நாள் - 9 3.06.24 - திங்கள்
Chaukauri to Bhimtal 209kms. 9-10hrs via #Patalbhuvanshwar
நாள் - 9 3.06.24 - திங்கள்
காலை 7.00 சௌகோரியிலிருந்து புறப்பட்டு, பாதாள புவனேஸ்வரர் - குகை தரிசித்து - மதிய உணவு முடித்து, வழியில் காஞ்சிதாம் பார்த்து பீம்தால் வந்து இரவு
உணவு முடித்து பீம்தால் தங்குதல்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#பாதல்புவனேஷ்வர்
🏵️புராணங்களில் பொதிந்துள்ள பாதால் புவனேஷ்வர், புகழ்பெற்ற சக்திபீடமான கங்கோலிஹாட் அருகில் உள்ள புனித யாத்திரை மையமாகும்.
🏵️அல்மோராவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் ஷெராகாட் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த மிகவும் பிரசித்தி பெற்ற குகை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
🏵️சிவபெருமானின் சன்னதி உட்பட பல நீண்ட உட்புறங்களுடன் குகை அமைந்துள்ளது.
🏵️சுண்ணாம்பு பாறை வடிவங்கள் பல்வேறு கண்கவர் ஸ்டாலாக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் உருவங்களை உருவாக்கியுள்ளன.
🏵️குகைக் கோயிலுக்குச் செல்லும் வழி ஒரு நீண்ட, குறுகிய சுரங்கப்பாதை வழியாக உள்ளது.
🏵️குகையின் உள்ளே, சுண்ணாம்புக் கற்கள் பல இந்து சமயக் கடவுள்களின் வடிவத்தைக் கொண்டுள்ளன. விநாயகர், சேஷ் நாக், கருடன், சிவலிங்கம் போன்றவற்றின் வடிவங்கள் தெளிவாகத் தெரியும்.
🏵️இமயமலை மத்தியில், புனிதமான குகை 33 கோடி தேவர்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் உள்ளதாக நம்பப்படுகிற பிரபலமான இடம்.
🏵️இந்த குகையின் ஒரு புள்ளி கைலாஷ் மலையில் திறக்கப்பட்டு, இங்கு பிரார்த்தனை செய்வதன் மூலம், சோட்டாசார் தாமிற்குச் செல்வதன் மூலம் அவர்கள் பெறும் அதே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
🏵️பாண்டவர்களும் தங்களின் வனவாசத்தின் போது இங்கு தபஸ்யம் செய்தனர்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🏘️#பாதல்புவனேஷ்வர்
தற்போது KMVN ஒரு Camp கட்டிடம் கட்டியுள்ளனர்.
❄️நாங்கள் 2022 ல் வந்திருந்த போது இருந்த கூட்டத்தை விட மிக அதிகக் கூட்டம் இப்போது இருந்தது.
🚗வாகனங்கள் சுமார் 1-2 கி.மீ.தூரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். குறுகிய பாதை Single Road எனவே வாகனங்கள் குகைவாசல் வரை செல்ல முடியாது. வாகனங்களில் இருந்து இறங்கி 2 கி.மீ. தூரம் சென்று குகையை உள்ளே சென்று தரிசித்தோம்.
🎎மிகவும் அதிகமான கூட்டம் இருந்தது.
நாங்கள் குழுவாக சென்றதால், எங்கள் KMVN Guide எல்லோருக்குமாக சேர்த்து கட்டணம் செலுத்தி Group Group ஆக சென்று தரிசனம் செய்ய வைத்தார்.
👨🏻🍼தனியாக செல்பவர்கள் குகை முன்பு உள்ள Reception Counter சென்று பதிவு செய்து தரிசித்து வரலாம்.
👢காலனிகள் அணியாமல் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே நீர் அமைப்பு உள்ளதால் பல இடங்கள் ஈரமாகவே எப்போதும் இருக்கும்.
🪜சுமார் 90 - 100 அடி குகை உள்ளே செல்ல வேண்டும்.
⛓️இரும்பு சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து அல்லது மிகவும் நன்றாக குனிந்து மட்டுமே செல்ல முடியும்.
🛑மிகவும் உடல் உபாதைகள் உள்ளவர்கள்.
வயதானவர்கள் செல்வது மிகவும் துனிச்சலான சவால் நிறைந்தது. அல்லது தவிர்த்துக் கொள்ளலாம்.
🥨உள்ளே ஒரே சமயத்தில் சுமார் 30 - 40 பேர்கள் வரை இருக்க முடியும். அவர்கள் தரிசித்து முடித்து மேல ஏறிவந்த பிறகே அடுத்த குழு செல்லலாம்.
🔦உள்ளே மின் விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
😀எங்கள் குழுவில் ஏற்கனவே 2022 இங்கே வந்து தரிசித்த அனுபவத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🎡உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள குகைக் கோவில் பாதால் புவனேஷ்வர் குகை மிகவும் பிரபலமானது.
🌐உலகத்தில் இது போன்ற இடங்கள் 4-5, தான் உள்ளது என்று கூறுகிறார்கள்.
🛣️காஷ்மீரில் உள்ள சிவகோரி என்ற இடம் (வைஷ்ணவ தேவி யாத்திரையில் தரிசிக்கும் வாய்ப்புக்கிடைத்தது) மற்றும்,
நேப்பாள் - பொக்கரா வில் உள்ள குப்தேஷ்வர் (இதையும் இரண்டு முறை - முக்திநாத் பயணங்களில்.. 2019, 2023 தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது).
🌆 மேலும், அசாம் பகுதில் ஒன்று உள்ளதாகக்கூறுகிறார்கள்.
மற்றொரு இடம் இந்தோனேஷியாவில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
🌇பாதால் புவனேஷ்வர் மிகப்பெரிய குகையாகும். நாங்கள் ஏற்கனவே உத்திரகண்ட் யாத்திரை 2022 ல் வந்திருந்த போது, 10.04.222 அன்று இந்த குகையை தரிசித்து இருந்தோம். அதன் அனுபவக் குறிப்புகளை மீண்டும் தருகிறேன்.
🟥🔴🟧🟠🟨🟡🟩🟢🟦🔵🟪🟣🟫🟤⬜⚪
⚪⬜🟤🟫🟣💜🔵🟦🟢🟩🟡🟨🟠🟧🔴🟥
https://www.facebook.com/share/p/X7Mk47gCNEuJSGPq/?mibextid=oFDknk
#பாதாள்புவனேஷ்வர் :
#uttrakant_tour_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
🛕#பாதாள்புவனேஷ்வரர்
(10.04.2022)
🌍நாங்கள் ஜாகேஸ்வரர் தரிசித்து விட்டு, மலைப்பாதையில் அடுத்து சென்ற இடம்
பாதாள் புவனேஷ்வர். இயற்கையாகவே அமைந்த உலக அதிசய ஆன்மீககுகை.
🪱உத்திரகாண்ட் மாநிலத்தில், கங்கோலிகட் (Gangolihat) என்ற இடத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🌟முப்பத்து முக்கோடி தேவர்கள் கொண்ட ஆன்மீக குகை. 160 மீட்டர் நீளம் 90 அடி ஆழம் கொண்டது. கருங்கற்கள் பாறைகளால் இயற்கையாக உருவாகிய உருவங்கள்.
🌌மிகக் குறுகிய, செங்குத்து பாதையில் உள்ளே இறங்கினால், மிகப் பெரிய குகை. பெரும்பாலான இடங்கள் முழுவதும் மின்வசதி செய்யப்பட்டுள்ளதால், ஒரளவு வெளிச்சத்தில் உள்ளது.
✨குகைக்குள் குகையாக உட்பகுதியில் பல குகைகள் இயற்கையாகவே அமைந்துள்ளது.
💫ராம் கங்கா, சராயு, குப்த கங்கா என்ற புன்னிய நதிகள் இணைந்த இடம் இந்தப் பகுதி.
⭐திருதாயுகத்தில், சூரியவம்சத்தில் பிறந்த, ருதுபூரணா என்னும், அயோத்தியின் அரசர், ஒரு முறை காட்டில் ஒரு மானை துரத்தி சென்று களைப்படைந்து, ஒரு மரத்தடியில் ஓய்வில் இருக்கும் போது, கனவில் வந்த அந்தமான் தன்னைத் தொடர வேண்டாம் என்று கூற, அவர் கண்விழித்து அருகில் இருந்த குகைவாசலை அடைந்தார். அங்கு காவல் இருந்த, நாகராஜாவை அனுமதி கேட்க, குகையின் எல்லாப் பகுதிகளையும் அவரால் தரிசனம் பெற்றார். அந்த குகையில் இருந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் தரிசனம் செய்து, சிவதரிசனமும் பெற்றார். அதன் பிறகு, குகை முடப்பட்டுவிட்டது.
🌟துவாபரயுகத்தில், மகாபாரத காலத்தில்,
பாண்டவர்கள் இந்த குகையில் உள்ள தெய்வங்களை வணங்கி, இதன் வழியாகவே இமயமலை சென்றார்கள் என்று நம்பப்படுகிறது.
⭐ஸ்கந்தபுராணத்தில், இவ்விடத்தின் சிறப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
⭐கலியுகத்தில், (1191) 718 ம் ஆண்டில், ஆதிசங்கரர் முதன்முதலில் இந்த இடத்தைக் கண்டு வழிபட்டு, இதன் பின் இமயம் சென்றதாக நம்பப்படுகிறது.
ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார். அங்கே உள்ள சுயம்பு லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்) பூஜித்து அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது. இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக பூஜிக்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
🌈'1941 ல் சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.
🏯அதன் பிறகு எழுபதுகளில் ராணுவ அதிகாரி ஜெனரல் டெயிலர் என்பவரின் கனவில் தோன்றி அவருக்கு ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அவர் தன் பணி நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன் கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார். பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான இடமாயிற்று.
🌍இதற்குப் பிறகே, நவீன உலகிற்கு, இந்த இடத்தின் புனிதத்தன்மையும், புராணமும் வெளிப்பட்டது.
🛕 ' குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.
🪱குறுகலான, குகைப் பாதையில், அமைக்கப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளின் உதவியால் உள்ளே 90 - 100 ஆழம் இறங்க வேண்டும்.
⚡இருள் நீக்கி ஒளிரும் மின் விளக்குகளால், இந்த இடம் இப்போது அனைவரும் சென்று தரிசனம் செய்ய முடிகிறது.
🌻கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில், மறைந்து கிடக்கும் இந்த குகையில் முக்கிய தெய்வமாக சிவபெருமான் உள்ளார். மேலும், உலகத்தில் உள்ள அனைத்து இந்துமதக் கடவுள்கள், புராண நம்பிக்கைகள், நடைமுறை வழிபாடுகளின் உள்ள உருவங்களைக் கண்களால், நேரடியாகவே காண முடியும் என்று நம்புகிறார்கள்.
🌳உலக இயற்கையின் ஆன்மீக அதிசயங்களில் ஒரு முக்கிய இடம்.
💫காலபைரவரின் நாக்கு, ஐராவதம், சிவபெருமான் தலை முடியிலிருந்து கங்கை ஊறிவருவது, முதலியவைகள், பேரதிசியக் காட்சியாக உள்ளது.
🔴சிவபெருமானால், விக்னேஸ்வரனின் தலை வெட்டப்பட்டு உள்ள காட்சி,
🟠பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன்,
🟡கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு
🟢தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு,
🔵அதற்கு முன்னால் கபால மாலைகளோடு சிவனின் இருப்பு,
🟣கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை,
🟤ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம்
⚫அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும்,
⚪பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன் பார்வதி,
🔴சிவனின் கமண்டலம்,
🟠சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர்,
🟡கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை லிங்கங்கள்
🟢தலை வெட்டப்பட்ட கணபதி,
🔵உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை சொட்டும் அஷ்ட இதழ் கொண்ட தாமரை.
🛕கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும் பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம். அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை.
🌎இந்திரலோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.
🏔️ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும் லிங்கம் மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கமாக இருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது குகையின் உச்சியைத்தொடுகிறதோ அப்போது கலியுகம் முடிந்து விடுமாம். இதன் பின்னால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.
🌟அத்தனையும் இங்கே சுயம்புவாய் உருவாகியிருக்கிறது.
💫மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.
🌟இவற்றை கற்பாறைகளில் ஏற்பட்ட தோற்றம் என நம்பவே முடியாது. மென்மையான சதை ரூபம் காண்பது போல் தத்ரூபமாய்த் தெரியும்.
✨இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம்.
⭐இந்த குகையிலிருந்து, உத்ரகாண்ட், மாநிலத்தில் உள்ள சார்தாம் என்று அழைக்கப்படுகின்ற, முக்கிய இடங்களான, யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரம், பத்திரி முதலிய இடங்களுக்கும், குகைப்பாதைகள் உண்டு என்றும் கூறுகிறார்கள்.
🛕ஆதிகைலாஷ் செல்லும் பாதையில் இந்த ஊர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🌈இந்த குகைக்குள் நான்கு வழிகள் உண்டு என்றும், இந்த வழிகள் அந்தந்த காலகட்டங்களில் மூடப்பட்டுவிடும் என்றும் நம்புகிறார்கள்.
⭐இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதாவது:
💫முதல் கதவு பாவப்பாதை. ராவண வதத்திற்குப்பின் இது மூடப்பட்டு விட்டது.
💫அடுத்தது ரணப்பாதை (way to war) இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது.
💫இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது. ஒன்று தர்மப்பாதை.
இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும்.
💫மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும் மோட்சப்பாதை.
💫இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம்.'
🌟 பல நூறு வருடத்திற்கு முன்பாக இந்த பிரதேசத்தைச் சேர்ந்த அரசவம்சத்தினர், காசியிலிருந்து வரவழைத்த பண்டாக்கள் மூலம் இவ்வால பூசைகள், ஹோமங்கள் செய்ய நியமித்துள்ளார். இவர்கள்,
சுமார் 10 தலைமுறைகளாக, இவ்விடத்தை, பாதுகாப்பாகவும், வழிபாடுகள் நடத்தியும், அன்றாட பூசைகள் செய்தும், பாதுகாத்து வருகிறார்கள்.
🪱உள்ள சென்று எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டி விளக்கம் கூற நமக்கு உதவி செய்வதற்கு வழிகாட்டிகள் உள்ளனர். அவர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்ப்பதே மிகவும் நல்லது.
🪱குறைக்குள் தனியாக செல்லமுடியாது.
⚡இந்த ஊர் மிகச்சிறிய ஊர். தங்குவதற்கும், உணவு, தங்குமிடங்கள் முதலியவைகளுக்கும் அருகாமையில் உள்ள Gangolihat, அல்லது, Chaukori (37 கி.மீ) சென்றுவிடலாம். அங்கு வசதியான Hotelகள் உள்ளன.
🌟இமாலய View பகுதியாக இருப்பதால், இங்கிருந்து நந்ததேவி முதலிய இமாலய சிகரங்கள், மலைக்காட்சிகள் அற்புதமாக தெரிவதால், நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
✨குறுகலான மலைப்பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது. இப்பகுதி நல்ல
வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
🌼ஊரின் ஒரு பகுதியில் இந்தக்குகை அமைந்துள்ளது. Car, Bus, வாகனங்கள் தனியாக நிறுத்திவிட்டு, சுமார் 500 மீ. நடந்து செல்ல வேண்டும்.
🍁குகை செல்லும் பாதைக்கு முன்பு ஒரு சிறிய ARCH உள்ளது, பாரததேச மன்னுயிர் காப்பதற்கு, தன்னுயிரைத் தந்த ரானுவ அதிகாரியின் நினைவில் சிலையும், வளைவும் வைத்துள்ளமை போற்றுதலுக்குரியது. இந்த ARCH லிருந்து சுமார் 100 mts. ல் குகை நுழைவுப்பாதை அமைந்துள்ளது.
🛑மேலும் கவனம் செலுத்த வேண்டிய குறிப்புகள்:🛑
🛑குகையின் நுழைவுப் பகுதி மிகவும் குறுகலானது. சுமார் 100 அடி ஆழத்தில் இக்குகைகள் இருப்பதால், ஒவ்வொறு நபராகத்தான் உள்ளே நுழைய முடியும்.
🛑குனிந்து, உட்கார்ந்து மெதுவாக, நிதானமாக, ஒரு புறம் பினைக்கப்பட்டு இருக்கும் இரும்பு சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இறங்கவேண்டும்.
🛑கற்பாறை பாதைப்படியாக இருப்பதாலும், நீர்பிடிப்பு பகுதியாகவும், அடர்ந்த இருள் பகுதியாகவும் இருப்பதால், வழிகாட்டிகள் கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
🛑சில இடங்கள் நீர் பகுதி இருப்பதாலும், பாறையாக இருப்பதாலும், பல இடங்கள் வழுக்குகின்றது.
🛑மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்வது அவசியம் நல்லது.
🛑சில இடங்களில் தலைமட்டத்திற்கு கீழ் பாறைகள் தொங்குகின்றன. நிதானமாக எல்லாபுறங்களும் பார்த்து நடக்க வேண்டும்.
🛑குகையில் மின்வசதி இருப்பதால் வெளிச்சம் உள்ளது. வழிகாட்டி Torch கொண்டும் விளக்குகிறார் (HINDI யில்).
🛑குகையில் குறைந்தபட்சம் சுமார் 30 நிமிடங்கள் இருப்பதால் சற்று குளிர் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள் முன் எச்சரிக்கை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. நல்ல குளிர் காலத்தில், ஆஸ்த்மா, இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேன்டி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
🛑குகைக்கு உள்ளே சுமார் 30 - 40 பேர்கள் வரை மட்டுமே இருக்க முடியும். அதற்காக, குழு குழுவாக அனுப்புகிறார்கள். இறங்கவும், வெளியேறவும் ஒரே வழிப்பாதை என்பதால், உள்ளே இருப்பவர்கள் வெளியில் வந்த பிறகு புதியவர்களை அனுப்புகிறார்கள்.
🛑பெரிய பை, சுமைகள் அறவே தவிர்க்க வேண்டும். Cell எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
⚡காலனிகள் தடை உண்டு.
⚡நுழைவுக் கட்டணம் உண்டு.
⚡குகை நுழைவுவாயிலில் பொருட்கள் பாதுகாப்பு இடமும் உள்ளது.
🌍பாதாள் புவனேஷ்வர் ஒரு அதிசய ஆன்மீகத்தலம். இந்த பதிவில் பல தகவல்கள் அளித்து இருந்தாலும், இந்த குகையை நேரில் கண்டு வந்தால்தான் இயற்கையின் அற்புதம் உணர முடியும்.
🌎வசதியும், வாய்ப்பும் கிடைத்தால், நிச்சயம் இப்படிப்பட்ட இடங்களை தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும்.
🌼நான் ஒரு video இணைத்துள்ளேன்.
என் நண்பர் அனுப்பியது. அதிக நீர் பிடிப்பு சமயத்தில் எடுத்த video.
நாங்கள் சென்றபோது, இவ்வளவு நீர் கசிவு இல்லை. குகையின் பல பகுதிகள் சற்றே ஈரமாக இருந்தன. மின் விளக்கு வெளிச்சமும் நன்றாக இருந்தது.
🌻எங்கள் சுற்றுலா இயக்குனர், திரு பாலு அவர்கள் நியமித்து இருந்த வழிகாட்டி நல்ல நிதானமாக விளக்கினார்.
🌻இதை தரிசித்துவிட்டு,Chaukori என்ற ஊர் சென்று Hotel HIMSHAHAR லில் இரவு தங்கினோம்
🙏'அவன் அருளாளே...
அவன் தாள் வணங்கி...'🙇🏼♂️
🙏தகவல்கள் உதவி :
wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(10.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼♂️
#ஆலயதரிசனம்
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🟥🔴🟧🟠🟨🟡🟩🟢🟦🔵🟪🟣🟫🟤⬜⚪
⚪⬜🟤🟫🟣💜🔵🟦🟢🟩🟡🟨🟠🟧🔴🟥
பாதால் புவனேஷ்வர் தரிசித்து பின் அங்கே அருகில் உள்ள மிகவும் புராதான மான சிவன் ஆலயம் சென்று தரிசித்து வந்தோம்.
விருத்த புவனேஸ்வரர் ஆலயம்
🏞️இதே ஊரில் உள்ள புராதான சிவன் ஆலயம் - விருத்த புவனேஸ்வரர் ஆலயம். (புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன) .
🏚️ஒரு சிறிய கட்டிடத்தில், MUSEUM வைத்துள்ளார்கள்.
🎪ஆலயம் கருவரை மற்றும் பிரகாரம்,
மற்ற சன்னதிகள் எல்லாம் கருங்கற்கள்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயம்.
🛕தற்போது இந்த ஆலயத்தை செப்பனித்துக் கொண்டு வருகிறார்கள்.
கருவரையில் மிகச்சிறிய லிங்கம் உள்ளது இதை தரிசித்து வந்தோம்.
🏠புதிய கட்டிடத்தில், KMVN TR Camp உள்ளது. அங்கு சென்று,மதிய உணவு உண்டு பிறகு பீம்தால் புறப்பட்டோம்.
🍮அல்மோரா என்ற நகர் அருகில் வரும் போது வழியில் உள்ள Hotel லில் மாலை Coffee Snaks எடுத்துக் கொண்டோம்.
🍰அல்மோரா அருகில் Sweet வாங்கிக் கொண்டோம்.
💧வரும் வழியில் நல்ல மழை சிறிது நேரம் பெய்ததது.
🎪காஞ்சிதாம் என்ற ஊரில் உள்ள
#வேம்புகரோலிபாபாஆசிரமம்,
வந்து சேர்ந்தோம். ஆலயம் கூட்டம் அதிகம் இருந்தது. மேலும், மாலை 6.30 - 7.00 க்குள் பூசை முடிந்து உட்புறம் பூட்டிவிட்டார்கள். வெளியில் இருந்து தரிசனம் செய்து கொண்டோம்.
🎡பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் Bimtal வந்து சேர்ந்தோம். இங்குள்ள KMVN TRH ல் இரவு உணவு எடுத்துக் கொண்டு, தங்கினோம்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
No comments:
Post a Comment