சிராங்குடி புலியூர் : ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர்,
ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலயம்.
நாகூரிலிருந்து, ஆழியூர், கீவளுர் செல்லும் வழியில் இளங்கடம்பனூர் தாண்டி, ஆழியூருக்கு முன்னதாக இருக்கும் சிறிய ஊர்.
ஆலயம் கிழக்குப் புறத்தில் கிழக்குப் பார்த்து, தனியாக உள்ளது. தென்புறத்தில் உள்ள வாசல் வழியாக செல்லலாம். கிழக்கு வாசல் பூட்டியே உள்ளது.
ராஜகோபுரம் பதிலாக உயர்ந்த நிலை வாசல் அமைக்கப்பட்டு சுவாமி சுதை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர், கிழக்கு நோக்கியவாறும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
நந்தி மண்டபம், சுவாமி அம்மாள் சற்று உயர மன்டபத்துடன் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரத்தில் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள்.
பைரவர், சனிஸ்வரன், சூரியன், கிழக்கு பாகத்தில் உள்ளனர்.
மிக சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயம் மிக அழகுடனும், சுத்தமாகவும் பராமரிப்புடனும் உள்ளது.
உள்ளுர் பக்தர்களின் ஒத்துழைப்புடன் முறையான பூசைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
29.03.2022
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment