பதிவு - 5
#திருநாவாய்மகாமகம்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
இந்தப்பதிவு கேரள சரித்திர சம்பவங்களின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
பெரும்பாலும் அரியப்படாத தகவல்கள்.
வலைதளங்களில் திரட்டப்பட்டது.
நேரில் சென்று இந்த இடங்களை கண்ட போது நம் இதயம் கனக்கிறது என்பதே உண்மை.
மதம், சமயம், இறை உணர்வு, ஆலய விழாக்கள், எல்லாம் மனித உணர்வுகளை மேம்படுத்தி உயிர் வாழ்வை உன்னத வாழ்வாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து,
ஆனவத்தின் எழுச்சியால் வணிக நோக்கம், சுயநலம் முதலிய குனங்களாக அமைந்தால்,
நல்ல எழுச்சியான ஆன்மீக சமுதாயம்எப்படி வீழ்ந்து விடுகிறது என்பதை இந்த இடங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன.
இந்த சரித்திர இடங்களைப் பார்த்து நாம் உணரலாம்.
இரண்டு மனித குழுக்களின் ஆணவ உணர்ச்சிகளின் வெளிப்பாட்டால், ஒட்டுமொத்த சமூகமும், எல்லாவற்றையும் இழந்து, எப்படி வீழ்ச்சி அடைகிறோம், என்பதை இந்த இடங்களைப் பார்த்து வந்த போது மனம் கசிந்து உணர்ந்து சிந்திக்கத் தோன்றியது.
ஆன்மீகத்தின் நோக்கம் அன்பு சமுதாயம் படைத்து மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழ வழி வகுப்பதே. இதை உணர்ந்து வாழ முயலுவோம்.
10.8.24
#சுப்ராம்
Māmānkam or Māmāngam . Tirunāvāya
மாமாங்கம் அல்லது மகாமகம் திருநாவாய்
⭐இது தென்னிந்தியாவின் திருநாவாயாவில் உள்ள நதி, ஆறுகள் (நிலா நதி, பொன்னானி நதி அல்லது பாரதப்புழா) கரையிலும், வறண்ட ஆற்றங்கரையிலும் நடத்தப்பட்ட இரண்டு-தசாப்த கால இடைக்கால நிகழ்வுகள்.
🌟 மகாமகத் திருவிழாவுடன் தொடர்புடைய கோயில் திருநாவாயிலுள்ள நவமுகுந்தா கோயில் ஆகும். இது 108 திவ்ய தேசத்தில் ஒன்று.
பித்ருகாரியம் செய்ய உன்னதமான இடம்.
🌟 திருநாவாய் மும்மூர்த்தி தலம் எனப்படுகிறது. முப்பெரும் தெய்வங்களுக்குரிய இடம்; சிவனுக்கும் பிரும்மாவிற்கும், நதியின் தென்கரையிலும், விஷ்ணுவிற்கு வடகரையிலும் சிறப்பான ஆலயங்கள் அமைந்துள்ளன.
🌟உஜ்ஜைனி, பிரயாகை, ஹரித்வார் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் நடக்கும் கும்பமேளாக்களுக்கு ஒப்பான ஒரு கோயில் திருவிழாவாக இது தொடங்கியதாகத் தெரிகிறது.
🌟திருநாவாயா, அதன் பண்டைய இந்து கோவில்களுக்கு பெயர் பெற்றது.
🌟கோழிக்கோடு (கோலிகட்), சாமுத்திரிகள் (ஜாமோரின்கள்) இந்த இரண்டு இந்து தலைவர்களின் அனுசரணையின் கீழும், செலவிலும் இந்த விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
🌟இந்தக் பிரசித்தி பெற்ற விழாவானது சாமுத்திரிகளுக்கு ஒரு சமயப் பண்டிகையாக மட்டுமல்லாமல், கேரளாவின் மிக சக்திவாய்ந்த தலைவர்களாக அவர்களின் ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் இருந்தது.
🌟மாமாங்கத்தின் போது கங்கா தேவி பேராற்றில் இறங்கியதாகவும், அவரது அற்புதமான வருகையால் கங்கை நதியைப் போலவே புனிதமானதாகவும் நம்பப்பட்டது.
🌟புகழ்பெற்ற கும்பமேளா விழக்களைப் போலவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், இந்த விழாவானது மிகப்பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது.
🌟அரேபியா, கிரீஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளால் ஈர்க்கப்பட்டு, விறுவிறுப்பான நடந்த வர்த்தகத்தைத் தவிர, பல்வேறு வகையான தற்காப்புக் கலை மற்றும் அறிவுசார் போட்டிகள், கலாச்சார விழாக்கள், இந்து சடங்கு விழாக்கள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் திருநாவாயாவில் நடைபெற்றன.
🌟தொலைதூர இடங்களிலிருந்து வரும் இந்து யாத்ரீகர்கள், வர்த்தக குழுக்கள் மற்றும் பயணிகளும் மாமாங்கத்தின் மகிழ்வுடன் பயனை அனுபவித்து சென்றனர்.
⭐சரித்திர ஆசிரியர், திரு Duarte Barbosa "வயலில் சாரக்கட்டுகள் அமைக்கப்பட்டு அதன் மீது பட்டு தொங்கும் தொங்கும்" என்று குறிப்பிடுகிறார்.
⭐கோழிக்கோடு கிரந்தவாரி, மகாமகம் கிளிப்பட்டு மற்றும் கண்டரு மேனன் படப்பட்டு, கேரளாவில்பட்டி மற்றும் கேரளமகாத்ம்யா ஆகியவை மாமாங்கம் விழாவைக் குறிப்பிடும் முக்கிய பூர்வீக சரித்திரங்களாகும்.
🌟இத்திருவிழாவின் தன்மை, காலம் கிராங்கனூர் சேரர்களுக்கு (கி.பி. 800-1124 CE), முன்னும் பின்னும், புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கால அளவுகள் உறுதிப்படுத்தப்படாத அளவில் தொன்மையாக இருந்தது.
🌟சில ஆதாரங்களின்படி, கோழிக்கோடு தலைவரால் வேளாளர் தலைவரிடம் இருந்து திருநாவாயா கைப்பற்றப்பட்ட பிறகு, விழாவின் தன்மை சோகமான மாற்றங்களுக்கு உட்பட்டது.
🌟அன்று முதல், வழுவனாடு தலைவர்கள் சாமுத்திரியைக் கொன்று (அவரது உறவினர்கள் மற்றும் உறவினர்களுடன் தனிப்பட்ட முறையில் கண்காட்சியில் கலந்துகொண்டவர்கள்) மற்றும் திருவிழாவை நடத்துவதற்கான மரியாதையை மீண்டும் பெறுவதற்காக வீரர்களை அனுப்பத் தொடங்கினர்.
🌟இது இந்த இரு குலங்களுக்கிடையில் நீண்ட போட்டி மற்றும் இரத்தக்களரிக்கு வழிவகுத்தது.
🌟K. V. கிருஷ்ண ஐயரின் கூற்றுப்படி, கடைசியாக மாமாங்கம் திருவிழா 1755 CE இல் நடைபெற்றது.
🌟மைசூர் சுல்தானான ஹைதர் அலி (1766 CE) கோழிக்கோட்டைக் கைப்பற்றியதன் மூலமும், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியுடனான
ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தம் (1792) ஆகியவற்றுடன் மாமாங்கம் முடிவுக்கு வந்தது.
🌟சரித்திர புகழ்வாய்ந்த இந்த மகாமகம் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க நான்கு - ஐந்து இடங்களை தற்போது ஆய்வில் கண்டு அதை பாதுகாக்கும் முயற்சியில்,
கேரளா மாநில தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு அவ்விடங்கள் பராமரிக்கப்பட்டுவருகிறது.
10.8.24
🌟இவை திருநாவாய் பகுதியில் உள்ள இடங்கள்:
1.Nilapadu Thara (Vakayur platform) : நிலபாடு தாரா (வாகயூர் மேடை) :
Thirunavaya, Kerala 676108
🌼திருநாவாய் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் பிரதான சாலையில் உள்ள இடம்.
🌼மாமாங்கம் என்ற மாபெரும் திருவிழா நடைபெறும் இடம் இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 28 - 30 நாட்கள் வரை கொண்டாடப்படும்.
🌼இது ஒரு நீண்ட அகலமான திடல் போன்ற அமைப்பு. இது ஒரு உயரமான தளம் போல அமைத்துள்ளனர்.
🌼மாமாங்கம் திருவிழாவின் ஒரு முக்கிய பகுதி.
🌼 ஒரு அழகிய வரலாற்று இடம்,
🌼இந்த இடம், உலகெங்கிலும் உள்ள வணிகர்கள் பொன்னானி துறைமுகம் வழியாக கப்பலில் கொண்டு வரும் பொருட்கள் வைக்கும் களஞ்சியமாகும்.
🌼தற்போது கொடக்கல் டைல்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ளது.
🌼உள்ளே செல்ல வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.
🌼இடத்தின் காவலர் ஒருவர் உதவியுடன் சிறிய கதவு ஒன்றின் மூலம் உள்ள சென்றோம்.
🌼இந்த இடம் முழுவதும் செடி கொடிகள், மரங்கள் சூழ்ந்து உள்ளது.
🌼பழமையான, உயரமான மேடை போன்ற அமைப்பு. மற்றும் சில பெருங்கற்கள் உடைந்து சிதலமான நிலையில் சில உள்ளது.
🌼ஒரு கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அதை இரும்பு கம்பிவேலி போட்டு மூடி உள்ளார்கள்.
🌼Archaeology department இந்த இடத்தினை குறித்து வைத்துள்ள ஒரு அறிவுப்பு பலகையும் உள்ளது.
🌼சாலையில் ஒரு கைகாட்டி போர்டும் உள்ளது.
🌼இன்னும் பொதுமக்கள் வந்து பார்த்து இந்த இடத்தின் முக்கியத்துவம் உணர அரசு துணைநிர்க்க வேண்டும்.
10.8.24
2. MARUNNARA , மருன்னரா
Codacal Bharathiya Vidhya Bavan Road, 676301, Thirunavaya, Kerala.
திருநாவாய் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ தூரம். அருகில் மனிக்கினறு என்ற இடமும் உள்ளது.
கொடக்கல்-பந்தர் சாலையில் அமைந்துள்ளது. இது சாமுத்திரிகளால் போர்களில் பயன்படுத்த வெடிபொருட்களை சேமிக்க பயன்படுத்தப்பட்டது.
பிரதான சாலையில் வழி உள்ளது. சிறிய உள்நுழைவு பாதையில் உள்ளே சற்று தூரம் செல்ல வேண்டும். அதன் பின் திரும்பி 20 அடிகள் உயரம் சாய்வு படிகள் மூலம் ஏறி செல்ல வேண்டும்.
இந்த இடம் உயரம் செல்ல படிகள் உண்டு.
ஒரு பெரிய மேடை அமைப்பில் மேற்புறம் சிமிண்ட் போடப்பட்டு அமைத்துள்ளனர்.
கீழ்புறம் ஒரு குகை அமைப்பில் வழி உள்ளது.
இயற்கையான கற்பாறை போன்ற அமைப்பு . 10 அடியில் எதிரில் உள்ள சுவற்றில், 3 இடங்கள் குகை போல குடைந்து வெட்டி வைத்துள்ளனர்.
ஒரு கூண்டு போல உள்ளது.
வேறு எதுவும் இல்லை. சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.
நுழைவின் அருகில் ஒரு காவலர் உள்ளார்.
3. மணிக்கிணறு: MANIKKINAR
Alathiyoor - Kodakkal Rd, Kodakkal, Kerala 676108
🌟திருநாவாய் ஆலயத்திலிருந்து பிரதான சாலையில் மேற்கில் 1 கி.மீ தூரத்தில் உள்ள இடம். அருகில் மருன்னார என்ற இடமும் உள்ளது.
✨மாமாங்கம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்
✨பிரதான சாலையில் ஒரு போர்டு உள்ளது. வீடுகளின் சுற்றுச் சுவர்கள் இடையில் ஒரு சிறிய இரும்பு கேட் நுழைவு வாயில உள்ளது. இதன் வழியே உள்ளே செல்லலாம்.
🌟மணி போன்ற பெரிய கிணறு உள்ளது, அது மணிக்கிணறு என்று அழைக்கப்பட்டது.
🌟மாமாங்கம் சண்டைக்குப் பிறகு இறந்தவர்களின் உடல்களை வீசப்பட்ட பெரிய கிணறு இது.
🌟மணிக்கிணறு என்பது இறந்த வள்ளுவநாட்டு வீரர்களின் உடல்கள் (வெளிப்படையாக யானைகளால்) வீசப்பட்ட கிணறு ஆகும்.
⭐ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் வல்லுவ வீரர்கள் காலிகட்டின் ஜமோரின் கொல்ல வருகிறார்கள், ஆனால் அவர்கள் எப்போதும் ஜாமோரின் வீரர்களால் தோற்கடிக்கப்பட்டு உடல்கள் இந்த மணிக்கினரில் வீசப்படுகின்றன.
⭐மாமாங்கத்தின் போது இறந்த போர்வீரர்களின் புதைகுழி இது என்று கூறுகிறார்கள்.
🌟 சாமூத்திரியைக் கொன்று தியாகிகளாக மாற முயன்ற வள்ளுவநாட்டின் துறவிகள் (தற்கொலை வீரர்கள்) என்று நம்பப்படுகிறது.
🌟நீர் நிறைந்த, பெரிய அகலமான கினறு. சுற்றிவர இரும்பு கைப்பிடிகள் வைத்துள்ளனர்.
✨ நீள் வட்டப்பாதை கிணத்தை சுற்றி வரலாம்.
⭐மற்ற நினைவுச்சின்னங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டிடத்திற்கு அருகிலேயே ஏராளமான புதிய கட்டிடங்கள் உள்ளதால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பிரமாண்டத்தையும் பெரும் சண்டையையும் நினைத்து எழும் உணர்வுகளை வெகுவாகக் குறைக்கும் எண்ணம் ஏற்படுகிறது.
🌟மலப்புரத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தொல்லியல் துறை நினைவுச்சின்னத்திற்கு அருகில் அதிக நிலங்களை எடுத்திருக்க வேண்டும்.
.
4. Paḻukkāmandapam, பழுக்கமண்டபம்
பழுக்கமண்டபம் சாமுத்திரி அரச குடும்பத்தார் மாமாங்கம் திருவிழாவைக் காணும் இடம்.
திருநாவாய் ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் நதியை நோக்கியுள்ளது.
உயரமான அமைப்பில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து நதிக்கரையும், விழாவும் காணலாம்.
இதனை தற்போது இரும்பு படிகளில் ஏறி சென்று பார்க்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
5. Changampally Kalari , சன்கம்பள்ளி கலரி,
Thazhathara-Kuttippuram Road ல் உள்ள இடம்.
இங்கு போர் பயிற்சிகள், கலரி கற்றுத்தரும் இடம் மற்றும் காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவம் செய்யப்பட்ட இடமாகும்.
தற்போது ....
ஒரு பூங்கா போன்று அமைத்து பராமரிப்பில் உள்ளது.
நடுவில், ஒரு ஆலய கருவரை போன்ற ஒரு சிறிய கட்டிடம் உள்ளது. வழிபாடுகள் ஏதும் இல்லை இருப்பினும், முன்புறக் கதவின் முன்னால் உள்ள சிறிய தின்னை மன்டபத்தில் அகல்விளக்கு ஏற்று பூசை செய்து வணங்குகின்றார்கள்.
🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
நாங்கள் 10.8.2024 காலையில் பட்டாம்பியில் ஒரு Auto பிடித்துக் கொண்டு திருவித்துக்கோடு, பன்னியூர், திருநாவாய் முதலிய இடங்களை தரிசித்து விட்டு, மேலும், திருநாவாய் ஊரில் உள்ள மேற்கண்ட இடங்களுக்கும் சென்று விட்டு, குட்டிபுரம் பேருந்து நிலையம் மதியம் வந்து அடைந்தோம்.
அடுத்து பேருந்தில், குருவாயூர் செல்ல முடிவு செய்தோம்.
இவ்விடங்களுக்கு கூடவே அழைத்து சென்று பார்த்துவர பெரும் உதவி செய்த எமது நன்பர் திரு. J. கனேஷ் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் மிகவும் நன்றிகளும், வணக்கங்களும்.🙇🏻♂️🙏🏻
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
10.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐