ஆனந்தக்குடி: மயிலாடுதுறை - மாப்படுகை - பொன்னூர் மற்றும் காளி செல்லும் சாலையில் உள்ள சிறிய கிராமத்தில் பிரதான சாலையை ஓட்டி உள்ள மிகப்பெரிய குளத்தின் கரையில் உள்ள
ஸ்ரீ ஆனந்தபுரீஸ்வரர், ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன், ஆலய குடமுழுக்கு 24.03.2021.
சிறிய ஆலயம் சுவாமி சன்னதி முன்புறம் விநாயகர் மற்றும் முருகன் சிறிய சன்னதிகளும், அம்பாள் தெற்கு பார்த்து தனி கருவறை மண்டபமும், சுவாமி உள் மண்டபம், கருவறையுடன் கிழக்குப் பார்த்தும் ஏக மண்டபத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்து. மிகப் பழமையான காலத்தில் பெரிய ஆலயமாக இருந்திருக்கவேண்டும். தற்போது கிராமவாசிகளால் மீட்க்கப்பட்டு சிறிய நூதனமாக மாற்றி குடமுழுக்கு செய்வித்திருக்கின்றனர். குடமுழுக்கு 24.03.2021ல் செய்துள்ளனர்.
ஆலயம் முன்பு மிகப்பெரிய குளம் உண்டு.
24.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
மாத்தூர்:
1.செம்பொன்னார்கோவில் - நல்லாடை - மேல்மாத்தூர் - கீழ்மாத்தூர் வழி.
2. செம்பொன்னார்கோவில் - காளஹஸ்தினாபுரம் தெற்கில் 3 கி.மி.
ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ ஆனந்தவள்ளியம்மன் ஆலயம்
குடமுழுக்கு 24.03.2021.
மருதவஞ்சேரி :
பூந்தோட்டம் - நாச்சியார் கோவில் வழியில் வரும் சிற்றுர். ஊர் தெற்கில் பிரியும் சாலையில் 500 மீ. தூரம் செல்ல வேண்டும்.
சாலையின் இடதுபுறத்தில் அமைந்த ஆலயம்.
ஸ்ரீ மநுநீதிஸ்வரர், ஸ்ரீ மாணிக்க சிவகாமியம்மன் ஆலயம்.
சிறிய ராஜகோபுரம், முன்மண்டபத்துடன் சுவாமி மேற்கு பார்த்த ஆலயம். அம்பாள் தென்புறம் நோக்கியும், அம்பாள் அருகில் பாலசுப்ரமணியர் சன்னதியுடன், அமைந்த ஆலயம்.
நந்திக்கு தனியாக சிறு மண்டபத்துடன் அமைப்பு.
கருவறையில் சுவாமி மேற்கு பார்த்தும்,
நடராஜர் கருவறை முன்மண்டபத்தில் தெற்கு பார்த்தும் உள்ளது.
ஒரே பிரகாரம்: துர்க்கை சன்னிதி மேல் சுமார் 6 அடி உயரத்தில் தனியாக ஒரு பெரிய சுதையினால் ஒரு துர்க்கையும் அமைத்துள்ளார்கள்.
ஆலயம் உள்நுழைவில் தென்மேற்கு மூலையில் விநாயகர் தனி சன்னதி.
அழகான சிறிய ஆலயம்.
மிகத் தூய்மையான பராமரிப்பு. தனியார் ஆலயம் போன்று பராமரிக்கப்படும் அ.நி.து. ஆலயம்
1948, 2001, 2014 ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர் மக்களுக்கும், குருக்களும் பாராட்டப் பட வேண்டியவர்களே.
❤️🙏🙏🙏
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
https://m.facebook.com/story.php?story_fbid=5333010480107499&id=100001957991710
கம்மங்குடி:
பூந்தோட்டம் - நாச்சியார்கோவில் செல்லும் வழியில் வரும் மருதுவாஞ்சேரி கடைத்தெரு தெற்கில் பிரியும் சாலை உள்நுழைந்து 3 கி.மீ. சென்றால் கம்மங்குடி என்னும் சிற்றூர். இவ்வூரில் கிழக்குப் பார்த்த ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயம். ஆலயத்தின் வலதுபுறத்தில் ஒரு பெரியகுளம், கிழக்கு கரையில் மாரியம்மன் ஆலயமும் உள்ளது.
சிவன் ஆலயம், குளத்தின் வடகரையில் இருந்தாலும்,
ஆலயம் முழுதும் மதில் சுவர் இருப்பதால், ஆலயத்தின் மேற்குப் புறத்தில் உள்ள சிறிய வழியாகத்தான் செல்ல முடியும். அருகில் விசாரித்தால், ஆலயத்தின் சாவி பெற்று தரிசிக்கலாம்.
கிழக்குப் பார்த்த ஆலயம். சுவாமி ஸ்ரீ கைலாசநாதர் கிழக்குப் பார்த்தும், தெற்கு நோக்கியபடி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியும் அமைந்துள்ளனர். ஏக மண்டபம். முன்புறம் சிறிய நந்தியும் தனி மண்டபத்தில் உள்ளார். சுற்று பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, தனிவிநாயகர், முருகர், மகாலட்சுமி தனிதனி சன்னதிகள். உள் நுழைவு பாதை மிகக் சிறியதாக உள்ளன. துர்க்கை சுதையிலும், சண்டிகேஸ்வரும் உள்ளனர். சுற்றிலும் மதில் சுவர், வேலியும் போட்டு காத்து வருகின்றனர்.
சுவாமி அடிபகுதி மட்டும் கருங்கற்கள் மேல்பகுதி முழுதும் செங்கல் காங்கிரீட் சுவர். சுவர் பகுதிகள் மிகவும் பழுதடைந்து தெரித்து சிதலமடைந்து உள்ளது. அவசியம் ஊர்மக்கள் ஒன்றுகூடி புனரமைத்து வழிபட வேண்டிய சூழலில் உள்ளது.
ஒரு காலம் மட்டும் நடைபெற்று வருகிறது.
கிராமம் முழுதும் வயல்வெளி சூழலில் உள்ள எளிமையான சிற்றூர்.
ஊர்மக்கள் மேலும் பலர் சேர்ந்து தொடர்ந்து ஒன்று பட்டு
வணங்கி வழிபட ஆலயம் மிகவும் சிறப்படையும். ஆலய வழிபாடே இவ்வுரை சிறப்புறச் செய்யும். சாலை வசதிகள் மேம்பட வேண்டும்.
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
நீலக்குடி :
வண்டாம் பாளயம் - வடகண்டம் சாலை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக Main Entrance க்கு முன்பாக வரும் ஊர். பிரதான சாலையில் திருப்பத்தில் உள்ள சிறிய சிவ ஆலயம்.
ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ விசாலாட்சி அம்மன்.
சுவாமி சிறிய உருவம், கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்குப் பார்த்தும், சிறிய இணைப்பு முன் மண்டபம் அமைந்துள்ளது.
பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி, விநாயகர், சிவலிங்கம் முருகன், சன்னதிகளும், சண்டிகேஸ்வரர், துர்க்கையும் உள்ளது.
கிராமப் பொதுமக்கள் தனியார் நிதி உதவியுடன் இவ்வாலயத்தை கட்டிமுடித்து குடமுழுக்கு செய்வித்திருக்கிறார்கள்.
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
வடகுடி:
நன்னிலம் நாச்சியார்கோவில் வழியில் நன்னிலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் வடகுடி சென்று வடக்கில் பிரியும் சாலையில் 2 கி.மீ.
சிறிய ஊர் சிறிய சிவன் ஆலயம் ஊரின் பெரியகுளத்தை ஒட்டி உள்ளது. ஒரு காலம் மட்டும். விசேஷ பூசை சமயத்தில் மட்டும் அர்ச்சகர் வருகிறார்.
அருகில் ஸ்ரீவரதராஜ பெருமாள்,
ஸ்ரீ விஜயபஞ்சமுக அனுமார் வித்தியாசமாக உள்ளர்.
சிறப்பு பூசைகள் சனிக்கிழமைதோறும் உண்டு.
நல்ல பராமரிப்பில் உள்ள சிறிய ஆலயம்.
கிழக்குப் பார்த்து பெருமாள் சன்னதியும்,
தனியே ஆஞ்சேனேயர், தெற்கு பார்த்து ஐந்துமுகங்களும் ஒரு சேர தரிக்கும் வகையில் அமைப்பு சிறப்பு.
26.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
https://m.facebook.com/story.php?story_fbid=5337247243017156&id=100001957991710
வடகுடி : சிவன் ஆலயம்: நன்னிலம் நாச்சியார்கோவில் வழியில் நன்னிலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் வடகுடி சென்று வடக்கில் பிரியும் சாலையில் 2 கி.மீ.
சிறிய ஊர் சிறிய சிவன் ஆலயம் ஊரின் பெரியகுளத்தை ஒட்டி உள்ளது. ஒரு காலம் மட்டும்.
கிழக்குப் பார்த்த ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர், தெற்கு பார்த்து அம்மன் ஒரு சேர நீண்ட மண்டபம்.
கருவறை முன்பு 3 சிவலிங்கங்கள். கருவறை நிலைப் பகுதியில் ஒரு புறம் விநாயகர், மறுபுறம் முருகன் சிறிய உருவங்கள். ஒரு சுற்றுப் பிரகாரம். ராஜகோபுரம் இல்லை என்றாலும் நுழைவு மண்டபத்தில் சிறிய நந்தி சற்று உயர மேடையில் உள்ளார்.
பிரகாரத்தில் விநாயகர், தட்சினாமூர்த்தி முருகர். துர்க்கை.
ஆலயத்தின் அடுத்த புறம் நடராஜர் சபை ஊர் மக்கள் சார்பாக வைத்துள்ளனர். அடுத்து திருவள்ளுவர் மன்றமும் தனியாக உள்ளது. அருகில் பெரியகுளமும் உள்ளது.
பங்குனி உத்திர விழாவில்
28.03.2021ல் சுப்பிரமணியருக்கு வள்ளித் திருமணம் ஊர்மக்களால் கொண்டாடப்படுகிறது.
28.03.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்