வேதாரண்யம் கள்ளிமேடு அருகில்
உள்ளது.
அவரிக்காடு, கத்தரிப்புலம், காரியாப்பட்டிணம் இவ்வூர்களின் நடுவில் உள்ள எளிமையான சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயம், ஊர்மக்கள் ஒன்று கூடி சிறப்புடன் 3.3.2021 அன்று குடமுழுக்கு செய்வித்தனர்.
ஆலயம் கிழக்குப் பார்த்தது. ராஜகோபுர நுழைவுவாயில், நந்திக்கு தனி மண்டபம். அம்பாள் தெற்கு நோக்கியும், சுவாமி கிழக்கு ப் பார்த்தும், தனித்தனி சன்னதிகளை இணைத்து ஓர் மண்டபம்.
வினாயகர், பூமிநாதர், வள்ளிதெய்வானை சுப்ரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர், தனித்தனி சன்னதிகள், கிழக்கு புறம், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள்.
சிறிய ஆலயமாக இருந்தாலும், சிறப்புடன் வழிபாடு நடைபெறுகிறது.
3.3.2021.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
நாகக்குடையான் :
வேதாரண்யம், கத்தரிப்புலம் அருகில் உள்ள சிற்றூர்.
ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் பள்ளிகொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீரெங்கநாதர்.
தனி ஆஞ்சனேயர், தனி கெருடர்,
ஏகத்திற்கும் சேர்த்துஒரே பெரிய மண்டபம்.
3.3.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
கத்தரிப்புலம் : வேதாரண்யம் அருகில் உள்ள சிற்றூர்.
வேதாரண்யம் - காரியாப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி வழியில் கோவில் குத்தகை என்ற இடத்திலிருந்து சுமார் 500 மீ.தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசிநாதர், ஸ்ரீவேதநாயகியம்மன் சிவன் ஆலயம்.
சாலையின் முக்கியசந்திப்பில் ஒரு விநாயகர் ஆலயம் நன்கு பராமரிப்பில் உள்ளது.
அடுத்து ஆலயம் முன்பு பெரியகுளம் உள்ளது.
ஆலயம் கிழக்கு நோக்கியது.
ராஜ கோபுரம் இல்லாவிட்டாலும். ஆலயம் சுற்றி Compound உள்ளது.
உள் அமைப்புகள் அத்தனையும் தெரியும் அளவில் ஆலயம் நடுத்தர பரப்பில் விரிந்துள்ளது.
சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன்,
நவகிரகம், பெருமாள் தனி தனி மண்டபம், சன்னதிகள்.
சுற்றி வர நல்ல சிமென்ட் கல்பாதை உள்ளது.
ஒரு கால பூசை .
சற்று தூரத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வப்போது சிலர் மட்டும் ஆலயம் வருகிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனாலும், பராமரிப்பில் உள்ள ஆலயமாக இருக்கிறது.
3.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment