ஸ்ரீ சாய்பாபா ஆலயம்
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
ஷீரடி - ஸ்ரீசாய்பாபா ஆலயம்
15.10.2022.
பயண அனுபவக் குறிப்புகள்🕊️
🌟நாங்கள் 15.10.2022 அன்று காலை திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் தரிசித்து, பயண ஏற்பாட்டாளர்கள் தயாரித்து அளித்த காலை உணவை அங்கேயே முடித்துக் கொண்டு, அங்கிருந்து சுமார் 9.15 மணி அளவில் எங்கள் தனி பேருந்தில் புறப்பட்டு, சுமார் 30 கி.மீ பயணத்தில், நாசிக் நகர் வந்து அடைந்தோம்.
🌼 நாசிக் - பஞ்சவடி ஷேத்திரம் தரிசித்து விட்டு வழியில் உள்ள முக்கிதாம் என்னும் ஆலயம் தரிசித்து, 15.10.2022 மாலையில்
ஷீரடி வந்து அடைந்தோம்.
🏵️மூன்றாவது முறையாக இந்த ஆலய தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
🌼இந்த முறை, ஷீரடியில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டி ஹோட்டலில், பயண ஏற்பாட்டாளர் மூலம், தங்கவைக்கப்பட்டோம்.
🏵️இங்கிருந்து Share Auto (நபருக்கு ரூ 10 அல்லது ரூ 20 கேட்கிறார்கள்), மூலம் ஆலயம் சென்று தரிசனம் செய்துவந்தோம்.
ஸ்ரீசாய்பாபா ஆலயம், ஷீரடி.
🌼சாய்பாபா நம்பும் தத்துவம்: 'நம்பிக்கை மற்றும் அன்பு. இதுவே கடவுளின் தன்மையைப் பெற்றுத்தரும்' என்கிறார்.
🌼ஷீரடி சாய்பாபா கோவில்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் இருந்தாலும் மும்பையில் அருகில் இருக்கும் ஷீரடி தலமே, சாய்பாபாவின் வீடாக கருதப்படுகிறது. இங்கு இருந்து இன்றும் சாய்பாபா பல அற்புதங்களை நிகழ்த்துவதுடன், பக்தர்களுக்கு நேரடியாக காட்சி கொடுத்தும், வழிகாட்டியும் வருகிறார்
🌼மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை மாநகரிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள, ஷீரடி சாயிபாபா ஆலயத்திற்கு தினமும், பாரதத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கூடி தரிசனம் பெறுகிறார்கள்.
🌼இது இன்றைய பாரதத்தின் மிக முக்கிய ஆன்மீக சுற்றாலத் தலமாக விளங்குகிறது.
வரலாறு :
🌼ஷீரடி சாய்பாபாவின் பிறப்பு, ஆரம்ப கால வாழ்க்கை, அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் அவரது பிறப்பு பற்றிய விபரங்கள் மர்மமாகவே உள்ளது. இவர் இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்ததாக கூறப்படுகிறது.
🌼சாய்பாபா தனது 16 வது வயதில், முதன் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர் மகானாக காட்சி அளித்தார்.
🌼தன்னை நாடி வருபவர்களுக்கு சிறந்த ஆன்மிக தத்துவங்கள், போதனைகள் ஆகியவற்றை வழங்கி, தன்னை நாடி வரும் பக்தர்களின் நோய்களை குணப்படுத்தி வந்தார்.
🌼பாபாவின் புகழ் மெல்ல மெல்ல மற்ற பகுதிகளிலும் பரவ துவங்கியது.
🌼இதனை பார்த்த சாய் பாபாவை வளர்த்த பிராமணர், அவரிடம் கூறியதவது, 'குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன். உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும் நேரம் வந்துவிட்டது. அதுபற்றி நீ கவலைப்படாமல், உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் உன்னுடைய வருகைக்காகத் தவம் இருக்கிறது. நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.
பாபாவின் ஷீரடி வருகை
🌼குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீரடி திருத்தலம்.
இனிக்கும் வேப்ப மரம் /குருஸ்தான்
🌼சாய் பாபா சீரடிக்கு வந்தபோது, அவர் தனது பெரும்பாலான நேரத்தை ஒரு வேம்பு மரத்தின் கீழ் கழித்தார், அது இப்போது குருஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேம்பு மரத்தின் இலை கசப்பதற்கு மாறாக இனிப்பு சுவையில் இருக்கும். மேலும் வேப்ப இலையை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை இருப்பதோடு எந்த நோய்களாலும் அவர்களை அண்டாது என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
🌼16 வயதினில் பாபா இங்கு வந்தார் என்று நம்புகிறார்கள். 1918 வரை இங்கு வசித்தார்.
கண்ட டோபா ஆலயத்தில் தங்கியிருந்தார் என்றும் மகால்சபதி என்பவரே இவரை சாய் அன்று அழைக்க இவருக்கு அதுவே பெயராகிவிட்டதாம்.
🌼சாய்பாபாவின் பிறப்பு துவங்கி, கோவில் உருவான விதம் என பலவும் விடை தெரியாத மர்மமான, ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்களாக உள்ளது. ஆனாலும் சாய் மகிமையால் ஈர்க்கப்பட்டு, ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
🌼ஷீரடியில் மட்டுமல்ல எங்கெல்லாம் சாய் வழிபாடு நடக்கிறதோ அங்கெல்லாம் சாய்பாபா பல அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்தி வருகிறார்.
உதி மகிமை
ஷீரடியில் கொடுக்கப்படும் விபூதிக்கு உதி என்று பெயர். இது மிகவும் மகிமை வாய்ந்தது. இதை நம்முடன் வைத்திருந்தால் கஷ்டங்கள், துக்கங்கள் விலகி விடும். சாய் உதி வீட்டில் இருந்து தீய சக்திகள் எதுவும் அண்டாது. உதியில் சாய்பாபா சூட்சும வடிவில் நம்முடன் இருந்து அருள் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னதானம்:
🌼பாபா கொடுக்கும் பிரசாதம் :
பக்தர்கள் பசியோடு இருப்பதை சாய்பாபா ஒரு போதும் விரும்ப மாட்டார். அதனால் அவர் தானே தனது கையால் பக்தர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதை சாய் பக்தர்கள் பலரும் இன்றும் தொடர்ந்து வருகிறார்கள். சாய்பாபா கோவில்களில் வியாழக்கிழமை தோறும் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். சாய்பாபாவே தனது கையால் பிரசாதம் கொடுப்பதாக பக்தர்களால் நம்பப்படுவதால் ஏழைகள் முதல் பணக்காரர் வரை வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் செல்கின்றனர்.
🌼கோவில் உருவான கதை:
🌼1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு சாய்பாபா நீங்கினார்.
🌼சாய் பாபா பூவுலகைவிட்டு மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் உள்ள சாய் பாபா கோயில் 1922 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது.
🌼இந்த ஆலயம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரராக இருந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்பவருக்கு சொந்தமானது.
🌼சாய் பாபாவின் பெரிய பக்தராக இருந்த அந்த பணக்காரர், பாபா மறைந்த பின்னர் ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார். இருப்பினும், இப்போது இந்த கோயில் ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது.
🌼இந்த ஆலயம் வெள்ளை பளிங்குக் கற்கள் கொண்டு பாதுகாப்புடன், சுமார் 600 பேர் தங்கும் அளவிற்கு வசதியுள்ளது.
சாவடி :
🌼பிரதான ஆலயத்தின் முன்புறம் சாவடி என்ற இடம் உள்ளது. இது முன்பு இருந்த அமைப்பில் வைத்து பராமரிக்கின்றனர்.
இங்கு தான் பாபா இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.
🌼ஆலய வளாகத்தில் உள்ள முக்கிய இடங்கள்.
துவாரிகாமி,
தீபஸ்தம்பம்,
சமாதி
வேப்பமரம்
🌼மற்றும், ஆலயத்தின் உள் வளாகத்தில், கிழக்குப்புறம்
விநாயகர், சனிஸ்வரர், சிவன்
முதலிய கடவுளார்களுக்கு தனித்தனி சன்னதிகள் வைத்து பூசை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
🌼தனியாக ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு புத்தக நிலையமும் உள்ளது.
ஒரு பிரசாத லட்டு கவுண்டர் உள்ளது.
மேலும், தனியாக ஒரு அலுவலகம், பிரசாதம் மற்ற பொருட்கள் விற்பனை இடமும் உள்ளன.
🌼மிகத்தூய்மையாக ஆலய வளாகத்தை பராமரித்து வருகிறார்கள்.
வளாகத்தில், தனி ஓய்வு மற்றும் கழிப்பறைகள் அமைத்துள்ளனர்.
🌼கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும், வழிகாட்டல் போர்டுகளும் ஏராளமாக உள்ளன.
🌼இவ்வாலயம் காலை 5 மணி முதல் இரவு 10.00 மணிவரை திறந்திருக்கும். ஒரு நாளைக்கு சுமார் 60,000 முதல் 1,00,000 பக்தர்கள் வந்து தரிசிப்பதாகக் கூறுகிறார்கள், முக்கிய விழாநாட்களான குருபூர்ணிமா, தசரா, மற்றும் ராமநவமி நாட்களில் மிக அதிக கூட்டம் வருவதால், நாள் முழுதும் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது..
🌼 ஆந்திராவின் திருப்பதிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள இரண்டாவது பணக்கார கோயில் இதுவாகும்.
🌼வியாழக்கிழமைகளில், மற்றும் வார விடுமுறை நாட்கள் மிக கூட்டம் அதிகம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அதிகமான விழா நாட்கள் வருகிறது அதில் அதிக பக்தர்கள் வருகிறார்கள். காலை 5- முதல் இரவு 10 மணிவரை ஆலயம் தரிசனம் உண்டு. நாள்தோறும், காலை 5.15 மற்றும் மதியம் 12.00 மணிக்கும் மற்றும் தூப ஆர்த்தி மாலையிலும், இரவு 10.30க்கும் தினமும் பூசை - ஆரத்தி நடைபெறுகிறது.
🌼ஆலயம் பிரதான சாலைக்கு கிழக்கு பக்கம் உள்ளது. ஆலயத்தின் வடக்குப்புரம் q வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியேதான் உள்ளே செல்ல முடியும். மொத்தம் 3 கேட்கள் உள்ளன. கேட் No.3 முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதார் கார்டு காண்பித்து விட்டு சென்று தரிசனம் செய்யலாம்.
🌼ஆலயம் உள்சென்று தரிசனம் செய்ய செல்லும்போது எந்தவித மின்சாதனப் பொருட்களும், கைபேசி முதலிய பொருட்களுக்கு அனுமதி இல்லை. மேலும், மாலை போன்ற எவ்வித பூசை பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
🌼ஆலய வடக்கு வீதியில் பொருட்கள், கைபேசி, காலனிகள் வைத்து விட்டு செல்ல பெரிய இலவச கவுண்டர்கள் உள்ளன. அதில் வைத்துவிட்டு Token பெற்றுக்கொள்வது நல்லது.
🌼தற்போது, ஷீரடி முழுதும் ஏராளமான கடைகள் அமைத்துள்ளனர்.
🌼இங்கு பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது என்றாலும், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழகத்திலிருந்து பக்தர்கள் அதிகம் வருகிறார்கள். பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.
🌼இதனால், பல்வேறு மொழிகள், தமிழ் உட்பட பேசுவர்கள் அதிகம் உள்ளனர்.
🌼இந்த ஆலயம் பிரசித்து பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமாக மாறிவிட்டதால், இதை சார்ந்த வியாபாரங்கள், Hotels, பொருட்கள் ஏராளமான அளவில் வளர்ந்து உள்ளது.
🏵️நாங்கள், 15.10.2022 அன்று மாலையில் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலில் வந்து உடமைகளை வைத்து விட்டு Refresh ஆகி, அன்று மாலையில் ஆலயம் சென்றோம்.
🏵️ஆலயத்தின் வடக்குப்புறம் உடமைகள் பாதுகாப்பு நிலையத்தில், Mobile, cheppal வைத்துTocken பெற்றுக் கொள்ளலாம்.
🏵️பூசைப் பொருட்கள் எதுவும் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் அதிகம் உண்டு.
நாங்கள் ஆலயம் முழுதும் சுற்றி தரிசனம் செய்து விட்டு Share Auto மூலம் Hotel அடைந்தோம். இந்த Hotel லில் தங்கும் அறைகளில் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது கீழே தனி சமையல் கூடம், உணவுக்கூடம், உள்ளது. அங்கேயே சென்று உணவு எடுத்துக் கொண்டோம்.
🌼இரவு உணவு பயண ஏற்பாட்டளர் மூலம் சமைத்து சாப்பிட்டு விட்டு, அன்று இரவு தங்கி, விடியற்காலையில், சனிஷிக்னாப்பூர் சென்றோம்.
🌼வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள், நிச்சயம் நம்பிக்கையுடன் சென்று பாபாவை தரிசித்து வாருங்கள்.
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼♂️🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
15.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#ஷீரடி - சாய்பாபா ஆலயம்.