பதிவு - 13
நாள் - 7 மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம்
Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms.
9 - 10 hrs.
நாள் - 7
01.06.24 - சனி
காலை 6.30 காலை டீ, மற்றும் குன்ஞ்ஜியில் KMVN Camp ல் காலை டீ, காலை உணவு முடித்து, Bolero Camper ஜீப் மூலம் புறப்படுதல்.
வழியில் நபி, Kutti, கிராமங்கள் கடந்து, பிரம்மபர்வத் தரிசனம் அங்கிருந்து,
ஜியோலிங்காங் சென்று ஆதிகைலாஷ், பார்வதி சரோவர், பார்வதி முகுட், பாண்டவர் பர்வத்,
கெளரி குண்ட்,
தரிசனம் செய்து
Jyolingkong (ஜியோலிங்காங்) KMVN yatra Campல் மதிய உணவு.
மாலை 5.00 திரும்பி வந்து #BUDHI #புந்தி KMVN Yatra Camp வந்து இரவு தங்குதல்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
காலை 7.00 மணிக்கு ஜீப்பில் புறப்பட்டு வழியில் நபி - மலைகிராமம், அடுத்து குட்டி
Kutti.
இதுவே, இந்தியாவின் கடைசி கிராமம் என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கு Indo-Tibetian Border Security Police Camp உள்ளது
நம்முடைய Permit Checking இங்கு உண்டு.
பிரம்மபர்வத் ( மலை சிகரம்) தரிசனம் பிரதான சாலையில் செல்லும்போது, நின்று தரிசனம் செய்கிறார்கள்.
ஜியோலிங்காங்.
இந்த இடமே பாரத எல்லையில் கடைசிப்பகுதியாகும்.
🌟இந்துக்களுக்குப் புனிதமான,
கௌரி குண்ட் (ஜோலிங்காங் ஏரி) மற்றும் பார்வதிதால் பனிப்பாறை ஏரிகள் ஆதி பர்வத்தின் அடிவாரத்தில் உள்ளன.
🏝️பல வழிகளில் திபெத்தில் உள்ள கைலாஷ் மலையின் பிரதியாகும்,
குறிப்பாக தோற்றத்தில்.
🇮🇳ஆதி-கைலாஷ், இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ள இந்தியப் பகுதியில் உள்ளது,
🏝️இது இயற்கை அழகு, அமைதி மற்றும் அமைதியின் ஒரு பகுதியாகும். நகர்ப்புற வாழ்க்கையின் இடைவிடா பிரச்சனைகளில், சோர்வடைந்த ஆண்களும் பெண்களும் இங்கே ஒரு குணப்படுத்தும் அமைதியைக் காண்பார்கள்.
💥உள்நோக்கிப் பார்ப்பதற்கும் ஒருவரின் உள்நிலையுடன் உரையாடுவதற்கும் உகந்தது.
💧கைலாஷ் மலையின் அடிவாரத்தில் கௌரி குண்ட் உள்ளது, அதன் நீர் மலையையே பிரதிபலிக்கிறது.
🏞️அருகில் பார்வதி சரோவர் உள்ளது,
இது 'மானசரோவர்' என்றும் அழைக்கப்படுகிறது, சரோவரின் கரையின் மீது உள்ளூர் மக்கள் சிவன் மற்றும் மாதா பார்வதியின் கோவிலைக் கட்டியுள்ளனர்.
🌼சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்த பிறகு, குஞ்சியில் உள்ள இந்திய சாதுக்கள் அல்லது யாத்ரீகர்கள் இங்கு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, இந்த புனித மலையை தரிசனம் செய்வதற்காக 14,364 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள குட்டியைத் தொடர்ந்து ஜியோலிங்காங்கிற்குச் சென்றனர்.
🌟ஆதி கைலாஷ் அல்லது சிவ கைலாஷ் ஓம் பர்வத்திலிருந்து வேறுபட்ட திசையில் அமைந்துள்ளது. ஆதி கைலாஷ் சின் லா கணவாய்க்கு அருகில் மற்றும் பிரம்ம பர்வத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
🌼ஆதி கைலாஷின் அடிப்படை முகாம் குத்தி பள்ளத்தாக்கில் உள்ள குத்தி (குடி) கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் புனித ஜோலிங்காங். உலகெங்கிலும், இமயமலையின் உத்தரகாண்ட் பகுதி மட்டுமே பாரம்பரியமாக ஆன்மீக விழிப்புணர்வைத் தேடி மனிதகுலத்தை ஈர்த்தது. உள்ளது.
🌼 ஆதிகைலாஷ் மலையை ஜோங்லிங்கோங் கொடுமுடி என்றும் அழைப்பர்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
💥ஜியோலிங்காங் (4630 mts.)
சென்று ஆதிகைலாஷ், சென்ற பிறகு பார்வதி சரோவர், பார்வதி முகுட், கெளரி குண்ட், பாண்டவர் பர்வத் தரிசனம் செய்ய குதிரைகள் ரூ 3000/- வாடகைக்குக் கிடைக்கின்றன. வயதானவர்கள், நேரம் குறைவாக இருக்கும் சூழல் பொறுத்து குதிரையில் சென்று வரலாம்.
💥பார்வதி சரோவர் 3 கி.மீ தூரம் ஒரு பக்கமும், வேறுபுறம் 3 கி.மீ. கெளரி குண்ட் செல்ல வேண்டும். குதிரையில் சென்றால், இரண்டு இடங்களையும் விரைவாக தரிசனம் செய்து விடலாம்.
💥பார்வதி சரோவர் வரை நடந்து சென்று, அங்கு சிறிய முன்மண்டபத்துடன் கூடிய கருவரையில் சுவாமி அம்பாள் சிலை வைத்து பூசை செய்கிறார்கள்.
💥 தரிசனம் செய்து பின் திரும்ப வந்து, ஒரு மலை குன்று கடந்து ஆதிகைலாஷ் முன்பு உள்ள கெளரி குண்ட் அருகில் உள்ள சிறு ஆலயம் (லிங்கம் + சூலம்) உள்ள இடம் வரை சென்று திரும்புகிறார்கள்.
💥நாங்கள் இவ்வாறு மலையில் நடந்து சென்று, குன்றின் மீது ஏரி கெளரி குண்ட் ஆலயம் அடைந்தோம். சிலர் குதிரையில் சென்று தரிசித்து வருகிறார்கள்.
💥குதிரையில் செல்பவர்கள் கௌரி குண்ட் வரை சென்று திரும்புகிறார்கள்.
இந்த இடங்களில் தட்ப வெட்ப நிலைக்கு தக்கவாறு மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர்.
🌼இங்கும் Indo-Tibetian Border Security Police Camp உள்ளது
💥நாங்கள் ஜியோலிங்காங் ஜீப்பில் சென்று இறங்கியதும், அங்கிருந்தே Chota Kailash என்ற அந்த இடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த இந்து சாது ஒருவரின் அமைப்பை சார்ந்தவர்களால், இலவச குடிநீர் - Tea Bisaits- Snakes வழங்கப்பட்டு வருகிறது. அங்கு கொடுத்த Snaks மற்றும் Tea குடித்தோம்.
🛐நாங்கள் இந்த இடங்களுக்கு சென்று வந்த போது, மிக அருமையான வானிலை இருந்ததால், தரிசனம் மிகவும் நன்றாக அமைந்தது, இறைவனின் பேராற்றலே.
💥அந்த இடம் எங்கள் Camp Room உள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் உள்ளே இருந்தது. இங்கிருந்து இரண்டு இடங்களையும் காணலாம். பொதுவாக இந்த இடங்கள், வெட்டவெளியாகும். மனிதர்கள் தொடர்ந்து வசிக்கவில்லை. மழை குளிர்காலத்தில் கீழே இறங்கி விட வேண்டும். ராணுவ பிரிவு ஜவான்கள் மட்டுமே இங்கே தொடர்ந்து காவல் பணியில் உள்ளார்கள்.
💥பெரிய அளவில் எந்தவித கட்டிங்களும் கிடையாது. ITBP Camp மற்றும் KVMN ன் Rest house மற்றும் Camp Tent மட்டும் உள்ளது.
💥நாங்கள் இங்குள்ள, ஆதிகைலாஷ், பார்வதி சரோவர், பார்வதி முகுட், கெளரி குண்ட், பாண்டவர் பர்வத் முதலிய இடங்களை சென்று நன்றாக, தரிசித்த பிறகு, ஜியோலிங்காங் பகுதியில் அனைவரும் இந்த யாத்தரா ஏற்பாட்டாளரும், SUJANA TOUR Admin ஆகிய, எங்கள் பாசத்துக்குரிய பாலு அண்ணா என்ற S.R.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பூசைவழிபாட்டில் ஒருங்கிணைந்து கலந்து கொண்டு உண்மையான வழிபாட்டை செய்து கொண்டோம். இதற்கென பூசைப்பொருட்கள் முன்னதாக ஏற்பாடுகள் செய்து எடுத்து சென்றிருந்தோம்.
💥இதற்கு பின், KMVN Camp சென்று மதிய உணவு உட்கொண்டு புந்தி புறப்பட்டோம்.
நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
No comments:
Post a Comment