பதிவு - 6
பகுதி - 2 - குருவாயூர் - ஆலயங்கள்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
6. ஸ்ரீ பெருந்தட்டா சிவன் கோயில்:
குருவாயூர்.
🕉️திருநாவாய் ஆலயம், மற்றும் திருநாவாய் மகாமக இடங்கள் பார்த்துவிட்டு குட்டிபுரம் என்ற நகர் வந்து அங்கிருந்து குருவாயூர் செல்ல முடிவு செய்து இருந்தோம். நேரடி அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் உள்ளன.
✨தனியார் பேருந்துகள் நிறைய திருச்சூர் செல்லுகின்றன. அதில் ஏறி குன்னம்குளம் என்ற ஊருக்கு சென்றுவிட்டால் இன்னும் மிகுதியான பேருந்துகள் குருவாயூருக்கு உண்டு. விரைவாகவும் சென்று விடலாம் என்று உள்ளூர்வாசி ஒருவரின் அறிவுரை ஏற்று குன்னம்குளம் சென்றோம்.
🌟குன்னம் குளம் புதிய பேருந்து நிலையம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் இருந்தது.
🌼இங்கிருந்து குருவாயூர் சுமார் 8 கி.மீ தூரம்தான்; அதிகம் பேருந்துகள் உள்ளது. இங்கு பேருந்தில் புறப்பட்டு குருவாயூர் சென்று சேர்ந்தோம்.
✨ஏற்கனவே Agoda App மூலம் Hotel Book செய்திருந்தோம். ஆனால், Hotel லில் இருந்து தனிப்பட்ட முறையில் whatsapp ல் Confirmation செய்தி வந்திருந்தால் மட்டுமே Room கிடைக்கும் என்றார்கள்.
Hotel Room Book செய்ய எந்த App ஐம் பயன்படுத்துவதை விட நேரில் அல்லது Hotel லுக்கு நேரடியாக Book செய்வது பலவிஷயங்களுக்கு மிக நல்லது என்பதை எமது அனுபவத்தால் பெற்றோம்.
🌟எப்போதும், குருவாயூர் வரும்போது தேவஸ்தான பொறுப்பில் உள்ள PANCHAJANYAM REST HOUSE, என்ற இடத்தில் பலமுறை தங்கியுள்ளோம்.
ஆலயம், உணவு விடுதி எல்லாம் அருகில் இருப்பதால் இந்த இடத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்போம். இந்த முறை அதிக கூட்டத்தினாலும், அன்று சனிக்கிழமை என்பதாலும், Rooms கிடைக்கவில்லை.
🌟ஆனாலும், குருவாயூரில் Rs.800 முதல் Room கள் ஏராளமாக கிடைக்கின்றன.
✨சற்று தள்ளி வேறு ஒரு தனியார் Hotel லில் தங்கிக் கொண்டோம். Rs.1500.
✨குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் பல மடங்கு விரிவடைந்து, பக்தர்களின் கூட்டம் 'திருப்பதி, ' அளவில் உள்ளது.
🌟ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் உள்ளே செல்ல 8 - 10 மணி நேரம் காத்திருப்பு வரிசை இருக்கிறது.
🌟நாங்கள் குருவாயூர் தலம் சுற்றியுள்ள புராதான ஆலயங்கள் பல தரிசிக்க வேண்டியிருந்தது.
🌟இந்த முறை நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டவாறு, அருகில் உள்ள மற்ற சில ஆலயங்களுக்கு சென்று தரிசனம் பெற்றோம்.
🌟குருவாயூரில், தங்கியிருந்த Hotel லில் இருந்து நடந்து சில ஆலயங்களும், Auto வில் சென்று சில ஆலயங்களும் தரிசித்து வந்தோம்.
🌼10.8.24 அன்று மாலையில் முதலில் அருகில் உள்ள பெருந்தட்டா ஆலயம் நடந்து சென்றோம்.
🌼குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திற்கு தென்மேற்கில், பிரதான சாலையில் 1.3 கி.மீ.தூரத்தில் உள்ளது.
🕊️🛐🇮🇳🕉️🔱🛕🧘🏻♂️🕊️💐
6. ஸ்ரீ பெருந்தட்டா சிவன் கோயில்:
குருவாயூர்.
ஆலய சிறப்பு
குருவாயூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான பெரிய இந்துக் கோயிலாகும்.
நாட்டுப்புறக் கதைகளின்படி, திரேதா யுகத்தில் பரசுராம முனிவர் சிவபெருமானின் சிலையை நிறுவினார்.
இக்கோயில் கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒரு பகுதியாகும்.எனவே, சைவ-வைணவ ஒளிர்வு ஒரு புனிதமான உறைவிடம்.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் கோழிக்கோடு சாமோரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது.
பக்தசிரோமணி சுந்தரமூர்த்தி நாயனார் பற்றிய குறிப்புகளில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.
திப்புவின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் இடிப்பதற்கு சற்று முன், பக்தர்கள் குருவாயூரப்பன் சிலையுடன் அம்பலப்புழாவுக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
குருவாயூர் கோயிலின் தென்மேற்குப் பகுதியில் பெருந்தட்ட மகாதேவர் கோயில் உள்ளது.
அமைப்பு
ஆலயம் கிழக்குப் பார்த்த சன்னதி.
ஆலயத்தில் கணபதி, விஷ்னு, சுப்பிரமணியர், துர்க்கா பகவதி, நாகராஜா, சாஸ்த்தா. ராக்க்ஷர்
அமைத்துள்ளனர்.
கோவில் வளாகத்தில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சமீபத்தில், கோவிலில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில், திப்புவைக் தாக்க ஜாமோரின் படைகள் முயன்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
.
கோவிலை தோண்டியபோது இரண்டு பெரிய பீரங்கிகள் கிடைத்தன. இந்த இரண்டு பீரங்கிகளின் வரலாறு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஜமோரின் ராஜாவின் அரண்மனை மேற்குப் பகுதியில் பெருந்தட்டா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
ஆலயம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிரதோஷம் மற்றும் எல்லசிறப்பு பூசைகளும் செய்யப்பட்டு வருவது சிறப்பு.
வழி
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திற்கு தென்மேற்கில், பிரதான சாலையில் 1.3 கி.மீ.தூரத்தில் உள்ள ஆலயம். நடந்து சென்றும் தரிசிக்கலாம்.
Timings: 5.00 AM to 11 .00 AM & 5.00 Pm to 8.00 PM.🛐
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
10.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
No comments:
Post a Comment