வள்ளிமலை:
#பயணஅனுபவக்குறிப்புகள்: -
"ஞானசக்தியாகிய வேலேந்திய குமரன், கிரியாசக்தியான தெய்வானையை மணந்து பின்,
இச்சாசக்தியான வள்ளியையும் மணந்து கொள்கிறார்".
🔱வள்ளிப் பிறந்து வளர்ந்த இடம் தான் வள்ளிமலை. வள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த இடத்தில் மகாலெட்சுமியின் அவதாரமாய்ப் பிறந்த குழந்தையை எடுத்து வளர்த்த வேடுவத்தலைவர், நம்பிராஜன் வைத்தப் பெயரே வள்ளி.
🔱இந்த வள்ளிமலையில் பிறந்து, தினைப்புவனம், காக்கும் வள்ளியை அனுகி, மனம் விரும்பி, திருமணம் செய்து கொள்ள, சகோதர விநாயகர் துணையுடன், மனம் முடிக்கும் மனவாளன் முருகன் இம்மலைக்கு வந்ததாக புராணம்.
அமைவிடம்:
🔱திருவலத்திலிருந்து வடக்கு 10 மைல். திருத்தணிகைக்கு நேர் மேற்கில் 20 மைல். பிரதான சாலையை ஒட்டியே இவ்வூர் இருக்கிறது. பிரதான சாலையில் உள்ள அழகிய ஆலய வளைவு நம்மை வரவேற்கிறது..
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்:
🔱தேரடி அருகில், ஒரு பெரிய Arch கட்டப்பட்டுள்ளது. அங்கே ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இதை அடுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம். ஆலயம் அருகில் முன்புறம் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இதில் தலபுராண வரலாற்று படங்கள் உள்ளன.
🔱கிழக்கு நோக்கிய 5 அடுக்கு அழகிய ராஜகோபுரம். அடுத்து கொடிமரம், முன்மண்டபம், உள்ளே கருவரையில், ஸ்ரீ சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன். சிறிய கற்றளி ஆலயம்.
🔱இவ்வாலயம் வணங்கி பின் செல்ல பெரிய அழகிய குளம் நீர் உள்ளது. படித்துறைகள் நான்குபுறமும் சுற்றிவரலாம்.
ஸ்ரீவள்ளியம்மன் ஆலயம்.
🔱குளத்தின் தென் பகுதியில், ஸ்ரீவள்ளிக்கு என்று தனியாக சிறிய ஆலயம் உள்ளது.
மலைப் பாதை :
🔱இதன் பின்புறமே மலை ஏற படிகள் அமைத்துள்ளார்கள். சுமார் 300 படிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நடு நடுவில் மண்டபங்களும் உள்ளன.
மலைக்கோவில்:
🔱படிகள் ஏறியவுடன் இடது புறத்தில், அழகிய சிறிய குன்று உள்ளது.
🔱இந்த குடவரைக்குன்றின் உட்புறம், வள்ளிக்குகை உள்ளது.
முன்புறம், துவஜஸ்த்தம்பம், அக்னி குண்டம், உள்ளது. அதை அடுத்து சிறிய முன் மண்டபம். அடுத்து உள் மண்டபம். உட்புறம் சற்று விரிவான பகுதி. சற்று உயரத்தில் கருவரை அமைக்கப்பட்டுள்ளது. இதில், வள்ளி, தெய்வானையுடன்
ஸ்ரீ சுப்பிரமணியர் அழகிய சிற்ப வேலையுடன் அமைந்துள்ளது.
🔱உட்புறம் வள்ளி இருந்த இடமாக கருதப்படுகிறது.
🔱இதுவே மலைக்கோயில்.
இந்த சிறிய குன்றினை சுற்றி வரலாம். இக்குன்றின் மீது ஆலயக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது..
🔱குன்றினை தாண்டி கிழக்குப் பகுதியில் ஆஸ்ரமம் செல்லும் வழி உள்ளது. படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
🔱சற்று தூரம் சென்றவுடன் பாதை பிரிகிறது. மலைக்குன்றின் இன்னும் சற்று ஏறி அடுத்தப் பகுதியில் உள்ள இடத்திற்கு செல்லலாம். சற்று தூரம் மலைப்பாதை ஏறினால், சமன துறவிகள் படுக்கைக்குன்றுகள் உள்ளன. ஆஸ்ரமம் குகையும் உள்ளன. மலைப்பாதையில் கிழக்குப்புரம் பிரிந்து சென்று, கீழே இறங்கலாம். சிலஇடங்களில் படிகள் முடிந்து பாறைகளே உள்ளன. சில பாறைகளில், இயற்கையான, நீர் சுனைகள் உள்ளன. சிறிய குகைப் பாறையும் உள்ளன.
அதன் வழியே கீழ்பகுதி வந்து விடலாம். வரும் வழியில் மலைப்பகுதியில் ஒரு பெரிய குளமும் உள்ளது.
🔱கீழ் பகுதி, கீழ்க்கோவிலின் வடக்குப் பக்கம் வந்து விடலாம்.
அருகில் கோசாலை வைத்துள்ளார்கள்.
🔱மீண்டும் மலையடிவாரக் கோவில் வந்துசேர்ந்துவிடலாம்.
🔱இயற்கையோடு இணைந்த இந்த மலைப்பகுதி மிக அமைதியான, அற்புதமான இடம்.
🔱வாய்ப்பும், வசதியும் உள்ளவர்கள் அவசியம் சென்று தரிசித்து, இயற்கையுடன் இருந்து வரலாம். புன்னியத்தலம்.
#ஆலயதரிசனம்
7.10.2021
நன்றி
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்