Tuesday, January 17, 2023

பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#முக்திதாம்_நாசிக்15.10.2022.

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#முக்திதாம்_நாசிக்
15.10.2022. 
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

🛕முக்திதாம் (#Muktidham) ஆலயம், நாசிக் :

🛕நாசிக் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் நாசிக் - ஷீரடி பிரதான சாலையில் உள்ளது.

🛕 பல்வேறு இந்து கடவுள்களைக் கவுரவிக்கும் வகையிலான பளிங்கு கோயில் வளாகமாகும்.

🛕முழுவதும் மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

 🛕இது இந்தியாவின் மகாராட்ஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரின் புறநகர்ப் பகுதியான நாசிக் சாலையில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

 🛕இது ஒரு அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. உள்ளூர் தொழிலதிபர் மறைந்த திரு. ஜே.டி. சவுகான்-பைட்கோவின் தாராள நன்கொடை மூலம் கட்டப்பட்டது.

 🛕இந்த கோயில் 1971 இல் நிறுவப்பட்டது.

🛕இங்கு 12 ஜோதிர்லிங்கங்களின் பிரதிகளைக் கொண்டுள்ளது.

 🛕இவை அசல் தெய்வங்களின் பரிமாணத்தின் படி கட்டப்பட்டுள்ளன.

🛕முக்திதாம் வளாகத்தில் கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. 

🍁கிருஷ்னர் கோயிலின் சுவர்களில் கிருஷ்ணர் மற்றும் மகாபாரத காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன.

 🛕இவற்றைப் பிரபல ஓவியர் ரகுபீர் முல்கோன்கர் வரைந்துள்ளார்.

 🛕இவரின் சேவைகளை முக்திதாம் ஆலயத்தின் நிறுவனர் ஜெயராம்பாய் சவுகான் பயன்படுத்திக் கொண்டார்.

 🛕இந்த கோயிலின் தனித்துவமானது பகவத்கீதாவின் பதினெட்டு அத்தியாயங்களும் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.

🛕இந்த கோயிலில் உள்ள பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் உள்ள மக்ரானாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இவை ராஜஸ்தானி சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது

🛕இக்கோயிலில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களின் பிரதிகளைத் தவிர, ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் அனைத்து முக்கிய இந்து கடவுள்களின் சிலைகளும் (விஷ்ணு, லட்சுமி, ராம, லட்சுமணன், சீதா, அனுமன், துர்கா, விநாயகர்) உள்ளன.

🛕நாசிக் நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் முக்திதாம் ஒன்றாகும். கும்பமேளாவின் போது ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் முக்திதாம் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

🛕மேலும், இந்த வளாகத்தில் ஒரு தர்மசாலையும் உள்ளது. இதில் குறைந்தது 200 யாத்திரிகர்கள் தங்கலாம் என்று கூறுகிறார்கள்.***

#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️

🏵️ஆலயம் மிகத் தூய்மையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

🏵️முறையான பூசைகள் செய்யப்பட்டு வருகிறது.

🏵️அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

🏵️நாங்கள் நாசிக் பஞ்சவடி தரிசனம் முடித்துக் கொண்டு ஷீரடி செல்லும் சாலையில் உள்ள இவ்வாலயம் தரிசித்தோம்.

🌼ஆலயத்தின் முன் பகுதி முன் கோபுரம் உள்ள வாசல் பகுதி.
அதைத் தொடர்ந்து உள் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.  

🌟கருவரை மேல்புறம் மிக உயரமான கோபுரம், ஆலயத்தின் அடையாளமாக உள்ளன.

🌟மிகப் பெரிய உள் மண்டபத்தில் ஒரு பகுதியில், 12 ஜோதிர்லிங்கங்கள், அழகிய வடிவில் அமைத்துள்ளனர்.

🌟மாடி அமைப்பும் உள்ளது. நன்றாக மார்பிள் கற்களால் முமு ஆலயக் கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளது.

🌟கருவரை மண்டபம் விசாலமானது 3 பிரிவுகளாக உள்ளது. நடுபகுதி விசாலாமானது, ராமர், சீதா, லெட்சுமனருடன் உள்ளார்கள். அடுத்தடுத்த முக்கிய தெய்வங்களும் வடிவமைத்துள்ளனர்.

🌟கருவரை மண்டபம் மேல்பக்கம், மிகப்பெரிய ஓவியம் பகவத்கீதை காட்சிகள் அருமையாக வடிவமைத்துள்ளனர்.

🌟இரு புறமும் முக்கிய சிற்பங்கள் கைலாய அமைப்பில் சிவன், முனிவர்கள் மற்றும் விஷ்னு பகவான், மற்ற தெய்வங்கள் அற்புதமாக அமைத்து உள்ளனர்.

🌼நாங்கள் பகல் 12.30 போல சென்றோம். அப்போது ஒரு பூசை நடைபெற்றது. அதைப் பார்த்துவிட்டு வந்தோம்.

🏵️ஆலய வளாகம் நிறைய கடைகள் கொண்டுள்ளன. தங்கும் இடங்கள், யாகம், பூசை செய்ய தனித்தனி இடங்களும் உள்ளன.

🌼ஓய்வுக்கூடம், கழிப்பறை வசதிகளும் உள்ளன.

🏵️ஆலயம் பிரபலமானதாக உள்ளதால், ஆலயம் அருகில் உள்ள பிரதான சாலைகளிலும் ஏராளமான கடைகள் உள்ளன. பல்வேறு பொருட்களும் விற்பனை ஆகின்றன.

🏵️இந்த ஆலயம் தரிசனம் முடித்துக்கொண்டு பகல் 1.00 மணி போல ஹீரடி புறப்பட்டோம்.

🏵️ வழியில் தாபா எனப்படும் வழி தட உணவகத்தில் நிறுத்தி, பயண ஏற்பாட்டளர்களால் முன்பே தயார் செய்திருந்த மதிய உணவை எடுத்துக்கொண்டோம்.

🏵️மாலையில், ஷீரடியில் ஒரு தொண்டு நிறுவன தங்கும் விடுதியில் சென்று தங்கினோம்.

🛐பயணங்கள் தொடரும்.... 

நன்றி🙇🏼‍♂️🙏 

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
15.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#முக்திதாம்_நாசிக்
#Mukthidam

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...