Monday, February 13, 2023

சனிசிங்கனாப்பூர்#சனிஷிக்னாபூர்#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா16.10.2022. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#சனிசிங்கனாப்பூர்
#சனிஷிக்னாபூர்
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
16.10.2022. 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌟நாங்கள் 16.10.2022 அன்று காலை ஷீரடி யிலிருந்து, காலை சுமார் 6.00 மணி அளவில் எங்கள் தனி பேருந்தில் புறப்பட்டு, சுமார் 60 கி.மீ பயணத்தில், சனிசிங்கனாப்பூர் வந்து அடைந்தோம். 

#சனிசிங்கனாப்பூர் அல்லது சிங்கனாப்பூர் (Shani Shingnapur) நகரமானது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டத்தில், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம். 

🌼 சனிசிங்கனாப்பூருக்கு செல்லும் வழி

🌟சீரடி நகரிலிருந்து 60 கி. மீ., தொலைவிலும், அகமது நகரிலிருந்து 35 கி. மீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி. மீ., தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி. மீ., தொலைவிலும், மும்பை நகரிலிருந்து 265 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் அவுரங்கபாத் விமான நிலையம் 90 கி. மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீராம்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

🌟 #சனிசிங்கனாப்பூர் சிறப்பு:

கேந்திர முக்கியத்துவம்:
இவ்வூர் அமைந்துள்ள இடம், மகாராஷ்ட்ராவின் ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்த இடங்களுக்கு மிக அருகில் இருப்பதால், அணைத்து ஆன்மீக சுற்றுலா ஏற்பாட்டாளர்களும், இந்த ஆலயம் செல்ல முயலுகிறார்கள்.

இங்குள்ள எந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை. ஆனால் நிலைக்கதவுகள் மட்டும் உண்டு. காரணம் அவ்வூரில் திருட்டுப் பயம் என்பதே இல்லை. இங்குள்ள காவல் நிலையத்தில் பொதுவாக இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வூரில் திருடினால் சனி பகவான் நேரடியாக தண்டித்து விடுவார் என்ற ஆழமான நம்பிக்கையே காரணம்.

🌼2011ஆம் ஆண்டில் இங்கு கிளை துவக்கிய யுனைடெட் கமர்சியல் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்கள் தவிர மற்ற பகுதிகளில் கதவுகள் இல்லை.

🕉️இந்த ஊருக்கு முன்பு நாங்கள் (2010) வந்திருந்தபோது உள்ள அமைப்பு மிகவும் மாறிவிட்டிருக்கிறது.
🕉️தற்போது இவ்வாலயம் மிகவும் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதிக கட்டிடங்கள் சீரமைத்தும், புதிய கட்டிடங்கள் அமைத்தும் வருகின்றனர்.

🕉️தபால் அலுவலகம், பள்ளிக்கூடம் ஸ்ரீ சனீஸ்வரர் வித்யா மந்திர் உள்ளன.
இப்பகுதிகளில், பெரும்பாலும், குடிநீர் கிணறுகளே, முதன்மையான நீர் ஆதாரமாக இருக்கிறது. 

ஆலய அமைப்பு :

🌼பிரதான சாலையில் முன்னால் ஒரு வளைவு கோபுரம், அடுத்து, அலுவலகம், காலனிகள், பொருட்கள் பாதுகாப்பு இடங்கள் தாண்டி ஆலயம் செல்ல வேண்டும்.

🌼உட்புறம், பெரும்பாலும், வெட்டவெளியாக உள்ளது. ஒரு பகுதியில், மரம், செடிகள் கொண்ட புல்தரையுடன் கூடிய சிறிய தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

🌼சனி பகவான் கருவரை, சனி பகவான் கட்டிடம் இன்றி திறந்த வெளியில் ஐந்தரை அடி உயர சுயம்பு வடிவில் கருங்கல்லில் இருந்து அருள் புரிகிறார். 
🌼இது ஒரு இயற்கையான நீண்ட வடிவத்தில் உள்ள பெருங்கல்லால் உள்ள அமைப்பு. 

🌼 கருங்கல்லில் சிவ பெருமானின் சூலாயுதமும், தென்புறம் நந்தியும் காணப்படுகிறது. மேலும், முன்புறம், சிவன், ஹனுமான் சிலைகளும் உள்ளன.
ஹோமம், பூசை செய்ய அருகில் தனி மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

🌼அருகில் எண்ணெய் விற்கிறார்கள். நாம் வாங்கிக் கொண்டு சென்று, நாமே (ஆண்கள் மட்டுமே) சனிபகவான் மீதும் அபிஷேகம் செய்யலாம்.

🌼அருகில் ஒரு எண்ணெய்த்தொட்டியில் நாம் எண்ணெய்யை உற்றி விட்டால் போதும், ஒரு மின் அமைப்பின் மூலம் அந்த எண்ணையை, சனி பகவான் மீது சிறிய குழாய் மூலம் அபிஷேகமாக ஊற்றி வரும் ஏற்பாடுகள் உள்ளன.

🏵️சனிபகவான் கருவறை எனப்படும் சிறிய வெட்டவெளிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுயம்பாக உள்ள நீண்ட கற்பாறையின் மீது, எண்ணெய் வாங்கிக் கொண்டு,
மக்கள் அருகில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு படிகள் மீது ஏறி நின்று, தாமே அபிஷேகம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

🏵️மூலவர் முன்புறமாக பெரிய பூசை மண்டபம் அமைக்கப்பட்டு, அதில், மகான் உதாஷி மகராஜ் வெள்ளை பளிங்கு சிலையும், அருகில், சிறிய அளவில் சிவன், ஹனுமான் முதலிய தெய்வங்களையும் வைத்துள்ளனர்.

🏵️மூலவர் பின்புறம், தனியான
 மண்டபத்தில், சிவலிங்கம், தத்தாத்தரேயர் முதலிய இறைவர்கள் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

🏵️கருவறை வெட்டவெளியாக உள்ளதாதல், இருபுறமும் ஆலய சம்பந்தமான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசாதங்கள் வழங்கும் இடங்கள்.
பூசை பொருட்கள் விற்குமிடங்கள் முதலியனவும் உள்ளன.

🌼 சனிபகவானை வழிபட இக்கோயிலுக்கு நாள்தோறும் 30,000 முதல் 45,000 பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் மூன்று இலட்சம் பக்தர்கள் இக்கோயில் கூடுகிறார்கள். 

🌼சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு நல்லெண்னெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

தல வரலாறு :

🌟கலியுக ஆரம்பத்தில்,
வனமாக இருந்த இந்த பகுதியில், ஒரு முறை ஒரு இடையர் ஒரு கோலால் ஒரு கல்லை தட்ட, அதிலிருந்து இரத்தம் வெளிவந்தது. அதிர்ச்சியடைந்த இடையர், அருகில் உள்ள மக்களை அழைத்துக்காட்டினார். எல்லோரும் அதிசியத்தில் ஆழ்ந்தனர்.

🌟அன்று இரவு, அக்கிராமத்தினர் பலர் கனவுகளில், சனிஸ்வரர் தோன்றி, இந்த வினோத கருப்பு கல்லில் தான் சுயம்புவாக தோன்றியுள்ளதையும், எந்தவித மேல் கூறையும் அமைக்காமல், வானமே கூறையாக இருக்குமாறு, வெட்டவெளியில் வைத்து, எண்ணை அபிஷேகம் செய்து, தன்னை நம்பி வழிபடுபவர்களுக்குத் தான் அருள்புரிவதாகவும், 'இனி இந்தக்கிராமத்தில், திருடர்கள், கொள்ளையர்கள் யாரும் வராமல், பாதுகாப்பேன். அச்சமின்றி வாழலாம்' என்றும் கூறி அருள் தந்தார். 

🌟இதனால், அவ்வூர் மக்களும், மகிழ்ச்சியடைந்து, அவ்வாறே வழிபட்டு வணங்கத் தொடங்கினார்கள்.

பொதுவான தகவல்கள்:

🏵️இந்தப் பகுதி வீடுகள், கடைகள் மற்றும் எந்தவிதமான அலுவலகங்களிலும், குளியல், கழிவரைகள் உட்பட எதற்கும் கதவுகள் கிடையாது. 
நிலை மட்டுமே அமைந்திருக்கும்.
ஒரு கி.மீ.சுற்றி உள்ள இடத்தில் எந்தவித கொலை, கொள்ளை, வன்முறைகளும், திருட்டும் நடப்பதில்லை. மீறினால் சனிஸ்வரரின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வு துன்பமயமாகிவிடும் என்ற நம்பிக்கையே காரணம். எந்தவித புகார்களும் காவல் நிலையத்திற்கு வருவதில்லை.

🏵️2010 வரை எந்த திருட்டு புகாரும் வந்ததில்லை.
2011 ல் ஒரு சிறு சம்பவம் நடந்துள்ளதாகவும் உடன் நடவடிக்கைகளும் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

🏵️நாள்தோறும், பொதுவாக 30 முதல் 45,000 பக்தர்கள் வருகை தருகிறார்கள். அம்மாவாசை முதலிய நாட்களில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது என்பதும், தெரிவிக்கப்படுகிறது.

🏵️அம்மாவசை, திரயோதசி நாட்கள் சனிபகவானுக்கு உகந்தது என்ற நம்பிக்கையால், அந்நாட்களில் மிக அதிக பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வருகை தருகிறன்றனர். 
அம்மாவாசைகளில் சனிபகவானுக்கு உற்சவங்களும், நடைபெறுகின்றது.
சனி பெயற்சி, சனி ஜெயந்தி முதலிய நாட்கள் முக்கிய விஷேசமான நாட்கள்.

🏵️நாளுக்கு நாள் பக்தர்கள் மிக
அதிகமாக இவ்வாலயத்தை வந்து தரிசிப்பதாக தகவல் வருகிறது.

🌼தனியாக வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.

🌼நிறைய கடைகள், மற்றும், நதிக்கரை ஒட்டி பல பல புதிய கட்டிடங்கள். பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

🌼மகாராஷ்ட்ராவின் முக்கிய ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.

பெண்கள் அனுமதிக்கு வழக்கு.

🛐400 வருடகால நடைமுறைப்படி, பெண்கள் கற்பகிரகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை.

🛐2016 ல் சில சமூக செயல்பாட்டாளர்கள் / போராட்டக்காரர்கள் செய்த பொதுநல வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் அறிவுருத்தல்படி, மகாராஷ்ட்ரா அரசு தலையிட்டு, பெண்கள் உள்ளே செல்ல ஆலய நிர்வாகத்திற்கு அறிவுரை கூறியுள்ளது.

🛐ஆனாலும், அந்தக் கருவரைப் பகுதிக்குள் பெண்கள் செல்ல மறுத்துவருகிறர்கள் என்பதே நடைமுறையில் உண்மையாக உள்ளது.

🛐இங்குள்ள சனிபகவான், சுயம்பு ஆற்றலால், அதிசியம் மிக்க ஊராக மாறியுள்ளதாலும், பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும், பக்தர்கள், இவ்வூருக்கு ஆர்வத்துடன் வந்து தரிசித்து செல்லுகிறார்கள்.

💫நாங்கள் 16.10.2022 காலையில் இந்த ஆலயம் தரிசித்து விட்டு, அவுரங்காபாத் சென்று, எல்லோரா குகைகளும், கிருஷ்னேஸ்வரர் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்தோம்.

🛐பயணங்கள் தொடரும்.... 
நன்றி🙇🏼‍♂️🙏 

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
16.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#சனிசிங்கனாப்பூர்
#சனிஷிக்கப்பூர்

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...