நாகூர்:
இராகு கேது பரிகார தலம்....
நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். சிவராத்திரியன்று நான்காவது ஜாம பூஜையை ஆதிசேஷன் இத்தலத்தில் செய்வதாக ஐதீகம்.
மூலவர் : நாகநாத சுவாமி
அம்மன் - நாகவல்லி அம்பாள்
உற்சவர் - சந்திரசேகரர் - கல்யாண சுந்தரர்
தல தீர்த்தம் - சந்திர தீர்த்தம்
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
ராகு துணைவியருடன் தனி சன்னதி, உட்பிரகாரத்தில்.
விநாயகர், வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர்,
பஞ்சலிங்கங்கள், துர்க்கை,
மேலும் ஏராளமான லிங்கங்கள் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
ஆலய பிரதோஷ நந்தி மிகப்பெரியது.
உள் முன் மண்டபத்தில் பைரவர், நவகிரகங்கள் அனைத்தும், வரிசையாக, மேற்கு நோக்கிய அமைப்பு.
மேலும், ராகு லிங்க பூசை செய்வது.
சூரியன், சந்திரன் இன்னும் பல தெய்வங்கள் வரிசையாக அமைந்துள்ளது.
மிகப்பெரிய வற்றாத தீர்த்தக் குளம் ஆலயத்திற்கு தென்புறம் அமைந்து உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இருந்த சிறப்பு நிலைமை இத்தீர்த்தக் குளம் பெற வேண்டும்.
கோயில் விழாக்கள் :
பிரதோஷம், கார்த்திகை வழிபாடு,
மகா சிவராத்திரி, அர்த்த ஜாம பூஜை போன்ற திருவிழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
தல சிறப்புகள் :
வைகாசி மாதம் பௌர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி பெருமாளுக்கு காட்சி கொடுத்தார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம்.
தல பெருமைகள் ;
பிரம்மன், இந்திரன், சந்திர பகவான், சப்த ரிஷிகள், துருவாசர். உருத்திரசன்மன், அந்தணன் ஆகியோரால் வழிபடப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில். நாகராஜனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை நாகநாத சுவாமி நீக்கியதால், இந்த திருக்கோயில் நாக தோஷ பரிகார தலமாக உள்ளது.
இந்த கோயிலில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, தான, தர்மங்களை செய்தால், சிவனின் பெருமையான கயாவில் செய்த பலன்கள் கிடைக்கும்.
இந்த கோயிலில் ஆனி மாத பெளர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாதம் பெளர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தீர்த்தவாரி நடத்தி பிரமோற்சவம் செய்து வழிபட்டு சிவனடி சேர்ந்த சிறப்பு வாய்ந்த தலம்.🌟
29.03.2022
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment