1.செந்துறை: சிவதாண்டேஸ்வரர் பெரியநாயகி அம்மன் அருள் தரும் தலம். திருப்புகழ் தலம். மிகப் பழமையான ஆலயம் சமீபத்தில் புதிய ராஜகோபுரம் பொலிவுற அமைக்கப்பட்டு மிக அற்புதமாக உள்ள தலம். ஊரின் நடுவில் உள்ள தலம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
2.ராயபுரம் : இராஜகம்பீஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மன் அருள் தரும் ஆலயம். செந்துரை - அரியலூர் NH சாலையில் இவ்வூர் உள்ளது. ஊரிலிருந்து கிழக்கில் செல்லும் சாலையில் 1 கி.மீ அளவில் ஒரு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் இக்கோவில் உள்ளது. ஒரு சிறிய அனுகு சாலை வழியாவே செல்ல முடியும் வழியில் உள்ள பெரிய தோப்பு தாண்டி செல்ல முடியும். வழியில் சிறிய கட்டிடத்தில் பெருமாள் ஆலயமும் உள்ளது. கோவில் அர்ச்கர் செந்துரையிலிருந்து தான் வருகிறார். ஒரு காலம் மட்டுமே. பிரதோஷம் உண்டு. இரவில் செல்ல இயலாது. பாதைகள் சரி செய்யப்பட்டால் தான் நல்லது. நிறைய சொத்து நிலங்கள் கோவிலுக்கு உள்ளது என்று கூறுகிறார்கள். ஆலயம் அமைப்பு: நந்திக்கு தனி மண்டபம் சுவாமி இராஜகம்பீஸ்வரர் அருமையாக உள்ளார். கருவறை யுடன் உள்மண்டபம் உள்ளது. மற்றும் ஒரு பெரிய வெளி மண்டபத்தில் பைரவர் சூரியன் அமைந்துள்ளது. ஒற்றை வெளி பிரகாரத்தில் தனி விநாயகர் சன்னதி சுப்பிரமணியர் மற்றும் இரண்டு தனி சிவன் சன்னதிகளும் சன்டிகேஸ்வரர் துர்க்கை தனியாகஅமைந்துள்ளது. தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கி பர்வத வர்த்தினி அம்பாள் அருள் புரிகிறார். முழுவதுமாக உழவாரம் செய்யப்பட்டாலும். இராயபுரம் கிராம மக்கள் தொடர்ந்து வந்து தரிசித்தால் மட்டுமே சிறப்பு. நாங்கள் சிவராத்திரி (04.03.2019) என்பதால் குருக்கள் ( பட்டாச்சாரியார்) ஒருவர் வந்து இருந்தார். அபிஷேக பொருட்களை கொடுத்தோம். அன்றய உபயதார் கொடுத்திருந்த அபிஷேக பொருட்களைக் கொண்டு கடமையே கண்னாக பணிபுரிந்தார். தனி ஆளாக அவர் மட்டுமே கோவிலுக்கு வந்து தன் கடமையை செய்து வருகிறார். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவு . இக்கோவிவில் வந்து வேண்டி சென்று பலன் பெற்ற பலர் இக்கோவிலுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். ஏகப்பட்ட நிலம் சொத்து இருந்தும், தொடர் பராமரிப்பு இல்லை என்பது வருத்தமாக இருந்தது. புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்து மக்கள் வந்து வழிபடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் திரும்பினோம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
3.பொன்பரப்பி : சொர்னபுரிஸ்வரர் பெரியநாயகி அம்மன் அருள் தரும் அற்புத ஆலயம். ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை வழியாக அரியலூர் செல்லும் SH சாலையில் உள்ள ஊரின் நடுவில் உள்ள ஆலயம். நன்றாக பராமரிப்பும் விழாக்களும் நடைபெற்று வரும் நல்ல ஆலயம் சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாலும், கோவில் பராமரிப்பில் உள்ளதாலும் நன்றாக உள்ளது.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
4.உடையார்பாளையம்: மிகப் பெரிய ஆலயம் கோவிலும் குளமும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. பயரனீஸ்வரர் குகமசுந்தரி அம்பாள் சுவாமிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கியதனி சன்னதி சுவாமியும் கிழக்கு நோக்கி உள்ள ஆலயம் மிகப் பெரிய கற்கோவில் . ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய கோவில் இரண்டு காலம் மட்டும். முன்கூட்டி சொல்லி தரிசனம் செய்ய வேண்டும். பல முறை முயற்சி செய்தும் இன்று (04.03.2019) சிவராத்திரி அன்று தரிசனம் கிடைத்தது. காஞ்சி காமாட்சி அம்மன் சிலை ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கு வைத்து பூசை நடந்துள்ளது. ஒரு காலத்தில் மிக மிக சிறப்பான விழாக்களும் பூசைகளும் நடந்த கொண்டிருந்த அற்புத ஆலயமாக உள்ளது. பிரமிப்பான ஆலயம்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
5.வானதி ராயன்பட்டினம்: உடையார்பாளையத்திற்கு கிழக்கில் உள்ள சிறிய ஊரின் நடுவே அமைந்துள்ள சிவன் ஸ்தலம். சென்னீஸ்வரர் பெரியநாயகி அம்மன் . மிகப் பெரிய கற்கோவில் . கற்கள் வித்தியாசமான அமைப்பு கொண்டது. அனைத்து சிலைகளும் மிகவும் அற்புதமாக ஜொலிக்கின்றது. ஊர் மக்கள் ஒத்துழைப்பில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
6. நாயகனைப் பிரியாள் : ஊடயார்பாளயம் தெற்கு அனைக் குடம் மேற்கில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு சிவன் ஆலயம். மார்க்கசகாயேஸ்வரர் மரகதவல்லி அம்மன் அற்புத தலம். சிவராத்திரி நாளை மிகச் சிறப்புடன் பொதுமக்கள் கொண்டாடுகிறார்கள்.
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment