அம்பல்:
காரைக்கால் - விழிதியூர் - பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது
திருமுறை பாடல் பெற்றத் திருத்தலம்
கிழக்குப் பார்த்த ஆலயம்
இது ஒரு மாடக்கோயிலாகும்.
இக்கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன.
அடுத்து சுதையால் ஆன பெரிய நந்தி உள்ளது.
திருச்சுற்றில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்பாள், நடராஜர், நவக்கிரகம், நந்தி, விநாயகர், பாலசுப்ரமணியம், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, சரஸ்வதி அம்மன், சனி, முருகன், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.
கோயிலின் இடது புறத்தில் சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் பூங்குழலி அம்மன் சன்னதி உள்ளது.
தரை தளத்தில் திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
கோஷ்டத்தில் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
அடுத்து ஜம்புகேஸ்வரர் சன்னதி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன.
வலம் முடித்து, படிகளேறி மேலே சென்றால் மாடக்கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் உயர்ந்த தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்குப் பார்த்த கருவறையில் உள்ளார்.
சுவாமி அம்பாளுடன் காட்சி தரும் கோலம் கருவரையில் உள்ளது சிறப்பு.
மூலவருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
இக்கோயிலின் ,இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
தனி சன்னதியுடன், தரைதளத்தில் தெற்கு நோக்கிய அமைப்பு.
இத்தலத்தில் பிரமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை
ஆலயம் சிற்றூரில் உள்ளதால், பக்தர்கள் வருகையும் குறைவாக உள்ளது. எனவே, அதற்குரிய அளவில் பூசை, விழாக்கள் நடைபெற்று வருகிறது.
மீள் தரிசனம்
28.11.2022 கார்த்திகை சோமவார தரிசனம்
#திருமுறைதலங்கள்
#ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்றுஅம்பல்:
திருமுறை பாடல் பெற்றத் திருத்தலம்
No comments:
Post a Comment