Thursday, July 18, 2024

பதிவு: 18 நிறைவு பகுதி Bhimtal to kathagodam 21kms.45mts. . நாள் - 104.06.24 - செவ்வாய்

பதிவு: 18 நிறைவு பகுதி
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
Bhimtal to kathagodam 21kms.45mts.
நாள் - 10
4.06.24 - செவ்வாய்
காலை 8.00 பீம்தால் காலை உணவுடன் புறப்பட்டு காத்கோடம் ரயில் நிலையம் வந்து ரயிலில் டெல்லி சென்றடைதல்.
இரவு 9.05 நியுடெல்லி தமிழ்நாடு Express புறப்படுதல்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🏞️நாங்கள் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு உத்திரகாண்ட் ஆன்மீக சுற்றுலா வந்த போது , நயினிட்டால் மற்றும் பாபாஜி குகை, ஜாகேஸ்வர், கொலு மாதா, பாதாள புவனேஸ்வர், மற்றும், பைஜிதாம், முதலிய பல்வேறு இடங்கள் பார்த்து விட்டு, ரிஷிகேஷ், ஹரிதுவார் தரிசித்து டெல்லி வந்தோம்.

🏝️இந்த முறை ஓம்பர்வத், ஆதிகைலாஷ், தரிசித்து விட்டு, 3.06.24 அன்று, மீண்டும் பாதாளபுவனேஸ்வர் தரிசித்த பின் Bhimtal வந்து KMVN Tourist Rest House ல் இரவு உணவு முடித்துக் கொண்டு, தங்கினோம்.

#Bhimtal
🍁பீம்டால் நகரம் புகழ்பெற்ற நயினிட்டால் (51 சக்தி பீடத்தில் ஒன்று. பார்வதியம்மனின் கண்கள் விழுந்த இடம்) நகருக்கும் முற்காலத்திய நகரம்
பீம்டால் என்று கூறப்படுகிறது. 

🌺நயினிடாலிலிருந்து 22 கி.மீ அருகில் உள்ளது பிம்டால் நகரம், 

💧கடல்மட்டத்திலிருந்து 1370 மீட்டர் உயரம் உடையது. 

⚜️பீம்டால் ஏரி புகழ் பெற்றது. 

⚜️மகாபாரதத்தில் வரும் பீமன் பெயரில் உள்ளது. வனவாசத்தில் இந்த ஏரியை உருவாக்கியதாக புராணம்.  

🛕இந்த ஏரியின் கரையில் பீமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

🌸பீமேஸ்வரர் ஆலயம் அருகில் புகழ் பெற்ற நதி கோலாநதி உருவாகிறது.
'
🍁அருகில், நள புராணத்தில் வரும், நளதமயந்தி ஏரி, சந்தால் ஏரி, முதலிய பல்வேறு இடங்கள் உள்ளன. 

🌟பீம்டால் வழியாக நெடுங்காலமாக, நேப்பாள், மற்றும், தீபெத் செல்லும் வழி உண்டு. இப்போதும், ஆதிகைலாஷ், 
ஓம்பர்வத் சென்று வருகிறார்கள். 

🟢சென்ற பயணத்தில், 8.04.2022 அன்று BHIMTAL அருகில் உள்ள போவாளி Bhowali என்ற ஊரில் தங்கினோம். அப்போது மாலையில் BHIMTAL அருகில் உள்ள
Nakuchiyatal*என்ற ஊரில் உள்ள HANUMAN TEMPLE சென்று வந்தோம்.

#Nakuchiyatal :

❄️பீம்டால் அருகில் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஏரி ஒன்பது கரை நுனிகளைக் கொண்டிருப்பதால், இப்பெயர். 

#HANUMAN_TEMPLE_Nakuchiyatal 

🌻இந்த ஆலயம் Bhimtalலிலிருந்து Nakuchiyatal செல்லும் வழியில் 
பிரதான சாலை ஒட்டியே அமைந்துள்ளது.
மிகப்பெரிய அனுமான் சிலை. உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள மிக உயரமான அனுமான் சிலைகளில் இதுவும் குறிப்பிடத்தக்கது. 

🏵️ஆலயம் மேல்பகுதி, பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது. ஆலயக் கட்டிடம் உள்ளே இறங்க படிகள் உள்ளது. 
இந்த ஆலயத்தை அமைத்து பராமரித்துவரும், BHAKTHI DHAM TRUST,
Hanuman Salia என்னும் பக்தி நூல் கொண்டு, முற்றோதல் செய்யப்படுகிறது. இதற்காக பெரிய விழா எடுத்து நடத்துகிறார்கள். இங்கும் பக்தர்கள் தங்கும் இடங்கள் உள்ளன. 

🏞️நாங்கள் இந்த முறை Bhimtal வந்து KMVN Tourist Rest House ல் தங்கினோம். Bhimtal ஏரிக்கரையில் இந்த Hotel அமைந்துள்ளது. ஏரியின் View எப்போதும் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பதற்காகவும்,
மிகவும் வசதியாக ஓய்வு கொள்ளுவதற்கு தக்கவாறு அமைந்துள்ள இடம்.

🟪4.06.24 செவ்வாய் அன்று காலை உணவு முடித்துக் கொண்டு காத்கோடம் உடனடியாக புறப்பட்டோம்.  
நாங்கள் இன்று இரவு டெல்லியில் , இருந்து நேரடியாக சென்னை திரும்ப ஏற்பாடுகள் முன்னமே செய்திருந்தபடியால், KMVN மூலம் செய்யப்பட்டிருந்த இந்த ஆதிகைலாஷ், ஒம்பர்வத் யாத்திரையை இத்துடன் முடித்துக் கொண்டோம். 

🏠 பயணம் துவங்கும் காத்கோடத்திற்கு வருவதற்கும், இங்கிருந்து சென்னை திரும்ப செல்வதற்கும் திரு பாலு அண்ணா Sujana Tours, Chennai அவர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

#கத்கோடம் #Kathgodam
💥கத்கோடம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹல்த்வானி நகரின் புறநகர்ப் பகுதியாகும்.

🏵️இது ஹல்த்வானி-கத்கோடம் என்ற இரட்டை நகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது, ஹல்த்வானி நகருக்கு வடக்கே உள்ளது. 

💥 பீம்டாலில் KMVN Tourist Rest House லிருந்து காலை உணவு முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு, காலை 8.00 மணி அளவில் காக்கோடம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

🟡கத்கோடம் ரயில் நிலையம் மூன்று முறை தூய்மையான ரயில் நிலையம் என்ற விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

(மேலும் சில குறிப்புகள் பதிவு - 3 ல் விபரம் கொடுத்துள்ளேன்).

🚉காலை மணி 8.40 அளவில் புறப்படும் காத்கோடம் - டெல்லி ரயில் முன்பதிவு செய்திருந்தோம் அதில் புறப்பட்டு 4.06.2024 அன்று மாலை 3.30 மணி அளவில்நாங்கள் (old) டெல்லி ரயில் நிலையம் சென்று சேர்ந்தோம்.

🍱வழியில் எங்களுக்கு Sujana Tours திரு பாலு அண்ணா அவர்கள் அனைவருக்கும், மதிய உணவு ஏற்பாடுகள் செய்து கொடுத்திருந்தார்கள்.

⛈️டெல்லி வந்தபோது பெரும்மழை பெய்தது. 

✈️டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல, சிலர் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். 

🚉நாங்கள் நியுடெல்லி - சென்னை செல்ல தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் முன்பதிவு செய்திருந்ததால், பழைய டெல்லி ரயில்நிலையத்திலிருந்து Auto (Rs.150) மூலம் New Delhi Station வந்து சேர்ந்தோம்.

4.06.2024 செவ்வாய் இரவு 9.05 க்கு அங்கிருந்து புறப்பட்டோம்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
🚉நாள் - 11 5.06.24- புதன் - ரயில் பயணம்
🏠நாள் - 12 6.06.24- வியாழன் 
காலை 6.30 சென்னை Central அடைந்து,
இனிய பயணம் முடித்து மன நிறைவோடு, அவரவர் இல்லம் திரும்பினோம்
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
நன்றிகள்.....🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

🙏🏻நிறைவுரை🙇🏻‍♂️

வாழ்வின் மிக முக்கிய ஆன்மீக பயணம் சிறப்பாக அமைந்தது.
மேலும் சில எண்ணக்குறிப்புகள்... 
இந்த இனிய யாத்திரையில் .....

🙇🏻‍♂️செல்லும், எல்லா இடங்களிலும், KMVNல் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் அனைவரும், மிகக் கணிவாகவும், பணிவாகவும், உள்ளன்போடும், யாத்ரீகர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் யாத்தீர்களை மதித்து, அன்புகலந்த மரியாதையுடன் நடந்து கொள்வது சிறப்பு.

🛐யாத்திரீகர்களை மதித்து, மிகவும், நன்றாகவும், கவனமுடனும், அக்கறையுடனும் நடத்துகிறார்கள்

🙇🏻‍♂️ இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

🎍உத்தரகாண்ட் அரசும் இதற்காக இந்த அமைப்பை அமைத்து உதவி வருகிறது.

🙇🏻சஷாஸ்த்ரா சீமா பால், இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறை மற்றும் GREF பணியாளர்கள் (Sashastra Seema Bal, the Indo-Tibet Border Police and GREF personnel)
பணி மிக, மிக கடினமானது என்று உணர்கிறோம். அவர்கள் மலைப் பயணம் முழுதும் காவல் உள்ளார்கள். . பாரத ராணுவப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் பணி போற்றத்தக்கது.

🙇🏻‍♂️மேலும், Border Road Organisation பணி மிகக்கடுமையான, சவால் நிறைந்தது. சிறப்பாக செய்து வருகிறார்கள். 

🙇🏻‍♂️ இவர்களால் தான் நாம் வசதியாக சென்று தரிசனம் செய்து பாதுகாப்புடன் திரும்பி வர முடிகிறது. இவர்களிடம் நன்றிணர்வுடன் நாம் இருப்போம்.🙇🏻

🙏🏻 🙋🏻இதனால், பயணம், மிகவும் அருமையாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது.

💥 அனைத்துப் பொதுமக்களுக்கும், பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. 

🙇🏻சிறப்பாக பயணம் அமைய உதவிய உத்திரகாண்ட் அரசுக்கு மிகுந்த நன்றி🙏🏻

🙇🏻🙏🏻மேலும், இந்த பயணம் முழுவதையும் மிகவும் அற்புதமாக ஏற்பாடு செய்து, அனத்து உதவிகளும் செய்து, எமக்கு துணையிருந்து நடத்திக் கொடுத்த திரு S.R. பாலசுப்பிரமணியன், அவர்கள் SUJANA TOUR, WEST MAMBALAM, CHENNAI அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர், மற்றும் உடன் பயணத்தில்
உறுதுணையாக இருந்து உதவிய அன்பு சகோதரர்கள் திரு பரணீதரன் ஐயா, திரு இராஜேந்திரன் ஐயா, அவர்களுக்கும் உடன் துணையாக வந்து இருந்த திரு வேழவேந்தன் ஐயா, திருசாய் ரவி ஐயா, திரு ரவிக்குமார் குடும்பத்தினர், அவர்களுக்கும் மற்றும் சக குடும்ப உறுப்பினர் போல இணைந்து பழகி பயணம் செய்த அத்தனை நண்பர்கள் அணைவருக்கும் / மிகுந்த வணக்கங்களும், என் இதயபூர்வமான நன்றிகளும் .🙇🏻🙏🏻

🙏🏻இறையருள் என்றும் துணையிருக்கும்.

🙏🏻🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️
ஒரு பெரும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்போது நாம் பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டும்.

நல்ல மனநிலை, உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதாரம், தல இடங்களின் மிகக்கடுமையான சுற்றுச்சூழல், மாறிக்கொண்டே இருக்கும் வானிலை, சிக்கல் நிறைந்த போக்குவரத்துப் பாதைகள், பயணிகள் அணைவரின் உடல்நிலை, மற்றும் பயண ஏற்பாட்டளர்களின் கரிசனம், கவனிப்பு, அன்பு, உபசாரம், , தங்குமிடங்களின் வசதிகள், உடன்பயணம் செய்யும் அன்புக்குடும்பங்கள், உதவிக்கு வரும் துணை நண்பர்கள். பயணத்தில் பல்வேறு பணிகளில் உதவும் உள்ளங்கள்.
இவை எல்லாம் சேர்ந்துதான் ஒரு யாத்திரை முழுமைதரும். 

🙇🏻‍♂️அப்படிப்பட்ட ஒரு சிறந்த முழு நிறைவான மனநிம்மதி தந்த பயணமாக எமக்கு அமைந்தமைக்கு இதை அருளிய , நம் இதயத்தில் இமைப்பொழுதும் நீங்காமல், எப்போதும் நிறைந்திருக்கும்,

ஸ்ரீசுந்தரம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் அவர்களின் பேரற்றல் நிறைந்த கருணைக்கு எப்படி நன்றி செலுத்துவது?

'நம்மையும் ஒரு பொருளாக்கி 
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக்கு அருளியவார்
யார் பெருவார் அச்சோவே.'

மீண்டும் சந்திப்போம்..
நன்றி🙏🏻🙇🏻‍♂️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
குறிப்பு: 
ஆதிகைலாயம், ஒம்பர்வத் யாத்திரை ஏற்பாடுகள் அனைத்தும், திரு S.R.பாலசுப்பிரமணியன், 
SUJANA Tours,
Call.+91 94440 85144
 West Mambalam. Chennai 
அவர்களால், உத்தரகாண்ட் அரசின் KUMAN MANDAL VIKAS NIGAM என்ற அமைப்பின் மூலம் செய்யப்பட்டிருந்தது.
தொடர்பு விபரங்கள் :

KUMAON MANDAL VIKAS NIGAM LTD
 Central Reservation Centre & Parvat Tours, Oak Park House, Mallital, Nainital, Uttarakhand
 +91 8650002520, 9520864206, 9520864207, 9520864208
bookingkmvn@gmail.com
crckmvn@gmail.com (05942) 236936, 235656
Departure From: TRH Kathgodam
Pax Limit: Minimum of 1 & maximum 35 person allowed per booking
Age Limit: Traveller should be of minimum - 10 & maximum - 80 years
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻


Tuesday, July 16, 2024

பதிவு - 17 #Patalbhuvanshwar நாள் - 9 3.06.24 - திங்கள்Chaukauri to Bhimtal 209kms. 9-10hrs via #Patalbhuvanshwar

பதிவு - 17 #Patalbhuvanshwar
நாள் - 9 3.06.24 - திங்கள்
Chaukauri to Bhimtal 209kms. 9-10hrs via #Patalbhuvanshwar
நாள் - 9 3.06.24 - திங்கள்
காலை 7.00 சௌகோரியிலிருந்து புறப்பட்டு, பாதாள புவனேஸ்வரர் - குகை தரிசித்து - மதிய உணவு முடித்து, வழியில் காஞ்சிதாம் பார்த்து பீம்தால் வந்து இரவு
உணவு முடித்து பீம்தால் தங்குதல்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#பாதல்புவனேஷ்வர்

🏵️புராணங்களில் பொதிந்துள்ள பாதால் புவனேஷ்வர், புகழ்பெற்ற சக்திபீடமான கங்கோலிஹாட் அருகில் உள்ள புனித யாத்திரை மையமாகும். 

🏵️அல்மோராவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் ஷெராகாட் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த மிகவும் பிரசித்தி பெற்ற குகை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

🏵️சிவபெருமானின் சன்னதி உட்பட பல நீண்ட உட்புறங்களுடன் குகை அமைந்துள்ளது. 

🏵️சுண்ணாம்பு பாறை வடிவங்கள் பல்வேறு கண்கவர் ஸ்டாலாக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் உருவங்களை உருவாக்கியுள்ளன. 

🏵️குகைக் கோயிலுக்குச் செல்லும் வழி ஒரு நீண்ட, குறுகிய சுரங்கப்பாதை வழியாக உள்ளது. 

🏵️குகையின் உள்ளே, சுண்ணாம்புக் கற்கள் பல இந்து சமயக் கடவுள்களின் வடிவத்தைக் கொண்டுள்ளன. விநாயகர், சேஷ் நாக், கருடன், சிவலிங்கம் போன்றவற்றின் வடிவங்கள் தெளிவாகத் தெரியும்.

 🏵️இமயமலை மத்தியில், புனிதமான குகை 33 கோடி தேவர்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் உள்ளதாக நம்பப்படுகிற பிரபலமான இடம்.

🏵️இந்த குகையின் ஒரு புள்ளி கைலாஷ் மலையில் திறக்கப்பட்டு, இங்கு பிரார்த்தனை செய்வதன் மூலம், சோட்டாசார் தாமிற்குச் செல்வதன் மூலம் அவர்கள் பெறும் அதே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. 

🏵️பாண்டவர்களும் தங்களின் வனவாசத்தின் போது இங்கு தபஸ்யம் செய்தனர்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🏘️#பாதல்புவனேஷ்வர்
தற்போது KMVN ஒரு Camp கட்டிடம் கட்டியுள்ளனர்.
❄️நாங்கள் 2022 ல் வந்திருந்த போது இருந்த கூட்டத்தை விட மிக அதிகக் கூட்டம் இப்போது இருந்தது. 

🚗வாகனங்கள் சுமார் 1-2 கி.மீ.தூரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். குறுகிய பாதை Single Road எனவே வாகனங்கள் குகைவாசல் வரை செல்ல முடியாது. வாகனங்களில் இருந்து இறங்கி 2 கி.மீ. தூரம் சென்று குகையை உள்ளே சென்று தரிசித்தோம்.

🎎மிகவும் அதிகமான கூட்டம் இருந்தது.
நாங்கள் குழுவாக சென்றதால், எங்கள் KMVN Guide எல்லோருக்குமாக சேர்த்து கட்டணம் செலுத்தி Group Group ஆக சென்று தரிசனம் செய்ய வைத்தார்.

👨🏻‍🍼தனியாக செல்பவர்கள் குகை முன்பு உள்ள Reception Counter சென்று பதிவு செய்து தரிசித்து வரலாம்.

👢காலனிகள் அணியாமல் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே நீர் அமைப்பு உள்ளதால் பல இடங்கள் ஈரமாகவே எப்போதும் இருக்கும்.

🪜சுமார் 90 - 100 அடி குகை உள்ளே செல்ல வேண்டும்.

⛓️இரும்பு சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து அல்லது மிகவும் நன்றாக குனிந்து மட்டுமே செல்ல முடியும்.

🛑மிகவும் உடல் உபாதைகள் உள்ளவர்கள்.
வயதானவர்கள் செல்வது மிகவும் துனிச்சலான சவால் நிறைந்தது. அல்லது தவிர்த்துக் கொள்ளலாம்.

🥨உள்ளே ஒரே சமயத்தில் சுமார் 30 - 40 பேர்கள் வரை இருக்க முடியும். அவர்கள் தரிசித்து முடித்து மேல ஏறிவந்த பிறகே அடுத்த குழு செல்லலாம்.

🔦உள்ளே மின் விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

😀எங்கள் குழுவில் ஏற்கனவே 2022 இங்கே வந்து தரிசித்த அனுபவத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

🎡உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள குகைக் கோவில் பாதால் புவனேஷ்வர் குகை மிகவும் பிரபலமானது.

 🌐உலகத்தில் இது போன்ற இடங்கள் 4-5, தான் உள்ளது என்று கூறுகிறார்கள்.

🛣️காஷ்மீரில் உள்ள சிவகோரி என்ற இடம் (வைஷ்ணவ தேவி யாத்திரையில் தரிசிக்கும் வாய்ப்புக்கிடைத்தது) மற்றும், 
நேப்பாள் - பொக்கரா வில் உள்ள குப்தேஷ்வர் (இதையும் இரண்டு முறை - முக்திநாத் பயணங்களில்.. 2019, 2023 தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது).

🌆 மேலும், அசாம் பகுதில் ஒன்று உள்ளதாகக்கூறுகிறார்கள்.
மற்றொரு இடம் இந்தோனேஷியாவில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

🌇பாதால் புவனேஷ்வர் மிகப்பெரிய குகையாகும். நாங்கள் ஏற்கனவே உத்திரகண்ட் யாத்திரை 2022 ல் வந்திருந்த போது, 10.04.222 அன்று இந்த குகையை தரிசித்து இருந்தோம். அதன் அனுபவக் குறிப்புகளை மீண்டும் தருகிறேன்.
🟥🔴🟧🟠🟨🟡🟩🟢🟦🔵🟪🟣🟫🟤⬜⚪
⚪⬜🟤🟫🟣💜🔵🟦🟢🟩🟡🟨🟠🟧🔴🟥
https://www.facebook.com/share/p/X7Mk47gCNEuJSGPq/?mibextid=oFDknk
#பாதாள்புவனேஷ்வர் :
#uttrakant_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள் 
🛕#பாதாள்புவனேஷ்வரர்
(10.04.2022)
🌍நாங்கள் ஜாகேஸ்வரர் தரிசித்து விட்டு, மலைப்பாதையில் அடுத்து சென்ற இடம் 
பாதாள் புவனேஷ்வர். இயற்கையாகவே அமைந்த உலக அதிசய ஆன்மீககுகை.

🪱உத்திரகாண்ட் மாநிலத்தில், கங்கோலிகட் (Gangolihat) என்ற இடத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🌟முப்பத்து முக்கோடி தேவர்கள் கொண்ட ஆன்மீக குகை. 160 மீட்டர் நீளம் 90 அடி ஆழம் கொண்டது. கருங்கற்கள் பாறைகளால் இயற்கையாக உருவாகிய உருவங்கள்.

🌌மிகக் குறுகிய, செங்குத்து பாதையில் உள்ளே இறங்கினால், மிகப் பெரிய குகை. பெரும்பாலான இடங்கள் முழுவதும் மின்வசதி செய்யப்பட்டுள்ளதால், ஒரளவு வெளிச்சத்தில் உள்ளது.

✨குகைக்குள் குகையாக உட்பகுதியில் பல குகைகள் இயற்கையாகவே அமைந்துள்ளது.

💫ராம் கங்கா, சராயு, குப்த கங்கா என்ற புன்னிய நதிகள் இணைந்த இடம் இந்தப் பகுதி.

⭐திருதாயுகத்தில், சூரியவம்சத்தில் பிறந்த, ருதுபூரணா என்னும், அயோத்தியின் அரசர், ஒரு முறை காட்டில் ஒரு மானை துரத்தி சென்று களைப்படைந்து, ஒரு மரத்தடியில் ஓய்வில் இருக்கும் போது, கனவில் வந்த அந்தமான் தன்னைத் தொடர வேண்டாம் என்று கூற, அவர் கண்விழித்து அருகில் இருந்த குகைவாசலை அடைந்தார். அங்கு காவல் இருந்த, நாகராஜாவை அனுமதி கேட்க, குகையின் எல்லாப் பகுதிகளையும் அவரால் தரிசனம் பெற்றார். அந்த குகையில் இருந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் தரிசனம் செய்து, சிவதரிசனமும் பெற்றார். அதன் பிறகு, குகை முடப்பட்டுவிட்டது.

🌟துவாபரயுகத்தில், மகாபாரத காலத்தில், 
பாண்டவர்கள் இந்த குகையில் உள்ள தெய்வங்களை வணங்கி, இதன் வழியாகவே இமயமலை சென்றார்கள் என்று நம்பப்படுகிறது. 

⭐ஸ்கந்தபுராணத்தில், இவ்விடத்தின் சிறப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐கலியுகத்தில், (1191) 718 ம் ஆண்டில், ஆதிசங்கரர் முதன்முதலில் இந்த இடத்தைக் கண்டு வழிபட்டு, இதன் பின் இமயம் சென்றதாக நம்பப்படுகிறது.
ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார். அங்கே உள்ள சுயம்பு லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்) பூஜித்து அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது. இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக பூஜிக்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

🌈'1941 ல் சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.

🏯அதன் பிறகு எழுபதுகளில் ராணுவ அதிகாரி ஜெனரல் டெயிலர் என்பவரின் கனவில் தோன்றி அவருக்கு ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அவர் தன் பணி நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன் கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார். பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான இடமாயிற்று. 

🌍இதற்குப் பிறகே, நவீன உலகிற்கு, இந்த இடத்தின் புனிதத்தன்மையும், புராணமும் வெளிப்பட்டது.

🛕 ' குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

🪱குறுகலான, குகைப் பாதையில், அமைக்கப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளின் உதவியால் உள்ளே 90 - 100 ஆழம் இறங்க வேண்டும். 

⚡இருள் நீக்கி ஒளிரும் மின் விளக்குகளால், இந்த இடம் இப்போது அனைவரும் சென்று தரிசனம் செய்ய முடிகிறது.

🌻கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில், மறைந்து கிடக்கும் இந்த குகையில் முக்கிய தெய்வமாக சிவபெருமான் உள்ளார். மேலும், உலகத்தில் உள்ள அனைத்து இந்துமதக் கடவுள்கள், புராண நம்பிக்கைகள், நடைமுறை வழிபாடுகளின் உள்ள உருவங்களைக் கண்களால், நேரடியாகவே காண முடியும் என்று நம்புகிறார்கள்.  

🌳உலக இயற்கையின் ஆன்மீக அதிசயங்களில் ஒரு முக்கிய இடம்.

💫காலபைரவரின் நாக்கு, ஐராவதம், சிவபெருமான் தலை முடியிலிருந்து கங்கை ஊறிவருவது, முதலியவைகள், பேரதிசியக் காட்சியாக உள்ளது.

🔴சிவபெருமானால், விக்னேஸ்வரனின் தலை வெட்டப்பட்டு உள்ள காட்சி, 
🟠பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன், 
🟡கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு  
🟢தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு, 
🔵அதற்கு முன்னால் கபால மாலைகளோடு சிவனின் இருப்பு, 
🟣கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை, 
🟤ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம் 
⚫அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும், 
⚪பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன் பார்வதி, 
🔴சிவனின் கமண்டலம், 
🟠சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர்,
 🟡கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை லிங்கங்கள்
🟢தலை வெட்டப்பட்ட கணபதி, 
🔵உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை சொட்டும் அஷ்ட இதழ் கொண்ட தாமரை. 
🛕கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும் பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம். அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை.

🌎இந்திரலோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.
🏔️ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும் லிங்கம் மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கமாக இருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது குகையின் உச்சியைத்தொடுகிறதோ அப்போது கலியுகம் முடிந்து விடுமாம். இதன் பின்னால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. 

🌟அத்தனையும் இங்கே சுயம்புவாய் உருவாகியிருக்கிறது. 
💫மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.
🌟இவற்றை கற்பாறைகளில் ஏற்பட்ட தோற்றம் என நம்பவே முடியாது. மென்மையான சதை ரூபம் காண்பது போல் தத்ரூபமாய்த் தெரியும். 
✨இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம். 
⭐இந்த குகையிலிருந்து, உத்ரகாண்ட், மாநிலத்தில் உள்ள சார்தாம் என்று அழைக்கப்படுகின்ற, முக்கிய இடங்களான, யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரம், பத்திரி முதலிய இடங்களுக்கும், குகைப்பாதைகள் உண்டு என்றும் கூறுகிறார்கள். 
🛕ஆதிகைலாஷ் செல்லும் பாதையில் இந்த ஊர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🌈இந்த குகைக்குள் நான்கு வழிகள் உண்டு என்றும், இந்த வழிகள் அந்தந்த காலகட்டங்களில் மூடப்பட்டுவிடும் என்றும் நம்புகிறார்கள்.

 ⭐இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதாவது:

💫முதல் கதவு பாவப்பாதை. ராவண வதத்திற்குப்பின் இது மூடப்பட்டு விட்டது.
💫அடுத்தது ரணப்பாதை (way to war) இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது. 
💫இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது. ஒன்று தர்மப்பாதை. 
இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும்.
💫மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும் மோட்சப்பாதை. 
💫இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம்.'

🌟 பல நூறு வருடத்திற்கு முன்பாக இந்த பிரதேசத்தைச் சேர்ந்த அரசவம்சத்தினர், காசியிலிருந்து வரவழைத்த பண்டாக்கள் மூலம் இவ்வால பூசைகள், ஹோமங்கள் செய்ய நியமித்துள்ளார். இவர்கள்,
சுமார் 10 தலைமுறைகளாக, இவ்விடத்தை, பாதுகாப்பாகவும், வழிபாடுகள் நடத்தியும், அன்றாட பூசைகள் செய்தும், பாதுகாத்து வருகிறார்கள்.

🪱உள்ள சென்று எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டி விளக்கம் கூற நமக்கு உதவி செய்வதற்கு வழிகாட்டிகள் உள்ளனர். அவர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்ப்பதே மிகவும் நல்லது. 

🪱குறைக்குள் தனியாக செல்லமுடியாது.

⚡இந்த ஊர் மிகச்சிறிய ஊர். தங்குவதற்கும், உணவு, தங்குமிடங்கள் முதலியவைகளுக்கும் அருகாமையில் உள்ள Gangolihat, அல்லது, Chaukori (37 கி.மீ) சென்றுவிடலாம். அங்கு வசதியான Hotelகள் உள்ளன. 

🌟இமாலய View பகுதியாக இருப்பதால், இங்கிருந்து நந்ததேவி முதலிய இமாலய சிகரங்கள், மலைக்காட்சிகள் அற்புதமாக தெரிவதால், நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

✨குறுகலான மலைப்பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது. இப்பகுதி நல்ல
வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 

🌼ஊரின் ஒரு பகுதியில் இந்தக்குகை அமைந்துள்ளது. Car, Bus, வாகனங்கள் தனியாக நிறுத்திவிட்டு, சுமார் 500 மீ. நடந்து செல்ல வேண்டும்.

🍁குகை செல்லும் பாதைக்கு முன்பு ஒரு சிறிய ARCH உள்ளது, பாரததேச மன்னுயிர் காப்பதற்கு, தன்னுயிரைத் தந்த ரானுவ அதிகாரியின் நினைவில் சிலையும், வளைவும் வைத்துள்ளமை போற்றுதலுக்குரியது. இந்த ARCH லிருந்து சுமார் 100 mts. ல் குகை நுழைவுப்பாதை அமைந்துள்ளது. 

🛑மேலும் கவனம் செலுத்த வேண்டிய குறிப்புகள்:🛑

🛑குகையின் நுழைவுப் பகுதி மிகவும் குறுகலானது. சுமார் 100 அடி ஆழத்தில் இக்குகைகள் இருப்பதால், ஒவ்வொறு நபராகத்தான் உள்ளே நுழைய முடியும்.

🛑குனிந்து, உட்கார்ந்து மெதுவாக, நிதானமாக, ஒரு புறம் பினைக்கப்பட்டு இருக்கும் இரும்பு சங்கிலியைப் பிடித்துக் கொண்டு இறங்கவேண்டும். 

🛑கற்பாறை பாதைப்படியாக இருப்பதாலும், நீர்பிடிப்பு பகுதியாகவும், அடர்ந்த இருள் பகுதியாகவும் இருப்பதால், வழிகாட்டிகள் கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

 🛑சில இடங்கள் நீர் பகுதி இருப்பதாலும், பாறையாக இருப்பதாலும், பல இடங்கள் வழுக்குகின்றது.

🛑மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்வது அவசியம் நல்லது.  

🛑சில இடங்களில் தலைமட்டத்திற்கு கீழ் பாறைகள் தொங்குகின்றன. நிதானமாக எல்லாபுறங்களும் பார்த்து நடக்க வேண்டும்.  

🛑குகையில் மின்வசதி இருப்பதால் வெளிச்சம் உள்ளது. வழிகாட்டி Torch கொண்டும் விளக்குகிறார் (HINDI யில்).

🛑குகையில் குறைந்தபட்சம் சுமார் 30 நிமிடங்கள் இருப்பதால் சற்று குளிர் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள் முன் எச்சரிக்கை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. நல்ல குளிர் காலத்தில், ஆஸ்த்மா, இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேன்டி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

🛑குகைக்கு உள்ளே சுமார் 30 - 40 பேர்கள் வரை மட்டுமே இருக்க முடியும். அதற்காக, குழு குழுவாக அனுப்புகிறார்கள். இறங்கவும், வெளியேறவும் ஒரே வழிப்பாதை என்பதால், உள்ளே இருப்பவர்கள் வெளியில் வந்த பிறகு புதியவர்களை அனுப்புகிறார்கள்.

🛑பெரிய பை, சுமைகள் அறவே தவிர்க்க வேண்டும். Cell எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
⚡காலனிகள் தடை உண்டு.
⚡நுழைவுக் கட்டணம் உண்டு.

⚡குகை நுழைவுவாயிலில் பொருட்கள் பாதுகாப்பு இடமும் உள்ளது.

🌍பாதாள் புவனேஷ்வர் ஒரு அதிசய ஆன்மீகத்தலம். இந்த பதிவில் பல தகவல்கள் அளித்து இருந்தாலும், இந்த குகையை நேரில் கண்டு வந்தால்தான் இயற்கையின் அற்புதம் உணர முடியும்.

🌎வசதியும், வாய்ப்பும் கிடைத்தால், நிச்சயம் இப்படிப்பட்ட இடங்களை தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும்.

🌼நான் ஒரு video இணைத்துள்ளேன். 
என் நண்பர் அனுப்பியது. அதிக நீர் பிடிப்பு சமயத்தில் எடுத்த video. 
நாங்கள் சென்றபோது, இவ்வளவு நீர் கசிவு இல்லை. குகையின் பல பகுதிகள் சற்றே ஈரமாக இருந்தன. மின் விளக்கு வெளிச்சமும் நன்றாக இருந்தது.

🌻எங்கள் சுற்றுலா இயக்குனர், திரு பாலு அவர்கள் நியமித்து இருந்த வழிகாட்டி நல்ல நிதானமாக விளக்கினார்.

🌻இதை தரிசித்துவிட்டு,Chaukori என்ற ஊர் சென்று Hotel HIMSHAHAR லில் இரவு தங்கினோம்

🙏'அவன் அருளாளே... 
அவன் தாள் வணங்கி...'🙇🏼‍♂️

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(10.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

🟥🔴🟧🟠🟨🟡🟩🟢🟦🔵🟪🟣🟫🟤⬜⚪
⚪⬜🟤🟫🟣💜🔵🟦🟢🟩🟡🟨🟠🟧🔴🟥
பாதால் புவனேஷ்வர் தரிசித்து பின் அங்கே அருகில் உள்ள மிகவும் புராதான மான சிவன் ஆலயம் சென்று தரிசித்து வந்தோம்.

விருத்த புவனேஸ்வரர் ஆலயம்

🏞️இதே ஊரில் உள்ள புராதான சிவன் ஆலயம் - விருத்த புவனேஸ்வரர் ஆலயம். (புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன) .

🏚️ஒரு சிறிய கட்டிடத்தில், MUSEUM வைத்துள்ளார்கள்.

🎪ஆலயம் கருவரை மற்றும் பிரகாரம்,
மற்ற சன்னதிகள் எல்லாம் கருங்கற்கள்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயம்.

🛕தற்போது இந்த ஆலயத்தை செப்பனித்துக் கொண்டு வருகிறார்கள்.
கருவரையில் மிகச்சிறிய லிங்கம் உள்ளது இதை தரிசித்து வந்தோம்.

🏠புதிய கட்டிடத்தில், KMVN TR Camp உள்ளது. அங்கு சென்று,மதிய உணவு உண்டு பிறகு பீம்தால் புறப்பட்டோம்.

🍮அல்மோரா என்ற நகர் அருகில் வரும் போது வழியில் உள்ள Hotel லில் மாலை Coffee Snaks எடுத்துக் கொண்டோம்.

🍰அல்மோரா அருகில் Sweet வாங்கிக் கொண்டோம்.

💧வரும் வழியில் நல்ல மழை சிறிது நேரம் பெய்ததது. 

🎪காஞ்சிதாம் என்ற ஊரில் உள்ள
#வேம்புகரோலிபாபாஆசிரமம், 
வந்து சேர்ந்தோம். ஆலயம் கூட்டம் அதிகம் இருந்தது. மேலும், மாலை 6.30 - 7.00 க்குள் பூசை முடிந்து உட்புறம் பூட்டிவிட்டார்கள். வெளியில் இருந்து தரிசனம் செய்து கொண்டோம்.

🎡பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் Bimtal வந்து சேர்ந்தோம். இங்குள்ள KMVN TRH ல் இரவு உணவு எடுத்துக் கொண்டு, தங்கினோம்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 16 #சௌகோரி (#Chaukori ) நாள் - 9 3.06.24 - திங்கள் Chaukauri to Bhimtal 209kms. 9-10hrs via Patalbhuvanshwar

ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
பதிவு - 16 #சௌகோரி (#Chaukori )
நாள் - 9 3.06.24 - திங்கள்
Chaukauri to Bhimtal 209kms. 9-10hrs via Patalbhuvanshwar

நாள் - 9 3.06.24 - திங்கள்
காலை 7.00 சௌகோரியிலிருந்து புறப்பட்டு, பாதாள புவனேஸ்வரர் - குகை தரிசித்து - மதிய உணவு முடித்து, வழியில் காஞ்சி தாம் பார்த்து பீம்தால் வந்து இரவு
உணவு முடித்து பீம்தால் தங்குதல்.
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#சௌகோரி (#Chaukori ) 

🌷2022 உத்திரகண்ட் பயணத்தின் போதும்
#சௌகோரி (#Chaukori ) வந்து தங்கியிருந்தோம்.

💥இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் பிரிவில் மேற்கு இமயமலைத் தொடரின் உயரமான சிகரங்களில் அமைந்துள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம் ஆகும். அதன் வடக்கே திபெத் மற்றும் தெற்கே தெராய் உள்ளது. 

💥மகாகாளி நதி, அதன் கிழக்கு எல்லையில் ஓடுகிறது, இந்திய-நேபாள சர்வதேச எல்லையை உருவாக்குகிறது. 
இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

🏵️இங்கிருந்து இமயமலைத் தொடரின் பரந்த மற்றும் அழகிய காட்சியைக் காணலாம்.

 🌼காலை நேரத்தில் இமயமலைத் தொடரில் விழும் சூரியக் கதிர்களின் தங்க மஞ்சள் நிறமானது உண்மையில் பார்க்கத் தகுந்தது.

 🌼இங்கு Hotel / Cottages உள்ளன, அங்கு ஒருவர் தங்கி அமைதியான சூழலை அனுபவிக்க முடியும். 

🏵️இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களான படால் புவனேஷ்வர், கௌசனி, பாகேஷ்வர் மற்றும் அல்மோர் போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர்.

🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⛰️2.06.2024 மாலை சௌகோரி வந்தடைந்து, KMVN TRH வந்து தங்கியிருந்தோம்.
KMVN Tourist Rest Home
மிகவும் வசதிகள் அமைந்திருந்தது. வசதியான அறைகள், Cottages எல்லாம் இமயமலையின் இயற்கை காட்சிகளைக் காண்பதற்கான வசதிகளுடன் அமைந்துள்ளனர்.

🏞️மிக உயரமான பார்வைக் கோபுரம் ஒன்றும் வளாகத்தில் இருந்தது. அதன் மீதும் ஏறி மலை அடுக்குகளை படம் எடுத்து ரசிக்கலாம். கட்டிடத்தின் முன்புறம் பெரிய பூங்கா ஒன்றும் அமைத்திருந்தனர். 

🌺நாங்கள் 2022 ல் இங்கு வந்து தங்கியிருந்த ஹோட்டல் அடுத்தே இந்த இடம் அமைந்திருந்தது. வெளியில் பெரிய கடைவீதிகள் எதுவும் இல்லை. எனவே, அறைகளில் ஓய்வு கொண்டோம். நல்ல மழை சிறிது நேரம் பொழிந்தது. மாலை Tea snaks சாப்பிட்டு விட்டு Rest எடுத்துக் கொண்டோம்.

🍁எங்களது ஆதிகைலாஷ் மற்றும் ஓம்பர்வத் யாத்திரை மிகவும் அருமையான முறையில் முடிந்து கொண்டு இருந்தது. 
அடுத்த நாள் 3.06.2024 அன்று பாதால் புவனேஷ்வர், தரிசித்து பீம்தால் சென்று தங்க வேண்டும். அடுத்த நாள் பயணம் நிறைவு நாள் என்று அமைந்திருந்தது,

☃️எனவே, 2.06.24 மாலை, எங்களுடன் மும்பையிலிருந்து வந்திருந்து இந்த பயணத்தில் சிறப்பு செய்த அன்பு நண்பர்களின் ஏற்பாட்டில், ஒரு Joint meeting நடந்தது. இளைஞர்கள் ஏற்பாட்டில், பெரியவர்கள் உட்பட யாத்திராவில் பங்குகொண்டவர்கள் அனைவரும் , ஆடல், பாடல், மற்றும் யாத்திரையின் அனுபவங்களை எல்லோரும் பகிர்ந்து கொண்டோம். மொழிகளைக்கடந்து உணர்வுகள் மேம்பட்டிருந்த உறவுகள், நட்புகள்.

🙇🏻இறை அருளால் இப்பயணம் மிகச்சிறப்பாகவும் . மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும், அமைந்திருந்ததை உணர்ந்தோம். எல்லோருக்கும் நல்ல உடல்நிலை, யாத்திரையில் சென்று தரிசித்த எல்லா இடங்களும், நாங்கள் சென்ற போது கிடைத்த அருமையான வானிலை, சூழல் இவற்றை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினோம்.🙇🏻🙏🏻

🛌🏻இரவு உணவு முடித்துக் கொண்டு, உறங்கினோம்.

🌻மறுநாள் 3.06.2024 காலை உணவு முடித்துக் கொண்டு பாதால் புவனேஷ்வரம் தரிசிக்கப்புறப்பட்டோம். 
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻
நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

Monday, July 15, 2024

பதிவு - 15 நாள் - 8 - 02.06.24 - ஞாயிறு Budhi (2740mts.) to #Chaukauri (via Dharchula , DIDIHAT)

பதிவு - 15
நாள் - 8   -   02.06.24 - ஞாயிறு
#Budhi (2740mts.) to #Chaukauri (via Dharchula , DIDIHAT) 211 kms. 8-9 hrs. 
நாள் - 8     -    02.06.24 - ஞாயிறு
காலை 7.00 புந்தி Budhi KMVN yatra Camp ல் காலை டீ, மற்றும் காலை உணவு.
1.00   #Didihat   KMVN TRHல் மதிய உணவு

4.00 #சௌகோரி KMVN Tourist Hotel சென்று இரவு தங்குதல்.

🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

2.06.24 ஞாயிறு

🏖️#Budhi KMVN Camp ல் விடியற்காலையில் எழுந்து Camp ல் சுடுநீர் போட்டு நன்றாக குளித்துவிட்டு, காலை உணவு முடித்துக் கொண்டு #BUDHI யிலிருந்து #தார்ச்சுலா வந்து சேர்ந்தோம்.

🌺#தார்ச்சுலாவில் ஏற்கனவே நாங்கள் தங்கியிருந்த KMVN ன் Hotel வந்து காலை 9.30 மணி அளவில் போய் சேர்ந்ததும், Juice கொடுத்தார்கள். 
நாங்கள் அன்று சேரும்போது எங்களுக்கு அடுத்த Batch No. 7    ஓம் பர்வத் ஆதிகைலாஷ் தரிசிக்க Gunji செல்வதற்கு தயாராக இருந்தார்கள். அவர்கள் புறப்பட்டதும். நாங்கள் அங்கு நாங்கள் முன்பு வைத்து விட்டு சென்ற Bag எடுத்துக் கொண்டோம்.

💮தார்ச்சுலாவிருந்து காலை 11.30 புறப்பட்டு #Didihat  என்ற ஊர் சென்றோம்.
இங்குள்ள  KMVN TRH சென்று சேர்ந்தோம். இங்கும் எங்களை மாலை போட்டு வரவேற்றார்கள்;.பிறகு,  இங்கேயே மதிய உணவு சாப்பிட்டோம்.

🌻மதியம் இங்கிருந்து  ChauKauri என்ற ஊருக்குப் புறப்பட்டோம். அங்கு உள்ள KMVN Hotel சென்று சேர்ந்து இரவு உணவு முடித்து அங்கேயே தங்கினோம்.

#Didihat   (திதிஹத்) நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
 (நன்றி🙏🏻 வலைதளங்கள்)

🏔️திதிஹாட் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் ஒரு நகர்.

🌿 இது பித்தோராகர் மாவட்டத்தின் பதினொரு நிர்வாக உட்பிரிவுகளில் ஒன்றாகும், மேலும் அதன் நிர்வாகத் தலைமையகமாகவும் செயல்படுகிறது.

🍃 6522 மக்கள்தொகையுடன், திதிஹாட் மாநில தலைநகர் டேராடூனில் இருந்து 415 கிமீ (258 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

⛰️ஒரு சிறிய குன்று என்று பொருள்படும் குமௌனி வார்த்தையான 'டாண்ட்' என்பதன் அடிப்படையில் திதிஹாத் என்று பெயரிடப்பட்டது. 

🪨கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லும் பாதையில் திதிஹாட் உள்ளது.  முன்னதாக இது "டிக்டாட்" என்று அழைக்கப்பட்டது. தற்போதைய பெயர் திதிஹாத் இந்த நகரத்தின் மையப்பகுதியான ஹட் தார்ப் கிராமத்திலிருந்து பெறப்பட்டது.

🏞️இமயமலை பனி மூடிய சிகரங்களின் காட்சிகளை திதிஹாட்டில் இருந்து பார்க்க முடியும், குறிப்பாக பஞ்சசூலி மற்றும் திரிசூல் சிகரங்கள் காணலாம்.

🍀திதிஹாத் என்பது ரைக்கா மன்னர்களால் கட்டப்பட்ட மலாய் நாதரின் பண்டைய ஷிராகோட் கோவிலுக்காக அறியப்படுகிறது. இங்கிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் நாராயண் நகரில் உள்ள நாராயண சுவாமி ஆசிரமம் உள்ளது. 

🍀அழகிய இமயமலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள திதிஹாட் அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது. 

🌵இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,725 ​​மீட்டர் (5,659 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

🍁திதிஹாத், அதன் அமைதியான மற்றும் இனிமையான வானிலை காரணமாக, பருவமழை தவிர, ஆண்டின் எந்த நேரத்திலும் செல்லலாம். குளிர்காலம் கடுமையான குளிராக இருப்பதால், வருகை தருபவர்கள் போதுமான கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். கோடைக் காலம் குளிர்ந்த காற்று, சூடான சூரியன் மற்றும் பசுமையான பசுமை ஆகியவற்றுடன் பார்வையிட சிறந்த நேரம்.

🌳இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள குமாவோன் பகுதியின் பிரமிப்பான நிலப்பரப்பில் திதிஹாத் என்ற அழகிய நகரம் அமைந்துள்ளது.

🍂 கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,725 ​​மீட்டர் (5,659 அடி) உயரத்தில் அமைந்துள்ள திதிஹாட், பனி மூடிய இமயமலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அமைதியான சூழலின் மயக்கும் காட்சிகளை வழங்கும் ஒரு ரத்தினமான இடமாகும். 

☘️அமைவிடம்:
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் எல்லைகளுக்கு அருகில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் திதிஹாட் அமைந்துள்ளது. 

🌹இது  நன்கு இணைக்கப்பட்ட சாலை நெட்வொர்க்குகள் வழியாக நகரத்தை அடையலாம், இது பொது மற்றும் தனியார் போக்குவரத்து மூலம் எளிதாக அணுக முடியும்.

☘️தீதிஹாத் ஏராளமான இயற்கை அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, இது இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. இந்த நகரம் பசுமையான காடுகள், அருவிகள் மற்றும் இமயமலையின் பரந்த காட்சிகளால் சூழப்பட்டுள்ளது. 

⛰️நந்தா தேவி, திரிசூலம் மற்றும் பஞ்சுலியின் வலிமைமிக்க சிகரங்கள் நிலப்பரப்பின் பிரமாண்டத்தை கூட்டி, பார்வையாளர்களை மயக்கும் ஒரு பிரமிப்பான காட்சியை உருவாக்குகிறது.

🌋அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

1. பித்தோராகர் கோட்டை:

🏔️திதிஹாட்டில் உள்ள ஒரு முக்கிய ஈர்ப்பு பித்தோராகர் கோட்டை ஆகும், இது ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது மற்றும் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. இந்த கோட்டை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் நகரத்தின் வளமான வரலாற்று முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. 

2. அஸ்காட் வனவிலங்கு சரணாலயம்:

☃️திதிஹாட் அருகே அமைந்துள்ள அஸ்காட் வனவிலங்கு சரணாலயம் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது. 600 சதுர கிலோமீட்டர் (231 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ள இந்த சரணாலயம் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது, இதில் இமயமலை கருப்பு கரடிகள், பனிச்சிறுத்தைகள், கஸ்தூரி மான்கள் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. 

3. சந்தக் மலைக் கோயில்:

🌲2,775 மீட்டர் (9,104 அடி) உயரத்தில் அமைந்துள்ள சந்தக் மலைக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித ஆலயமாகும். இது ஆன்மீக தேடுபவர்களுக்கு அமைதியான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது, பசுமையான புல்வெளிகள் மற்றும் இமயமலையின் பரந்த காட்சிகளால் சூழப்பட்டுள்ளது.

4. திதிஹாத் தேயிலை தோட்டங்கள்:

🌿இந்த நகரம் அதன் தேயிலை தோட்டங்களுக்கும் பிரபலமானது, இங்கு பார்வையாளர்கள் தேயிலை சாகுபடியின் கலையை கண்டுகளிக்கலாம் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை புத்துணர்ச்சியூட்டும் கோப்பையை அனுபவிக்கலாம். தேயிலை தோட்டங்கள் அவற்றின் மொட்டை மாடி சரிவுகள் மற்றும் இயற்கை அழகுடன் தனித்துவமான அனுபவத்தை அளிக்கின்றன.

5. கங்கோலிஹாட்:

🌻திதிஹாட்டில் இருந்து சிறிது தூரத்தில், கங்கோலிஹாட் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு நகரம். ஹட் காளிகா கோயில் மற்றும் மகாகாளி கோயில் உள்ளிட்ட பழமையான கோயில்களுக்கு இது புகழ்பெற்றது. இந்த கோயில்கள் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை திறமையை வெளிப்படுத்துகின்றன மற்றும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க மத அடையாளங்களாக உள்ளன.

கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்:

🌷குமாவோன் பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் திதிஹாட் ஆழமாக வேரூன்றி உள்ளது. உள்ளூர் மக்கள் பெரும்பாலும் பழங்குடி குமாவோனி மக்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் அன்பான விருந்தோம்பல் மற்றும் துடிப்பான மரபுகளுக்கு பெயர் பெற்றவர்கள். உத்தராயணி, பசந்த பஞ்சமி மற்றும் மகர சங்கராந்தி போன்ற பல்வேறு பண்டிகைகளின் போது இந்த நகரம் உயிர் பெறுகிறது. இந்த கொண்டாட்டங்களின் போது, ​​உள்ளூர் மக்கள் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள், இது இப்பகுதியின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.

சாகச மற்றும் மலையேற்றம்:

🪨சாகச ஆர்வலர்களுக்கு, டிடிஹாட் மலையேற்றம் மற்றும் ஆய்வுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மறைக்கப்பட்ட பள்ளத்தாக்குகள், அழகிய ஏரிகள் மற்றும் கம்பீரமான சிகரங்களுக்கு இட்டுச்செல்லும் ஏராளமான பாதைகளால் அருகிலுள்ள பகுதிகள் உள்ளன. பஞ்சுலி பேஸ் கேம்ப், ஆதி கைலாஷ் ட்ரெக் மற்றும் ஓம் பர்வத் ட்ரெக் போன்ற மலையேற்ற பாதைகள் உலகம் முழுவதிலுமிருந்து சாகசப் பயணிகளை ஈர்க்கின்றன, அவர்களுக்கு சிலிர்ப்பான அனுபவங்களையும், இயற்கையின் கச்சா அழகில் மூழ்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

🏖️தங்குமிடம்:
டிடிஹாட் ஒவ்வொரு பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தங்குமிட விருப்பங்களை வழங்குகிறது. பட்ஜெட் விருந்தினர் மாளிகைகள் முதல் ஆடம்பர ஓய்வு விடுதிகள் வரை, பார்வையாளர்கள் அமைதியான சூழலுக்கு மத்தியில் தங்குவதற்கு வசதியான மற்றும் வசதியான இடங்களைக் காணலாம்.
KMVN TR H எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது.

நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

Sunday, July 14, 2024

பதிவு . 14 Jyolingkong (ஜியோலிங்காங்) - to BUDHI1.06.24 சனிக்கிழமை,

பதிவு . 14
Jyolingkong (ஜியோலிங்காங்) - to BUDHI
1.06.24 சனிக்கிழமை,


ஆதிகைலாஷ் தரிசனம் செய்து
Jyolingkong (ஜியோலிங்காங்) KMVN yatra Campல் மதிய உணவு முடித்துக் கொண்டோம்.
1.06.24 சனிக்கிழமை, மாலை 5.00 திரும்பி வந்து #BUDHI #புந்தி KMVN Yatra Camp வந்து இரவு தங்குதல்.

🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
BUDHI - Stay
இன்று 01.06.2024 ஆதி கைலாஷ் உள்ள -ஜியோலிங்காங் என்ற இடத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தோம். 

ஆதிகைலாஷ் தரிசனம் மிக நன்றாக அமைந்து இருந்தது. 

ஜியோலிங்காங் KMVN Camp ல் மதிய உணவு உட்கொண்டு, உடனடியாக Budhi என்ற ஊருக்கு புறப்பட்டோம்.

ஏற்கனவே, நாங்கள் 30.05.2024 அன்று தார்ச்சுலாவில் இருந்து குன்ஞ்ஜி என்ற இடத்திற்கு செல்லும் வழியில், Budhi இந்த இடத்தில் உள்ள KMVN Camp வந்து BUDHI என்ற இந்த இடத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம்.

வழியெல்லாம், மலைசிகரங்கள், ஒரு புறம் ஆழமான காளி நதி. மறுபுறம் உயரமான மலை இருந்தது. சாலை பயனம் மிகவும் சவாலாக இருந்தது.
சில இடங்கள், ஒரு வழிப்பாதை என்பதால். ஒரு புறத்திலிருந்து வாகனங்கள் எதிர்புறம் சென்ற பின்னே மறுபுறம் வாகனங்கள் அனுமதி.

சில இடங்களில் சாலை வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
புதிய தார்ரோடு போட்டு முடித்து 1 மணி 1/2 மணி நேரம் வாகனங்கள் தடுக்கப்பட்டு அதன் பின்னே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது; அதனாலும் தாமதம் ஏற்படும்.

ஆதிகைலாஷ் உள்ள ஜியோ லிங்காங் குன்ஞ்ஜி வழியாகத்தான் செல்ல முடியும்.
திரும்பி வரும் போது குன்ஞ்ஜி Camp வராமல் நேராக BUDHI வந்து சேர்ந்தோம்.

KMVN Camp வந்ததும் Tea snaks கொடுத்தார்கள். இந்த இடம் மிகச்சிறிய கிராமம் என்பதாலும், சற்று குளிர் இருந்ததாலும், வெளியில் எங்கும் செல்லவில்லை. 

🏞️தங்கும் இடம் சிறிய சிறிய குடில் போன்ற நீண்ட அறைகள். ஒரு குடியில் 6 - 7 பேர் தங்கலாம்.
தனித் தனி படுக்கை வசதிகள். இரவு உணவுக்குப் பிறகு தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டோம். விடியற்காலையில் வெந்நீர் போட்டு குளித்தோம்.

 ⛰️2.06.24 அன்று காலை காபி, உணவும் உட்கொண்டுவிட்டு தர்ச்சுலா புறப்பட்டோம்.

நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

Wednesday, July 3, 2024

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13
நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம்
Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms. 
9 - 10 hrs.
நாள் - 7
01.06.24 - சனி
காலை 6.30 காலை டீ, மற்றும்  குன்ஞ்ஜியில் KMVN  Camp ல் காலை டீ, காலை உணவு முடித்து, Bolero Camper ஜீப் மூலம் புறப்படுதல்.

 வழியில் நபி, Kutti, கிராமங்கள் கடந்து, பிரம்மபர்வத் தரிசனம் அங்கிருந்து,
ஜியோலிங்காங் சென்று ஆதிகைலாஷ், பார்வதி சரோவர், பார்வதி முகுட்,  பாண்டவர் பர்வத்,
கெளரி குண்ட், 
தரிசனம் செய்து
Jyolingkong (ஜியோலிங்காங்)  KMVN yatra Campல்  மதிய உணவு.

மாலை 5.00  திரும்பி வந்து #BUDHI  #புந்தி  KMVN Yatra Camp வந்து இரவு தங்குதல்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

காலை 7.00 மணிக்கு ஜீப்பில் புறப்பட்டு வழியில்  நபி - மலைகிராமம், அடுத்து குட்டி
Kutti. 
இதுவே, இந்தியாவின் கடைசி கிராமம் என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கு Indo-Tibetian Border Security  Police Camp உள்ளது
நம்முடைய  Permit Checking இங்கு உண்டு.

பிரம்மபர்வத் ( மலை சிகரம்) தரிசனம் பிரதான சாலையில் செல்லும்போது, நின்று தரிசனம் செய்கிறார்கள்.

ஜியோலிங்காங்.

இந்த இடமே பாரத எல்லையில் கடைசிப்பகுதியாகும்.

🌟இந்துக்களுக்குப் புனிதமான,
கௌரி குண்ட் (ஜோலிங்காங் ஏரி) மற்றும் பார்வதிதால் பனிப்பாறை ஏரிகள் ஆதி பர்வத்தின் அடிவாரத்தில் உள்ளன. 

🏝️பல வழிகளில் திபெத்தில் உள்ள கைலாஷ் மலையின் பிரதியாகும்,
குறிப்பாக தோற்றத்தில். 

🇮🇳ஆதி-கைலாஷ், இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ள இந்தியப் பகுதியில் உள்ளது, 

🏝️இது இயற்கை அழகு, அமைதி மற்றும் அமைதியின் ஒரு பகுதியாகும். நகர்ப்புற வாழ்க்கையின் இடைவிடா பிரச்சனைகளில்,  சோர்வடைந்த ஆண்களும் பெண்களும் இங்கே ஒரு குணப்படுத்தும் அமைதியைக் காண்பார்கள்.

💥உள்நோக்கிப் பார்ப்பதற்கும் ஒருவரின் உள்நிலையுடன் உரையாடுவதற்கும் உகந்தது. 

💧கைலாஷ் மலையின் அடிவாரத்தில் கௌரி குண்ட் உள்ளது, அதன் நீர் மலையையே பிரதிபலிக்கிறது. 

🏞️அருகில் பார்வதி சரோவர் உள்ளது, 
இது 'மானசரோவர்' என்றும் அழைக்கப்படுகிறது,  சரோவரின் கரையின் மீது உள்ளூர் மக்கள் சிவன் மற்றும் மாதா பார்வதியின் கோவிலைக் கட்டியுள்ளனர். 

🌼சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்த பிறகு, குஞ்சியில் உள்ள இந்திய சாதுக்கள் அல்லது யாத்ரீகர்கள் இங்கு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, இந்த புனித மலையை தரிசனம் செய்வதற்காக 14,364 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள குட்டியைத் தொடர்ந்து ஜியோலிங்காங்கிற்குச் சென்றனர்.

🌟ஆதி கைலாஷ் அல்லது சிவ கைலாஷ் ஓம் பர்வத்திலிருந்து வேறுபட்ட திசையில் அமைந்துள்ளது. ஆதி கைலாஷ் சின் லா கணவாய்க்கு அருகில் மற்றும் பிரம்ம பர்வத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

 🌼ஆதி கைலாஷின் அடிப்படை முகாம் குத்தி பள்ளத்தாக்கில் உள்ள குத்தி (குடி) கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் புனித ஜோலிங்காங். உலகெங்கிலும், இமயமலையின் உத்தரகாண்ட் பகுதி மட்டுமே பாரம்பரியமாக ஆன்மீக விழிப்புணர்வைத் தேடி மனிதகுலத்தை ஈர்த்தது. உள்ளது.

🌼 ஆதிகைலாஷ் மலையை ஜோங்லிங்கோங் கொடுமுடி என்றும் அழைப்பர்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥ஜியோலிங்காங்  (4630 mts.)
சென்று ஆதிகைலாஷ், சென்ற பிறகு  பார்வதி சரோவர், பார்வதி முகுட், கெளரி குண்ட்,  பாண்டவர் பர்வத் தரிசனம் செய்ய குதிரைகள் ரூ 3000/- வாடகைக்குக் கிடைக்கின்றன. வயதானவர்கள், நேரம் குறைவாக இருக்கும் சூழல் பொறுத்து குதிரையில் சென்று வரலாம்.

💥பார்வதி சரோவர் 3 கி.மீ தூரம் ஒரு பக்கமும், வேறுபுறம் 3 கி.மீ. கெளரி குண்ட் செல்ல வேண்டும். குதிரையில் சென்றால், இரண்டு இடங்களையும் விரைவாக தரிசனம் செய்து விடலாம்.

💥பார்வதி சரோவர் வரை நடந்து சென்று, அங்கு சிறிய முன்மண்டபத்துடன் கூடிய கருவரையில் சுவாமி அம்பாள் சிலை வைத்து பூசை செய்கிறார்கள்.

💥 தரிசனம் செய்து பின் திரும்ப வந்து, ஒரு மலை குன்று கடந்து ஆதிகைலாஷ் முன்பு உள்ள கெளரி குண்ட் அருகில் உள்ள சிறு ஆலயம் (லிங்கம் + சூலம்) உள்ள இடம் வரை சென்று திரும்புகிறார்கள். 

💥நாங்கள் இவ்வாறு மலையில் நடந்து சென்று, குன்றின் மீது ஏரி கெளரி குண்ட் ஆலயம் அடைந்தோம். சிலர் குதிரையில் சென்று தரிசித்து வருகிறார்கள்.

💥குதிரையில் செல்பவர்கள் கௌரி குண்ட் வரை சென்று திரும்புகிறார்கள்.
இந்த இடங்களில் தட்ப வெட்ப நிலைக்கு தக்கவாறு மட்டுமே  செல்ல அனுமதிக்கின்றனர்.

🌼இங்கும் Indo-Tibetian Border Security  Police Camp உள்ளது

💥நாங்கள் ஜியோலிங்காங் ஜீப்பில் சென்று இறங்கியதும், அங்கிருந்தே Chota Kailash என்ற அந்த இடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த இந்து சாது ஒருவரின் அமைப்பை சார்ந்தவர்களால்,  இலவச குடிநீர் - Tea Bisaits- Snakes வழங்கப்பட்டு வருகிறது. அங்கு கொடுத்த Snaks மற்றும் Tea குடித்தோம்.
🛐நாங்கள் இந்த இடங்களுக்கு சென்று வந்த போது, மிக அருமையான வானிலை இருந்ததால், தரிசனம் மிகவும் நன்றாக அமைந்தது, இறைவனின் பேராற்றலே.

💥அந்த இடம் எங்கள் Camp Room உள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் உள்ளே இருந்தது. இங்கிருந்து இரண்டு இடங்களையும் காணலாம். பொதுவாக இந்த இடங்கள், வெட்டவெளியாகும். மனிதர்கள் தொடர்ந்து வசிக்கவில்லை. மழை குளிர்காலத்தில் கீழே இறங்கி விட வேண்டும். ராணுவ பிரிவு ஜவான்கள் மட்டுமே இங்கே தொடர்ந்து காவல் பணியில் உள்ளார்கள்.

💥பெரிய அளவில்  எந்தவித கட்டிங்களும் கிடையாது. ITBP Camp மற்றும் KVMN ன் Rest house மற்றும் Camp Tent மட்டும் உள்ளது.

💥நாங்கள் இங்குள்ள, ஆதிகைலாஷ், பார்வதி சரோவர், பார்வதி முகுட், கெளரி குண்ட்,  பாண்டவர் பர்வத் முதலிய இடங்களை சென்று நன்றாக, தரிசித்த பிறகு, ஜியோலிங்காங் பகுதியில் அனைவரும் இந்த யாத்தரா ஏற்பாட்டாளரும், SUJANA TOUR Admin ஆகிய,  எங்கள் பாசத்துக்குரிய பாலு அண்ணா என்ற S.R.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பூசைவழிபாட்டில் ஒருங்கிணைந்து கலந்து கொண்டு உண்மையான வழிபாட்டை செய்து கொண்டோம். இதற்கென பூசைப்பொருட்கள் முன்னதாக ஏற்பாடுகள் செய்து எடுத்து சென்றிருந்தோம். 

💥இதற்கு பின், KMVN Camp சென்று மதிய உணவு உட்கொண்டு புந்தி புறப்பட்டோம்.
நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 12 ஓம்பர்வத் தரிசனம் நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி

பதிவு - 12
#ஓம்பர்வத் தரிசனம்
 0m Parvat  செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் குறித்து முன்பதிவில் குறிப்பிட்டோம். 

இந்த பதிவில், இந்திய எல்லையின், கடைசி இடமாகிய நபிடாங் மற்றும் OMPARVAT தரிசனம் மற்ற அனுபவங்கள்.

நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி
22 + 22 Kms. 6-7 hrs.
31.05.24- வெள்ளி

காலை 7.00 - குன்ஞ்ஜியில் காலை உணவு முடித்து, Bolero/Camper மூலம் புறப்பாடு.
நபிடாங் (4266 mts.)  சென்று ஓம்பர்வத்  தரிசனம்.
மதியம் 12.00 உணவு நபிடாங் 

மாலை - 4.00 மாலை டீ, இரவு உணவு & இரவு தங்குதல் at
KMVN  Yatra Campaign in Gunji.

நாள் - 6
இந்த பயணத்தின் முக்கிய நாள். இன்று ஓம் பர்வத், தரிசனம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐குன்ஞ்ஜியிலிருந்து, காலை 7 மணிக்குள் காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் ஜீப்பில் கிளம்பினோம். நல்ல பருவநிலை. வெய்யில் இருந்தாலும், இமயமலையின் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்ததால், Swetter, மற்றும் கம்பளி உடைகளுடனும் Shoeம் அனிந்து இருந்தோம்.  மேலே செல்ல செல்ல குளிர் இருந்தாலும், இறையருள் துணையிருந்ததால், அருமையான வெய்யிலும், Clear Blue Sky ஆக அமைந்து இருந்ததால், பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது.

🛐குன்ஞ்ஜி பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல உயரம் சென்றோம். சில இடங்கள் சாலை மிக நன்றாகவும், சில இடங்கள் மிக மிக மோசமாகவும் இருந்தது.  சாலைப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

🕉️குன்ஞ்ஜியிலிருந்து நடைபாதையாக மட்டுமே இருந்த மலைப் பாதையை, அரசாங்கம், BRO மூலம் சிறிது சிறிதாக மலைக்கற்களை வெட்டி அகற்றியும், மன் சரிவுகளை கெட்டிப்படுத்தியும், தற்போது Bolero /Camper /ஜீப் செல்லும் வழியாக்கி சவால் நிறைந்த பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். மிகவும் போற்றத்தக்க காரியங்கள்.

💥வழியில் இரு இடங்களில் INNER PERMIT Check செய்து பயணம் தொடர அனுமதி தருகிறார்கள்.

 🕉️ஒரு புறம் காளி நதி நம்மோடு கூட வந்து கொண்டே இருக்கிறது. காளி என்ற சாரதா நதி பாரதத்திற்கும், நேப்பாள நாட்டிற்கும் எல்லைப்பகுதியாக உள்ளது.

🕉️செல்லும் வழியிலேயே கனேஷ்பர்வத்,ஷீஷ் நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி, வியாசர் குகை  இருந்தாலும், OM Parvat தரிசித்துப் பிறகு திரும்ப வரும் போது காளி ஆலயம் தரிசித்தோம். 

🕉️நபிடாங் அருகில் உள்ள 0m Parvat View point சென்றோம். ஒரு தனியார் Tent Shop ல், Tea, சமோசா சாப்பிட்டோம். சிறிய கடையில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.
வேறு மக்கள் வசிப்பிடங்கள் அருகில் எங்கும் கிடையாது. தற்காலிக வசிப்பிடங்கள் தான் ஒன்றிரண்டு உள்ளன. பருவநிலை மாறியதும், கீழே வந்து விடுகிறார்கள். 

🕉️அருகில் சில தங்கும் இடங்கள் உள்ளன. எங்களைப் போன்று ஒம்பர்வத் யாத்தாரா, சில தனியார் அமைப்பின் மூலம், சுற்றுலா வந்து இருந்தனர், தனி நபர்கள், இருசக்கர வாகனம் மூலம் இங்கெல்லாம் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

🕉️ நபிதாஸ் பகுதியில், ஓம்பர்வத் மலைக்காட்சி மிகவும் அற்புதமாகத் தெரிந்தது.  நல்ல கால சூழல் இருந்ததால், எல்லோரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் பிரார்த்தனை செய்து நல்ல தரிசனம் செய்தோம்.

🕉️நபிதாங் என்ற இடம், மலைகளுக்கு இடையில் ஒரு திருப்பமான இடத்தில் உள்ள பகுதியாக இருக்கிறது.
பாதை மேற்கிலிருந்து கிழக்கு சென்று வளைந்து வடக்கில் திரும்புகிறது. இந்த முனையில் இருந்து om Parvat தரிசனம் காணலாம்.
🕉️கிழக்குப் புறத்தில் ஓம்பர்வத்மலை சிகரம் இந்திய பகுதியில் இருந்துப் பார்த்தால் இந்தி எழுத்து ஓம் போன்று மிக அற்புதமாகத் தெரிகிறது.

🕉️எதிர்புறமலையின் அடுத்த பகுதி நேப்பாள் நாட்டிற்கு சொந்தம் என்று கூறுகிறார்கள். அங்கிருந்து பார்த்தால் சாதாரண உயரமான மலையாக மட்டுமே காட்சியளிக்கிறது.

🕉️இந்த இடம், பாரதம், நேப்பாள், திபெத் மூன்றுக்கும் இடையில் எல்லைப்பகுதியாக உள்ளது.

🛐#நபிதாங்

🗻கைலாஷ் - மாசைரோவர் பயண சாலையில், இந்தியா பகுதியின் கடைசி Camp உள்ள நபிதாங் சென்றோம்.

🏔️வடக்கில், நபி பர்வத் என்ற மலை சிகரம் தெரிகிறது. முன்புறம் உள்ள இந்த கனவாய் பாதை வழியே சென்று, இந்த மலையைக் கடந்தால், திபெத்தில் உள்ள தார்ச்சன் - புறாங் என்ற நகர்  வந்துவிடும். அங்கிருந்து, மானசரோவர் ஏரியும் கைலாச மலையின் தென்புறம் சென்று அடையலாம்.

🗻பாரதப் பகுதியில் உள்ள நபியாங், நேப்பாள் பகுதியில் உள்ள ஹில்சா,  திபெத் பகுதியில் உள்ள தக்லாகோட் என்ற புறாங் இந்த மூன்று இடங்களும்  ஒரு Triangle போல உள்ளன. இயற்கையான மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

🏔️நாங்கள், 2018 ல் கைலாச யாத்திரையில் நேப்பாளின் சிமிகோட் பகுதி வந்து, அங்கியிருந்து மேற்கில் சிறிய ஹெலிகாப்டர் மூலம் 
எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் உள்ள  சிறிய பகுதியான ஹில்சா என்ற இடம் வந்து அங்குள்ள நதியைக் கடந்து திபெத் பகுதிக்கு வந்து, தக்லாகோட் - தார்ச்சன் அடைந்து கைலாஷ் அடைந்தோம்.

🗻 திபெத் தனித்துவும் பெற்று விட்டால்,  நாம் வாகனத்திலேயே நபியாங் கனவாய் வழிப்பாதையிலேயே, தக்லா கோட் - தார்ச்சன் சென்று பின், மானசரோவர், மற்றும், கைலாயம் சென்று தரிசித்து வரும் காலம் விரைவில் வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. திபெத் - சீனா அரசியல் சூழல் தற்போது உலக நாடுகள் பக்கம் கவனம் பெற்றுள்ளது. இதின் பாரதத்தின் பங்கு மிகக் கனிசமானது. 

🏔️நல்ல பாதை வசதி இந்திய பகுதிகளில் செய்யப்பட்டு வருகிறது. மிக உயரமான, நபிதாங் மலையின் அடுத்த பகுதி சென்றால், கைலாய மலை மிக நன்றாகத் தெரியும்.

🗻நாம்,  நபிதாங் பகுதியில் இருந்து ஓம்பர்வத் மலை தரிசனம் நன்றாக செய்ய முடிகிறது. மேலும், நம் பகுதியில் உள்ள மலையில் உயரம் சுமார் 200 mts  தூரம் treking சென்றால், கைலாய மலையின் சிகரம் தெரியும் என்று கூறுகிறர்கள். அங்கு வாகனங்கள் செல்ல தனிப் பாதை வசதிகளும் ஏற்படுத்தும் வேலைகள் நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.  இது அமைக்கப்பட்டால் கூட, நம் பாரத பூமீயில் இருந்து கொண்டே கைலாயமலையின் சிகரத்தைத் தரிசனம் செய்து விடலாம் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றும் கூறுகிறார்கள்.

🏔️நபிதாங் பகுதியில் பாரத ராணுவப் பிரிவான ITB Camp உள்ளது.  

🛕Camp பகுதியின் முன்புறம் ஒரு சிறிய குன்று போல உள்ள இடத்தில், ஒரு கோவில் உள்ளது. கல்கட்டிடம் ஆன்மீக குரு ஒருவரின் அமைப்பின் மூலம் பூசை நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் இந்த ஆலயம் சென்று வணங்கி வந்தோம். கருவரையும், ஒரு முன் மண்டபமும் உள்ளது.
கருவரையில், சிவன் - பார்வதி ஒரு சிறிய லிங்கம் உள்ளது.

🏔️ நபியாங் ரானுவ Camp தாண்டி கைலாஷ் பாதை இருந்தாலும்,   நாம் போக அனுமதி கிடையாது.

🏔️சுமார் 14400 அடி உயரத்தில், 
நபிதாங்கில், KMVN சார்பில் ஒரு Tent Camp அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சென்று சிலர் தங்கி ஓய்வு எடுத்தார்கள். எங்களுக்கு, ஜூஸ், காபி / டீ வழங்கப்பட்டது. மதிய உணவும் இங்கே எங்களுக்கு கிடைத்தது.

🏔️நாங்கள் KVMN சார்பில், Pithoragarh என்ற இடத்தில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை இங்கே நட்டோம்.

🕉️ நபி தாங் பகுதியில் இருந்து
Om Parvat மலை தரிசனம்; நபி பர்வத் மலை தரிசனம், மற்றும், வழியில் இருந்த  கனேஷ்பர்வத், (ஷீஷ்)நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி - காளி ஆலயம் - ,  வியாசர் குகை  இவையெல்லாம், தரிசித்தோம். அருமையான,  அற்புதமான வானிலையில் இந்தக் காட்சிகள்  கிடைத்தது இறைவரின் பேரருளே.

🎆மாலை குன்ஞ்சி திரும்பி KMVN Camp வந்து,  மாலை டீ, மற்றும் இரவு உணவு முடித்து, TENT ல் தங்கிக் கொண்டோம். மறுநாள் ஆதிகைலாஷ் தரிசனம் என்ற உற்சாகத்தில் இரவுப் பொழுது கழிந்தது.

🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...