Monday, June 13, 2022

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக் குறிப்புகள்#KAUSANI (கவுசானி): 11.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்

#KAUSANI (கவுசானி): 11.04.2022

#பையிஜியநாத் (11.04.2022) என்ற ஆலயம் தரிசித்தபின், மதியம் புறப்பட்டு, கவுசானி என்ற ஊருக்கு சென்று, Hotel SAGARல் தங்கினோம். மாலையில், இவ்வூரில் உள்ள காந்தி ஆசிரமம், மற்றும் ஒரு சிவன் ஆலயம் தரிசித்துவந்தோம்.

🌼'இந்தியாவின் சுவிட்சர்லாந்து, ' என்று மகாத்மா காந்தி அவர்களால் அழைக்கப்பட்ட இடம். 

🏞️இது, இமயமலைப்பகுதியில் சுமார் 6200 அடி உயரத்தில் உள்ளது. 

🏝️உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான, இயற்கையான அழகான ஊர். 

🌈இங்கிருந்து, 250 - 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பல இமயசிகரங்களை குறிப்பாக, திரிசூல், நந்ததேவி, பஞ்சூலி, முதலிய சிகரங்களை ரசித்து காணலாம்.
பைன் மரக்காடுகள் அமைந்துள்ளன.

✨உத்திரகாண்ட் பாகேஸ்வரர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாகேஸ்வரரிலிருந்து 40 கி. மீ தூரத்திலும், அல்மோரா என்னும் நகருக்கு வடக்கில் 52 கி.மீயும்,, நைனிட்டாலிருந்து வடகிழக்கில் 123 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.பைஜியநாத் என்ற வைத்தியநாத் என்ற ஊரிலிருந்து 16.5 கிமீ.தூரத்திலும், மற்றும் பாகேஸ்வரர் ஆலயமும் அருகில் உள்ளது.

📒பிரபல ஹிந்தி கவிஞர் சுமித்தரனந்தன் பண்டிட் இவர் பிறந்த ஊர். இவர் பெயரில் ஒரு மியூசியம் அமைத்துள்ளனர்.

🏡மிக முக்கிய சுற்றுலாதலம். இங்குள்ள காந்தி ஆசிரமம் மிகவும் புகழ் பெற்ற இடம். இங்கு மகாத்மா காந்தி 1929ல் 14 நாட்கள் இங்கு வசித்து இருந்தார். இவ்விடத்தை மிகவும் ரசித்து இங்குள்ள தொண்டு ஆசிரமத்தில் (ANASHAKTI ASHRAMAM) தங்கியிருந்தார்.

🛕இப்போது இதை காந்தி ஆசிரமம் என்று அழைத்து வருகிறார்கள். ஆசிரமத்தில்
மகாத்மாவுக்கு சிலைக்களும், வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களும் காட்சி படுத்தி அருமையாக அமைத்துள்ளனர். ஒரு பெரிய மண்டபம் இதற்காக கட்டப்பட்டுள்ளது. மற்றும், தியானமண்டபம், சிறிய நூல் நிலையம், உணவுக்கூடம், காதி கதர் கிராம கைவினைப் பொருட்கள் விற்பனைக்கூடம், மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கூடமும், அமைந்துள்ளது.

🏔️VIEW POINT என்ற இடத்திலிருந்து 8 இமய சிகரங்களைப் பார்த்து களிக்கும் வன்னம், மேடை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

🏖️ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எந்த நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

🏯அருகில் தங்கும் விடுதிகள் உள்ளன.

🌌கௌசானி யில் மேலும் ஒரு வானிலை தொலைக்காட்சி இடமும் உள்ளது. புதிய கருவிகளைக் கொண்டு தொலைக்காட்சி கூடம் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், இமய சிகரங்கள், மலை, பனி, பகுதிகளை இங்கு வந்து இந்தக் கருவிகள் மூலம் ஆய்வு செய்கிறார்கள்.

🏢HOTEL SAGAR என்ற பெரிய Hotel லில், தங்கியிருந்தோம். இங்கிருந்து நடந்தே காந்தி ஆசிரமம் சென்று வந்தோம். 

🛕மேலும் சற்று தூரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்றோம்.தனியார் TRUST மூலம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யோகி ஒருவரால் துவக்கப்பட்டு ஆலயம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருவரை மண்டபம் உயரக் கோபுரம். கருவறையில், சிவன், ராதா கிருஷ்ணர், அம்மன், முதலிய அழகிய சிறிய பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டு, அழகாக ஆடை ஆபரணங்களுடன் வண்ண வண்ண விளக்கு அமைப்புக்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் சுற்றில் மண்டபம் உள்ளது. அறைகளும் உள்ளன.

🏔️மலை பிரதேசம் என்பதால், எல்லா இடங்களும் படிகளும், சற்று உயரமாகவும் அமைந்துள்ளன. சாலை, மின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய, சிறிய கடைகளும் அமைந்துள்ள ஊர்.

🌀இந்த இடங்களைப் பார்த்து விட்டு, 11.04.2022 இரவு Hotel SAGAR ல் தங்கிவிட்டு, 12.04.2022 முன்காலையிலேயே DWRAHAT என்ற ஊர் சென்றோம்.
அதன் அருகில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை தரிசனம் செல்ல புறப்பட்டோம்.

பயனங்கள் தொடரும்...

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)

🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Saturday, June 4, 2022

#UTTARAKANNT_TOUR_2022 - #பையிஜியநாத் என்ற வைத்தியநாத்(11.04.2022)

#UTTARAKANNT_TOUR_2022
#பயண_அனுபவக்_குறிப்புகள்
#பையிஜியநாத்  என்ற வைத்தியநாத்
(11.04.2022)

🌼கோமதிக்கரையில் உள்ள பாகேஸ்வரர் என்ற புராதான ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு கௌசானி என்ற ஊருக்கு சென்றோம்.
வழியில், கோமதி நதியின் கரையில்தான் வந்தோம். வழியில் உள்ள #பையிஜியநாத்    என்ற ஊருக்கு சென்று மதிய உணவு முடித்துக் கொண்டு இங்குள்ள புராதான ஆலயத்தை தரிசித்தோம். 

#பையிஜியநாத் , என்னும் வைத்திநாதர் ஆலயம் உத்திரகாண்ட் மாநிலத்தில், கோமதி நதிக்கரையில், குமான் மாவட்டத்தில் வாழ்ந்த கட்யூரி வம்ச அரசர்களால்  கட்டப்பட்டது.  இது ஒரு காலத்தில் கார்த்திகேயபுரா என்றும் அழைத்தார்கள்.

🌟07 முதல் 13ம் நூற்றாண்டுகளில், கட்யூரி அரசவம்சத்தினரின், ஜோஷிமத் என்ற இடத்தில் இருந்த தங்கள் தலைநகரை
பைஜியநாத்க்கு மாற்றி கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. 

🪱பாகேஸ்வர் - கெளசானி முக்கிய சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது.

🛕12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது இவ்வாலயம்; உத்திரகாண்ட் மாநிலம், குமான் பகுதியில் உள்ள பழமையும், புராதானமும் வாய்ந்த மிக முக்கிய ஆலயங்களில், இதுவும் ஒன்றாகும்.  சிவனின் புராதான கேந்திர முக்கிய நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.

🏔️இந்திய இமயமலைப்பகுதியில், சுமார் 1130 மீட்டர் (3,707 அடி) உயரத்தில், புகழ்பெற்ற பாகேஸ்வர் நகருக்கு வடமேற்கில், 20 கி.மீ. தூரத்திலும், கெளசானியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், உள்ளது.

🚏இந்திய தொல்பொருள் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது.

🌈மிகவும், அற்புதமான பார்வதி தேவியின் சிலை கருங்கல்லில் அமைந்துள்ளது; மிக அழகாக உள்ளது.

✨கட்யூரி அரசியின் முயற்சியால், நதியின் கரையின்  ஓரத்தில்உள்ள இந்த ஆலயம் செல்ல, பிரதான சாலையிலிருந்து அழகிய கற்படிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

🏯பிரமினி இனப் பெண்மனி ஒருவரால் உருவாக்கப்பட்டு பின் சிவ ஆலய வழிபாடு தொடர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.

💮கோமதி நதியின் சங்கமிக்கும்இடமாகிய  #பையிஜியநாத் என்ற இவ்விடத்தில்தான் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
🏞️பைஜியநாத் என்னும் வைத்தியநாதர் ஆலயம் 18 தனித்தனி கற்றளிகளாக 102 சிலைகள் கொண்டது. 
(தனித்தனி சன்னதிகளை சிறியதும், பெரியதுமாக, முழு ஆலய அமைப்பிக்கப்பட்டுள்ளதாலும், எல்லா சன்னதிகளும் / ஆலயங்களும், ஒருங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாம்)

🌀#பையிஜியநாத் ஆலயம் பல தெய்வங்கள் அமைந்துள்ள கூட்டு ஆலயம் என்றும்  கூறுவார்கள். 

🛕இங்கு வைத்திநாதர், கேதாரஸ்வரர், பார்வதி, நிருத்திய கணபதி, கார்த்திகேயன், சண்டிமாதா,  நரசிம்மர்,  பிரும்மா, மகிஷாசூரமர்த்தினி, சப்தமாதர்கள் பிரும்மரி தேவி, சூரியன், கருடன் மற்றும் குபேரன் ஆலயங்கள்  அமைத்துள்ளனர். 

🛕மூலவர் ஸ்ரீவைத்திநாதர் லிங்க வடிவில் உள்ளனர்.   பார்வதிதேவியின் சிலை வடிவமைப்பு, மிகமிக அற்புதம். 

🛕1202 AD க்கு முன் உள்ள கல்வெட்டுக்கள் ஆலயத்தில் உள்ளன. கியான் சந்த் அரசர்களால் மீண்டும் புனரமைக்கப்பட்டும், ரோகிலா என்ற முகலாயர் இனத்தவர்களால், கொள்ளை அடிக்கப்பட்டும், ஆலயங்கள், கலசங்கள்  சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.

🛕சிலவற்றில் தற்போது, பல சிலைகளும் இல்லை, சிதைந்த நிலையில் பல அமைந்திருந்தாலும்,  சில முக்கிய தெய்வ சிலைகள் மட்டுமே பூசனையில் உள்ளது.

🛕சிவன் - பார்வதிதேவி திருமணம் நடந்த இடம் என்பதால், சிவராத்திரி, மகர சங்கராந்தி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகைதருகிறார்கள்

🛕இவ்வாலயம் மிக அருகில், சப்தமாதர்களுள் ஒன்றான, பிரம்மரி தேவி ஆலயம் ஒன்றும் உள்ளது. இதுவும் மிகவும் புகழ்வாய்ந்த, புராணசிறப்புமிக்க ஆலயம்.

🛕ஒரு முறை பத்ரிநாத் செல்லும் வழியில், ஆதிசங்கரர் இங்கு தங்கி இருந்து வழிபட்டு இருந்தார்கள். என்ற குறிப்பும் உள்ளது. 

🛕இந்த ஆலயங்கள் அமைவிடத்தால்தான், இந்நகருக்கும் இப்பெயர் வைக்கப்பட்டது.

🌈இமாலயத்தில், வளைந்து நெளிந்து ஓடும் கோமதி ஆற்றின், இடது கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

🛕கோமதி நதி, இவ்விடத்தில் வளைந்து, சற்று அகன்று, ஒரு அரை வட்டவடிவில் அமைந்துள்ளதால், உத்திரகாண்ட் அரசு 2007-2008ல் இந்த இடத்தில் ஒரு செயற்கை ஏரி அமைக்க முடிவு எடுத்து, அதன்படி ஒரு சிற்றனை சிறப்பாகக் கட்டியபின், 14.01.2016 அன்று அப்போதுள்ள முதல்வர் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

⚡இந்த ஏரியில் தங்கமீன் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டது.  அழகிய படகு சவாரி முதலியனவும், சுற்றுலா வசதிகளும் செய்யப்பட்டு, மிகப்பெரிய முக்கிய  சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.

✨ஒரு புறம் புராதான ஆலயம், மறுபுறம் அழகிய செயற்கை ஏரி, அனை முதலியவற்றால் இந்த இடம் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. 

💮அருகில் உள்ள காரூர் (GARUR) என்னும் நகர் முக்கிய கேந்திரமாக உள்ளது. 

🌟பிராதான சாலை சற்று அகலம் குறைவாக இருப்பதால், எங்கள் பேருந்து 500 மீ. அப்பால் நிறுத்திக் கொண்டோம். மதிய உணவுக்குப் பின் சென்று, இவ்வாலயம் தரிசித்து வந்தோம்.

🌼9-10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வாலயம், நாகர அமைப்பில் உள்ளது.
நடுவில் முக்கிய மூலவர் கருவறை ஆலயமும், சுற்றிலும் பஞ்சரத அமைப்பிலும் கட்டப்பட்டிருப்பினும், ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டும், சிதலமடைந்தும், இருந்தாலும், மிக நேர்த்தியான முறையில், பெரிய அளவில், வடிவமைக்கப்பட்டும், மிகச்சிறப்பான வழிபாடுகளை ஒரு காலத்தில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதை இப்போதும் உணரலாம்.

💮பல ஆலய சிலைகள் ஒருங்கிணைத்து ஒரே சன்னதியில் வைத்தும் உள்ளார்கள்.

✨வைத்திநாதர் ஆலயத்தில், கருவறையில் சிறிய சிவலிங்கமாக ஆவுடையுடன் உள்ளார். பல பகுதிகள் சிதலமடைந்துவிட்டாலும், மண்டபம் முதலியவற்றை பராமரித்து, வைக்கப்பட்டுள்ளது. சப்தமாதர் பிரும்ராமி பூட்டப்பட்டுள்ளது.

🌟தொல்பொருள் துறையினரால், பாதுகாக்கப்பட்டாலும், ஆலயம் மிக மிக புராதானமானதாகவும், சிதைந்தும் உள்ளது. 

🚏சிவன், ஸ்ரீ வைத்திநாதர், ஸ்ரீபார்வதி தேவி சன்னதிகள் மட்டும் சற்றே பராமரிப்பில் உள்ளது.

🏯புதிய ஏரிக்கரையின் ஓரத்தில், புராதானத்தை நிலை நிறுத்திக்கொண்டு, ஒரு பக்தியின் அமைதியுடன் இயற்கை அமைப்புடன், தனிமையில் இவ்வாலயம் இருக்கிறது.

🙏இந்த ஆலயம் வணங்கி, பின் கெளசானி என்ற ஊரை சென்றடைந்தோம். 

⚡பயணங்கள் தொடரும்......

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#uttrakant_tour_2022 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்



KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...