்தப்பின், 
சற்று தூரத்தில் கிழக்கே சுமார் 100 மீட்டர் தூரத்தில் சற்று உயரத்தில், ஜடாகங்கா ஆற்றின் மீது குறுக்கே அமைந்துள்ள பாலத்தை தாண்டினால், இவ்வாலயம் உள்ளது. குபேரர் ஆலயம் மேற்கு பார்த்த சன்னதி கொண்டது. வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பராமரிப்பில் உள்ளன.

🍁ஜடாகங்கா ஆற்றின்கரையில், திதி, தர்ப்பனம் செய்வது மிகப் புண்ணியம் என்பதால், பலர் வந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும், பக்தர்கள் வசதியை முன்னிட்டும் Toilet வசதியுடன், சிறிய மண்டபம் உள்ளது.

🛕இவ்வாலயங்கள் அனைத்தும் பிரதான சாலையை ஒட்டியே உள்ளன. ஒரு புறம் மலைப்பகுதியை ஓட்டி வீடுகள், கடைகள், மறுபுறம், ஜடாகங்கா ஆறும், அதை ஒட்டி ஆலயங்களும், ஆற்றின் மறுகரையில் அடர்த்தியான, தேவதாரு, பைன் மரங்கள் ஏராளமாக உள்ளன.

🌼நாங்கள் பிரதான சாலையை ஒட்டிய வசதியான HOTEL MANUDEEP வந்து தங்கியிருந்தோம். 9.4.2022 அன்று மாலை இவ்வூருக்கு வந்து உடனடியாக ஆலயம் சென்றோம். அன்று மாலை பூசை முழுவதும் கண்டு தரிசித்தோம். 
இரவு Hotel வந்து தங்கினோம்.

🙏🏻10.04.2022 விடியற்காலையில் சுமார் 5 மணிக்கு மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு அனைவரும் சென்று, மிருத்யுஞ்ச பூசை செய்து கொண்டோம். மேலும், 
ஜாகேஸ்வரர், ஆலயம் முழுதும் வணங்கி பின்பு குபேரர் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு, Hotel MANUDEEP வந்து காலை உணவுக்குப் பிறகு பாதால் புவனேஸ்வரர் என்ற முக்கிய ஸ்தலம் தரிசனத்திற்குப் புறப்பட்டோம்.

🛕புராதானமான, பாதால் புவனேஸ்வரர் என்ற ஆலயம் .... அடுத்து ..வரும் ...பதிவுகளில்....

9-10.04.2022
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...