#KERALAYATRA2024
பதிவு : 2.
திருவித்துவக்கோடு
பயண அனுபவக்குறிப்புகள்🕊️
திருவம்பாடி ஆலயம் தரிசித்து பின் அங்கிருந்து, PUNKUNNAM என்ற ரயில்வே நிலையம் சுமார் 600 மீட்டர் தூரத்தில் இருந்ததால் நடந்து சென்றோம்.
PATAMBI
PUNKUNNAM ரயில் நிலையத்திலிருந்து காலை 6.50. க்கு புறப்படும் ரயிலில்(16609 Thrissur – Kananur express) பட்டாம்பி (PATTAMBl) என்ற ஊருக்கு காலை 8.00 மணிக்குச் சென்றோம்.
அங்கிருந்து திருவித்துக்கோடு (Thiruvithuvakoodu) (Thirumittakodeஎன்ற திவ்யதேசம் தரிசித்து வர Auto (Rs.250) பேசி சென்று தரிசித்தோம்.
2.Thirumittakode Anchumoorthi Temple:
திருவித்துக்கோடு
🛕ஆலயம் பற்றிய குறிப்புகள்
🌟திருமிட்டக்கோடு அல்லது
திருவித்துவக்கோடு என்று அழைக்கப்படும் ஊரில் உள்ள ஆலயம்.
⭐இந்த ஆலயம் பாரதப்புழா ஆற்றின் கரையில் அற்புதமான இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.
🌼கேரள ஆலயக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட ஆலயம்.
வடக்குப்பகுதியிலும், கிழக்கிலும் புன்னிய நதி, ஆலயத்தை சூழ்ந்துள்ளது.
🌼ஆற்றில் குளித்து நீராடி, ஆலயம் செல்லலாம்.
🌟இந்த ஆலயம் சிவன், விஷ்ணு, பிரும்மா என்ற மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு செய்யப்படும் ஆலயம்.
⭐இது முக்தி தரும் தலங்களில் ஒன்று.
காசிக்கு இணையானது. முன்னோர்கள் வழிபாட்டு சடங்குகள் செய்யப்படும் ஆலயம்.
🌼4 சிறு சன்னதிகளில், பஞ்சபாண்டவர்கள் அமைத்த பெருமாள் சன்னதிகள் உண்டு.
நகுலன் | சகாதேவன் -1 , பீமா - 1
தருமர் -1, அர்ச்சுனர் - 1
🌟எனவே 5 மூர்த்திகள் ஆலயம் என்றும் அழைத்து வருகின்றனர்.
⭐தெற்கு நோக்கிய தனி கருவரைக்கோவிலில் கனபதி மற்றும் தெட்சினாமூர்த்தி.
அடுத்து பஞ்சபாண்டவர் வழிபட்ட பெருமாள் தனி சன்னதி
மேற்கு நோக்கிய தனியாக சாஸ்தா.
🌼அடுத்துள்ள பிரதான ஆலயம் கிழக்கு நோக்கியது.
🌟இங்குள்ள மூலவர் ஸ்ரீ காசி விசுவநாதர் ஸ்ரீ பரசுராமர் அமைத்த 108 சிவலிங்கங்களின் இதுவும் ஒன்று என்று நம்பப்படுகிறது.
🌟இது ஆலயத்தின் பிரதானப் பகுதியில் உள்ளது. இதன் உள் முன் பகுதியில் தனி கருவரையில் சிவன் உள்ளார்.
⭐முன்புறம் தனி வட்டக் கருவரையில் அர்சுனர் பிரதிஷ்ட்டை செய்த உய்ய வந்தப் பெருமாள் மூலவர் உள்ளார்.
🌼தாயாரை வித்துவக்கோட்டுவள்ளி என்றும், பெருமளை உய்ய வந்த பெருமாள் என்றும் போற்றுவர்.
⭐கேரள அரசர் அம்பரீஷர் இங்கு முக்தி அடைந்தார் என்று நம்பப்படுகிறது.
🌼இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சிறப்பிக்கப்பட்ட ஆலயம்.
கேரளா - சேரநாட்டில் உள்ள 11 திவ்விய தேசத்தில் ஒன்று.
"வாளால் அறுத்துச்சுடினும் , மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே."
என்று மனமுருகி ஸ்ரீகுலசேகர ஆழ்வார் தந்தருளிய பாசுரம் இது.
🌟இந்த ஆலயம் பட்டாம்பி என்ற பிரதான ஊரிலிருந்து குறுக்குப் பாதையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இருப்பினும் காரில் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தூரம் வர வேண்டும்.
⭐பட்டாம்பியில் Auto கிடைக்கும்.
திருச்சூரிலிருந்து 35 கி.மீ தூரத்திலும், திருநாவாய் என்ற திவ்யதேசத்திலிருந்து 33 கி.மீ தூரத்திலும் உள்ளது
🌼தை மாதத்தில் வரும் திருவோணம் மற்றும் வைகுண்ட ஏகாதசி யில் விழா நடைபெறும்.
🌟யானையும் மகாலெட்சுமியும் விஷ்ணுவை வணங்கி அருள்பெற்ற இடம்.
🌼காலை 4 முதல் 11 வரையிலும் மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்து இருக்கும்.
🌟திருவனந்தபுரம் தேவஸ்த்தானம் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.
பயண அனுபவக்குறிப்புகள்🕊️
🕊️நாங்கள் பட்டாம்பி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து Auto மூலம் இங்கு சென்றோம். (வழியில் பிரபலமான பகவதி ஆலயம் ஒன்றும் உள்ளது)
🕊️காலையில் 8.30 அளவில் ஆலயம் சென்று வழிபட்டுவந்தோம். கூட்டம் அதிகம் இல்லை.
🕊️நாங்கள் சென்ற முறை 2019ல் திருநாவாய் ஆலயம் தரிசித்து விட்டு பேருந்தில் இவ்வாலயம் வந்த போது, ஆலயம் பூட்டியிருக்க, அங்கேயே மாலை வரை தங்கி ஆற்றில் குளித்து விட்டு ஆலயம் திறந்த பிறகு தரிசித்து வந்தோம்.
🕊️இப்போது, ஆலயத்தின் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு மேலும் பல வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலயம் சென்று தரிசித்துவிட்டு
அதே Auto வில் பட்டாபி முக்கிய சாலை வந்து அடைந்தோம். இங்கிருந்து
திருநாவாய் ஆலயம் இதே Auto வில் பயணம் செய்ய முடிவு செய்தோம்.
வழியில், சிற்றுணவு முடித்துக் கொண்டோம்.
மேலும், வழியில் பன்னியூர் வராக மூர்த்தி கோவில் தரிசித்தோம்......
பயணங்கள் தொடரும்....
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment