Tuesday, August 20, 2024

KERALAYATRA2024 பதிவு : 4 திருநாவாய் நவ முகுந்தன் கோயில்

#KERALAYATRA2024
பதிவு : 4
#திருநாவாய் நவ முகுந்தன் கோயில்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌟பட்டாம்பி அருகில் உள்ள திருவித்துக்கோடு (திவ்யதேசம்) தரிசித்த பிறகு, குட்டிபுரம் 
என்ற ஊருக்கு அருகில் உள்ள திருநாவாய் என்ற திவ்ய தேசம் தரிசிக்க சென்றோம். 

வழி:
பட்டாம்பி - திருத்தலா (7 கி.மீ) - பன்னியூர் (12 கி.மீ) - குட்டிபுரம் (7.2 கி.மீ) - திருநாவாய் (7.2 கி.மீ)

🌼வழியில் இருந்த பன்னியூர் ஸ்ரீவராகமூர்த்தி ஆலயம் தரிசித்துவிட்டு குட்டிபுரம் சென்று அங்கிருந்து திருநாவாய் ஆலயம் சென்றோம்.

🌟சென்றமுறை , குருவாயூரிலிருந்து பேருந்தில் குட்டிபுரம் வந்து அங்கிருந்து திருநாவாய் வந்தோம்.

⭐முன்னோர்களுக்கு தர்பனம் செய்ய உகந்த இடம் என்பதால், Token வாங்கி தர்பணம் செய்துவிட்டு, ஆலயம் தரிசனம் செய்து விட்டு, இங்கிருந்து திருவித்துக்கோடு சென்றோம்

4. Thirunavaya Navamukunda Temple: திருநாவாய் நவ முகுந்தன் கோயில் 

🌟108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 

⭐திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.

🌼பாரதப்புழா நதி ஓரத்தில் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

🌼பித்ரு தர்பனம், திதி செய்ய மிகவும் புண்ணிய இடம். இதற்கான ஏற்பாடுகள் வசதிகள் சிறப்பாக இங்கே செய்கிறார்கள்.

⭐நதியின் ஆழமும், வேகமும் அதிகமாக இருப்பதால், படிக்கட்டுகளை கவனமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

 🌟இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது. 

⭐இறைவன் : நவமுகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.

⭐ இறைவி: மலர்மங்கை நாச்சியார். 

⭐விமானம் : வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. 

🌟தாயருக்கு வலதுபுறம் தனி சன்னதி ஆலயத்தில் இருப்பது இந்த திவ்யதேசபதியின் சிறப்பு.

🌼இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.

 ⭐திருமங்கையாழ்வாரால் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களும் பாடல் பெற்ற தலம் இதுவாகும். 

🌟துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். 

🌼மும்மூர்த்தி ஆலயங்கள்:

🌟திருநாவாய் ஆலயத்திற்கு நேர் எதிரில் பாரதபுழா நதியின் தென் கரையில் உள்ள
தாவனூர் மகாதேவர் ஆலயம், மற்றும் 
தாவனூர் பிரும்மா ஆலயம் 
பிரும்மாவிற்காக உள்ள ஒரே கோவிலும் திருநாவாய் ஆலயத்தினோடு இணைந்து தரிசித்தல் மிகவும் புண்ணியமாகும்.

⭐சிவா, விஷ்ணு, பிரும்மா முப்பெரும் கடவுளர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

⭐சிவன், பிரும்மா, ஆலயங்கள் தரிசிக்க தாவனூர் சென்று அங்கிருந்து ஊரின் வடபகுதியில் உள்ள இவ்விரு ஆலயங்களும் தரிசிக்க வேண்டும்.

🌼பொருளாதர வசதியின்மையாலும், மற்ற சில காரணங்களாலும், இவ்விரு ஷேத்திரங்களில் பக்தர்கள் வருகை குறைவு என்கிறார்கள்.

🌟குட்டிப்புரத்திலிருந்து தாவனூர் செல்லவசதிகள் உண்டு.

🌟18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது. 
🌟ஆலயம் மிக நல்ல முறையில் பராமரிப்பில் உள்ளது.

⭐நாள்தோறும் மதியம் பூசை முடிந்ததும், அன்னதானம் நடைபெற்று வருகிறது.

🌟ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர். 

🌟பித்ருதர்பனம் பல ஆலயங்களில் முறையாக செயல்படாவிட்டாலும்,
இங்குநல்லமுறையில் திருப்தியாக செய்யப்படுகிறது. 

🌟5000 வருட பழமையான ஆலயம்
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் புனரமைத்து தற்போது உள்ள நிலையில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

🌼மகாமகம் சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில், மகாமகத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

🌟மகாமகம் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட மிக முக்கிய இடங்களில் நான்கு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவைகள் கேரள தொல் பொருள் துறையினரால் பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.(தனி பதிவு).

ஆலயம் திறந்திருக்கும் நேரம்
Timings: 05:00AM - 11:00 AM (Sunday 11:30 am) & 05:00PM - 07:30PM.🛐

போக்குவரத்து :
⭐திருச்சூரிலிருந்து குட்டிபுரத்திற்கு நேரடி ரயில், பஸ்வசதிகள் உண்டு. குட்டிபுரத்திலிருந்து 7 கிமீ. தூரத்திற்கு Auto வதிகள் அதிகம் உண்டு.
⭐பாலக்காட்டிலிருந்து வருபவர்கள் நேரடியாக குட்டிபுரம் வர ரயில் வசதி உண்டு.
⭐மேலும், குருவாயூர் - திரூர் செல்லும் பேருந்து வழியில் இங்கு வரலாம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
இவ்வாலயம் தரிசித்த பின், ஆலயத்தில் அன்னதானம் பங்குபெற்றோம்.
அடுத்து திருநாவாய் பகுதியில் உள்ள மகாமக வரலாற்று இடங்களைப் பார்க்க புறப்பட்டோம்.

நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
10.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம் 
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Monday, August 19, 2024

KERALAYATRA2024பதிவு : 3 பன்னியூர் வராகமூர்த்தி கோயில்

#KERALAYATRA2024
பதிவு : 3  
பன்னியூர் வராகமூர்த்தி கோயில்.
பயண அனுபவக்குறிப்புகள்🕊️
🌟பட்டாம்பி அருகில் உள்ள திருவித்துக்கோடு  (திவ்யதேசம்) தரிசித்த பிறகு, குட்டிபுரம் 
என்ற ஊருக்கு அருகில் உள்ள திருநாவாய் என்ற திவ்ய தேசம் தரிசிக்க ஆயுத்தமானோம்.
வழி:
பட்டாம்பி - திருத்தலா (7 கி.மீ) - பன்னியூர் (12 கி.மீ) - குட்டிபுரம் (7.2 கி.மீ) - திருநாவாய் (7.2 கி.மீ)

🌟 திருவித்துக்கோடு அருகிலேயே வழியில் உள்ள பிரபலமான பகவதி ஆலயம் ஒன்றும், மேலும்  திருத்தலா என்ற ஊரில் புராதானமான சிவன் ஆலயம் ஒன்றும் உள்ளது.
🌟அடுத்துள்ள பன்னியூர் என்ற ஊருக்குச் சென்றோம். இங்கு ஒரு புகழ்பெற்ற ஸ்ரீ வராகமூர்த்தி ஆலயம் சென்றோம்.

3. Panniyoor Varaha Moorthy Temple: பன்னியூர் வராகமூர்த்தி கோயில்.

🕉️இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், பட்டாம்பி வட்டத்தில், கும்பிடி என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். 

🕉️இக்கோயில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் கோயில் என்று நம்பப்படுகிறது.

🕉️ பெரும் பிரார்த்தனை தலம்.

ஆலய சிறப்பு:
🌟கேரள மாநிலத்தின் Supreme GOD of Kerala என போற்றப் பெற்ற முதன்மை ஆலயமாக சிறப்பு பெற்றது.

🌟கேரள மாநிலத்தில், ஸ்ரீ விஷ்னு பகவானின் தசாவதாரத்தின் 3ம் அவதாரமான ஶ்ரீவராகருக்கு என்று தனி ஒரு கோவில் இது ஒன்றே.

🌟இக்கோயில் வைஷ்ணவ அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ,

🌟4000 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீ பரசுராமர் கட்டிய முதல் ஆலயம்.

🌼கேரள மாநிலத்தில் வராகருக்கு என்று. எழுப்பப்பட்ட ஒரே ஆலயம்

🌟விஷ்ணு பகவான் கட்டளை படி, ஸ்ரீ பரசுராமரால், புன்னிய பூமியின், நடுபாகத்தில், இந்த பன்னியூர் மகாஷேத்திரம், கட்டப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

🌼கோழிக்கோடு சமூத்திரி ராஜா ஸ்தாபனத்தால், (Kozhikode Samoothiri Raja Trust) இவ்வாலயம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆலய அமைப்பு :

⭐மிகவும் புராதானமான ஆலயம் சிதலமடைந்து விட்டிருந்த ஆலயத்தை கடும் முயற்சியால் மீட்டு எடுத்து, தற்போது புதிய பொலிவுடன் ஆலயம்
சுமார் 6 ஏக்கர் பரப்பில், அழகிய பசுமையான இயற்கை சூழலில் பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது.

⭐ஆலயத்தின் தென் பகுதியில் ஸ்ரீ பரசுராமர் கட்டிய மீன் குளம் சிறப்பு.
The legendary ‘Panniyur thura’ is located just to the North of the Mahakshetra.

⭐ஸ்ரீ பரசு ராமர் ஸ்தாபித்த முதல் ஆலயம்.

⭐வாரகமூர்த்தி விஷ்ணுவின், மூன்றாவது அவதாரமாகும்.
முதன்மைத்தலம்.

⭐மூலவரான வராகமூர்த்தியுடன் இணைந்து பூமி தாயார்  உள்ளார்.

⭐மூலவர் தவிர,
சிவன் வட கோவில் என்று வழங்கப்படும் தனிக் கோயிலில் உள்ளார்.
அய்யப்பன் (தர்ம சாஸ்தா), 
துர்க்கா பகவதி,
கனபதி,  சுப்பிரமணியர், 
லெட்சுமி நாராயணர், 
சித்திரகுப்தார், 
வராகி, யக்ஷி முதலிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகளும் உண்டு.

⭐பெருந்தச்சன் மிகச்சிறந்த கட்டிடக்கலை நிபுனர் ; இந்தக் கோவில் கட்டியதும், தன்னுடைய ஆயுதங்களை மறைத்து விட்டார்.

⭐பெருந்தச்சனின் உளி மற்றும் முழக்கோல் என்ற  அளவுகோல் மிகவும் பத்திரமாக இங்கு கருவறை பின்புறத்திலும்,  தியான மண்டபத்தின் அருகிலும் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். முழக்கோல் என்ற
அளவுகோள் மஞ்சள் வண்ணத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது 

சிறப்பு பூசைகள்:
பலவேறு பூசைகள் நடைபெற்று வருகின்றன.

அபிஷக காரிய சித்தி பூஜை: ‘Abhishta Sidhdhi Puja’. (எல்லா காரியங்களும் சித்தியாகும்)
காரியசித்தி அபிஷேக பூசை  தினமும் காலையில் சுமார் 10 மணி அளவில் நடைபெறும் மிகவும் சிறப்பு. மூன்று நாள் முன்னதாகப் பதிவு செய்யப்பட வேண்டும். 
சந்தன காப்பு அலங்காரம் மிகவும் சிறப்பு

மாங்கல்ய பூசை - தினமும் மாலையில் நடைபெறுகிறது.

பூமி பூசை “Bhoomi Pooja " -

வசிக்கும் வீட்டின், அல்லது நிலத்தின் நான்கு மூலையிலிருந்து பூமி மன் கைப்பிடி அளவு  எடுத்துக் கொண்டு வந்து இவ்வாலயம் வந்து, பூமி பூசை செய்ய வேண்டும்.
இழந்த பொருள் திரும்ப கைகூட,
நிலம், பொருள் சம்பந்தமாக
பூமி பூசை ஶ்ரீ வராகருக்கு செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

ஐஸ்வர்ய  பூசை  

🌼ஒருநாள் அன்னதானம் ரூ 3000 கட்டணம்.

🌼ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் உணவு வழங்கப்படுகிறது.

 அமைவிடம்

🌟கும்பிடி, பட்டாம்பி தாலுக்கா, பாலக்காடு மாவட்டத்தில், நீலா என்ற சிற்றாற்றின் கரையில் உள்ளது.

🌟புகழ்பெற்ற குருவாயூர் ஆலயத்திலிருந்து, சாலை வழி 33 கிமீ.தூரத்தில் உள்ளது.

🌟அரசு (KSRTC) மற்றும் தனியார் பேருந்துகள் கும்பிடி வரலாம்.

🌟7 கி.மீ தூரத்தில் உள்ள குட்டிப்புரம் அருகில் உள்ள நகரம்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ள இடம்.

🌟கும்பிடி - எடப்பால் சாலையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.
பாலக்காட்டில் காலை 7.30 க்கு நேரடி பேருந்துள்ளது.

நடை திறந்திருக்கும் நேரங்கள்.
காலை 5.30 - 10.30 மற்றும், மாலை 5-8

இந்த ஆலயம் சிறுகிராமம்.
 ஆலயம் அருகில் எந்தவித வியாபார கடைகளும் அருகில் கிடையாது.
நிறைய பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கும் ஆலயம் இது.

 குட்டிபுரம் அருகில் உள்ள நகரம். 
இந்த ஆலயம் தரிசித்து குட்டிபுரம் சென்று அங்கிருந்து திருநவாய் திவ்யதேசம் ஆலயம் சென்றோம்.

பயணங்கள் தொடரும்....
10.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம் 
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்


Friday, August 16, 2024

KERALAYATRA2024 பதிவு : 2. திருவித்துவக்கோடு

#KERALAYATRA2024
பதிவு : 2.         
திருவித்துவக்கோடு

பயண அனுபவக்குறிப்புகள்🕊️

திருவம்பாடி ஆலயம் தரிசித்து பின் அங்கிருந்து, PUNKUNNAM என்ற ரயில்வே நிலையம் சுமார் 600 மீட்டர் தூரத்தில் இருந்ததால் நடந்து சென்றோம். 

PATAMBI
PUNKUNNAM ரயில் நிலையத்திலிருந்து காலை 6.50. க்கு புறப்படும் ரயிலில்(16609 Thrissur – Kananur express) பட்டாம்பி (PATTAMBl) என்ற ஊருக்கு காலை 8.00 மணிக்குச் சென்றோம்.
அங்கிருந்து திருவித்துக்கோடு (Thiruvithuvakoodu) (Thirumittakodeஎன்ற திவ்யதேசம் தரிசித்து வர Auto (Rs.250) பேசி சென்று தரிசித்தோம். 

2.Thirumittakode Anchumoorthi Temple: 
திருவித்துக்கோடு

🛕ஆலயம் பற்றிய குறிப்புகள்

🌟திருமிட்டக்கோடு அல்லது 
திருவித்துவக்கோடு என்று அழைக்கப்படும் ஊரில் உள்ள ஆலயம்.
 
⭐இந்த ஆலயம் பாரதப்புழா ஆற்றின் கரையில் அற்புதமான இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.

🌼கேரள ஆலயக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட ஆலயம்.
வடக்குப்பகுதியிலும், கிழக்கிலும்  புன்னிய நதி, ஆலயத்தை சூழ்ந்துள்ளது.

🌼ஆற்றில் குளித்து நீராடி, ஆலயம் செல்லலாம்.

🌟இந்த ஆலயம் சிவன், விஷ்ணு, பிரும்மா என்ற மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு செய்யப்படும் ஆலயம். 

⭐இது முக்தி தரும் தலங்களில் ஒன்று.
காசிக்கு இணையானது. முன்னோர்கள் வழிபாட்டு சடங்குகள் செய்யப்படும் ஆலயம்.

🌼4  சிறு சன்னதிகளில், பஞ்சபாண்டவர்கள் அமைத்த பெருமாள் சன்னதிகள் உண்டு.

நகுலன் | சகாதேவன் -1 , பீமா - 1
தருமர் -1, அர்ச்சுனர் - 1

🌟எனவே 5 மூர்த்திகள் ஆலயம் என்றும் அழைத்து வருகின்றனர்.

⭐தெற்கு நோக்கிய தனி கருவரைக்கோவிலில் கனபதி மற்றும் தெட்சினாமூர்த்தி.
அடுத்து பஞ்சபாண்டவர் வழிபட்ட பெருமாள் தனி சன்னதி
மேற்கு நோக்கிய தனியாக சாஸ்தா.

🌼அடுத்துள்ள பிரதான ஆலயம் கிழக்கு நோக்கியது.

🌟இங்குள்ள மூலவர் ஸ்ரீ காசி விசுவநாதர் ஸ்ரீ பரசுராமர் அமைத்த 108 சிவலிங்கங்களின் இதுவும் ஒன்று என்று நம்பப்படுகிறது.

🌟இது ஆலயத்தின் பிரதானப் பகுதியில் உள்ளது. இதன் உள் முன் பகுதியில் தனி கருவரையில் சிவன்  உள்ளார்.

⭐முன்புறம் தனி வட்டக் கருவரையில் அர்சுனர் பிரதிஷ்ட்டை செய்த உய்ய வந்தப் பெருமாள் மூலவர் உள்ளார்.

🌼தாயாரை வித்துவக்கோட்டுவள்ளி என்றும், பெருமளை உய்ய வந்த பெருமாள் என்றும் போற்றுவர்.

⭐கேரள அரசர் அம்பரீஷர் இங்கு முக்தி அடைந்தார் என்று நம்பப்படுகிறது.

🌼இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சிறப்பிக்கப்பட்ட ஆலயம்.
கேரளா - சேரநாட்டில் உள்ள 11 திவ்விய தேசத்தில் ஒன்று.

"வாளால் அறுத்துச்சுடினும் , மருத்துவன்பால் 

 மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்  

மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே."

என்று மனமுருகி ஸ்ரீகுலசேகர ஆழ்வார் தந்தருளிய பாசுரம் இது.

🌟இந்த ஆலயம்   பட்டாம்பி என்ற பிரதான ஊரிலிருந்து குறுக்குப் பாதையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இருப்பினும் காரில் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தூரம் வர வேண்டும்.

⭐பட்டாம்பியில் Auto கிடைக்கும்.
திருச்சூரிலிருந்து 35 கி.மீ தூரத்திலும்,  திருநாவாய் என்ற திவ்யதேசத்திலிருந்து 33 கி.மீ தூரத்திலும் உள்ளது  

🌼தை மாதத்தில் வரும் திருவோணம் மற்றும் வைகுண்ட ஏகாதசி யில் விழா நடைபெறும். 

🌟யானையும் மகாலெட்சுமியும் விஷ்ணுவை வணங்கி அருள்பெற்ற இடம். 

🌼காலை 4 முதல் 11 வரையிலும் மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்து இருக்கும்.

🌟திருவனந்தபுரம் தேவஸ்த்தானம் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.

பயண அனுபவக்குறிப்புகள்🕊️

🕊️நாங்கள் பட்டாம்பி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து Auto மூலம் இங்கு சென்றோம். (வழியில் பிரபலமான பகவதி ஆலயம் ஒன்றும் உள்ளது)

🕊️காலையில் 8.30 அளவில் ஆலயம் சென்று வழிபட்டுவந்தோம். கூட்டம் அதிகம் இல்லை.

🕊️நாங்கள் சென்ற முறை 2019ல் திருநாவாய் ஆலயம் தரிசித்து விட்டு பேருந்தில் இவ்வாலயம் வந்த போது, ஆலயம் பூட்டியிருக்க, அங்கேயே மாலை வரை தங்கி ஆற்றில் குளித்து விட்டு ஆலயம் திறந்த பிறகு தரிசித்து வந்தோம்.

🕊️இப்போது, ஆலயத்தின்  சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு மேலும் பல வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலயம் சென்று தரிசித்துவிட்டு
அதே Auto வில் பட்டாபி முக்கிய சாலை வந்து அடைந்தோம். இங்கிருந்து
திருநாவாய் ஆலயம் இதே Auto வில் பயணம் செய்ய முடிவு செய்தோம். 
வழியில், சிற்றுணவு முடித்துக் கொண்டோம்.

மேலும், வழியில் பன்னியூர் வராக மூர்த்தி கோவில் தரிசித்தோம்......

பயணங்கள் தொடரும்....

நன்றி🙏🏻
#KERALAYATRA2024
10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம் 
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்


KERALAYATRA - 9.8.2024 - 14.8.24- பதிவு - 1.. Thiruvambadi Sri Krishna Temple: #திருவம்பாடி கிருஷ்ணர்

#KERALAYATRA - 9.8.2024 - 14.8.24

1. Thiruvambadi Sri Krishna Temple: 
#திருவம்பாடி கிருஷ்ணர்

🛕ஆலயம் பற்றிய குறிப்புகள்

🌼இந்த ஆலயம், திருச்சூரில் உள்ள
புகழ் பெற்ற வடக்கு நாதர் ஆலயம் அருகில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

🌼PUNKUNNAM என்ற ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் உள்ளது.

🌼முன்கோபுரம் மிக அழகிய அமைப்பில் 3 அடுக்கு உயரமான கம்பீரமாக அமைந்துள்ளது. 

🌼சிறிய கிழக்குப் பார்த்த ஆலயம்
கருவரையில் ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளார். பால உருவம்.

🌼தனி சன்னதியில் ஸ்ரீ சாஸ்தா உள்ளனர். சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெற்று வரும் ஆலயங்கள்.

🌼இது மற்றுமின்றி, ஆலயம் பின்புறம் தனிக் கருவரை அமைப்புடன், கோவில் அமைப்பில் தனிக்கருவரையுடன் ஸ்ரீகனேசர் மற்றும் தனி சன்னதியில் ஸ்ரீபத்ரகாளி அருள் பாலிக்கிறார். 

🌼எப்போதும், ஸ்ரீமத் பகவத்கீதை ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு ஆலயம் பக்தியுடன் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

🌟தேவஸ்தான குறிப்புகள் படி, தினமும் மதியம் அன்னதானம் நடை பெறுகிறது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம் காலை 5.30 முதல் 11 வரை மற்றும் 5 PM to 8 PM 

பயண அனுபவக்குறிப்புகள்🕊️

திருச்சூர் ரயில்வே நிலையமுன்பகுதியில், தனி Booth Counter உள்ளது. வெளியில் Auto மூலம் செல்வதானால் ரூ 2 கொடுத்து, Auto Book செய்து கொண்டால், Auto வசதி செய்து தருவார்கள். நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல Auto வசதி செய்து கொடுப்பார்கள். செல்லும் இடத்திற்கு மீட்டர் பணம் கொடுத்தால் போதுமானது.

நாங்கள் ஒரு Auto (Rs.50) மூலம் திருவம்பாடி கிருஷ்ணர் ஆலயம் சென்றோம்.
ஏற்கனவே நாங்கள் இந்த ஆலயம் தரிசித்து இருந்தாலும், இந்த ஆண்டும் தரிசித்தோம்.

10.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம் 
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்


Thursday, August 15, 2024

சாகம்பரி தேவி

சாகம்பரி தேவி   
சாகம்பரி பூசை : ஆவணி மாதம் முதல் நாள்

காரைக்கால் நகர சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமான புராதான சிறப்பு வாய்ந்த நிகழ்வு:
ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ கைலாசநாதருக்கு சாகாம்பரியாக வந்து பூசை செய்யும் காட்சி.
உலகம், நீர் வற்றி, பஞ்சம் ஏற்பட்டபோது, உயிர்கள் பிணி நீங்கி, உணவு பெறவேண்டி, கைலாயத்தில் உள்ள, ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ சாகாம்பரி வேடம் கொண்டு காரைக்கால் ஸ்ரீகைலாசநாதரை சிறப்பு வழிபாடுகளும், பூசைகளும் செய்து, உலகத்திற்கு பசி, பிணி, பஞ்சம் நீக்கிய புராணம் தலவரலாற்றால் அறிய முடிகிறது.

ஆவணி மாதம் முதல் நாளில் வருடம்தோறும் காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில்
விஷேச பூசை.
🛕🙏🏻🔱🧘🏻‍♂️🛐🕉️🇮🇳🌍🕊️🙇🏻‍♂️🙏🏻🔱🧘🏻‍♂️🛐🕉️🇮🇳🌍🕊️🙇🏻‍♂️🛕

பராசக்தி பக்தர்களைக் காக்க பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.

சாகம்பரி தேவி யார்? அவள் மகிமைகள் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையான தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக் கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும், மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின.

மேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண்ணிய பலன்களும், பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்ததால் ஆணவம் கொண்டு முனிவர்களின் யாகங்களை அழித்தான். அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை.
முனிவர்களும், ரிஷிகளும் யாகங்களையும், பூஜைகளையும் செய்யாமல் உயிருக்கு பயந்து குகைகளிலும், பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்வதற்கு அருளும் யாகங்கள் நடை பெறவில்லை. அதனால் மழை பொய்த்துப் போனது. மழை பெய்யாததால் பயிரினங்கள் செழிக்கவில்லை. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ்சம், அன்ன ஆகாரங்கள் இன்றி உயிரினங்கள் மடிந்தன.
அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச்சாரலில் ஒன்று கூடி பராசக்தியைப் பிரார்த்தித்தனர் தேவி! கருணையே வடிவான உனக்கு பக்தர்களின் கஷ்டங்கள் தெரியாதா? பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா? என வேண்டினர். 

இந்த பிரபஞ்சத்தையே படைத்த பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப்பயிர் காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையோடு பொழிந்தன. உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி பின் பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்க ஏற்பாடு செய்தாள். நெருப்பு வளையம் ஒன்றை உருவாக்கிய தேவி அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர்கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர்.
யாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும். அதனால் தேவி வெறும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவும் அழிக்கும் வளையும். எனவே அழிவின் பலனாக அதுவே அவனை அழிக்கும் வளையமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். பலன்களை இழந்த துர்கமனை தன் சூலாயுதத்தால்அழித்தாள். 

 உலக மக்களின் பஞ்சத்தைக் கண்டு மனம் வருந்தி தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் மழையாக மாறி ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி, குளங்களையெல்லாம் நிரப்பியது. மழை பொழிந்து தண்ணீர்ப்பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர்ந்து உலகம் சுபிட்சமானது.

தேவர்களின்வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்ற பெயரிலும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்ற பெயரிலும் அவர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்றிலிருந்து சாகம்பரி தேவி வழிபடப்பட்டு வருகிறாள். துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு. 
சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங்கப்படுகிறாள்.

அன்று முதல் புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. எத்தனை எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை எத்தனை காய்கறி, கீரை வகைகள் உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தலாக்கி மகிழ்வர். 

சில ஆலயங்களில் அம்பாள் மற்றும் ஈசன் சந்நதியில் பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர்.
பின் கயிற்றில் காய்கறிகளையும், பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடுவர். அனைத்து விதமான காய்கறிகளையும், கீரைகளையும் பசுமைத் தோரணமாக கட்டித் தொங்கவிடுவதே கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

நவராத்திரி கொலுவில் உள்ள பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். பக்தர்கள் இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் அன்று ஆலயத்திற்கு வருவார்கள். தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

 சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம், மயிலை கபாலீஸ்வரம் ஆலயம், வெள்ளீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், திருவாரூர் தியாகராஜர் ஆலயம் போன்றவற்றில் நிறைமணி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தன் தாய் பராசக்தியைப் போலவே முருகன் சங்க இலக்கியங்களில் கடிஉண்கடவுள் எனும் பெயரில் வணங்கப் பட்டுள்ளார். புதிதாக விளைந்த தானியங்கள் மற்றும் கதிர்களுக்கு கடி எனும் பெயருண்டு. அறுவடை செய்த நெல், சோளம், கம்பு, கோதுமை, தினை போன்ற தானியங்களை அந்நாளில் முருகப்பெருமானுக்கு படைப்பர். அந்த தானியங்களை நிவேதனமாக ஏற்பதால் முருகனை கடிவுண்கடவுள் என வணங்கி வழிபட்டுள்ளனர்.

ஹரிச்சந்திரனுக்கு சாகம்பரி தேவி உதவியதாக புராணங்களில் உள்ளது.
நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் பெற்றவன் ஹரிச்சந்திரன். விசுவாமித்திர மகரிஷி ஹரிச்சந்திரனை பொய் சொல்ல வைப்பதாக சபதம் பூண்டார். ஹரிச்சந்திரன் தன் கனவில் தோன்றி அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால் ஹரிச்சந்திரன் அவனது நாட்டை தனக்குத் தந்து விட வேண்டும் என்றும் அவர் கூறினார். கனவே ஆயினும் தான் வாக்கு தந்ததாக முனிவர் கூறியதால் தன்நாட்டை அவருக்கு ஹரிச்சந்திரன் தந்தான். தனது மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு காசி எனும் வாரணாசியை அடைந்தான்.

அங்கும் தொடர்ந்தார் விசுவாமித்திர முனிவர். அவர் நீ கொடுத்த தானம் பூர்த்தியாவதற்கு தட்சணை தர வேண்டும் என்றார். நாட்டையும் செல்வங்களையும் இழந்த ஹரிச்சந்திரன் தட்சணையாகத் தர ஏதுமில்லாமல் தன் மனைவியையும் மகனையும் ஒரு அந்தணருக்கு விற்று அந்த பணத்தை தட்சணையாக விசுவாமித்திரரிடம் தந்தான். அந்த பணம் போத வில்லை என விசுவாமித்திரர் கூறினார். அதனால் மனம் வருந்திய ஹரிச்சந்திரன் தன்னையும் சுடலை காக்கும் வெட்டியான் ஒருவரிடம் விற்றான். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் தொழிலை செய்யத் தொடங்கினான் ஹரிச்சந்திரன். அவன் மனைவியும் மகனும் அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து வந்தனர்.

ஒரு நாள் பூஜைக்கான பூப்பறிக்கச் சென்ற ஹரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவிக்கு ஆள் கூட இல்லாத ஹரிச்சந்திரனின் மனைவி தனது மகனின் பூதவுடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்குச் சென்றாள். மகனின் உடலை எரிக்க செலுத்த வேண்டிய வரியைக் கொடுக்கக்கூட அவளிடம் பணம் இல்லை. ஹரிச்சந்திரனின் கண்களில் அவள் கட்டியிருந்த திருமாங்கல்யம் தென்பட்டது. அதை விற்று அந்த வரியை கட்டுமாறு ஹரிச்சந்திரன் அவளிடம் கூறினான். ஹரிச்சந்திரனைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் அந்த திருமாங்கல்யம் தெரியாது எனும் வரத்தை அவள் பெற்றிருந்ததால் வெட்டியானாக இருந்தவன் ஹரிச்சந்திரனே என்பதை அவள் அறிந்தாள்.

இருவரும் மனமுருகி தங்கள் குல தெய்வமும், இஷ்ட தெய்வமுமான சாகம்பரி தேவியை பிரார்த்தனை செய்தனர். தேவியின் கருணையால் அமிர்த மழை பெய்தது. அம்பாளின் அமிர்த மழையில் நனைந்த ஹரிச்சந்திரனின் மகன் பிழைத்தெழுந்தான். பின் விசுவாமித்திரரும் ஹரிச்சந்திரனின் நேர்மையில் மகிழ்ந்து இழந்த அவன் செல்வங்களை மீண்டும் அவனுக்குக் கிடைக்கச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆதிசங்கரர் இந்த சாகம்பரி தேவியைப் பற்றி தன் கனகதாராஸ்தவத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கீர்தேவதேதி கருட த்வஜ ஸுந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேஷ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ் தருண்யை
ஒரே பரமாத்மா த்ரிமூர்த்திகளாகி
ஸ்ருஷ்டி - ஸ்திதி - ஸம்ஹாரம் என விளையாட்டுப் பண்ணும்போது அவர்களின் மனைவியர் வடிவில் ஒவ்வொரு சக்தியாக இருப்பது மஹாலக்ஷ்மியேதானென்று சொல்லியுள்ளார். அவர்கள் கீர்தேவதை, கருடத்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசி சேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நான்கு சக்திகளைக் கூறுவானேன்?

பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் வரிசையின்படி முதலில் பிரம்மனின் மனைவி கீர்தேவதை எனும் வாக்தேவியான சரஸ்வதி, அடுத்தது கருடக்கொடியுடைய திருமாலின் ரூபலாவண்யம் மிக்க கருடத்வஜஸுந்தரி துதியின் நேர் மூர்த்தியான லக்ஷ்மி, அப்புறம் ருத்ர பத்னிகளாக மட்டும் இரண்டு பேர் சாகம்பரி என்றும் சசிசேகர வல்லபா என்றும் இருக்கிறது. 

பஞ்சகாலத்தில் தேவி தன் சரீரத்திலிருந்தே காய்கறிகளை உண்டு பண்ணி பக்தர்கள் உண்ண அனுகிரகம் செய்தாள். அவளே சாகம்பரி. அவள் ஈசனுடைய சக்தியே. ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய என்று சொல்லியபடி பிரளயமான ஸம்ஹாரத்திற்கு உதவி செய்யாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் மக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து காத்திருக்கிறாள். த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நான்காவதாக ஒன்றை ஏன் இப்படி ஆச்சார்யாள் சொல்லவேண்டும்?
அவர் பொருத்தமாகத்தான் கூறியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை அவருக்கு நன்கு தெரியும். தனலக்ஷ்மி, தான்யலக்‌ஷ்மி என அஷ்டலக்ஷ்மிகளைச் சொன்னாலும் லக்ஷ்மி என்றால் தனத்தைத்தான் நினைப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் தனத்தை சாப்பிட முடியுமா? அதனால்
சாப்பாடு தரும் அம்பிகையை லக்ஷ்மியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விடக்கூடாது என்பதால்தான் சாகம்பரியைக் குறிப்பிட்டார். 

அப்புறம் ப்ரளயத்திற்கு சுவாமியான ருத்ரனின் சக்தியை சசிசேகரவல்லபா என்றார்.
அப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவரின் பிரியமான பத்தினி. ஸம்ஹார மூர்த்தியே மஹேச்வரனாக மாயா நாடக லீலை நடத்தும்போதும் ஸதாசிவனாக மோட்சத்தையே அனுகிரகம் செய்யும் போது கூட சசிசேகரனாகத்தான் இருக்கிறார். 

எனவே, படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்தொழில்களையும் புரியும் பரப்ப்ரம்ம சக்தி பல்வேறு வடிவங்கள் எடுத்தாலும் அவை ஒன்றே என்பது நிரூபணமாகிறது.

லக்ஷ்மிதான் சரஸ்வதி, பார்வதி என்று சொன்னபின் சிவ - விஷ்ணு - பிரம்மாக்களை மட்டும் வித்தியாசம் மாதிரி விட்டுவிடலாமா > எனவே தான் அந்த ஸ்லோகம் முடிகிற இடத்தில் த்ரிபுவநைக குரோஸ்தருணி என்று முடிகிறது. திரிபுவனங்களுக்கும் குருவாக இருப்பவர் மஹாவிஷ்ணு. அவரின் பிரிய சக்தி லக்ஷ்மி என்று அர்த்தம். தட்சிணாமூர்த்தியின் மூல குரு வடிவத்திலிருந்து அவதரித்த மஹாவிஷ்ணுவைச் சொல்லும் போதும், மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய நான்முகனைச் சொல்லும்போதும் பேதங்கள் மறைந்து போகிறது.

சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்தராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், கொல்கொத்தா, மஹாராஷ்ட்டிரா போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன.

வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். 

வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

சாகம்பரி த்யானம்:

ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்
சாகம்பரி காயத்ரி
ஓம் சாகம்பர்யை வித்மஹே சக்ஷாஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

செய்தி: ந. பரணிகுமார்
நன்றி🙏🏻
வலைதளப் பதிவு🙏🏻
🛕🙏🏻🔱🧘🏻‍♂️🛐🕉️🇮🇳🌍🕊️🙇🏻‍♂️🙏🏻🔱🧘🏻‍♂️🛐🕉️🇮🇳🌍🕊️🙇🏻‍♂️🛕
பகிர்வு:
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்



https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A


KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...