Monday, March 30, 2026

ஆதிகுடி : அங்குரேஸ்வரர் கோயில் 🔱திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி

ஆதிகுடி : அங்குரேஸ்வரர் கோயில் 
🔱திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், அன்பில் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆதிகுடி என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமத்தில், பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

🔱இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

🔱இறைவியின் திருநாமம் பிரேமாம்பிகை. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோவில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது

🌼கோயில் அமைப்பு

🔱 தெற்கு வாசலே பிரதான வாசலாகும். காட்சி கொடுக்கும் அமைப்பில் தெற்கு கோபுரம் அமைந்துள்ளது.
🔱தென்புறம் உள்ள பிரதான சாலையிலிருந்து ஆலயம் உள்ளே செல்ல வேண்டும்; சுவாமி அங்குரேஸ்வரர். கிழக்கு பார்த்தும் பிரேமாம்பிகை அம்மன் தெற்கு பார்த்தும், தனித்தனி சன்னதியில் தனித்தனி கருவறையில் உள்ளார்கள். ஏக முன் மண்டபத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

💥விமலலிங்கம் :

🔱ஒரே பிரகாரம். தெற்கு பிரகாரத்தில் விமலலிங்கம் என்ற ஒரு பெரிய லிங்கம் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு உள்ளது.
🔱இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமலலிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

🔱விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்கோவிலில் காட்சியளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🔱 கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மேற்கில், விஷ்ணு, வடக்கில் பிரும்மா, துர்க்கை, உள்ளனர். 
 🔱மேலும், மேற்கு பிரகாரத்தில் தனி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். 
🔱சன்டிகேஸ்வரர், வடக்கில்,
கிழக்கில் நவகிரகங்கள் - மன்டபத்துடன்.
தனிசனிஸ்வரர் - பைரவர் மேற்கு பார்த்து உள்ளனர்.
🔱கிழக்குப் புறத்தில் நவகிரகம் மற்றும் பைரவர் சூரியன் அமைக்கப்பட்டுள்ளனர்.
🔱ஆலயம் முன்புறம் ஒரு நந்தியும், வடபுறம் நடராஜர் படத்துடன் பூசை மண்டபம் உள்ளது.  
🔱கிழக்கில் ஆலய நடராஜருக்காக ஒரு சிறிய பூசை வழிபாட்டு மண்படம் உள்ளது

காசி கமல தீர்த்தம் 
🔱பிரதான சாலைக்கு தென் புறத்தில் ஒரு சிறிய தொட்டி போன்ற அமைப்பில் தீர்த்த நீர் தொட்டி உள்ளது. காசி கமல தீர்த்தம் என்று குறிப்பிடப்படுள்ளது.

🔱ஆலயம் பராமரிப்பில் பூஜை வழிபாடுகளில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம்.

🌼2004 ல் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்று பொலிவுடன் உள்ளது.

🔱இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

💥 சிறப்புகள்:
💥விமலலிங்கம் - சிறப்பு - சனி வழிபட்டது.

 🔱 பக்கவாதம் போன்ற உடல் ஊனங்களைப் போக்கும் திருத்தலமாகவும் நம்பப்படுகிறது. 

🔱இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. 
🔱இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமலலிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமலலிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

🔱இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. 

🔱இக்கோவிலில் வழிபடுவதன் மூலம் உடல் உறுப்பு வலிமை இழப்பு, பக்கவாதம் போன்ற குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

🌼பூசைகள்

🔱இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் திருகார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் சிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

🔱இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு.

🔱இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் குறிப்பிட்ட 
சில தலங்களுக்கு மட்டுமே தான் எதிரில் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🌼சிறப்புகள் -விழாக்கள்: சிவராத்திரி, திருகார்த்திகை. 
(வலைதள தகவல் 💻📡📚)

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். ஆலயம் சிற்றூரின் பிரதான சாலையில் உள்ளது. பூசை நேரங்களில் மட்டும் சிவாச்சாரியார் வருகிறார். பூசை காலங்களில் ஆலயம் உள்ளே சென்று கருவரையில் மூலவர்களை தரிசிக்கலாம்.
முன் தகவல் கொடுத்து தரிசிப்பது சிறப்பு. சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.
#Subbramசுப்ராம்🔱🇮🇳

நன்றி🙏 💻📡📚 15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

ஆதிகுடி : அங்குரேஸ்வரர் கோயில் 🔱திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி

ஆதிகுடி : அங்குரேஸ்வரர் கோயில்  🔱திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், அன்பில் செல்லும் சால...