#KERALAYATRA2024
பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 14
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
11.08.2024
திருப்பரையர் ஸ்ரீராமசாமி ஆலயம் தரிசித்து, அங்கிருந்து நேரடியாக கொடுங்களூர் வந்து சேர்ந்தோம்.
கொடுங்களூரில், PWD Dept. Rest house ல் தங்கினோம். எல்லா முக்கிய இடங்களிலும் Kerala அரசாங்கத்தின் PWD Dept. மூலம் செயல்படுகிறது. on line booking. செய்து கொள்ளலாம்.
கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயம் மிக அருகில் உள்ளது. இன்று 11.8.2024 இங்கே தங்கிக் கொண்டோம்.
மாலையில் திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆழிக்கோடு - முனக்கல் கடற்கரை சென்றோம்.
இங்கு,
அரபிக்கடல் கரையில் ஒவ்வொறு வருடமும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று, நடைபெறும், ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் செல்லும் நிகழ்ச்சிக்கான பூசை விழா நடைபெறும். இதில் கலந்து கொண்டோம்.
17.
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை விழா:
தமிழகத்தின் கோவைப் பகுதியிலிருந்து சிவனடியார்கள்
திருவஞ்சைக்களம் ஆலயம் வந்து இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
முதல் நாள் மாலையில், அருகில் உள்ள கொடுங்களுர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி சிலையை
அலங்காரம் செய்து, பல்லக்கில் வைத்து, அங்கிருந்து, திருஅஞ்சைக்களம் ஆலயம் எடுத்து செல்லுவார்கள்.
இரண்டம் நாள் : திருவஞ்சைகளம் ஆலயத்தில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேம் விசேஷ பூசைகள் செய்வார்கள்,
மாலையில், ஆழிக்கோடு கடற்கரையில் அனைவரும் அதிவிமரிசையாக, ஸ்ரீசுந்தரர் கைலாயம் செல்லும் பூசை விழா நடத்துவார்கள்.
மூன்றாம் நாள்: திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பிறந்த குலசேகரபுரத்தில் உள்ள பெருமாள் ஆலங்களில் விசேட அபிஷேகங்கள் பூசைகள் செய்து விழா நிறைவு செய்து திரும்புவார்கள்.
இதில் கலந்து கொள்ள, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள்.
முனக்கல் - ஆழிக்கோடு - கடற்கரை (Munakkal Beach)
திருச்சூர் மாவட்டத்தின் மிகப்பெரிய கடற்கரை அழிக்கோடில் உள்ளது. இந்த கடற்கரை கொடுங்கல்லூர் நகரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
துறைமுக பொறியியல் துறையால் ஆழிப்பேரலை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை உருவாக்கப்பட்டது.
400 மீட்டர் திறந்தவெளி அரங்கம், 1300 மீட்டர் நடைபாதை, கழிப்பறைகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான ஸ்கேட்போர்டிங் தளம், மழையின்போது நிற்குமிடம் ஆகியவை கடற்கரையில் செய்யபட்டுள்ள முக்கிய வசதிகளாகும்.
கேரள வனத்துறையால் அமைக்கப்பட்ட ஒரு சவுக்கு மரக்காடு மற்றொரு கூடுதல் அம்சமாகும்.
ஆடி - சுவாதி அன்று
இங்குதான் ஶ்ரீ சுந்தரர் ஐக்கியத்தின் நிறைவுப்பகுதி கொண்டாடப்படுகிறது. 🛐
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
ஆழிக்கோடு செல்ல கொடுங்களூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. அல்லது திருஅஞ்சைக்களத்திலிருந்து Auto பிடித்தும் செல்லலாம்.
திருஅஞ்சைக்களம் ஆலயத்தில் காலையில் அபிஷேகம், பூசை முடிந்து அங்கிருந்து Auto மூலம் பெரும்பாலோர்கள்,
ஆழிக்கோடு கடற்கரையில் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்கள். கார், வேன், தனி பஸ் பிடித்து வருபவர்கள் ஆலயம் தரிசித்து நேரடியாக செல்கிறார்கள். மற்றவர்கள் Auto மூலம் செல்வர். திருஅஞ்சைக்களத்திலிருந்து நேரடி பேருந்துகள் கிடையாது
நாங்கள் கொடுங்களூரில் இருந்து PUTHANPALLY என்ற இடம் சென்று, (நேரடிபஸ் குறைவு) அங்கிருந்து Auto மூலம் ஆழிக்கோடு சென்றோம்.
விழா நடைபெறும் இடம் Beach என்பதால், பக்தர்கள் பெரும் திரளாக வந்திருப்பதால், விழா - பூசை முடிந்து திருவஞ்சைக்களம் அல்லது கொடுங்களூர் செல்ல பஸ் மிகக்குறைவு என்பதாலும், ஒரே நேரத்தில் மிகவும் அதிகமான நபர்கள் பஸ், Auto பிடிக்க மிக சிரமமாக உள்ளது.
நாங்கள் மாலையில் ஆழிக்கோடு கடற்கரை சென்றுவிட்டு அங்கிருந்து Auto மூலம் குலசேகரபுரம் சென்று அங்குள்ள ஆலயங்கள், தரிசித்து, திருவஞ்சைக்களம் ஆலயமும் தரிசித்து விட்டு கொடுங்களுர் வந்து தங்கினோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
11.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
11.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
No comments:
Post a Comment