#KERALAYATRA2024
பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)
பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்
#சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
29. வைக்கம் சிவன் கோவில்
(Vaikom Temple):
13.8.24 மீள் தரிசனம்
🌟இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் நகரில் அமைந்துள்ள வைக்கம் மகாதேவர் கோயில் மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
🌼சிவபெருமானை வழிபடுகிற பிரசித்தி பெற்றது இக் கோவில். வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு.
🕉️✨வைக்கம் மகாதேவர் கோவிலின் வரலாறு மற்றும் புராணம்
🌼வைக்கம் மகாதேவர் கோவில் அதன் கட்டுமானத்தை சுற்றி பல்வேறு கதைகள் உள்ளன.
🌼வைக்கம் என்பதற்கு வேறு பெயர்கள் உண்டு. பார்கவ புராணம் மற்றும் சனல்குமார சம்ஹிதையின்படி, அந்த இடம் வையாக்ர கேஹம் மற்றும் வையாக்ரபுரம்.
🏵️சிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் அவன் மயோக்ஷத்தை அடைய தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்தார். கராசுரன் தனது வலது கையில் ஒரு சிவலிங்கத்தையும், இடது கையில் ஒன்றையும், கழுத்தில் ஒரு சிவலிங்கத்தையும் ஏந்தியிருந்தார்.
அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்.
🏵️மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு
இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி திரும்பியபோது களைப்பின் மிகுதியால் சோர்வாக உணர்ந்தான். எனவே, அவர் லிங்கங்களை தரையில் வைத்து ஓய்வெடுக்க அமர்ந்தார். எழுந்ததும் அவரால் லிங்கங்களைத் தூக்க முடியவில்லை ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல்
தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். பல வருடங்கள் இந்த சிவலிங்கத்தை வழிபட்ட பிறகு, புனித வியாக்ரபாதர் யாத்திரை சென்றார்.
🏵️ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. புனிதக் கதிர்கள் கொண்ட தண்ணீரில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டார். இது கராசுரன் வைத்த சிவலிங்கம் என்று புரிந்து கொண்டார். எனவே மயோக்ஷம் அடைய அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த சிவலிங்கத்தை வழிபட்டார்
🏵️இந்த விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🏵️அங்கேயே தங்கி லிங்கங்களை பூசித்தால் மக்கள் மயோக்ஷத்தை அடைய உதவும் என்று வானத்திலிருந்து ஒரு குரல் சொன்னது.
🏵️புராணத்தின் படி, துறவி வியாக்ரபாதர் இங்கு சிவனைக் கண்டார். கிருஷ்ண பக்ஷமான விருச்சிகத்தில், சிவபெருமான் பார்வதி தேவியுடன் வியாக்ரபாதாவிடம் வந்தார். அதனால் இந்த இடத்தை மக்கள் வியாக்ரபாதபுரம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
🏵️எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாத புரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.
🏵️பிற்காலத்தில் தமிழ் மொழி இங்கு பிரபலமடைந்தபோது அதை வைக்கம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
🏵️மேலும், அசுரனின் வலது கையில் இருந்த லிங்கம் வைக்கம். இடது கையில் இருந்த லிங்கம் ஏட்டுமன்னூரிலும், கழுத்தில் தொங்கவிடப்பட்ட லிங்கம் கடுத்துருத்தியிலும் உள்ளது.
⭐மூன்று கோயில்களுக்கும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் கைலாசத்தில் சிவனை தரிசித்ததற்கு சமம் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
⭐இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம்.
.
⭐தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை "வியாக்ரபாதர் மேடை" என்று அழைக்கிறார்கள்.
⭐இந்த கோவிலின் தோற்றம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் திரேதா யுகத்தின் முடிவில் இருந்ததாக நம்பப்படுகிறது, எனவே இது உண்மையில் மிகவும் பழமையானது.
🛐#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
⭐வைகாத்தப்பன் வடிவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலும் அதன் சுற்றுப்புறங்களும் நம்பமுடியாத சக்தியைப் பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது, மேலும் ஒரு தீவிர பக்தரின் பிரார்த்தனைகள் நிச்சயமாக பதிலளிக்கப்படும், என்றும் நம்புகிறார்கள்.
🌟இந்த கோவிலில் 'பூஜை' மற்றும் தினசரி சடங்குகள் எந்த காரணத்திற்காகவும், அதன் தொடக்கத்திலிருந்து எப்போதும் நிறுத்தப்படவில்லை என்று வரலாறு கூறுகிறது.
🌟கோயிலுடன் தொடர்புடைய பல புராணக்கதைகள், அதன் தோற்றம், அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் உள்ளன, கோயில் வளாகத்தில் அமர்ந்திருக்கும் எந்த முதியவர்களும் உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
🌟கோயிலின் மேற்கத்திய நுழைவாயில் ஏன் மூடப்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு கதையும் மிகவும் சுவாரஸ்யமானது.
🌟மிகவும் பிரபலமான 'வைக்கதாஷ்டமி' திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் கொண்டாடப்படுகிறது.
✨இந்த ஆலயம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் தெய்வீக சூழ்நிலை மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. கோவிலின் அமைதியான சூழல் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட வளாகம் ஆன்மீக ஆறுதல் தேடுபவர்களுக்கு சிறந்த இடமாக அமைகிறது.
🌟இங்குள்ள மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று வைகதாஷ்டமி திருவிழா, மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. எல்லா இடங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் இந்த திருவிழா, விரிவான சடங்குகள், துடிப்பான ஊர்வலங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளால் குறிக்கப்படுகிறது, இது கேரளாவின் செழுமையான பாரம்பரியங்களைப் பற்றிய தனித்துவமான பார்வையை வழங்குகிறது.
🌟நீங்கள் ஆன்மிக ஆர்வலராக இருந்தாலும் அல்லது கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும், வைக்கம் மகாதேவா கோயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.
⭐ஆலயம் மிகப்பெரிய வளாகத்தில் உள்ளது. ஆலயத்தின் வடபுறம் மிகப்பெரிய புன்னிய தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. அதில் நீராடி ஆண்டவனை வந்து வணங்குவது பெரும் பேறு.
வைக்கம் கேரளாவின் மிக முக்கிய நகராக உள்ளது. இந்த ஆலயத்தை மையமாகவே கொண்டு இந்த ஊர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🌼பல பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
13.08.24 அன்று நாங்கள் சோட்டாணிக்கரா ஆலயம் தரிசித்துவிட்டு மதியம் புறப்பட்டு இங்கு வந்தோம். பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லை. சென்ற முறை வந்த போது பெருங்கூட்டம் இருந்தது.
✨இந்த பெரிய ஆலயத்தின் வடபுரம் பெரிய தீர்த்த புன்னியகுளம் உள்ளது. அதில் நீராடி ஆலயம் சென்று தரிசித்தோம்.
🌟இந்த ஆலயம் ராஜ குடும்பத்திற்கு சொந்தமாயிருந்து தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதால் இன்னும் பாரம்பரியமான முறையில், வழிபாடுகளும், பூசை முறைகளும் நடைபெற்று வருகிறது.
🌟இவ்வாலயம் தரிசித்து விட்டு அடுத்து உதயனபுரம் என்ற புகழ்பெற்ற முருகன் தலம் சென்றோம். இது இங்கிருக்கு எர்னாகுளம் செல்லும் வழியில் உள்ளது.
⭐ வைக்கம் ஆலயம் திறந்திருக்கும் நேரம்.
Timing: 3:30 AM to 12:00 AM & 5:00 PM to 9:00 PM. Annadanam Timings: 11:00 am – 1:00 pm. Daily.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
13.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
13.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
No comments:
Post a Comment