பதிவு : 4
#திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌟பட்டாம்பி அருகில் உள்ள திருவித்துக்கோடு (திவ்யதேசம்) தரிசித்த பிறகு, குட்டிபுரம்
என்ற ஊருக்கு அருகில் உள்ள திருநாவாய் என்ற திவ்ய தேசம் தரிசிக்க சென்றோம்.
வழி:
பட்டாம்பி - திருத்தலா (7 கி.மீ) - பன்னியூர் (12 கி.மீ) - குட்டிபுரம் (7.2 கி.மீ) - திருநாவாய் (7.2 கி.மீ)
🌼வழியில் இருந்த பன்னியூர் ஸ்ரீவராகமூர்த்தி ஆலயம் தரிசித்துவிட்டு குட்டிபுரம் சென்று அங்கிருந்து திருநாவாய் ஆலயம் சென்றோம்.
🌟சென்றமுறை , குருவாயூரிலிருந்து பேருந்தில் குட்டிபுரம் வந்து அங்கிருந்து திருநாவாய் வந்தோம்.
⭐முன்னோர்களுக்கு தர்பனம் செய்ய உகந்த இடம் என்பதால், Token வாங்கி தர்பணம் செய்துவிட்டு, ஆலயம் தரிசனம் செய்து விட்டு, இங்கிருந்து திருவித்துக்கோடு சென்றோம்
4. Thirunavaya Navamukunda Temple: திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
🌟108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
⭐திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.
🌼பாரதப்புழா நதி ஓரத்தில் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
🌼பித்ரு தர்பனம், திதி செய்ய மிகவும் புண்ணிய இடம். இதற்கான ஏற்பாடுகள் வசதிகள் சிறப்பாக இங்கே செய்கிறார்கள்.
⭐நதியின் ஆழமும், வேகமும் அதிகமாக இருப்பதால், படிக்கட்டுகளை கவனமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.
🌟இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது.
⭐இறைவன் : நவமுகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.
⭐ இறைவி: மலர்மங்கை நாச்சியார்.
⭐விமானம் : வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது.
🌟தாயருக்கு வலதுபுறம் தனி சன்னதி ஆலயத்தில் இருப்பது இந்த திவ்யதேசபதியின் சிறப்பு.
🌼இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.
⭐திருமங்கையாழ்வாரால் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களும் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.
🌟துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார்.
🌼மும்மூர்த்தி ஆலயங்கள்:
🌟திருநாவாய் ஆலயத்திற்கு நேர் எதிரில் பாரதபுழா நதியின் தென் கரையில் உள்ள
தாவனூர் மகாதேவர் ஆலயம், மற்றும்
தாவனூர் பிரும்மா ஆலயம்
பிரும்மாவிற்காக உள்ள ஒரே கோவிலும் திருநாவாய் ஆலயத்தினோடு இணைந்து தரிசித்தல் மிகவும் புண்ணியமாகும்.
⭐சிவா, விஷ்ணு, பிரும்மா முப்பெரும் கடவுளர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
⭐சிவன், பிரும்மா, ஆலயங்கள் தரிசிக்க தாவனூர் சென்று அங்கிருந்து ஊரின் வடபகுதியில் உள்ள இவ்விரு ஆலயங்களும் தரிசிக்க வேண்டும்.
🌼பொருளாதர வசதியின்மையாலும், மற்ற சில காரணங்களாலும், இவ்விரு ஷேத்திரங்களில் பக்தர்கள் வருகை குறைவு என்கிறார்கள்.
🌟குட்டிப்புரத்திலிருந்து தாவனூர் செல்லவசதிகள் உண்டு.
🌟18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.
🌟ஆலயம் மிக நல்ல முறையில் பராமரிப்பில் உள்ளது.
⭐நாள்தோறும் மதியம் பூசை முடிந்ததும், அன்னதானம் நடைபெற்று வருகிறது.
🌟ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.
🌟பித்ருதர்பனம் பல ஆலயங்களில் முறையாக செயல்படாவிட்டாலும்,
இங்குநல்லமுறையில் திருப்தியாக செய்யப்படுகிறது.
🌟5000 வருட பழமையான ஆலயம்
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் புனரமைத்து தற்போது உள்ள நிலையில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
🌼மகாமகம் சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில், மகாமகத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
🌟மகாமகம் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட மிக முக்கிய இடங்களில் நான்கு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவைகள் கேரள தொல் பொருள் துறையினரால் பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.(தனி பதிவு).
ஆலயம் திறந்திருக்கும் நேரம்
Timings: 05:00AM - 11:00 AM (Sunday 11:30 am) & 05:00PM - 07:30PM.🛐
போக்குவரத்து :
⭐திருச்சூரிலிருந்து குட்டிபுரத்திற்கு நேரடி ரயில், பஸ்வசதிகள் உண்டு. குட்டிபுரத்திலிருந்து 7 கிமீ. தூரத்திற்கு Auto வதிகள் அதிகம் உண்டு.
⭐பாலக்காட்டிலிருந்து வருபவர்கள் நேரடியாக குட்டிபுரம் வர ரயில் வசதி உண்டு.
⭐மேலும், குருவாயூர் - திரூர் செல்லும் பேருந்து வழியில் இங்கு வரலாம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
இவ்வாலயம் தரிசித்த பின், ஆலயத்தில் அன்னதானம் பங்குபெற்றோம்.
அடுத்து திருநாவாய் பகுதியில் உள்ள மகாமக வரலாற்று இடங்களைப் பார்க்க புறப்பட்டோம்.
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
10.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment