Tuesday, May 31, 2022

#UTTRAKANT_TOUR_2022#பாகேஸ்வர் 11.04.2022

#UTTARAKANNT_TOUR_2022

#பயண_அனுபவக்_குறிப்புகள்

#பாகேஸ்வர்:

#பாதாள்_புவனேஷ்வர் குகைக் கோவில் தரிசனம் செய்து, அங்கிருந்து #சௌக்கோரி என்ற ஊரில் உள்ள HIMSHIKAR என்ற Hotel லில் தங்கினோம். இந்த ஊர் திபெத் எல்லையில் இருக்கிறது. இங்கிருந்து இமாலய மலைத்தொடர்களின் அற்புத இயற்கை காட்சிகளை காணலாம்.
இங்கு 10.04.2022 இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் 11.04.2022 காலை உணவு முடித்துக்கொண்டு #பாகேஷ்வர் என்ற முக்கிய ஊருக்குச் சென்றோம்.

#பாகேஸ்வர்:

உத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு மாவட்டத்தின் தலைநகர், புதுடெல்லியிலிருந்து 470 கி.மீ.யும், மாநில தலைநகரான டேராடூன் இருந்து 332 கி.மீ.,  நயினிட்டாலிலிருந்து 153 கி.மீ.யும் தூரத்திலும்,  மத்திய இமயமலைப்பகுதியில்,  934 metres (3,064 feet) உயரத்தில் சராயு மற்றும் கோமதி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது.

மிகப் புராதானமான பாக்நாதர் என்ற பாகேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளதாலேயே  இந்நகருக்கு பெருமை.  மிக அழகிய இமாலய மலைத் தொடரின் தோற்றங்கள்,  இயற்கையான வனம் மற்றும் மலைபிரதேசமாகும்.

மேலும், இந்நகர் சுற்றி நிறைய மிகப் புராதானமான ஆலய ஊர்களும் மலை நகரங்களும் உள்ளன.

திபெத்திற்கும், பாரத தேசத்திற்கும் முக்கிய வானிபத்தலமாக  அமைந்திருந்தது.  1962 முதல் இந்தோ- சீனாவின் போருக்குப் பிறகு இந்த வழி மூடப்பட்டுள்ளது.

பாக்காத் ஆலய வருடாந்திர உத்திராயாயனி விழா கொண்டாட்டங்களின் போது, சுமார் 15000 பேர் பங்கு பெறுகிறார்கள்.  இது உத்தரகாண்டின் குமான் பிரதேசத்தின் மிகப்பெரிய விழாவாகும். ஹந்தியும், சமஸ்கிருதமும்  இங்கு பேசும் மொழிகள்.

புராண வரலாற்றின்படி, சண்டிஸ்வரரால் உருவாக்கப்பட்டது இந்நகரம்.

மார்க்கண்டேய முனிவர் சிவபெருமானை வழிபட்ட இடம்.  இறைவர் முனிவருக்கு புலி உருவத்தில் காட்சி தந்ததால், வியாக்ரேஸ்வரர் மற்றும்  பாகேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். (பாக் =புலி)

புராண வரலாறு:
பிரும்மரிஷி வசிஸ்ட்டமுனிவர், கைலாசத்தில் உள்ள மானசரோவரிலிருந்து சராயு என்ற நதியுடன்  அயோத்திக்கு செல்லுகிறார்.

இந்தப் பகுதிக்கு வரும் போது, மார்க்கண்ட முனிவர், கடும்தவம் செய்யும் காட்சியைக் காணுகிறார்.  
தானும், சராயும் செல்லும் சப்தத்தில், முனிவரின் கடும்தவம் கலைந்து விடும் ஆபத்தை உணருகிறார். 

உடனடியாக, சராயுவுடன் அங்கேயே சற்று நிதானித்து, பயணத்தை நிறுத்தினார்கள். இதனால், நீரின் அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. உடனே, பிர்மரிஷியும், சராயும், எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள, சிவபெருமானை வேண்டுகின்றனர்.

இவர்களின் வேண்டுதலை ஏற்று, சிவபெருமான், புலி வேடத்திலும், பார்வதி அம்மனை பசு வேடத்திலும் இவ்விடத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

புலி, பசுவை துரத்துகிறது, இந்த சப்தத்தினால், தவம் கலைந்த  மார்க்கண்ட முனிவருக்கு, சிவனே புலி உருவத்திலும், அன்னை பார்வதி தேவி பசு உருவத்திலும் காட்சி கொடுத்து அருள் தருகிறார்கள். 

இதன் பிறகு, பிரும்மரிஷியும் சராயும் தங்கள் பயணத்தைத் தொடருகிறார்கள்.

இந்த நிகழ்வு முதல் இவ்விடத்தில், சிவன் புலியாகவும், பார்வதி பசுவாகவும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தருகிறார்கள். 
 
ஆலயம் :
பாகேஸ்வரர் ஆலயம் கருவறை உயரமான கூம்பு வடிவமானது. கலசப் பகுதி தாமரை மலர் அமைப்பு.  உச்சிப் பகுதி மர வேலைப்பாடுகள் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது

ஆலயம் முழுவதும் கற்றளியால் ஆனது.  கோமதி - சராயு நதியின் சங்கமத்தில் அமைந்துள்ளது. சதுர்முகலிங்க வடிவத்தில் அமைந்த சிவபெருமான் கருவரையின் உட்பகுதியில் உள்ளது.

இந்தப் பெருநகர்,  மலை, ஆறுகள் சங்கமத்தில் அமைந்துள்ளதால், முக்கிய போக்குவரத்து சாலைகள் மிகவும் நெருக்கடியாகவே உள்ளது. பிரதான சாலையிலிருந்து, நதியின் கரையோரம் உள்ள இந்த ஆலயத்திற்கு செல்ல ஒரு அழகிய வளைவு சிவன் உருவத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையிலேயே சற்று தூரத்தில் பேருந்து நிறுத்தம், கடைத்தெரு  உள்ளது. 

நாம் பயணம் செய்யும் வாகனத்திலிருந்து இறங்கி, இந்த சாலையில் உள்ள ஆலய வளவு அமைத்துள்ளனர். சிறிய அளவில், சூலத்துடன் கூடிய சிவன், மற்றும், இருபுறமும் பசுகள்  அவரை நோக்கியவாறும் அழகிய முறையில் அமைந்துள்ளார்கள்.

இதன் வழியே நுழைந்து,  அங்கிருந்து சுமார் 200 மீட்டர் சிறு கடைகள் நிறைந்த பாதையில் சென்றால், ஆலயதல விருட்சம் !? மிகப்பெரிய புராதான மரத்தை அழகாக கட்டிட அமைப்பு செய்து பராமரிப்பில் வைத்துள்ளார்கள். இதைக் கடந்து ஆலயம் அடையலாம்.

முதலில், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அகன்று பாய்ந்துவரும் சராயு நதியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வரும் கோமதி ஆறும் இணையும் சங்கமத்தில் சென்று நீராடவும்,
கரையில், தர்ப்பணம் கிரியைகள் செய்து கொள்ளவும் பல இடங்கள் உள்ளன.

சங்கம இடத்தில் கங்கை கரைகளில் செய்வதுபோல இறந்தவர்கள் உடல்கள் பூசைக்கு பிறகு எரியூட்டுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் செய்து தர பாகேஸ்வரர் ஆலயம் பின் பகுதியில் நதிகள் கலக்கும் இடத்தில், கட்டிடங்களும், பல்வேறு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தினம் தினம் வரும் உடல்கள் எரியூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏதாவது நாட்களில் இறந்த உடல்கள் எரியூட்டக் கிடைக்கப் பெறவில்லை என்றால், கருப்பு துணியை எரியூட்டுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

ஆலயம் முன் பகுதியில் சிறிய கல்லால் ஆன வளைவுப் பகுதியும், இரும்பு வளைவும், நுழைவுப் பகுதியில் உள்ளது. கருவரை சுற்றி ஏக பிரகாரமாக உள்ளது.

நுழைவு பகுதியில், பிரகாரத்தில் ஒரு பகுதியில், பெரிய புலி உருவம் அமைத்துள்ளது, ஆலய வரலாற்றை நினைவுபடுத்தும்.

தெற்கு நோக்கிய கருவறை முன் பகுதியில் இரண்டு சிறிய நந்திகள் இருக்கின்றன. கருவரை நுழைவுப் பகுதியில், இரண்டு பகுதிகளிலும் சிறிய, சிறிய விநாயகர் சிலைகள் உள்ளன. 

ஆலய கருவறை முன் மண்டபம் உயரமாக, சற்று அகலமாக உள்ளது. உள் நுழைந்தால்,நீள் சதுர முன்மண்டபம் நல்ல உயரம் அடிப்பகுதியில் கருவரை நுழைவுவாயில் சிறிய அளவில், விநாயகர், தட்சினாமூர்த்தி, பெருமாள், சிவன் - பார்வதி கருங்கல் சிலைகள் அழகுற அமைந்திருக்கின்றன.

கருவறை நுழைவு முன் மண்டத்தின் மேல் பகுதியில், ஆலய புரான வரலாற்றை விளக்கும் வகையில் அழகிய பெரிய படம் வரைந்து கண்ணாடி  FRAME உடன் மாட்டப்பட்டுள்ளது.

கருவறை நீள் சதுர வடிவம். நான்குபுறமும், சிறிய மாடத்தில் ஜோதிர்லிங்கங்களில் உள்ள அமைப்பில், தத்தாத்தேரயர், விநாயகர், சிவன் நான்கு முகத்துடன், மேலும் பல்வேறு சுவாமிகளும் உள்ளன.

ஆவுடை சுமார் ஒரு அடி உயரத்தில் மிக பெரிதாக வட்டவடிவ அமைப்பில் உள்ளது. நடுவில், இயற்கையான ஸ்படிக உருவம் லிங்கம் மிகமிக சிறிய அளவில் உள்ளது. சுற்றிலும் பாதுகாப்பிற்காக துருபிடிக்காத இரும்பு குழாய் அமைப்பில் அமைத்துள்ளார்கள். 
இவற்றையெல்லாம் உள்ளே சென்று  மிக அருகில் நின்று சுற்றி பார்த்து வணங்கி வரலாம். பூசைகள் செய்யலாம்.

முமுகருவரை அமைப்பே இந்த ஆலயம். இதைச் சுற்றி சிறிய சிறிய கற்றளியாக சில சன்னதிகளும் உண்டு.

ஆலயத்தை ஒட்டி, நதியின் பக்கம் 
சனிஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து, தனி சன்னதியிலும், மேலும், சில தனி தனி சன்னதிகளில் சிவலிங்கங்களும் பல்வேறு தெய்வங்களும் வைக்கப்பட்டுள்ளது. 

புனரமைப்பு பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்திலிருந்து கோமதி ஆற்றிற்கு நேரடியாக செல்லவும் படிகள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

கருவரை/ ஆலயத்தின் கீழ்புறம் நீண்ட கட்டிடம் உள்ளது. அதில்  தனிதனியாக பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் சிலைகள் வைத்து பூசைகள் செய்யப்படுகின்றன. சாதுக்களும், பூசாரிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
Toilet வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

முக்கிய பாகேஸ்வர் ஆலயம் செல்லுமுன் கிழக்கு நோக்கிய குறுகிய வழியில் சென்றால், சராயு நதிக்கு செல்லலாம். ஒரு புறம் புராதான அமைப்புடன் சிறிய மற்றொரு சிவன் ஆலயமும் உள்ளது. இது மேற்கு பார்த்து கருவரை அமைந்துள்ளது. 

கரையில் பெரிய சூலத்துடன் புலியின் மீது நின்ற கோலத்துடன் அமைந்த சிவன் சிலை அனைவரின் கவனத்தையும் கவருவது போல அமைத்துள்ளமை மிகவும் சிறப்பு.

கிடைத்த நேரத்தில், சராயு நதியில் நீராடி வழிபட்டோம்.
நதிக்கரையில் தொங்கு பாலங்கள் இருபுறமும் கரை கடக்க அமைத்துள்ளார்கள்.
நீராட்டுத் துறையில், விஷேச நாட்களில் மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நீராடி, வழிபடவும், நீத்தார் கடன், முதலிய பூசைகள் செய்யவும், நீண்ட படித்துறைகளும், மண்டபங்களும் அமைத்துள்ளார்கள். சிறப்பாக நடந்தும் வருகிறது.

இந்த ஆலயம் வணங்கி, பின் கெளசானி என்ற ஊருக்கு செல்லும் வழியில், கோமதிக்கரையியில் உள்ள
வைத்திநாத் என்ற பாயித்திநாத்  என்ற ஊருக்கு சென்று மதிய உணவு முடித்துக் கொண்டு இங்குள்ள புராதான ஆலயத்தை தரிசித்தோம். 

பயணங்கள் தொடரும்......

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#பாகேஸ்வர் 

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக் குறிப்புகள்#பாகேஸ்வர் #செளக்கோரி 11.4.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்
#பாகேஸ்வர்: 

#பாதாள் புவனேஷ்வர் குகைக் கோவில் தரிசனம் செய்து, அங்கிருந்து சௌக்கோரி என்ற ஊரில் உள்ள HIMSHIKAR என்ற Hotel லில் தங்கினோம். இந்த ஊர் திபெத் எல்லையில் இருக்கிறது. இங்கிருந்து இமாலய மலைத்தொடர்களின் அற்புத இயற்கை காட்சிகளை காணலாம்.
இங்கு 10.04.2022 இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் 11.04.2022 காலை உணவு முடித்துக்கொண்டு பாகேஷ்வர் என்ற முக்கிய ஊருக்குச் சென்றோம்.

11.04.2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

https://m.facebook.com/story.php?story_fbid=7614812295260628&id=100001957991710

Wednesday, May 25, 2022

UTTRAKHAND TOUR PATAL BHUVANESHWAR 10.4.22

#பாதாள்புவனேஷ்வர் :
#uttrakant_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள் 

🛕#பாதாள்புவனேஷ்வரர்
(10.04.2022)

🌍நாங்கள் ஜாகேஸ்வரர் தரிசித்து விட்டு, மலைப்பாதையில் அடுத்து சென்ற இடம் 
பாதாள் புவனேஷ்வர். இயற்கையாகவே அமைந்த உலக அதிசய ஆன்மீககுகை.

🪱உத்திரகாண்ட் மாநிலத்தில், கங்கோலிகட் (Gangolihat) என்ற இடத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🌟முப்பத்து முக்கோடி தேவர்கள் கொண்ட ஆன்மீக குகை. 160 மீட்டர் நீளம் 90 அடி ஆழம் கொண்டது. கருங்கற்கள் பாறைகளால் இயற்கையாக உருவாகிய உருவங்கள்.

🌌மிகக் குறுகிய, செங்குத்து பாதையில் உள்ளே இறங்கினால், மிகப் பெரிய குகை. பெரும்பாலான இடங்கள் முழுவதும் மின்வசதி செய்யப்பட்டுள்ளதால், ஒரளவு வெளிச்சத்தில் உள்ளது.

✨குகைக்குள் குகையாக உட்பகுதியில் பல குகைகள் இயற்கையாகவே அமைந்துள்ளது.

💫ராம் கங்கா, சராயு, குப்த கங்கா என்ற புன்னிய நதிகள் இணைந்த இடம் இந்தப் பகுதி.

⭐திருதாயுகத்தில், சூரியவம்சத்தில் பிறந்த, ருதுபூரணா என்னும், அயோத்தியின் அரசர், ஒரு முறை காட்டில் ஒரு மானை துரத்தி சென்று களைப்படைந்து, ஒரு மரத்தடியில் ஓய்வில் இருக்கும் போது, கனவில் வந்த அந்தமான் தன்னைத் தொடர வேண்டாம் என்று கூற, அவர் கண்விழித்து அருகில் இருந்த குகைவாசலை அடைந்தார். அங்கு காவல் இருந்த, நாகராஜாவை அனுமதி கேட்க, குகையின் எல்லாப் பகுதிகளையும் அவரால் தரிசனம் பெற்றார். அந்த குகையில் இருந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் தரிசனம் செய்து, சிவதரிசனமும் பெற்றார். அதன் பிறகு, குகை முடப்பட்டுவிட்டது.

🌟துவாபரயுகத்தில், மகாபாரத காலத்தில், 
பாண்டவர்கள் இந்த குகையில் உள்ள தெய்வங்களை வணங்கி, இதன் வழியாகவே இமயமலை சென்றார்கள் என்று நம்பப்படுகிறது. 

⭐ஸ்கந்தபுராணத்தில், இவ்விடத்தின் சிறப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐கலியுகத்தில், (1191) 718 ம் ஆண்டில், ஆதிசங்கரர் முதன்முதலில் இந்த இடத்தைக் கண்டு வழிபட்டு, இதன் பின் இமயம் சென்றதாக நம்பப்படுகிறது.
ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார். அங்கே உள்ள சுயம்பு லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்) பூஜித்து அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது. இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக பூஜிக்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

🌈'1941 ல் சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.

🏯அதன் பிறகு எழுபதுகளில் ராணுவ அதிகாரி ஜெனரல் டெயிலர் என்பவரின் கனவில் தோன்றி அவருக்கு ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அவர் தன் பணி நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன் கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார். பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான இடமாயிற்று. 

🌍இதற்குப் பிறகே, நவீன உலகிற்கு, இந்த இடத்தின் புனிதத்தன்மையும், புராணமும் வெளிப்பட்டது.

🛕 ' குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

🪱குறுகலான, குகைப் பாதையில், அமைக்கப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளின் உதவியால் உள்ளே 100 ஆழம் இறங்க வேண்டும். 

⚡இருள் நீக்கி ஒளிரும் மின் விளக்குகளால், இந்த இடம் இப்போது அனைவரும் சென்று தரிசனம் செய்ய முடிகிறது.

🌻கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில், மறைந்து கிடக்கும் இந்த குகையில் முக்கிய தெய்வமாக சிவபெருமான் உள்ளார். மேலும், உலகத்தில் உள்ள அனைத்து இந்துமதக் கடவுள்கள், புராண நம்பிக்கைகள், நடைமுறை வழிபாடுகளின் உள்ள உருவங்களைக் கண்களால், நேரடியாகவே காண முடியும் என்று நம்புகிறார்கள்.  

🌳உலக இயற்கையின் ஆன்மீக அதிசயங்களில் ஒரு முக்கிய இடம்.

💫காலபைரவரின் நாக்கு, ஐராவதம், சிவபெருமான் தலை முடியிலிருந்து கங்கை ஊறிவருவது, முதலியவைகள், பேரதிசியக் காட்சியாக உள்ளது.

🔴சிவபெருமானால், விக்னேஸ்வரனின் தலை வெட்டப்பட்டு உள்ள காட்சி, 
🟠பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன், 
🟡கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு  
🟢தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு, 
🔵அதற்கு முன்னால் கபால மாலைகளோடு சிவனின் இருப்பு, 
🟣கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை, 
🟤ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம் 
⚫அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும், 
⚪பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன் பார்வதி, 
🔴சிவனின் கமண்டலம், 
🟠சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர்,
 🟡கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை லிங்கங்கள்
🟢தலை வெட்டப்பட்ட கணபதி, 
🔵உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை சொட்டும் அஷ்ட இதழ் கொண்ட தாமரை. 
🛕கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும் பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம். அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை.

🌎இந்திரலோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.
🏔️ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும் லிங்கம் மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கமாக இருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது குகையின் உச்சியைத்தொடுகிறதோ அப்போது கலியுகம் முடிந்து விடுமாம். இதன் பின்னால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. 

🌟அத்தனையும் இங்கே சுயம்புவாய் உருவாகியிருக்கிறது. 
💫மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.
🌟இவற்றை கற்பாறைகளில் ஏற்பட்ட தோற்றம் என நம்பவே முடியாது. மென்மையான சதை ரூபம் காண்பது போல் தத்ரூபமாய்த் தெரியும். 
✨இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம். 
⭐இந்த குகையிலிருந்து, உத்ரகாண்ட், மாநிலத்தில் உள்ள சார்தாம் என்று அழைக்கப்படுகின்ற, முக்கிய இடங்களான, யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரம், பத்திரி முதலிய இடங்களுக்கும், குகைப்பாதைகள் உண்டு என்றும் கூறுகிறார்கள். 
🛕ஆதிகைலாஷ் செல்லும் பாதையில் இந்த ஊர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🌈இந்த குகைக்குள் நான்கு வழிகள் உண்டு என்றும், இந்த வழிகள் அந்தந்த காலகட்டங்களில் மூடப்பட்டுவிடும் என்றும் நம்புகிறார்கள்.

 ⭐இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதாவது:

💫முதல் கதவு பாவப்பாதை. ராவண வதத்திற்குப்பின் இது மூடப்பட்டு விட்டது.
💫அடுத்தது ரணப்பாதை (way to war) இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது. 
💫இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது. ஒன்று தர்மப்பாதை. 
இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும்.
💫மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும் மோட்சப்பாதை. 
💫இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம்.'

🌟, பல நூறு வருடத்திற்கு முன்பாக இந்த பிரதேசத்தைச் சேர்ந்த அரசவம்சத்தினர், காசியிலிருந்து வரவழைத்த பண்டாக்கள் மூலம் இவ்வால பூசைகள், ஹோமங்கள் செய்ய நியமித்துள்ளார். இவர்கள்,
சுமார் 10 தலைமுறைகளாக, இவ்விடத்தை, பாதுகாப்பாகவும், வழிபாடுகள் நடத்தியும், அன்றாட பூசைகள் செய்தும், பாதுகாத்து வருகிறார்கள்.

🪱உள்ள சென்று எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டி விளக்கம் கூற நமக்கு உதவி செய்வதற்கு வழிகாட்டிகள் உள்ளனர். அவர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்ப்பதே மிகவும் நல்லது. 

🪱குறைக்குள் தனியாக செல்லமுடியாது.

⚡இந்த ஊர் மிகச்சிறிய ஊர். தங்குவதற்கும், உணவு, தங்குமிடங்கள் முதலியவைகளுக்கும் அருகாமையில் உள்ள Gangolihat, அல்லது, Chaukori (37 கி.மீ) சென்றுவிடலாம். அங்கு வசதியான Hotelகள் உள்ளன. 

🌟இமாலய View பகுதியாக இருப்பதால், இங்கிருந்து நந்ததேவி முதலிய இமாலய சிகரங்கள், மலைக்காட்சிகள் அற்புதமாக தெரிவதால், நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

✨குறுகலான மலைப்பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது. இப்பகுதி நல்ல
வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 

🌼ஊரின் ஒரு பகுதியில் இந்தக்குகை அமைந்துள்ளது. Car, Bus, வாகனங்கள் தனியாக நிறுத்திவிட்டு, சுமார் 500 மீ. நடந்து செல்ல வேண்டும்.

🍁குகை செல்லும் பாதைக்கு முன்பு ஒரு சிறிய ARCH உள்ளது, பாரததேச மன்னுயிர் காப்பதற்கு, தன்னுயிரைத் தந்த ரானுவ அதிகாரியின் நினைவில் சிலையும், வளைவும் வைத்துள்ளமை போற்றுதலுக்குரியது. இந்த ARCH லிருந்து சுமார் 100 mts. ல் குகை நுழைவுப்பாதை அமைந்துள்ளது. 

🔴மேலும் கவனம் செலுத்த வேண்டிய குறிப்புகள்:🛑

🛑குகையின் நுழைவுப் பகுதி மிகவும் குறுகலானது. சுமார் 100 அடி ஆழத்தில் இக்குகைகள் இருப்பதால், ஒவ்வொறு நபராகத்தான் உள்ளே நுழைய முடியும்.

🛑குனிந்து, உட்கார்ந்து மெதுவாக, நிதானமாக, ஒரு புறம் பினைக்கப்பட்டு இருக்கும் இரும்பு சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இறங்கவேண்டும். 

🛑கற்பாறை பாதைப்படியாக இருப்பதாலும், நீர்பிடிப்பு பகுதியாகவும், அடர்ந்த இருள் பகுதியாகவும் இருப்பதால், வழிகாட்டிகள் கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

 🛑சில இடங்கள் நீர் பகுதி இருப்பதாலும், பாறையாக இருப்பதாலும், பல இடங்கள் வழுக்குகின்றது.

🛑மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்வது அவசியம் நல்லது.  

🛑சில இடங்களில் தலைமட்டத்திற்கு கீழ் பாறைகள் தொங்குகின்றன. நிதானமாக எல்லாபுறங்களும் பார்த்து நடக்க வேண்டும்.  

🛑குகையில் மின்வசதி இருப்பதால் வெளிச்சம் உள்ளது. வழிகாட்டி Torch கொண்டும் விளக்குகிறார் (HINDI யில்).

🛑குகையில் குறைந்தபட்சம் சுமார் 30 நிமிடங்கள் இருப்பதால் சற்று குளிர் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள் முன் எச்சரிக்கை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. நல்ல குளிர் காலத்தில், ஆஸ்த்மா, இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேன்டி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

🛑குகைக்கு உள்ளே சுமார் 30 - 40 பேர்கள் வரை மட்டுமே இருக்க முடியும். அதற்காக, குழு குழுவாக அனுப்புகிறார்கள். இறங்கவும், வெளியேறவும் ஒரே வழிப்பாதை என்பதால், உள்ளே இருப்பவர்கள் வெளியில் வந்த பிறகு புதியவர்களை அனுப்புகிறார்கள்.

🛑பெரிய பை, சுமைகள் அறவே தவிர்க்க வேண்டும். Cell எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
⚡காலனிகள் தடை உண்டு.
⚡நுழைவுக் கட்டணம் உண்டு.

⚡குகை நுழைவுவாயிலில் பொருட்கள் பாதுகாப்பு இடமும் உள்ளது.

🌍பாதாள் புவனேஷ்வர் ஒரு அதிசய ஆன்மீகத்தலம். இந்த பதிவில் பல தகவல்கள் அளித்து இருந்தாலும், இந்த குகையை நேரில் கண்டு வந்தால்தான் இயற்கையின் அற்புதம் உணர முடியும்.

🌎வசதியும், வாய்ப்பும் கிடைத்தால், நிச்சயம் இப்படிப்பட்ட இடங்களை தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும்.

🌼நான் ஒரு video இணைத்துள்ளேன். 
என் நண்பர் அனுப்பியது. அதிக நீர் பிடிப்பு சமயத்தில் எடுத்த video. 
நாங்கள் சென்றபோது, இவ்வளவு நீர் கசிவு இல்லை. குகையின் பல பகுதிகள் சற்றே ஈரமாக இருந்தன. மின் விளக்கு வெளிச்சமும் நன்றாக இருந்தது.

🌻எங்கள் சுற்றுலா இயக்குனர், திரு பாலு அவர்கள் நியமித்து இருந்த வழிகாட்டி நல்ல நிதானமாக விளக்கினார்.

🌻இதை தரிசித்துவிட்டு,Chaukori என்ற ஊர் சென்று Hotel HIMSHAHAR லில் இரவு தங்கினோம்

🙏'அவன் அருளாளே... 
அவன் தாள் வணங்கி...'🙇🏼‍♂️

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(10.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Friday, May 20, 2022

UTTARAKANNT TOUR - ஜாகேஸ்வரர். (9-10.04.2022)

UTTARAKANNT TOUR 2022
பயண அனுபவக் குறிப்புகள்

🛕#ஜாகேஸ்வரர். 1
(9-10.04.2022)

🛕ஜாகேஸ்வரர் என்ற புனித தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில், Kumaon பகுதியில் Almora மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🏔️இந்த இடம் சுமார் 6140 அடி 1870mts உயரத்தில் இமாலயத்தில் உள்ளது.
நயினிட்டால், நகரிலிருந்து, சுமார் 100 கி.மீ. மற்றும், Almora நகரிலிருந்து 36 கி.மீ. தூரம், வட கிழக்கில் உள்ளது.

🔱மத்திய இமயமலைப்பகுதியில், பன்னெடுங்காலமாக கைலாசமலை தரிசனம் செய்ய செல்லும் பாதையில் இப்பகுதி உள்ளது.

⚜️இவ்வாலயங்கள் இப்பகுதியின் ஜோதிர்லிங்கங்கள் என்றே வழங்கப்படுகிறது.

🛕வைத்திநாதர் என்ற மற்றொரு புகழ் பெற்ற ஆலயம் இங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🛕மிக மிக புராதானமாக ஆலயங்கள் நிறைந்த பகுதி. 
எப்போது இந்த ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வரலாற்று, அல்லது கல்வெட்டு மற்ற உறுதியான சான்றுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

🏯எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், இவ்வாலயங்கள் சுமார் 1400 வருடங்களுக்கு முற்பட்டதே என்று நம்பப்படுகிறது.

🌟சிலர் கருத்துப்படி ஆதி சங்கரர் ஸ்தாபித்தார் என்றாலும், 
கட்டிட அமைப்புகள், அவருடைய காலத்திற்கு 100 வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஊர்ஜிதம் செய்கிறார்கள்..

🛕இமயமலையின் இந்தப் பகுதியில் சுமார் 151 ஆலயங்கள் உள்ளன அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டு, இவைகள் 7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தவைகள் தான் என்று உறுதிப்படுத்தப்படுள்ளது. 

🛕இவைகள் Group of Temples எனப்படும் ஒரே இடத்தில் பல ஆலயங்களைக் கொண்ட அமைப்பாகும்.

🌼இந்த ஆலயங்கள், பல நூறு வருடத்திற்கு முன்பு இந்தியாவின் பகுதிகளிலிருந்து இந்த இடங்களுக்கு வந்து இவ்வாலயங்களை அமைத்து வழிபட்டதால், இதை உத்திரகாசி என்றும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

🍁சில ஆலய அமைப்புக்கள், கட்டிடக் கலை நுட்பங்களைக்கொண்டு 7ம் நூற்றாண்டு முதல் 12 நூற்றாண்டுகளிலும், சில ஆலயங்கள், பிற்காலத்திலும் கட்டப்பட்டது.
என்று நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். 

🥀இது போன்று Group of temples இந்தியாவில் மத்திய பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள புவனேஸ்வரர் அருகில் உள்ள ஆலயங்கள் அமைப்பை ஒப்புநோக்கத்தக்கது.

⚜️வடஇந்திய நாகரா கட்டிடக்கலை அமைப்பையும், சில ஆலயங்கள் மத்திய மற்றும் தென் இந்திய கட்டிடக்கலை அமைப்பையும், பிரமிடு போன்ற கட்டிட அமைப்பையும் சார்ந்த கற்கோவில்கள்,
இங்கே சுமார் 200 ஆலயங்கள் உள்ளன. 
சிவன், சக்தி, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

🌟அனைத்து ஆலயங்களும் ASI இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🛕#ஜாகேஸ்வரர்ஆலயங்கள் :

🛕இரண்டு முக்கிய ஆலயப் பகுதிகள் ஜாகேஸ்வரில் உள்ளன.

1. ஜாகேஸ்வரர் ஆலயங்கள்.
2. தான்டேஸ்வரர் ஆலயங்கள். 
இரண்டுக்கும் சுமார் 2 - 3 கி.மீ.தூரம் உள்ளது.

🛕ஜடாகங்கா என்ற நதிக்கரையில் இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. 

🥀தேவதாரு, பைன் மரக்காடுகள், மலைகள் சூழ்ந்த இப்பிரதேசம் காண மிக ரம்மியமாக உள்ளது.
 
🛕மேலும் சில பிரசித்திப் பெற்ற ஆலயங்களும் அருகில் உள்ளன.

இங்கு மேலும், சில ஆலயங்கள் இருப்பினும் மிகவும் அதிகமாக சுமார் 124 ஆலயங்களைக் கொண்டு பிரசித்துப் பெற்றது ஜாகேஸ்வரர் ஆலயமே.

 🛕தண்டிஸ்வரர் ஆலயத்தில் பல ஆலயங்கள் பழமையால் சிதலமடைந்து மூடப்பட்டுவிட்டன எனக் கூறப்படுகிறது.

#ஜாகேஸ்வரர்_மகாதேவர்_ஆலயம்:

🛕இவ்வாலயத்திற்கு உள்ளே நுழைய, பிரதான சாலையை ஒட்டியே இரண்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உள்நுழைந்ததும், இவ்வாலயங்களை தரிசிக்கும் வழிகளும், முறைகளும், படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

🛕சுமார் 124 சிவலிங்கங்கள் ஒரே ஆலயத்துள் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ளன. இவைகள் பல்வேறு சன்னதிகள், கோபுர அமைப்புகளுடன் உள்ளன. முழுவதும் கற்றளிகள். அடுக்குக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

தண்டி ஆலயம்,
குபேரர் ஆலயம்,
மிருத்யுஞ்சயர் ஆலயம்
நந்தாதேவி ஆலயம்
நாகதுர்க்கா ஆலயம்
நவகிரக ஆலயம்

🛕ஜாகேஸ்வரர் ஆலயத்தில், சிறியதும், பெரியதும், பலவகைகளில் சதுர அமைப்பில் அடிப்பகுதி காணப்படுகின்றது. 

🛕அடிப்பகுதி நான்குபுரமும் உயர்ந்த சுவர்கள். மேல் பகுதி பிரமீடு அமைப்புகள். உச்சிப் பகுதியில் தாமரை பீடமும், கலசமும் கற்றளிகளாக உள்ளன. 

 சில முக்கிய கோபுரங்கள் தனி சிங்கம் அல்லது தனி ரிஷபம் காவல் தெய்வம் போல அமைத்துள்ளமை சிறப்பு. எல்லாமே கற்றளிகள். 
🛕ஆலய முன் கோபுர பகுதிகளிலும், நிலைப் படிகளிலும், பல்வேறு கலைநுட்பமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ள. சிறிய சிறிய அளவுகளில் நுட்பமான சிலை அமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.

🛕இவைகளில் வீனாதார சிவன், கனேசர், மகாலெட்சுமி, சப்தமாதார்கள், யோக தட்சினாமூர்த்தி, உருவங்கள், முன்று முகம் கொண்ட சிவவடிவம், எல்லாம் கற்களால் வடிக்கப்பட்டுள்ளது.

🛕இவைகள் 7,8ம் நூற்றாண்டுகளை ஒட்டிய காலம் என்று கூறுகிறார்கள்.

#ஜாகேஸ்வரர் ஆலயம்:

🛕இங்குள்ள அணைத்து ஆலயங்களுக்கும் நடுநாயகமாக, மிக முக்கிய இடத்தில் பெரிய ஆலயமாக உள்ளது. கருவறை மேற்கு பார்த்து அமைந்துள்ளது. இவ்வாலயம் ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகின்றது.

🛕ஆலயம் முன்புறம் சிறிய நந்தி. 
நுழைவு பகுதியில், இருபுறமும் உயரமான, பெரிய அளவிலான துவார பாலகர்கள்.

🛕இடது துவார பாலகர் கரத்தில் கபாலம் ஏந்தியுள்ளார். மற்ற கரங்களில் சில ஆயுதங்கள் தாங்கியுள்ளார்.
வலது துவாரபாலகர், பெரிய நாகத்தைப் பிடித்துள்ளர். மற்ற காரங்களில் ஆயுதங்கள். உள்ளன.

🛕மனித வாழ்வுநிலையற்றது, மரணத்தை வெல்லவும், வினை நீங்கவும், இவ்வாலயத்தில் உள்ள சிவனை நாம் வணங்க வேண்டும் என்பது இவை உணர்த்தபடுகிறது.

🛕அடுத்து உள் மண்டபம் சற்று பெரிது. பக்தர்கள் இருந்து வழிபாடு செய்வதற்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

🛕உள் மன்டபம் தாண்டினால், மேற்கு பார்த்த சிவன் கருவறை,
சற்று விஸ்த்தாரமாக உள்ளது.
சிறிய ஜோதிர்லிங்கம். ஆவுடைப்பகுதி, தரையுடன் ஒட்டி உள்ளது. நாம் அருகில் உள்ள பாத்திரத்தில் உள்ள நீரை மொண்டு, சிவனை அபிஷேகம் செய்யலாம்.

🛕நமது ஊர்களில் உருத்திராட்சங்களைப் பயன்படுத்தி, சிறிய அளவில் பந்தல் போல; உருத்திராட்சத்தைக் கொண்டு, லிங்கம் அமைப்பார்கள் அது போல. அழகாக நாகாபரணம் மற்றும். அலங்கரங்கள், மேலிருந்து ஒரு தாமரை மலர் மூடி போல வெள்ளியால், அமைத்துள்ளார்கள். லிங்க சிவனை பாதுகாத்து வருகிறன, இவைகள்.

🛕இந்த ஆலய கருவரையின் அமைப்பு மட்டும் நான்குபுறமும் பலகனி உடையது. 

மத்திய இமாலயப் பகுதியில் உள்ள முக்கிய ஜோதிர்லிங்கமாகக் வணங்கப்படுகிறது. ஆதியிலிருந்து, கைலாசமானசரோவர், பத்திரி, கேதார், ஆதி கைலாச யாத்திரையில் இவ்வாலயம் முக்கியத்துவம் உடையது என்கிறார்கள்.

🏯ஆலய நாற்புர சுற்று சுவர்கள் சற்று உயரமானது. மேல்பகுதி பிரமீடு அமைப்பில் உள்ளது. உச்சிக் கோபுரம் மரத்தினால் மூடி போன்று அமைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த அமைப்புகள் பிற்காலத்திய அரசர்கள் செய்துள்ளார்கள் என்ற குறிப்புள்ளது. 

🛕இவ்வாலயம் சுற்றிலும் சிறிய, நடுத்தர லிங்கங்களை வைத்து சிறுசிறு கற்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

🛕இவ்வாலயத்தில் உள்ள ஜாகேஸ்வரர் என்னும் யோகேஸ்வரரை உளமார வணங்கினால், என்றும் யோகத்தையும் தந்து, நமது வாழ்வின் வினை நீக்கம் தந்து, மகிழ்வான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

🛕இவ்வாலயத்தின் முன் பண்டாக்கள் அமர்ந்து கிரியைகள் / யாகங்கள் ... முதலியவைகள் செய்து தருகிறார்கள். 

🛕ஜாகேஸ்வரா ஆலய தென் பகுதியில் இவ்வாலயம் பின்புறம் (கிழக்கு புறம்) இரண்டு தனி தனி ஆலயங்கள் ஒவ்வொன்றிலும், தனித்தனியாக லிங்கங்கள். தென்புறம் ஒரு ஆலயமும் இருக்கிறது. அனைத்து ஆலயத்தின் முன் பகுதிகளிலும், சிறிய அளவில் மகாலெட்சுமி, விநாயகர், தெட்சினாமூர்த்தி முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

🛕தென்கிழக்கு மூலையில் மிகப்பெரிய தேவதாரு மரம் உள்ளது. அதைச் சுற்றி பீடம் அமைத்துள்ளார்கள்.

🛕அனைத்து ஆலயங்களின் கோபுர உச்சிப் பகுதிகள் தாமரைமலர் பீடம் மற்றும் கற்கலசங்களுடனும் இருக்கிறது. முக்கிய கோபுரங்களில் ரிஷபம் அல்லது சிங்கம் போன்ற ஒரு அமைப்பும் உள்ளது.

🛕ஜகேஸ்வரர் ஆலயம் தென் பகுதியில்,
ஜடாகங்கா என்ற ஆறு உள்ளது. ஆலயத்திலிருந்து, ஆற்றுக்குச் செல்ல சிறிய படிகளுடன் ஒரு வழியும் இருக்கிறது.

🛕ஆலயத்தின் தென் பகுதியில், ஒரு சிறிய குளம் கருங்கற்கள் படிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் புன்னியகுளமாகக் கருதுகிறார்கள். குளம் நீர் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது.

🛕ஜாகேஸ்வரர் ஆலயம் எதிரில் ஒரு அனுமன் ஆலயம், இன்னும், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பெயரில் பல ஆலயங்கள் இருக்கின்றன.

🔱மிருத்யுஞ்சயர் மகாதேவர் ஆலயம்,
இந்த ஆலயம், ஜாகேஸ்வரர் ஆலய அடுக்கில் ஜாகேஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து. மிகப்பெரிய ஆலயமாக உள்ளது.

🛕மிகப் பெரியது. கிழக்குப் பார்த்த ஆலயம். முன்புறம் சிறிய மண்டபத்துடன் கூடிய நந்தியுடன் 4 கற்றூன்களுடன் கூடிய முன்மண்டபம், அடுத்து சற்று பெரிய உள் மண்டபம் அதில் வலது புறம், ஒரு விநாயகர் சிலை அடுத்து உள் கருவரை மண்டபத்தில் நல்ல கம்பீரமான உருவத்தில் சிவலிங்கம். ஆவுடைப்பகுதி தரைமட்டத்திலிருந்து சிறிதே உயரமானது.
சிவபெருமானுக்கு நாக அலங்காரத்துடன் அம்சமாக காட்சி தருகிறார். நாம் மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம்.
தினம்தோறும் மிக அருமையாக பூசைகள் முறையாக நடைபெற்று வருகிறது. 

🙏மிருத்யுஞ்சய மகாதேவர் எமபயம் போக்குபவர், மரண அவஸ்த்தை தவிர்க்கவும், ஆயூள் யோகத்திற்கும், மிருத்யுஞ்சய மகாதேவரே காரணகர்த்தாவாக இருப்பதால், இவரை வழிபட வேண்டியது மிகச் சிறப்பு.

🛕முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம் ஜாகேஸ்வரர் ஆலங்களில் பெரியது ஆகும், இதன் அமைப்பைக் கொண்டே இவரின் முக்கியத்துவம் தெரியும்.

🛕இவ்வளவு சிறப்பு மிக்க புராதான ஆலயத்தில் மிருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபட்டால் மிகமிக நல்லது என்பதால், சுற்றுலா இயக்குநர் திரு பாலு சார் அவர்களின் முயற்சியால், எல்லோரும் சேர்ந்து 10.04.2022 அன்று விடியற்காலையில் இவ்வாலத்திலேயே அனைவரும் இணைந்து மிருதயுஞ்சய ஹோம பூசை செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. 

 🛕#ஸ்ரீபுஷ்டிதேவி ஆலயம்:

🌟இவ்வாலயம் கிழக்கு நோக்கி மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு பின்னாலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் கருவரை கிழக்கு நோக்கியது. ஸ்ரீபுஷ்டிதேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதுவும் கற்கோவில் ஆலய கோபுரம் வித்தியாசமாக இருந்தது. பொதுவாக, தேவி ஆலயங்கள் முன்புறம் பட்டையாகவும் கோபுர உச்சிப் பகுதி நீண்ட பகுதியாகவும் இருபுறமும், சிங்கம் அல்லது ரிஷபம் போன்ற சிலை அமைப்பும் உடையதாக இருக்கிறது.

🌟மேலும், தன்டேஸ்வரர், நயினா தேவி, நவகிரக ஆலயம், எல்லாம் தனித்தனியாக உள்ளது.
ஆலயம் உள்நுழைவுப் பகுதி தாண்டி மிருத்யுஞ்சர் ஆலயம் முன்புறம் காலதேவர் (பைரவர்) ஆலயமும் உள்ளது.

🌼பல ஆலயங்கள், புனரமைப்பு இல்லாமல், சிதைந்தும் உள்ளது, வெட்டவெளியில் சில சிவலிங்கங்கள், சில ஆலயங்களில், எவ்வித சிலைகள் இல்லாமலும் உள்ளது.

🛕#குபேரர் ஆலயம்:

ஜாகேஸ்வரர் ஆலயம் தரிசித்தப்பின், 
சற்று தூரத்தில் கிழக்கே சுமார் 100 மீட்டர் தூரத்தில் சற்று உயரத்தில், ஜடாகங்கா ஆற்றின் மீது குறுக்கே அமைந்துள்ள பாலத்தை தாண்டினால், இவ்வாலயம் உள்ளது. குபேரர் ஆலயம் மேற்கு பார்த்த சன்னதி கொண்டது. வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பராமரிப்பில் உள்ளன.

🍁ஜடாகங்கா ஆற்றின்கரையில், திதி, தர்ப்பனம் செய்வது மிகப் புண்ணியம் என்பதால், பலர் வந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும், பக்தர்கள் வசதியை முன்னிட்டும் Toilet வசதியுடன், சிறிய மண்டபம் உள்ளது.

🛕இவ்வாலயங்கள் அனைத்தும் பிரதான சாலையை ஒட்டியே உள்ளன. ஒரு புறம் மலைப்பகுதியை ஓட்டி வீடுகள், கடைகள், மறுபுறம், ஜடாகங்கா ஆறும், அதை ஒட்டி ஆலயங்களும், ஆற்றின் மறுகரையில் அடர்த்தியான, தேவதாரு, பைன் மரங்கள் ஏராளமாக உள்ளன.

🌼நாங்கள் பிரதான சாலையை ஒட்டிய வசதியான HOTEL MANUDEEP வந்து தங்கியிருந்தோம். 9.4.2022 அன்று மாலை இவ்வூருக்கு வந்து உடனடியாக ஆலயம் சென்றோம். அன்று மாலை பூசை முழுவதும் கண்டு தரிசித்தோம். 
இரவு Hotel வந்து தங்கினோம்.

🙏🏻10.04.2022 விடியற்காலையில் சுமார் 5 மணிக்கு மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு அனைவரும் சென்று, மிருத்யுஞ்ச பூசை செய்து கொண்டோம். மேலும், 
ஜாகேஸ்வரர், ஆலயம் முழுதும் வணங்கி பின்பு குபேரர் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு, Hotel MANUDEEP வந்து காலை உணவுக்குப் பிறகு பாதால் புவனேஸ்வரர் என்ற முக்கிய ஸ்தலம் தரிசனத்திற்குப் புறப்பட்டோம்.

🛕புராதானமான, பாதால் புவனேஸ்வரர் என்ற ஆலயம் .... அடுத்து ..வரும் ...பதிவுகளில்....

9-10.04.2022
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

Saturday, May 14, 2022

uttrakhant tour_2022 #GOLU DEVA TEMPLE, CHITTAI. 9.4.2022

#uttrakhant tour_2022 
#GOLU DEVA TEMPLE, CHITTAI. 
(9.4.2022)
#பயணஅனுபவக்குறிப்புகள்: 

🏵️போவாளி என்ற ஊரில் Hotel VISTA வில் தங்கியிருந்தோம். இங்கிருந்து  9-4-2022 காலையில் புறப்பட்டு, சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள  Mukteshwar Maha Dev. ஆலயம் சென்றோம். 
ஆலயம் தரிசனம் முடிந்து, அங்கிருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் உள்ள, மிகப்பழமையான ஜாகேஸ்வரர் என்ற புராதான ஆலயம் செல்ல புறப்பட்டோம். 

🛣️வழியில்,  Almora District ல் CHITTAI என்று ஊர் சென்றோம்.  
உத்திரகாண்ட்டின் எங்கள் சுற்றுலாவின் எல்லாப் பாதைகளும் மலைப்பாதைகள் தான்,  சில இடங்கள் மிகக் குறுகலானது. எங்கள் வாகனம் சற்று நீளமானது. வசதியானது. 

🚍இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் புதுடெல்லியிலிருந்து 7.4.2022 முதல் நன்றாக இயங்கிக்கொண்டு வந்தது. இப்போது நின்றுவிட்டது. எல்லாவித உடனடி முயற்சிகளும் செய்தார்கள்.
💢
நாங்கள் சாலையை ஒட்டி  ஒரு  ஆலயம் அமைந்துள்ளதைப் பார்த்தோம். இந்த ஆலயம் தரிசனம் எங்கள் Programmல் இல்லை. மதிய நேரம் மங்கிக் கொண்டிருந்தது. மாலைக்குள் ஜாகேஸ்வரர் சென்று விட வேண்டும். மிகவும் சிரமமான மலைப் பாதை என்பதால், என்ன செய்வது? என்று சுற்றுலா இயக்குனர் அருமை அண்ணா பாலு சார் சமயோஜிதமாக யோசித்துவிட்டு, வாகனத்தை நிறுத்திவிட்டு, அனைவரும் அருகில் உள்ள இந்த ஆலயத்தை சென்று தரிசித்து வாருங்கள் என்று அனுப்பிவைத்தார். 

🛕 இந்த ஆலயத்திற்கு சென்று தரிசித்து வருவோம் என்று முடிவு செய்து
நான் கடைசியாக பஸ் விட்டு இறங்க முயன்றுபோது,  Bus Driver மிகவும் அன்பானவர், நல்ல திறமையானவர்.
என் அருகில் வந்து, ரூ 51 என்னிடம் கொடுத்து இந்த ஆலயத்தில் செலுத்து விட சொன்னார். 

#GOLU DEVA TEMPLE, CHITTAI. 

🏔️தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான  பிரசித்திப் பெற்ற  ஆலங்கள் உள்ளன.
Chittai GOLU MATHA TEMPLE,  ஒரு முக்கிய  பிரார்த்தனை தலம். 

🙇🏼‍♂️GOLU DEVA என்பவர் சிறந்த கடவுளாகப் போற்றப்படுகிறார்.  தன்னுடைய வெள்ளைக் குதிரையில் விரைவில் வந்து, பக்தர்களின் வேதனையை போக்கி விடுவார். மலையில் தூரம் செல்பவர்களுக்கு உடன் பாதுகாப்பாக வந்து உதவி செய்யும் கடவுளாக வணங்கப்படுகிறார். 

⚜️மிகப் பழங் காலத்திலிருந்து  சிறந்த ராஜாவாக  வாழ்ந்தவர். தன்னுடைய பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து வேண்டிய உதவிகளை வேண்டுபவர்களுக்கு  இன்றும் செய்து வருகிறார். 

🎠🛎️தங்கள் வேண்டுதல் கோரிக்கைகளை எழுதி, ஒரு மணிகட்டி ஆலயத்தில் வைத்துவிடுகிறார்கள்.
தங்கள் அனத்து வேண்டுதல்களையும் நல்ல முறையில் முடித்தவுடன் இவ்வாலயம் வந்து வணங்கி செல்கிறார்கள். 

🌺யாககுண்டம் வைத்து, பூசை செய்தும் பிரார்த்தனைகள் நடை பெற்று வருகிறது. 

🔔🛎️ஆலயம் முழுவதும் எல்லா இடங்களிலும் மணிகள் சிறியது முதல், மிகப் பெரிய, அளவிலும் கட்டிவிடப்பட்டுள்ளது. அங்கேயே, நமது பிரார்த்தனைக்காக அனைத்து வித ஏற்பாடுகளும் செய்து தர பண்டாக்கள் உள்ளனர். கட்டிடங்களிலும் வசதிகள் உண்டு. 

🎠முக்கிய கருவரை கட்டிடத்தில் சிறிய உருவில் குதிரையில் அமர்ந்து இருக்கும் கோலத்தில் சுவாமி உள்ளார். 

🙇🏼‍♂️நம்ம ஊர் வீரன், முனீஸ்வரர், குல தெய்வம், மற்றும் பிரார்த்தனை தலங்கள் போன்று, மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் அடிப்படையில் நம்பிக்கை கொண்டு வழிபடுகின்ற சிறப்பான ஆலயங்களைப் போன்றது. 

🛕இந்திய மண் எங்கும் ஒரே மாதிரியான வாழ்வியல் வணக்கம். வேண்டுதல்கள்
இதுதான் இந்துக்களின் ஆன்மீகத்தின் நம்பிக்கை.  ஒற்றுமையான ஒரே மாதிரியான சிந்தனைகளின் அடிப்படையில் தான் வாழுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

🛕ஆலயம் வணங்கி வந்தபோது, இந்த உணர்வு இருக்கிறது. நம்பிக்கைகள், பிரார்த்தனைகள் வெளிப்படுத்தும் விதம், வகை எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் வாழுகிறோம். இந்தியா முழுதுமே இப்படித்தான் வாழுகிறோம்.  இமயமலையிலும் இதே உணர்வுதான். 

🛕ஆலயத்தின் கருவரை செல்லும் வழியியல்லாமுமும், மணிகள். கருவரைப் பிரகாரம், பிரார்த்தனை செய்யும் மண்டபம் பிற பகுதிகள் அனைத்து இடங்களிலும் ஏராளமான மணிகளும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

🚍பஸ் ஓட்டுநர் என்னிடம் கொடுத்த Rs.51ஐ உண்டியலில் செலுத்தி விட்டு,  அங்கிருந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, ஒட்டுநரிடம் கொண்டு சென்றுக் கொடுத்த போது மிகவும் திருப்தியும், சந்தோஷத்தையும் அவர் அடைந்ததை உணர்ந்தேன். 

🛕நாங்கள் ஆலயம் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு அருகில் எதிர்புறம் இருந்த,
இன்னெரு ஆலயத்திற்கும் சென்றோம். 

🙏🏻 கருவரையில் அம்மன் அடுத்த பகுதியில் சிவலிங்கம், இன்னெரு பகுதியில், ராதா கிருஷ்ணன். அமைக்கப்பட்டுள்ளது. கருவரை கோபுரம் மிக உயரமாக  அமைத்துள்ளனர்.
🙇🏼‍♂️அருகில் சென்று வணங்கினோம். 

🚍காலம் அருமை கருதி, சுற்றுலா இயக்குநர் பாலு சார் அவர்கள்  எங்களுக்கு எங்களுக்கு வேறு புதிய வாகனத்தை ஏற்பாடு செய்துகொடுத்து, உடனடியாக பாகேஸ்வரர் ஆலயம் சென்று, மாலை பூசைகளில் கலந்து கொள்ள வைத்த நிகழ்வு மறக்க முடியாதது. 

🛕புராதானமான, பாகேஸ்வரர் ஆலயம் .... ....வரும் பதிவில். 

9.04. 2022
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

Sunday, May 8, 2022

uttrakhant tour_2022 #Mukteshwa r#MUKTESHWAR_MAHA_DEV_MANDHIR: 9.4.22

uttrakhant tour_2022 

#Mukteshwar
#MUKTESHWAR_MAHA_DEV_MANDHIR: 

#பயணஅனுபவக்குறிப்புகள்: 

போவாளி என்ற ஊரில் 9-4-2022 இருந்து தங்கியிருந்த Hotel VISTA இருந்து காலையில் புறப்பட்டு, சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள  Multeshwar Maha Dev. ஆலயம் சென்றோம். 

#MUKTESHWAR_MAHA_DEV_MANDHIR 

🏔️தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 150 க்கும் மேல்உள்ள பிரசித்திப் பெற்ற முக்கிய ஆலங்களில் முக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இமயமலைப்பகுதியில் உள்ள Kumaon Hills தொடரில் சுமார் 2171 மீட்டர் (7500 அடிகள் உயரத்தில் உள்ளது), 

🌼இது நயினிட்டாலிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. போக்கு வரத்து வசதி உள்ளது, தனி Car, Van, Bus மூலம் சென்று வரலாம். 

🏔️Mukteshwar ஆலயம்  ஊரின் ஓர் உயரமான மலைப்பகுதியில் உள்ளது. ஆலயம் சென்று வர நல்ல படிகள் வசதிகள் உள்ளன. 

🛕மகாபாரத கதைக்களத்தில் வரும் பாண்டவர்கள் வழிபட்ட மிகப் பழமையான ஆலயம் என்பதாலும், திருமணம், குழந்தை, பிரார்த்தனைத் தலமாக இருப்பதாலும், பக்தர்கள் அதிகம் வந்து செல்கிறார்கள். 

🌟10ம் நூற்றாண்டில், Somavamshi Dynastyக்கு சொந்தமானதாக இருந்ததாக கூறப்படுகிறது. 

🏵️இந்த லிங்கத்தின் நிறம் காலையில் சிவப்பாகவும், பிறகு ஆரஞ்சு  மாலையில்
கருப்பு நிறமாகவும், அதிசயத்தக்க வகையில் மாறுகிறது என்றும் கூறுகிறார்கள். 

🌺மேலும், திருமணத்தடை நீக்கம், முதலிய பிரார்த்தனைக்காக, இவ்வாலயம் வருகிறார்கள். 

🌼மலை படியில், வயதானவர்கள் கூட ஏறிவர முடியும். படி முடிவில், உயரத்தில் இயற்கையான சூழலில் சிறிய ஆலயம் உள்ளது. 

🌟படிகள் முடிவில். ஒரு அறுங்கோண கருவரை மண்டபம். மண்டபத்தின் உள்ளே நடுவில் சிறிய வெள்ளைபளிங்கு  லிங்கம். நுழைவு வாயில் படியிலிருந்தே தரிசிக்கலாம். மிகச்சிறிய அளவான லிங்கம் முக்தீஸ்வரர். 

🏵️ கருவரை மண்டபம் சுற்றி வரலாம்.  அறுகோணகூம்பு வடிவத்தில், மண்டபமும், அதன் மேல் அறுங்கோணத்தில் ஒரு கோபுரமும் அமைத்துள்ளார்கள். 

⚜️கருவரை சுற்றின் புறப்பகுதிகள் அடர்ந்த மரங்களும், மலையின் உச்சியாக இருப்பதால், இயற்கை காட்சிகள் மிக அற்புதமாக உள்ளது. 

🛕கருவறை முன்புறம், ஒரு மிகச்சிறிய மண்டபமும், பூமி தேவதை சிவலிங்கமும் உள்ளது.இதையடுத்து சற்று 2 படிகள் உயரக் குறைவில் தனி அம்மன் சன்னதி. முக்தீச மகாதேவ சக்தி பீடம் என்று குறிப்பிட்டுள்ளனர். 

🌺 இடதுபுறத்தில், ஒரு ஆசிரமம் உள்ளது. இதற்கு முன்னதாக  கருவரை பக்கம் சற்று தள்ளி  சிறிய தனி மண்டபத்தில், 
🙇🏼‍♂️ஆசிரம யோகியின் குடில் உள்ளது. அவரிடம் ஆசி பெற்றோம். 

🍁ஆலயம் மலைக்குன்றில் உள்ளதால், இயற்கையான மரங்கள் அடர்ந்தும் மலைக் காட்சிகளும் தெய்வீக அமைதியான சூழல் இருக்கிறது. 

🥀மலை அடிவாரத்தில், சில அரசு அலுவலகங்கள், post office, SBI கிளை இருக்கிறது. 

🌷சிறிய தேநீர், குளிர்நீர் கடைகள் மலை ஏறும் சாலை துவக்கத்தில் உள்ளது. மலைக்கோவில் ஏறும் நுழைவுவாயில் Arch ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. 

🏨1903/ 1905 ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் அல்லது விடுதிகள் இங்கே காணப்படுகின்றது. 

🌻பழத்தோட்டங்கள், அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

⚜️மலைப்பாதையில் சில இடங்களில் View Point அமைத்துள்ளார்கள்.  தூரத்தில், இமயத்தின் பல வடிவ மலைகள் அழகிய தோற்றத்தைக் காணலாம். 

🌼இந்த ஆலயம் பார்த்து விட்டு, இங்கிருந்து  ஜாகேஸ்வரர் என்ற ஊருக்குப் புறப்பட்டோம். 

9.04. 2022
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, May 4, 2022

utrakant_tour_2022#BHIMTAL#Nakuchiyatal #HANUMAN_TEMPLE_Nakuchiyatal 8.4.2022

#utrakant_tour_2022 

#BHIMTAL
#Nakuchiyatal
#HANUMAN_TEMPLE_Nakuchiyatal 

#பயணஅனுபவக்குறிப்புகள்: 

8.04.2022.
நயினிட்டால் பார்த்துவிட்டு, மீண்டும் போவாளி Hotel வந்து மதியம் உணவு முடித்துவிட்டு ஓய்வுக்குப் பின்பு, மாலையில் BHIMTAL*என்னும் ஊர் வழியாக, Nakuchiyatal*என்ற ஊர் மிக அருகில் உள்ள HANUMAN TEMPLE சென்றோம். 

#Bhimtal
🍁பீம் டால் நகரம் புகழ்பெற்ற நயினிட்டால் (51 சக்தி பீடத்தில் ஒன்று. பார்வதியம்மனின் கண்கள் விழுந்த இடம்) நகருக்கும் முற்காலத்திய நகரம்
பீம்டால் என்று கூறப்படுகிறது. 

🌺நயினிடாலிலிருந்து
22 கி.மீ அருகில் உள்ள பிம்டால் நகரம், கடல்மட்டத்திலிருந்து
1370 மீட்டர் உயரம் உடையது. 

⚜️பீம்டால் ஏரி புகழ் பெற்றது. 

⚜️மகாபாரதத்தில் வரும் பீமன் பெயரில் உள்ளது. வனவாசத்தில் இந்த ஏரியை உருவாக்கியதாக புராணம்.  

🛕இந்த ஏரியின் கரையில் பீமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

🌸பீமேஸ்வரர் ஆலயம் அருகில் புகழ் பெற்ற நதி கோலாநதி உருவாகிறது.
'
🍁அருகில், நள புராணத்தில் வரும், நளதமயந்தி ஏரி, சந்தால் ஏரி, முதலிய பல்வேறு இடங்கள் உள்ளன. 

🌟பீம்டால் வழியாக பல நெடுங்காலமாக, நேப்பாள், மற்றும், தீபெத் செல்லும் வழி உண்டு. இப்போதும், ஆதிகைலாஷ், 
ஓம்பர்வத் செல்கிறார்கள். 

#Nakuchiyatal :

பீம்டால் அருகில் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஏரி ஒன்பது கரை நுனிகளைக் கொண்டிருப்பதால், இப்பெயர். 

#HANUMAN_TEMPLE_Nakuchiyatal 

🌻இந்த ஆலயம் Bhimtalலிலிருந்து Nakuchiyatal செல்லும் வழியில் 
பிரதான சாலை ஒட்டியே அமைந்துள்ளது.
மிகப்பெரிய அனுமான் சிலை. உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள மிக உயரமான அனுமான் சிலைகளில் இதுவும் குறிப்பிடத்தக்கது. 

🏵️ஆலயம் மேல்பகுதி, பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது. ஆலயக் கட்டிடம் உள்ளே இறங்க படிகள் உள்ளது. 

🛕அனுமான் சிலைப் பகுதி அடுத்து அருகில் குகை போன்று படிகள் அமைத்துள்ளார்கள். அந்த குகையின் அடிப்பகுதியில் அனுமான் சிலையின் அடிப்பகுதி. விதவிதமான அழகு வண்ணங்களுடன் அருமையாக இருக்கிறது. கால தேவர்? சிலை; மற்றும், குகைப் பகுதியில் தேவி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. குகையின் இன்னொரு பகுதியில் வெளியேற்றப்பாதை. அப்பகுதியில் இந்த ஆலய அமைத்துள்ள BHAKTHI DHAM TRUST இடம், தங்கும் இடங்கள் உள்ளன. 

💐இன்னொரு பகுதியில் மிகப்பெரிய Prayer Hall உள்ளது. Hanuman Salia என்னும் நூல் முற்றோதல் செய்யப்படுகிறது. இதற்காக பெரிய விழா எடுத்து நடத்துகிறார்கள். 

🌺நாங்கள் சென்ற போது, ஆலயம் பூசை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார்கள். 

📚மேலும், அங்கு தமிழில், ஆன்மீக கேள்விகளை Print-questioner வைத்து Fill பன்னிக் கொடுத்தால், அதற்கு மதிப்பென் தருகிறார்கள். 

🏯படி ஏறி மேலே வந்தால், தனித்தனியாக அனுமார் சிலை தவிர பிற இடங்களில் அருகில் சிறிய சிறிய சன்னதிகள்.
இது சற்று உயரமான மலைப்பகுதி என்பதால் இங்கிருந்து Sunset மிக அருமையான காட்சி. 

🌼இந்த ஆலயம் பார்த்துவிட்டு வரும் போது Bhimtal ஏரி வழியாக போவாளி வந்து இரவு தங்கினோம். 

🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Monday, May 2, 2022

UTTARAKANT_NAINTAL - Snow view point - 8.4.202

UTTARAKANT TOUR 2022
NAINITAL
#பயணஅனுபவக்குறிப்புகள் 
ஸ்னோ வியூவ் பாயிண்ட்: 8.04.2022
🏔️நைனிட்டால் 

🏔️2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 

🌟கால நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். 

🌺 மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும். 

🌷பனியால் மூடப்பட்ட இமயமலை சிகரங்களை இந்த ‘ஸ்னோ வியூவ்’ முனையில் இருந்து காணலாம். 

🌺2270 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்திலிருந்து வடக்கு இமயமலை மலைச் சிகரங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். தூரத்திலிருந்து பார்த்தாலும் மனதிற்கு பரவசத்தை அளிக்கும். அங்குசெல்ல கேபிள் கார்களும், குதிரைகளும் உள்ளன. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 

🌼பிரதான சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயர படிகளில் (சாலை) சென்றால், 

🚡கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் R.300/ உண்டு.
1 மணி நேரம் VIEWPOINT மேலே சென்று
மலையை ரசித்து வரலாம் . 

🏔️30 நிமிட பயணங்களில் மேல சென்று விடலாம். Cable Car ல் 4 பேர் வரை அனுமதி உண்டு. Ticket கொடுத்து அமர வைத்து வரிசையாக அனுப்புகிறார்கள். 

🌼உயரப் பகுதியில் ஒரு புறம் மலைச்சரிவில் இயற்கையின் கொடையை ரசிக்கலாம். பைன் மரங்கள், காடுகள், மலை முகடுகள், நைனிடால், ஏரி பகுதி ரசித்துப் பார்க்கலாம். 

❄️அருகாமையில் இன்னும் சற்று உயரமானப் பகுதியில் இருந்து, மலையின் வேறு புறம் தெரியும் காட்சிகள், இமாலய View கிடைக்கிறது.
இந்த இடத்தில் முழுவதுமாக ஏராளமான வியாபாரக் கடைகள்தான் உள்ளது. மிக Costly.

🌼பைனாகுவார், மூலமும் ரசிக்க தனியாக ஏற்பாடுகள் உள்ளன.

🏨பெரிய கட்டிடம் என்றால், அது Cable Car Station மட்டும்தான். மலையின் கீழ்ப்பகுதியிலிருந்து சிறிய ரக கார்கள் Taxi கள் மேல வரவும் வழி உள்ளது. Car Parking கூட உள்ளது. 

💐சீசன் Time ல் சென்றால், HimalayanView நன்றாகப் பார்க்கலாம்.

🛕அருகில் ஒரு குருதுவாரா (சீக்கியர் ஆலயம்) சென்று தரிசித்து வந்தோம்.
🍁சிறந்த சுற்றுலா இடமாக உள்ளது. 

🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Sunday, May 1, 2022

UTTARAKANT - நயினிட்டால் ஏரி - 8.04.2022

#utrakant_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள்

#நைனித்தால்_ஏரி (Nainital Lake)  8.4.2022

🌟இந்தியப் புராணங்கள் சிலவற்றுள் நைனிடால் காணப்படுவதாக நம்பப்படுகிறது. ஸ்கந்த புராணங்களின் மணஸ்கந்தில் நைனிடால் ஏரி,  திரி-ரிஷி-சரோவர் என்றழைக்கப்படுகிறது, அத்ரி, புலஸ்தயா மற்றும் புலகா ஆகிய மூன்று ஞானிகள் (அல்லது ரிஷிகள்) குறிப்புகளில் காணப்படுகிறது, 

🌸இவர்கள் நைனிடாலில் தண்ணீர் இல்லாதிருப்பதைக் கண்ட பின்னர் தற்போது ஏரி (சரோவர் = ஏரி) இருக்கும் இடத்தில் நீளமான துளை ஒன்றைப் போடுகின்றனர். பின்னர் திபெத்தில் இருக்கும் புனித ஏரியான மானசரோவரிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து நிரப்புகின்றனர்.  இந்த மரபுவழிக் கதையின்படி "சிறிய மானசரோவரான" நைனி ஏரியில் மூழ்குவது பெரிய ஏரியில் மூழ்குவதற்கு இணையான தகுதியைத் தருகிறது. 

🌺கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இது அமைந்துள்ளது. ‘தால்’ என்றால் ஏரி. (அதுவே ‘டால்’ என்று உச்சரிக்கப்படுகிறது). ஊரை சுற்றி ஏரிகள் இருப்பதால் அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 

❄️இவ்வேரி, இந்தியாவின் வட மாநிலமான உத்திரகாண்டில் இமாலயத்தின் வெளிப்புற குமோன் மலைப்பிரதேச பகுதியிலுள்ள, நைனித்தால் எனும் நகரருகே இயற்கை நன்னீர் ஏரியாக அமைந்துள்ளது. மேலும், அழகமைப்புக் கலையுடன், சிறுநீரக வடிவம் அல்லது பிறை வடிவம் போன்ற அமைப்புடன் கூடிய இது, தென்கிழக்கு இறுதியில் ஒரு ஆறு முதலானவற்றின் வடிகால் வசதியுடன் உள்ளது. 

🌹ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இயற்கையழகு மனதை கொள்ளை கொள்ளும். படகு சவாரி ரம்மியமாக இருக்கும். பனிமூட்டம் கொண்ட மலைச் சிகரங்களும், வானுயர்ந்த மரங்களும், பறவைகள் எழுப்பும் இனிய ஓசைகளும், ஜிலுஜிலுவென சிலிர்த்து ஓடும் நீர் நிலைகளும், ஆங்காங்கே மலையிலிருந்து குதித்து விழும் நீர்வீழ்ச்சிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும். 

#பயணஅனுபவக்குறிப்புகள்
ஏரியில், படகு சவாரி செல்ல பல இடங்கள் உள்ளன. நயினா தேவி ஆலயம் அருகில் உள்ள படகுத்துறைக்கு நாங்கள் சென்று படகில் சவாரி செய்தோம்.
Life jacket அணிந்து 1 மணி நேரம் சுமார் 3 கி.மீ சுற்றி வரலாம். தனிக்கட்டனம்.
இயற்கையாக அமைந்த மலைத்தொடரில் அமைந்துள்ள ஆழமான ஏரி. அற்புதமாக இயற்கை காட்சிகள். ஏரி மிக ஆழம் தெளிவான நீர். அவசியம் சென்று ரசிக்கலாம். 

🍁ஊரின் வடிகாலும் இதுவே என்பதையும் பார்க்க முடிகிறது. தூய்மை செய்து கழிவுநீர் விட முடியுமா என்று ஆய்வு செய்ய வேண்டும். 

🙏🏻நன்றி🙏🏻 
8.04.2022
#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

உத்தரகாண்ட் - நயினிட்டால் - நயினா தேவி ஆலயம் - 8.4.2022

#utrakant_tour_2022
நயினிட்டால் - 8.4.2022
நைனா தேவி கோயில் : 

🛕நைனி ஏரி 64 சக்தி பீடங்களுள் ஒன்று என்று நம்பப்படுகிறது அல்லது சிவபெருமானால் தூக்கிச் செல்லப்படும்போது பூமியில் விழுந்த சதியின் (பார்வதி) தீய்ந்துபோன உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதிகள் என்று நம்பப்படுகிறது. சதியின் கண்கள் (அல்லது நைன் ) விழுந்த இடம் 
நைன்-டால் அல்லது கண் ஏரி என்று அழைக்கப்படலாயிற்று.

🛕 கடவுளரான சக்தி தற்போது ஏரி அமைந்திருக்கும் வடக்குக் கரையில் உள்ள நைனா தேவி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

🛕15ம் நூற்றாண்டில் குஷான் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஆலயம்.

🛕நிலச்சரிவினால் அழிந்தும், 1842ல் புதிய நயினா தேவி சிலை வடிக்கப்பட்டு மோதிலால் ஷா என்பவரால் புனரமைக்கப்பட்டது. மீண்டும் 1880ல்
நிலச்சரிவில், முழுதும் சிதைந்துவிட்டாலும், 1883 ல் உள்ளூர் வாசிகளின் பேருதவியால் மீண்டும் புதியதாக நிர்ணயம் செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

🌺ஆலயம் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் உள்ளது.

⚜️சுவாமி விவேகானந்தர் 1890 ல் தன் சகோரருடன் நடந்துவந்து இவ்வாலயத்தை தரிசித்து 6 நாட்கள் தொடர்ந்து இருக்கிறார். மேலும், 1898ல் 3 நாட்கள் தன் தோழர்களுடன் இங்கு வந்து தங்கியுள்ளார். இதற்கான குறிப்புகளும் போர்டுகளும் ஆலயத்தில் உள்ளது. 

#பயணஅனுபவக்குறிப்புகள்

⚜️ஏரியின் கரையில் பெரும் பகுதி ஊர் அமைந்துள்ளதால், பெரிய வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செல்ல முடிகிறது. 

⚜️ஏரிக்கரையில், பல இடங்களுக்கு செல்ல ரிக்ஷாக்களே பயன்படுத்தப்படுகிறது. ஒரு ரிக் ஷாவில் இரண்டு பேர்கள் செல்ல அனுமதி. நிறைய இருந்தாலும் ஒழுங்கு வரிசையில் சென்று ஏறிக்கொள்ள வேண்டும். 

💐நாங்கள் ஆளுக்கு 20 ரூ கொடுத்து ஏரிக்கரையோரம், எங்கள் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து ஏரி கரையின் ஒரு புறம் உள்ள நயினிதேவி ஆலயம், மற்றும் ஏரியில் படகு சவாரி செய்துவிட்டு வந்தோம். 

🍁கரையோரம் நிறைய சாலைக்கடைகள், பழமையான கட்டிடங்கள். ஆலயங்கள், கடைகள் எல்லாம் உள்ளன. வெள்ளைக்காரர்கள் விட்டுவிட்டு சென்ற கட்டிட்ட அமைப்புகள் பல அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது. ஆலயம், படகுத்துறை அருகில் ஏரியின் View Point அமைப்பு அமைத்துள்ளனர். 

🏵️வழக்கம் போல, ஏராளமான சாலைக் கடைகள் நிறைய உள்ளன. 

🛕முதலில் ஆலயம் சென்றோம். 

🛕ஆலயத்தின் நுழைவில், ஒரு சிறிய Arch உள்ளது. இதை அடுத்து எதிரில் பெரிய அரசமரமும் அதையொட்டி, விநாயகர், மற்றும் அனுமன் சன்னதி உள்ளது. 

🛕நயினா தேவி ஆலயமுகப்பில் இரண்டு சிங்கங்கள் கம்பீரமாக அமைக்கப்பட்டு உள்ளது. கருவரையில் காளிதேவி ஒரு புறமும், அன்னை பராசக்தியின் கண்களைக் குறிக்கும் பகுதி, மற்றும் இன்னொருபுறம் விநாயகர் சிலையும் உள்ளது. 

🛕நையினா தேவிஅன்னையும், சகோதரியாக வழிபடப்படும் சுனந்தா தேவியும் உள்ளது. 

🛕அம்பாள் சன்னதியின் முன் முற்றத்தில் ஒரு சிறிய வளவு அமைக்கப்பட்டு, பெரிய ஆலயமணிகள் கட்டப்பட்டுள்ளது.
அதன் முன்பு, சிறிய மண்டபத்தில் ஏரியின் ஓரத்தில், சிறிய அழகிய சிவலிங்கமும், மண்டபத்தின் எதிரில் சிறிய, பளிங்கு நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. 

🛕நைனிதேவி அம்பாள் ஆலயம், அடுத்து
சிவலிங்கத்துடன் கூடிய தனி கருவறை மண்டபமும், அடுத்து சற்று உயரமான படிகளுடன் மரத்தால் முழுதும் வடிவமைக்கப்பட்டுள்ள பெரிய மண்டத்துடன் கூடிய கட்டிடத்தில் பெருமாளுடைய 10 அவதார சிறிய சிலைகள் உள்ளன. 

🛕விழாக்காலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் வருகிறார்கள்.  

🛕8 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது.
நந்தாஷ்டமி, நவராத்திரி சிறப்பான முறையில் நடைபெறுகிறது. 

🛕மெயின் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. அல்லது சைக்கிள் ரிக்ஷாவிலும் செல்லலாம். 
🙏🏻நன்றி🙏🏻 

8.4.2022
#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.

உத்ரகாண்ட் - நயினிட்டால் - 8.4.2022

உத்ரகாண்ட் - நயினிட்டால் - 8.4.2022
#பயணஅனுபவக்குறிப்புகள் 
போவாளியிலிருந்து 8.4.2022 அன்று காலையில் புறப்பட்டு, ஹனுமான் மந்தீர் தரிசனம் செய்து விட்டு நயினிட்டால் வந்துசேர்ந்தோம். முழுவதும்
ஏரிக்கரையிலேயே ஊர் அமைந்துள்ளது. 
எங்கள் சிறிய ரகபஸ் விடுத்து, பல இடங்களுக்கு சிறிய Taxi அல்லது கார், ரிக்ஷா பயன்படுத்தினோம். 

நைனிடால்: 

🌸இந்திய இமாலயத்தில் உள்ள மாநிலமான உத்திரகாண்டில்  அமைந்துள்ள ஒரு நகரம். 
உத்திரகாண்ட் குமோன் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள நைனிடால் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இருக்கிறது. 

🏵️கடல் மட்டத்திற்கு மேலே 1,938 மீட்டர் (6,358 அடி)யில் அமைந்துள்ள நைனிடால், ஏறத்தாழ இரண்டு மைல்கள் சுற்றளவில் அமைந்துள்ள முத்து வடிவிலான ஏரி உள்ளிட்ட பள்ளத்தாக்காக இருக்கிறது என்பதுடன் மலைகளாலும் சூழப்பட்டிருக்கிறது. 

🌼கோடைகாலத்தை இனிமையாக கழிக்க நம் நாட்டில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக மலைப் பிரதேசங்களே கோடை சுற்றுலாவுக்கு சிறந்தது. அங்கு குளிர்ச்சியுடன், எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளும் கிடைக்கும். மனதுக்கும் இதமாக இருக்கும். இயற்கையை அதிகம் நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடமாக இருப்பது, நைனிடால். 

🌻இமாலயத்தின் மைய அச்சை உருவாக்கும் பனிபடர்ந்த மலைத்தொடரின் பிரமாதமான காட்சியை இங்கிருந்து காணமுடியும். 

🌷நைனிடால் இயற்கை காட்சிகளுக்கு பெயர்போனது. அதனால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருகிறார்கள். அன்று முதல் இன்று வரை இங்கு வசீகரிக்கும் இயற்கை காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இயற்கையை நேசிப்பவர்கள் நைனிடாலுக்கு ஒருமுறை  சென்று வரலாம். 
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

https://www.facebook.com/100001957991710/posts/7469473589794500/

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...