Saturday, December 25, 2021

பருவதமலை 2021 பயணஅனுபவக்குறிப்புகள்

*#ஆகாயத்தில் ஓர் அதிசய ஆலயம்!*
🏔️
*பாவங்கள் போக்கும் #பருவதமலை #மல்லிகார்ஜுனேஸ்வரர்கோவில்!

#பயனஅனுபவக்குறிப்புகள்:
பதிவு : 1

🌺பருவதமலை சிறப்புகளில் ஒரு சில... 

🏞️திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது. 

🏵️ கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார் ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். 

🏞️பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. திருவண்ணாமலையைவிட இந்த மலை உயரம். 

🏞️திரிசூலகிரி', "நவிரமலை', "பர்வதமலை' என்று சொல்லப்படும் இந்த மலை, ஏழை களின் கைலாயம் என்று பெயர் பெற்றதற்கு ஏற்ப, மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின்மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். 

🛕 மலை உச்சி சிவலிங்க வடிவில் அற்புதமாக காட்சியளிக்கும். 

🌠மேலும் இந்த பர்வதமலைக்கு சஞ்சீவிகிரி, மல்லிகார்ஜுன மலை, கந்தமலை, தென் கயிலாயம் என்றும் பல பெயர்கள் உண்டு. 

🏞️*சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன. 

🏔️இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளன. அந்தக் குகை களில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

🌸ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை எடுத்துவரும் போது விழுந்த ஒரு துளி. 7 சடைப்பிரிவுகள் கொண்ட மலை. 

🌼மூலிகை காற்று எப்போதும் வீசும். 

🔥இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. 
🌺சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி மலர்கள் வாசனை வரும்.
🌺அம்மன் பேரழகு அம்சம் வேறெங்கும் இல்லாதது.
🔱மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது.
❄️தலைக்கு மேலே மேகம் தவழ்வதைக் காணலாம். 

🏔️கி.பி.3ம் நூற்றாண்டில் மாமன்னர் 
நன்னன் என்னும் அரசன் இங்கு வந்து இறைவனை வணங்கியதாக மலைபடுகடாம் என்னும் நூலில் உள்ளது. 

⚜️அக்காலத்தில், இவ்வாலயம் கட்டப்பட்டு மலைபடிகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

⚜️இயற்கை சீற்றத்தாலும், அன்னிய படையெடுப்புகளாலும், வழிபாடுகள் குறைந்துபோய், மிகவும் சிதலமடைந்து, பராமரிப்பு இல்லாமல் சென்று விட்டது.

🌼பருவதமலைக்கோவில்
அமைவிடம்: 

போளுர் - கலசப்பாக்கம் - கடலாடி - செங்கம் சாலையில், 
மலை ஏறவும், கிரிவலம் செல்லவும்இரண்டு வழிகள் உண்டு. 

🌸1. தென்மாதிமங்கலம்
என்ற ஊரிலிருந்தும், 

🌺2. கடலாடி என்ற ஊரிலிருக்கும், மெளன யோகி மகான் மடத்திலிருந்தும் 
பயணம் தொடங்கலாம். 

🌟தென்மாதிமங்கலம்:
இவ்வூரில் கிழக்கில் 500 மீ. தூரத்தில் ஒரு பழம்பெரும் புராதான கரை கண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் சுவாமி அம்பாள் உற்சவர்கள் மார்கழி முதல் நாள் கிரிவலம் செல்கிறார்கள். 

🌄மலைப்பாதை 

*திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்மாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். 

❄️தென்மாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம்.* 

தென்மாதிமங்கலம் என்ற கிராமத்தில் மேற்கில் செல்லும் சிறிய சாலைகளின் வழியாக, பருவதமலை அடிவாரம் செல்லலாம்.
அடிவாரத்தில், வாகன நிறுத்துமிட வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்துள்ளார்கள். ஆலய கட்டிட அலுவலகமும் உள்ளது. 

🛕மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்... இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள். இவரை வணங்கி,
மலையேற்றத்தை துவக்கலாம். 

❄️வனத்துறை சோதனைக்கு பின் பாதை தொடக்கத்தில், நமக்குத் தரிசனம் தருபவர்: ஸ்ரீஹனுமர். சுமார் 10 அடி உயரம் கிழக்கு நோக்கி உள்ளார். 

🛕மலையேறினால் வீரபத்திரர், துர்க்கையம்மன், ரேணுகாதேவி, சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம். 

🏔️விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால், மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலையில் உள்ள சுனையிலிருந்து பெருகி வரும் நீர்வீழ்ச்சியின் அழகையும் காணலாம். 

🏔️இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டுள்ளன. அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும். 

🛕மலை உச்சியில் மெளன யோகி ஆஸ்ரம மடம் ஒன்று உள்ளது. அதனுள் உள்ளே சித்தர் தவம் இருந்த குகைப் பாறை ஒன்றும் உள்ளது. 

🏔️ஆஸ்ரம மடத்தில் அன்னதானம் செய்கிறார்கள் விசடே நாட்களில்,
சாது ஒருவர் மடத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவுகிறார். 

🌼பாதி மலைக்கு பிறகு குரங்குகள் தொல்லை மிகவும் அதிகம். கையில் கம்பு இருத்தல் நலம். 

🏵️அதிக சுமை எடுத்து செல்லுவது கடினம். 

🌟பகலில்,வெயில் நேரத்தில், ஏறுவதற்கு சிரமமமாக இருப்பதாலும், குரங்குகள் தொல்லை மிக அதிகம் இருப்பதாலும், பல பக்தர்கள், இரவில் மலை ஏறுகிறார்கள். 

🌟உச்சிப்பாறை செங்குத்தாகவும், மிகக்கடினமான இரும்பு பாரைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

🔥மிகவும் கவனம் தேவையே.
பகலில் ஏணியில் ஏறும்போது குரங்குகள் தாவி வருகின்றன. எச்சரிக்கை அவசியம். 

🌼மிகவும் சிரமப்பட்டு ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலைமேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் அருள்புரிகிறார்கள்.

முதல் பதிவு :

*#ஆகாயத்தில் ஓர் அதிசய ஆலயம்!*
🏔️
*பாவங்கள் போக்கும் #பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்!* 

#பயனஅனுபவக்குறிப்புகள்:
பதிவு : 2. 

🏔️மலைக்கோவில் : 

🏵️*உச்சி மலைமேல் உள்ள கோவிலில் தனிச் சந்நிதியில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை காரியாண்டிக் கடவுள் என்றும் அழைப்பர். 

🌸மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகா தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சிறிய சந்நிதியில் விநாயகப் பெருமா னும் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியரும் அருள்புரிவதைத் தரிசிக்கலாம். 

💫மலை உச்சியானது சிவலிங்க அமைப்பில் உள்ளதால், அதன் மீது தனி ஆளாக ஏறுவதற்கே மிகுந்த சிரமமாக இருக்கிறது. ஆனாலும், இறையருளால், இப்படி ஒரு ஆலயம் கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது.  
மிக உயரமான, உச்சியின் மீது சிறிய சன்னதிகளுடன் ஒரு முழுக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது; மிகவும் வியப்பாகவே உள்ளது. 

🌟கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாது. 

🌸பூக்களைச் சூட்டி மகிழும் பக்தர்கள், சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கலாம். அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார். கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால் பக்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டு தரிசிக்கிறார்கள். 

🔱இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் யாகங்களும் விடிய விடிய நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும். சித்ரா பௌர்ணமி, ஆடிப் பதினெட்டு, ஆடிப் பூரம், புரட்டாசி மாதப் பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி மாதப் பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் இக்கோவில் விழாக்கோலம் காணும். 

⚜️பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை. இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது நல்லது. 

🛕மலைக்கு வரும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு இப்போது வசதி உள்ளதால், பௌர்ணமி இரவில் இம்மலை விழாக் கோலம் காணும். 

🌟பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம், ஆராதனை செய்தால், கீழே தரைமட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும்." 

💫அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை' என்று சொல்வதுபோல், "பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை' என்பர். இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம், ஞானம் கைகூடும்; திரிகால ஞானயோகம் கிட்டும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை. 

⚜️வெயிலின் கடுமை குறை யட்டும் என்று காத்திருந்து, மாலை வேளையில் மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டும் அதிசயத்தை இங்கு காணலாம் என்கிறார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள். 

🔥இம்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச் சிறப்பினைப் பெறுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் நெய், நல்லெண் ணெயை பெரிய கொப்பறையில் இட்டு காடா துணியில் பெரிய திரி தயார் செய்து பக்தர் களே சூடம் ஏற்றி, தீபம் ஏற்றுகிறார்கள். மேலும் கோவிலைச் சுற்றி பெரிய அகல் விளக்குகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதால் தீப ஒளியில் சுவர்க்க லோகம்போல் காட்சி தரும். 

💫கிரிவலம்: 

🏵️தற்காலத்தில், ஸ்ரீகாஞ்சி சங்கராச்சாரியர் இவ்வூர் வந்து மலையைப் பார்த்து அதிசியத்து, இம்மலைக்கோவில் பெருமைகளை மக்களிடம் உணர்த்தியதும், மீண்டும் இம்மலைக் கோவில் பிரபலமடைந்து வருகிறது. 

⚜️ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்தமிழ் மாதமாகிய மார்கழி முதல் தேதியில் இம்மலையை கிரிவலம் சுற்றிவர வேண்டிய ஏற்பாடுகளை முன்னின்று தொடங்கிவைத்தார்கள். 

* திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.* 

🏵️அடிவாரத்தில் உள்ள, தென்மாதிமங்கலம் கரைகண்டேஸ்வரர் ஆலய சுவாமி இம்மலையை மார்கழி முதல் நாள் கிரிவலம் வருவது தொடர்கிறது. 

🏵️இது இப்போதும் தொடர்ந்து மார்கழி முதல் நாள் பெருங்கூட்டமாக, அருகில் உள்ள எல்லா கிராம மக்களும் கிரிவலம் வருகிறார்கள். அன்று எல்லாப் பகுதி மக்களும் தங்கள் பகுதிகளையும், வீடுகளையும் பக்தர்கள் வலம் வர வசதியாக பெரிய விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். 

🔥ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பர்வத மலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வலம் வர சுமார் ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகலாம். 

🌼கடலாடி ஆஸ்ரமத்திலிருந்து சுமார் 4 கி.மீ. வயல் பகுதிகளில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

🌸ஆஸ்ரமம் தாண்டி 1 கி.மீ தூரத்தில் ஒரு முனீஸ்வர், பச்சயம்மன் ஆலயம் உண்டு. 

🏵️சுற்றுப்பாதையில் உள்ள சில பழமையான ஆலயங்களும் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

🔥மலையிலும், கிரிவலப் பாதையிலும் சிலபகுதிகள் சிறிது சிறிதாக பிற மதத்தவர்களால் சிறிது சிறிதாக இடம்பிடித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதும் உண்மையே. 

🛕பருவத மலையை புனரமைத்து, பொலிவுடனும் இருந்து வருவதற்கும்,
பராமரிப்பதற்காகவும்,
கடலாடியில் உள்ள மகான் மௌன யோகி மடத்தின் அடியார்களும், 

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கத்தின் மூலம், பக்தர்களின் தொண்டும், பங்களிப்பும் மிகச்சிறப்பானது. 

🛕பருவதமலை மகான் மெளனயோகி மடம்: 

🛕ஸ்ரீவிட்டோபானந்தர் குருஜி தவமிருந்த குகை மலைமேல் உள்ளது.
⚜️மலை அடிவாரத்தில் கடலாடியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில், ஆசிரமம் அமைந்துள்ளது. 

⚜️இங்கு மலையேறும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். இரவில் இங்கு தங்கிச் செல்லவும் வசதி உண்டு. அன்னதானமும் செய்யப்படுகிறது. 

⚜️மலை உச்சியிலும் ஆஸ்ரம மடம் உள்ளது. தேவையான வசதிகள் செய்து தருகிறார்கள். 

🙇🏼‍♂️🙏🏻மலை ஏறி இறைவனையும் அம்பாளையும் தரிசித்து, கிரிவலம் வந்தால், மறுபடியும் பக்தர்கள் மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.

🔱திருவல்லிக்கேணியை சேர்ந்த ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்: 

🌟மேற்படி சங்கத்தைச் சேர்ந்த பக்த அடியர்கள் உதவியினால்,
சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் சிறப்பாக திருப்பணிகள் செய்து, ஆலயம் பொலிவுற வைத்துள்ளார்கள். 

🔥இத்திருப்பணி வியக்கவைக்கும் முயற்சியாகும். அனைத்துப் பொருள்களும் 4560 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு தலை சுமையாக எடுத்துச் சென்று தான் இதை செய்தார்கள். இது ஒரு சாதனை முயற்சியாகும். 

🙏🏻🙇🏼‍♂️இதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் என்றென்றும் நன்றியுடன் நினைவில் கொள்வர்கள்; கொள்ள வேண்டும். 

நன்றி:🙏🏻 

இறையருளால்,
 15, 16 டிசம்பர் 2021 கிரிவலம் வந்தோம்.

இம்மலை பயணம் ஒவ்வொரு முறையும் வெற்றியடைய வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும்,
 அன்பு நன்பர், திரு M. சக்திவேல் அவர்களுக்கு என்றும் நன்றிகள் பலபல .... கோடிகள்.🙏🏻🙇🏼‍♂️🙏🏻

🙏🏻நன்றி
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முதல் பதிவு :

பதிவு: 2