Sunday, April 17, 2022

மலை மந்தீர் - UTTRAKANT TOUR 7.4.22

மலை மந்தீர்:
புதுடெல்லியில் ராமகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் ,
உத்திர சுவாமிமலை என்ற ஒரு ஆலயம் புகழ்பெற்றது. 
ஸ்ரீ சுவாமிநாத சுவாமி மூலவர், கிழக்கு நோக்கிய சன்னதி, உயரமான குன்றின் மீது உள்ளது. சுமார் 60 படிகள் ஏறி தரிசனம் செய்ய வேண்டும்.
கீழ்பகுதியில், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், கிழக்கு நோக்கியும், ஸ்ரீ மீனாட்சிஅம்மாள், தெற்கு நோக்கி தனி சன்னதிகளுடனும், மற்றும் மலைக் கோயில் செல்லும் வழியில் இடும்பன் சன்னதியும் உண்டு. 
முழுவதும், கற்றளியாக அமைத்துள்ளது சிறப்பு.

தனியாக திருமண மண்டபம், Prayer Hall, மற்றும் அணைத்து வசதிகளும் செய்யப்பட்டு பராமரிப்பில் உள்ளது. 

1990ல் இவ்வாலயம் குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டது. அன்றைய, பாரத ஜனாதிபதி, மேதகு R.வெங்கட்டராமன், அவர்கள் போஷகராகவும், திரு R.V.சுப்பிரமணியம், IAS, அவர்கள், ஸ்ரீ சுவாமிநாதசுவாமி சேவா சமாஜம் என்ற அமைப்பின் மூலம், புதுடில்லியில் வசிக்கும் தமிழர்கள் முயற்சியாலும், இவ்வாலயம் அமைக்கப்பட்டு, மிக நல்லமுறையில் இன்றும் பராமரித்து வருகிறார்கள். 

இவ்வாலய குன்றின் வடபகுதியில் தனியாக தட்சினகாளி ஆலயம் தனி Trust அமைக்கப்பட்டு சிறப்பான பராமரிப்பில் உள்ளது. இங்கு மூலவ மற்றும், தனி சிவலிங்கம், ராதாகிருஷ்ணர், அனுமான் சன்னதிகளும் உள்ளன.

ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். எல்லா விஷேசங்களும், விழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. 

புதுடெல்லி செல்பவர்கள் அவசியம் இவ்வாலயத்தை சென்று தரிசித்து வருகிறார்கள். 

#பயணஅனுபவக்குறிப்புக்கள்: 

இவ்வாலயங்கள் அருகில் Bus Stoping உள்ளது. இவ்வாலயம் செல்வதற்கு மட்டும் Taxi புதுடெல்லி Airport லிருந்து ரூ.300 ஆகிறது. 

7.04.2022 
நன்றி. 

#ஆலயதரிசனம்
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...