Sunday, May 1, 2022

உத்தரகாண்ட் - நயினிட்டால் - நயினா தேவி ஆலயம் - 8.4.2022

#utrakant_tour_2022
நயினிட்டால் - 8.4.2022
நைனா தேவி கோயில் : 

🛕நைனி ஏரி 64 சக்தி பீடங்களுள் ஒன்று என்று நம்பப்படுகிறது அல்லது சிவபெருமானால் தூக்கிச் செல்லப்படும்போது பூமியில் விழுந்த சதியின் (பார்வதி) தீய்ந்துபோன உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதிகள் என்று நம்பப்படுகிறது. சதியின் கண்கள் (அல்லது நைன் ) விழுந்த இடம் 
நைன்-டால் அல்லது கண் ஏரி என்று அழைக்கப்படலாயிற்று.

🛕 கடவுளரான சக்தி தற்போது ஏரி அமைந்திருக்கும் வடக்குக் கரையில் உள்ள நைனா தேவி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

🛕15ம் நூற்றாண்டில் குஷான் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஆலயம்.

🛕நிலச்சரிவினால் அழிந்தும், 1842ல் புதிய நயினா தேவி சிலை வடிக்கப்பட்டு மோதிலால் ஷா என்பவரால் புனரமைக்கப்பட்டது. மீண்டும் 1880ல்
நிலச்சரிவில், முழுதும் சிதைந்துவிட்டாலும், 1883 ல் உள்ளூர் வாசிகளின் பேருதவியால் மீண்டும் புதியதாக நிர்ணயம் செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

🌺ஆலயம் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் உள்ளது.

⚜️சுவாமி விவேகானந்தர் 1890 ல் தன் சகோரருடன் நடந்துவந்து இவ்வாலயத்தை தரிசித்து 6 நாட்கள் தொடர்ந்து இருக்கிறார். மேலும், 1898ல் 3 நாட்கள் தன் தோழர்களுடன் இங்கு வந்து தங்கியுள்ளார். இதற்கான குறிப்புகளும் போர்டுகளும் ஆலயத்தில் உள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள்

⚜️ஏரியின் கரையில் பெரும் பகுதி ஊர் அமைந்துள்ளதால், பெரிய வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செல்ல முடிகிறது. 

⚜️ஏரிக்கரையில், பல இடங்களுக்கு செல்ல ரிக்ஷாக்களே பயன்படுத்தப்படுகிறது. ஒரு ரிக் ஷாவில் இரண்டு பேர்கள் செல்ல அனுமதி. நிறைய இருந்தாலும் ஒழுங்கு வரிசையில் சென்று ஏறிக்கொள்ள வேண்டும். 

💐நாங்கள் ஆளுக்கு 20 ரூ கொடுத்து ஏரிக்கரையோரம், எங்கள் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து ஏரி கரையின் ஒரு புறம் உள்ள நயினிதேவி ஆலயம், மற்றும் ஏரியில் படகு சவாரி செய்துவிட்டு வந்தோம். 

🍁கரையோரம் நிறைய சாலைக்கடைகள், பழமையான கட்டிடங்கள். ஆலயங்கள், கடைகள் எல்லாம் உள்ளன. வெள்ளைக்காரர்கள் விட்டுவிட்டு சென்ற கட்டிட்ட அமைப்புகள் பல அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது. ஆலயம், படகுத்துறை அருகில் ஏரியின் View Point அமைப்பு அமைத்துள்ளனர். 

🏵️வழக்கம் போல, ஏராளமான சாலைக் கடைகள் நிறைய உள்ளன. 

🛕முதலில் ஆலயம் சென்றோம். 

🛕ஆலயத்தின் நுழைவில், ஒரு சிறிய Arch உள்ளது. இதை அடுத்து எதிரில் பெரிய அரசமரமும் அதையொட்டி, விநாயகர், மற்றும் அனுமன் சன்னதி உள்ளது. 

🛕நயினா தேவி ஆலயமுகப்பில் இரண்டு சிங்கங்கள் கம்பீரமாக அமைக்கப்பட்டு உள்ளது. கருவரையில் காளிதேவி ஒரு புறமும், அன்னை பராசக்தியின் கண்களைக் குறிக்கும் பகுதி, மற்றும் இன்னொருபுறம் விநாயகர் சிலையும் உள்ளது. 

🛕நையினா தேவிஅன்னையும், சகோதரியாக வழிபடப்படும் சுனந்தா தேவியும் உள்ளது. 

🛕அம்பாள் சன்னதியின் முன் முற்றத்தில் ஒரு சிறிய வளவு அமைக்கப்பட்டு, பெரிய ஆலயமணிகள் கட்டப்பட்டுள்ளது.
அதன் முன்பு, சிறிய மண்டபத்தில் ஏரியின் ஓரத்தில், சிறிய அழகிய சிவலிங்கமும், மண்டபத்தின் எதிரில் சிறிய, பளிங்கு நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. 

🛕நைனிதேவி அம்பாள் ஆலயம், அடுத்து
சிவலிங்கத்துடன் கூடிய தனி கருவறை மண்டபமும், அடுத்து சற்று உயரமான படிகளுடன் மரத்தால் முழுதும் வடிவமைக்கப்பட்டுள்ள பெரிய மண்டத்துடன் கூடிய கட்டிடத்தில் பெருமாளுடைய 10 அவதார சிறிய சிலைகள் உள்ளன. 

🛕விழாக்காலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் வருகிறார்கள்.  

🛕8 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது.
நந்தாஷ்டமி, நவராத்திரி சிறப்பான முறையில் நடைபெறுகிறது. 

🛕மெயின் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. அல்லது சைக்கிள் ரிக்ஷாவிலும் செல்லலாம். 
🙏🏻நன்றி🙏🏻 

8.4.2022
#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...