Thursday, March 31, 2022

ஆலயதரிசனம் - செம்மங்குடி (திருவீழிமிழலை - வடக்கில் 3. கி.மீ.)

செம்மங்குடி:
ஸ்ரீ சுந்தரேஸ்வரர்,
ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ ஹரிஹர புத்ரார், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயங்கள் கும்பாபிஷேகம் 27.03.2022 அன்று கிராம மக்கள் பெரும்பங்களிப்பில் சிறப்பாக   நடைபெற்றுள்ளது.  
இடம், வழி:
1.திருவீழிமிழலைக்கு வடக்கில் வடகரை சாலையில் 3 கி.மீ. தூரத்திலும்,
2. ஸ்ரீ கண்டபுரம் தெற்கில் 3 நாகம்பாடி அருகில் பிரிந்து இவ்வூர் வரலாம்.
3. புகழ்பெற்ற கோனேரிராஜபுரம்,பாடல் பெற்ற தலமான அன்னியூர் வந்து கிழக்கில் 2 கி.மீ.
4.கடகம்பாடியிலிருந்து, செவ்வாய் தலம் சிறுகுடி யிலிருந்து மேற்கில் 1 கி.மீ.தூரம். 

கீர்த்திமான் ஆறு என்ற சிற்றாற்றின் வட கரையில் அமைந்துள்ள சிறு கிராமம்.
ஆழமான குளம் ஒட்டி கிழக்கு நோக்கிய வினாயகர் ஆலயம் தாண்டி சற்று அருகில் புதிய சுற்றுச்சுவர் கூடிய சிவன் ஆலயம். 

ஆலயம் முன்பு, பெரிய அளவில், அமைக்கப்பட்டு இருக்கலாம். சிதைந்து விட்டதால், புதியதாக நிர்ணயம் செய்துள்ளனர்.
கிழக்கு நோக்கிய, ஸ்ரீ சுந்தரேஸ்வரர், முன்புறம் சிறிய விநாயகர், மற்றும் முருகன் அமைந்துள்ளனர். 
தெற்கு நோக்கிய ஸ்ரீ சௌந்தரநாயகி
தனித்தனி கருவரை மண்டபத்தில் உள்ளனர். கோஷ்ட்டத்தில், தட்சினாமூர்த்தி, வில்வமரத்துடன் பெரிய சிவலிங்கம் சிறப்பாக அமைந்துள்ளது.
சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது.
அனத்தும் கொண்ட ஒரே பிரகாரம்.
சுவாமி, அம்பாள் ஒரே மண்டபத்தில், மேற்கு நோக்கிய தனி காலபைரவர் சன்னதியும் உள்ளது. 

சிவன் ஆலயம், தாண்டி சற்று தூரத்தில், தனி ஆலயமாக ஸ்ரீஹரிஹர புத்தர் மற்றும், அழகிய குதிரையுடன் வீரன் அமைந்துள்ளதால், மருளாலிகளும் இணைந்து ஆலயங்கள் சிறப்பாக புனரமைக்கப்பட்டுள்ளது. 

கிராம மக்கள் ஒன்றிணைந்து 27.03.2022 அன்று குடமுழுக்கும் செய்துள்ளார்கள். 

27.03.2022
#கும்பாபிஷேகம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஆலயதரிசனம் - நன்னிலம்

நன்னிலம் :
ஸ்ரீ மதுவனேஸ்வரர், ஸ்ரீமதுவன நாயகி
பாடல் - சுந்தரர் 
மாடக்கோவில்.
கிழக்குப் பார்த்து சுவாமி, தெற்கு நோக்கிய அம்பாள் தனி தனி ஆலயம் போன்று.
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீ அகத்தீஸ்வரர் தனித்தனி சன்னதிகள்.
இரண்டு சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

ஆலயம் மிக நன்கு பராமரிப்பில் உள்ளது.
பிரகாரத்தில் பலவித மரங்களை வளர்த்து உள்ளார்கள்.
புரைமைத்து, குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வருகிற 6.04.2022 அன்று பாலாலயம் செய்யவிருக்கின்றனர்

#27.03.2022

#ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஆலய தரிசனம் - நாகூர்

நாகூர்:
இராகு கேது பரிகார தலம்.... 

நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். சிவராத்திரியன்று நான்காவது ஜாம பூஜையை ஆதிசேஷன் இத்தலத்தில் செய்வதாக ஐதீகம். 

மூலவர் : நாகநாத சுவாமி
அம்மன் - நாகவல்லி அம்பாள்
உற்சவர் - சந்திரசேகரர் - கல்யாண சுந்தரர்
தல தீர்த்தம் - சந்திர தீர்த்தம் 

சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
ராகு துணைவியருடன் தனி சன்னதி, உட்பிரகாரத்தில்.
விநாயகர், வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர்,
பஞ்சலிங்கங்கள், துர்க்கை, 
மேலும் ஏராளமான லிங்கங்கள் பிரகாரத்தில் அமைந்துள்ளது. 

ஆலய பிரதோஷ நந்தி மிகப்பெரியது.
உள் முன் மண்டபத்தில் பைரவர், நவகிரகங்கள் அனைத்தும், வரிசையாக, மேற்கு நோக்கிய அமைப்பு.
மேலும், ராகு லிங்க பூசை செய்வது.
சூரியன், சந்திரன் இன்னும் பல தெய்வங்கள் வரிசையாக அமைந்துள்ளது. 

மிகப்பெரிய வற்றாத தீர்த்தக் குளம் ஆலயத்திற்கு தென்புறம் அமைந்து உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இருந்த சிறப்பு நிலைமை இத்தீர்த்தக் குளம் பெற வேண்டும். 

கோயில் விழாக்கள் :
பிரதோஷம், கார்த்திகை வழிபாடு, 
மகா சிவராத்திரி, அர்த்த ஜாம பூஜை போன்ற திருவிழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. 

தல சிறப்புகள் :
வைகாசி மாதம் பௌர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி பெருமாளுக்கு காட்சி கொடுத்தார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம். 

தல பெருமைகள் ;
பிரம்மன், இந்திரன், சந்திர பகவான், சப்த ரிஷிகள், துருவாசர். உருத்திரசன்மன், அந்தணன் ஆகியோரால் வழிபடப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில். நாகராஜனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை நாகநாத சுவாமி நீக்கியதால், இந்த திருக்கோயில் நாக தோஷ பரிகார தலமாக உள்ளது. 

இந்த கோயிலில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, தான, தர்மங்களை செய்தால், சிவனின் பெருமையான கயாவில் செய்த பலன்கள் கிடைக்கும். 

இந்த கோயிலில் ஆனி மாத  பெளர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாதம் பெளர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தீர்த்தவாரி நடத்தி பிரமோற்சவம் செய்து வழிபட்டு சிவனடி சேர்ந்த சிறப்பு வாய்ந்த தலம்.🌟 

29.03.2022 
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

ஆலயதரிசனம் சிராங்குடி புலியூர்

சிராங்குடி புலியூர் : ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர்,
 ஸ்ரீ சிவகாமி அம்பாள்  ஆலயம். 

நாகூரிலிருந்து, ஆழியூர், கீவளுர் செல்லும் வழியில் இளங்கடம்பனூர் தாண்டி, ஆழியூருக்கு முன்னதாக இருக்கும் சிறிய ஊர். 

ஆலயம் கிழக்குப் புறத்தில் கிழக்குப் பார்த்து, தனியாக உள்ளது.  தென்புறத்தில் உள்ள வாசல் வழியாக  செல்லலாம். கிழக்கு வாசல் பூட்டியே உள்ளது.
ராஜகோபுரம் பதிலாக உயர்ந்த நிலை வாசல் அமைக்கப்பட்டு சுவாமி சுதை சிலைகள்  அமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர், கிழக்கு நோக்கியவாறும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். 

நந்தி மண்டபம், சுவாமி அம்மாள் சற்று உயர மன்டபத்துடன் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 
பிரகாரத்தில் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள்.
பைரவர், சனிஸ்வரன், சூரியன், கிழக்கு பாகத்தில் உள்ளனர்.  

மிக சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயம் மிக அழகுடனும், சுத்தமாகவும் பராமரிப்புடனும் உள்ளது.
உள்ளுர் பக்தர்களின் ஒத்துழைப்புடன் முறையான பூசைகள்,  வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 

29.03.2022 
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


ஆலயதரிசனம் - இராதாநல்லூர் நீலப்பாடி

இராதாநல்லூர்:
கீவளுர் தாலுக்கா, அத்திப்புலியூர் ஊராட்சி. 

நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் வரும் நீலப்பாடி நிறுத்தம், வடக்கு நோக்கி செல்லும் சிறிய சாலையில் 500 மீ.தூரத்தில் உள்ள சிவன் ஆலயம். 

ஸ்ரீசௌந்தரேஸ்வரர், ஸ்ரீ செளந்தரநாயகி
அம்மன் ஆலயம். கிழக்கு நோக்கிய ஆலயம். 

27.03.2022 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 

மிகப்பழமையான ஆலயம். முழுவதும் புனரைமைக்கப்பட்டு பொலிவுடன் அமைந்துள்ளது;  

கிழக்கு வாசல் முன்புறம் வடகிழக்கு மூலையில் தனி விநாயகர் ஒரு பெரிய குளத்துடன் உள்ளது. 

ராஜகோபுரம் இல்லை, என்றாலும்,
கிழக்கு புறம் உள்நுழைவு உயர வாயிலில் சுதையால் சுவாமி சிலைகளும் அழகுடன் உள்ளன. 

அடுத்து நந்தி மண்டபத்துடன் பிரதோஷ நந்தி. 

சுவாமி முன்மண்டபத்தில் வடக்குப் பார்த்து நால்வர் சிலைகள். தெற்கு நோக்கிய அம்பாள் தனி கருவரை. அடுத்துள்ள முன் சுவாமி முன் மண்டபம்.
சிறிய விநாயகர், கிழக்கு நோக்கிய சதுர பீடத்தில் சுவாமி சுந்தரேஸ்வரர். 

வெளிபிரகாரத்தில், தட்சினாமூர்த்தி
தனி விநாயகர், சுப்ரமணியர், மகாலெட்சுமி மற்றும் சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர் 

கிழக்குப் பாகத்தில், பைரவர், சூரியன் உள்ளனர். 

பல வருடத்திற்கு முன் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்ய வந்த போது ஆலயம் மிகவும் சிதலமடைந்து கிடந்ததும்,
இன்று புதுப்பொலிவுடன் ஊர் மக்கள் திரளாக இருந்து வணங்குவது கண்டு, மனம் நெகிழ்வடைந்தது உண்மையே. 

29.03.2022 
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Wednesday, March 30, 2022

ஆலயதரிசனம் நீலப்பாடி 29.3.2022

நீலப்பாடி: 
நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் வரும் ஊர்.
பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் செல்லும் சாலையில் 100 மீட்டரில் தூரத்தில் மேற்கில் திரும்பினால் ஆலயம் உள்ளது. 

ஸ்ரீ நாகநாதர்,  ஸ்ரீ சௌந்தரவள்ளி 
பழமையான ஆலயம். 

ஆலயத்தின் தென்புறத்தில் பெரிய குளம் உள்ளது. 

ராஜகோபுரம் இல்லை உள்நுழைவு வாயில் தாண்டினால், நந்தி மண்டபம், 

அடுத்து நீண்ட உன்மன்டபம், தெற்கு நோக்கிய அம்பாள். அடுத்து கிழக்கு நோக்கி அருளும் ஸ்ரீ நாகநாதர். 

வெளிப்பிரகாரத்தில், தெட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர். 

ஏற்கனவே, சில முறைகள் வந்து தரிசனம் செய்த ஆலயம்.
பிரதோஷ தரிசனம்: 29.03.2022 

29.03.2022 
#பிரதோஷம்
#ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
https://m.facebook.com/story.php?story_fbid=7324008717674322&id=100001957991710

ஆலயதரிசனம் 29.3.2022 நாயன்மார்கள் தண்டியடிகள் - ஆடூர்

https://m.facebook.com/story.php?story_fbid=7324119440996583&id=100001957991710
இன்று 29.03.2022

 பங்குனிமாதம் சதயம் நட்சத்திரம் தண்டியடிகள் நாயனார் குருபூஜை:

திருவாரூரில் அவதரித்த பார்வையற்றவராகிய தண்டியடிகள் திருவாரூர் குளத்தை தூர்வார அதை சமணர்கள் தடுத்து குருடன் என்று ஏளனம் செய்ய,

 தண்டியடிகள் நான் கண்பார்வை பெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்க அவர்கள் ஊரை விட்டு செல்வோம் என்று கூற, தண்டியார் இறைவனிடம் மன்றாட கனவில் ஈசன் தோன்றி நீ பார்வை பெற்று சமணர்கள் பார்வை இழப்பார் என்று கூற அதுபோல் சோழமன்னன் கனவிலும் கூறியதோடு திருக்குளப்பணியைச் செய்வாயாக என்றும் கூறினார்.

மறுநாள் அரசன் முன்னிலையில் தண்டியார் நான் பார்வை பெற்று இவர்கள் ஊரை விட்டு செல்லும் வரை பார்வை என்று கூறி திருமந்திரம் ஓதி மன்னன் முன்னிலையில் குளத்தில் மூழ்க தண்டியார் பார்வை பெற்று சமணர்கள் பார்வையிழந்தனர்.

இவ்வாறு பார்வையற்ற நிலையிலும் சிவத்தொண்டு செய்து வந்தவர்

""தண்டியடிகள் நாயனார்""

இன்று 29.3.2022 ஆருர் சென்று அடிகளார் தரிசனம்.

 #நாயன்மார்கள்
#ஆலயதரிசனம் 

#என்றும்_அன்புடன்_ 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...