Saturday, April 30, 2022

HanumanGarghi, NAINITAL#Baba_Neemb_Karori 8.4.2022

பதிவு: 3
#HanumanGarghi, NAINITAL
#Baba_Neemb_Karori 

#stevejobs
#Mark_Zuckerberg 

#HANUMAN_GARGHI
#Hanuman_Mandhir

#பயணஅனுபவக்குறிப்புகள்

நாங்கள் 8.4.2022 போவாளியிலிருந்து புறப்பட்டு, நைநிட்டால் செல்லும் முன்,
இந்த அனுமான் ஆலயம்,  சென்றோம்.
நைனிட்டானுக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. சுமார் 6400 அடி உயரத்தில், இயற்கையான சூழலில், மலைப்பிரதேசத்தில் அமைதியாக அமைந்துள்ளது. Sunset Sunrise பார்க்க மிகச்சிறந்த இடம். நிறைய பக்தர்கள் பலர் வந்து செல்கிறார்கள். 

நிறைய Share Taxi கார்கள் இங்கு வந்து செல்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நமது பஸ் முதலியவைகள் மலைமேல் ஏறி வருவது சிரமம். கார், Taxi , Share Auto கிடைக்கின்றது. 

ஆலயத்திற்குள்  / ஆஸ்ரமத்திற்குள் புகைப்படம் தவிர்க்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் (Cell / Handbags எடுத்துச் செல்லலாம்) 

முதலில் ஒரு சிறிய மண்டபத்தில்
ஸ்ரீஹனுமான் பிரதிஷ்ட்டை அழகாக வைத்திருக்கிறார்கள். 
இந்த பிரதிஷ்ட்டை பாபா அவர்கள் 1952ல் செய்திருக்கிறார்கள் என்று குறிப்புள்ளது.
இந்த ஆலயமே பாபா அவர்கள் முதன்முதலில் நிர்ணயம் செய்தார்கள்.  இதற்குப் பிறகே, பல்வேறு இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன என்று கூறுகிறார்கள். 

அடுத்து ஒரு  Prayer Hall நன்றாக நாள்தோறும் பஜனை செய்து வருகிறார்கள். அந்த அமைதியான சூழலில், பஜனை கேட்பதற்கு மிக ரம்யமான பக்தி உணர்வு ஏற்படுகிறது. 

அடுத்து ஒரு மிகப்பெரிய ஸ்ரீ ஹனுமான் சிலையும் 1953ல் பாபா அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து சற்று தூரத்தில், சற்று விசாலமான மண்டபத்தில், ஸ்ரீ ராமர் லெட்சுமணர். சீதா முதலியவர்களின் சன்னதி. 1955ல்  பாபா அவர்களால் ஒரு ஸ்ரீராமநவமியில் அமைக்கப்பட்டது. 

இவை எல்லாவற்றையும், கடந்து, மலைப்பாதையில் இன்னும் சற்று தூரம் சென்றால், ஒரு பெரிய கருவரையுடன் சிறிய சிவன் ஆலயம் உள்ளது.
உட்புறம் வட்ட வடிவத்தின் நடுவில் பளிங்குக்கல் சிவன் அமைக்கப்பட்டுள்ளது.  இதுவும் 1954ல் பாபா அவர்களால் உருவாக்கப்பட்டது.
இதற்கு, உயரமான கருவரைக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் கட்டிட அமைப்புகள் முடிந்துவிடுகிறது. அடுத்துள்ள பகுதி, மலையின் இயற்கையான முடிவு பகுதி. சிறிய காடு போல தோற்றம். 

மலையின் பின்புறங்களில், திருவிழா சமயங்களில், காவடி போல பூசை பொருட்களை எடுத்து வந்து விட்டு அதன் பின் உயரமான மரங்களில் தொங்க விட்டு இருப்பதுபோல, பல மரங்களின் கிளைகளில் காணப்படுகிறது. 

பாதைகள் எல்லாம், மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவது மிகச்சிறப்பு. 

மேலும், சில  குறிப்புகள்: இணையத்திலிருந்து...... இதயத்திற்கு ..... 

Baba Neemb Karori - The Great Hindu Yogi, 

Neem Karoli Baba or Neeb Karori Baba :
Born: 1900, Akbarpur
Died: 11 September 1973, Vrindavan
Full name: Lakshmi Narayan Sharma
Guru: Hanuman
Parents: Durga Prasad Sharma
Children: Aneg Singh Sharma, Dharma Narayan Sharma, Girija Bhatele 

His ashrams are in Kainchi, Vrindavan, Rishikesh, Shimla, Neem Karoli village near Khimasepur in Farrukhabad, Bhumiadhar, Hanumangarhi, Delhi in India and in Taos, New Mexico, US. 

Neem Karoli Baba or Neeb Karori Baba was a Yogi, Saintly being and a devotee of the Hindu deity Hanuman. He is prominently known for being a Guru of a number of American hippies who traveled to India in the 1960s and 1970s.
Wikipedia.

ஆப்பிள் போனும், FACE BOOK  பற்றி தெரிந்தவர்கள் தொடரலாம்.......

Steve Jobs -  CEO of APPLE iPhone.

Steve Jobs was a charismatic pioneer of the personal computer era. With Steve Wozniak, Jobs founded Apple Inc. in 1976 and transformed the company into a world leader in telecommunications. Widely considered a visionary and a genius, he oversaw the launch of such revolutionary products as the iPod and the iPhone. Apple iPhone. 

Steve Jobs, along with his friend Dan Kottke, traveled to India in April 1974 to study Hinduism and Indian spirituality; they planned also to meet Neem Karoli Baba, but arrived to find the guru had died the previous September. Hollywood actress Julia Roberts was also influenced by Neem Karoli Baba. 

Mark Zuckerberg: CEO of FACE BOOK 

The Indian temple Steve Jobs advised Mark Zuckerberg to visit
Mark Zuckerberg told PM Modi that he visited Kainchi Dham Ashram during early days of Facebook, at the behest of Steve Jobs. 

During PM Narendra Modi's recent US visit, Facebook founder Mark Zuckerberg mentioned that he had visited a temple in India during the initial days of Facebook on the advice of late Apple founder Steve Jobs, according to an Economic Times report.  

The temple Jobs was talking about is Kainchi Dham Ashram in Nainital, Uttarakhand. He himself had visited the temple during the 1970s. 

Zuckerberg arrived in Pantnagar, about 65 km from Nainital, and drove to Neem Karoli baba's ashram. 

The baba who died in 1973 continues to enchant several high-profile Americans. 

Jobs is said to have got the vision for creating Apple after he visited the Kainchi Dham ashram. 

"He (Jobs) told me that in order to reconnect with what I believed as the mission of the company I should visit this temple that he had gone to in India, early on in his evolution of thinking about what he wanted Apple and his vision of the future to be," Zuckerberg told Modi at a town hall meeting. 

"So I went and I travelled for almost a month, and seeing people, seeing how people connected, and having the opportunity to feel how much better the world could be if everyone has a strong ability to connect reinforced for me the importance of what we were doing and that is something I've always remembered over the last 10 years as we've built Facebook." 

Zuckerberg had to extend his stay in the ashram to two days after a storm in Pantnagar hit flights schedule.  

https://www.businesstoday.in/ 

🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Tuesday, April 19, 2022

போவாளி - உத்தரகாண்ட் -8.04.22

#பயணஅனுபவக்குறிப்புகள்: 

போவாளி :8.04.2022 

நாங்கள், புதுடெல்லியிலிருந்து 7.04.222 மதியம் புறப்பட்டு, MORADABAD,RAMPUR, Bilaspur, Rudrapur, Haldwani,(ராம்பூர், பிலாஸ்பூர், ருத்ரபூர், ஹால்ட்வானி) முதலிய ஊர்கள் கடந்து, இரவு Bhowali அடைந்தோம். இங்கு Hotel Vista என்ற Hotelலில் தங்கிக் கொண்டோம். 

போவாளி என்ற இந்த ஊர் உத்திரகாண்ட் மாநிலத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ளது. இங்கிருந்து நைனிட்டால், Bhimtal, Mukteswar, Almora, மேலும் பல இடங்களுக்கு செல்ல வசதி உள்ளது. மிகச்சிறிய ஊர். பஸ், Taxi Stand அருகில் தேசியதலைவர் மார்பளவுசிலை இருக்கிறது. 

 மலை பிரதேச ஊர். இரவில் குளிர் அதிகமாக இருந்தது. இரவு Hotel லில் தங்கி விட்டு அடுத்த நாள் 8.04.22 காலை 8.30 மணிக்கு புறப்பட்டு நைனிட்டால் முதலிய அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல இருந்தோம்.  

இங்கு இயற்கை காட்சிகளும் மிக அதிகம். 
நாங்கள் தங்கியிருந்த Hotel லிலிருந்து சற்று தூரத்தில் ஒரு சிவன், தேவி, ஆலயம் இருந்தது. 

சாலைகள் மிகவும் அகலம் குறுகி இருப்பதாலும், இருபுறங்களும் கடைகள் இருப்பதாலும், நெருக்கடியாக உள்ளது. 

பிரதான சாலை மட்டத்திலிருந்து 5 அடி கீழ் இவ்வாலயம் அமைந்துள்ளது.
தனித்தனி கருவரை மண்டபங்களில்,
அனுமார், சிவன், பத்ரகாளி, காலதேவர், தனி தனி சன்னதிகள். ஆலயத்தின் நுழைவில், வினாயகர் சிலை சற்று உயரத்தில், கன்னாடியால் மூடியும், உட்பகுதியில், கருவறை விமானம் அருகிலும் வைத்துள்ளனர். 

மேல்புறம், லெட்சுமி நாரயனர் தனி கருவறை மண்டபத்துடன், அமைத்து உள்ளனர். ஒரு சில பக்தர்கள் வந்து அருகில் உள்ள வாளியில் உள்ள நீர் எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கியும், மற்ற சன்னதிகளில் உள்ள தெய்வங்களையும் பக்தியுடன் வணங்கி செல்கிறார்கள். நாங்களும், சென்று வணங்கி வந்தோம். 
🙏🏻🙇🏼‍♂️
Wikipedia முதலிய வலைதளங்களிலிருந்து மேலும் சில தகவல்கள்:

Bhowali (Kumaoni: Bhoāli)[bʱəʋaːli] is a town and a municipal board in Nainital District in the state of Uttarakhand, India. It is situated at a distance of 11 km (6.8 mi) from the city of Nainital, the district headquarters; at an average elevation of 1,654 m (5,427 ft) from sea level. It is the seat of Bhowali tehsil, one of the eight subdivisions of Nainital district. 

Bhowali is most known for its T.B. sanatorium, established here in 1912, where Kamala Nehru also stayed for a while. It is now an important fruit market for all the neighbouring region, and an important road junction to neighbouring hill stations, like Nainital, Bhimtal, Mukteshwar, Ranikhet and Almora. 

The famous Kainchi Dham temple is about 8 km from Bhowali on Almora road. Famous among locals as the Neem Karori temple, is one of the most revered temple in the area. 

Nearby is the popular shrine, Golu Devta temple at Ghorakhal, which stand on a hill above an Army school, the Sainik School Ghorakhal, established in 1966 in the Ghorakhal Estate of the Nawab of Rampur. One of the oldest houses in Bhowali on the Naini Bend has been turned into a Bed and Breakfast called Versha, a place in the hills. 

And here, the Prachin Jabar Mahadev Shiva temple is located on the foothills of the lariyakata of sanitorium. The most important thing of this temple is that here is a wooden Shivling has been established since ancient times, which is still in its former state and the entire Nainital district The only Shiva Temple is where 18 feet long trident is installed. 

Bhowali is located at 29.38°N 79.52°E. It has an average elevation of 1,654 metres (5,426 feet). Bhowali is a gateway to many places in the Kumaon division like Almora and Bageshwar for people coming from the Haldwani route. 

Many Lakes neighbour Bhowali like Bhimtal, Sat tal, Naukuchiyatal, Nal Damyanti Tal, Sukha Tal, and Khurpa Tal. The place is an ideal hill station. It is 1706 meters above sea level and 11 km away from Nainital. This is a road junction serving all the nearby hill stations from Nainital. Bhowali is famous for its scenic grandeur and as a hill fruit mart. )

🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Sunday, April 17, 2022

மலை மந்தீர் - UTTRAKANT TOUR 7.4.22

மலை மந்தீர்:
புதுடெல்லியில் ராமகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் ,
உத்திர சுவாமிமலை என்ற ஒரு ஆலயம் புகழ்பெற்றது. 
ஸ்ரீ சுவாமிநாத சுவாமி மூலவர், கிழக்கு நோக்கிய சன்னதி, உயரமான குன்றின் மீது உள்ளது. சுமார் 60 படிகள் ஏறி தரிசனம் செய்ய வேண்டும்.
கீழ்பகுதியில், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், கிழக்கு நோக்கியும், ஸ்ரீ மீனாட்சிஅம்மாள், தெற்கு நோக்கி தனி சன்னதிகளுடனும், மற்றும் மலைக் கோயில் செல்லும் வழியில் இடும்பன் சன்னதியும் உண்டு. 
முழுவதும், கற்றளியாக அமைத்துள்ளது சிறப்பு.

தனியாக திருமண மண்டபம், Prayer Hall, மற்றும் அணைத்து வசதிகளும் செய்யப்பட்டு பராமரிப்பில் உள்ளது. 

1990ல் இவ்வாலயம் குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டது. அன்றைய, பாரத ஜனாதிபதி, மேதகு R.வெங்கட்டராமன், அவர்கள் போஷகராகவும், திரு R.V.சுப்பிரமணியம், IAS, அவர்கள், ஸ்ரீ சுவாமிநாதசுவாமி சேவா சமாஜம் என்ற அமைப்பின் மூலம், புதுடில்லியில் வசிக்கும் தமிழர்கள் முயற்சியாலும், இவ்வாலயம் அமைக்கப்பட்டு, மிக நல்லமுறையில் இன்றும் பராமரித்து வருகிறார்கள். 

இவ்வாலய குன்றின் வடபகுதியில் தனியாக தட்சினகாளி ஆலயம் தனி Trust அமைக்கப்பட்டு சிறப்பான பராமரிப்பில் உள்ளது. இங்கு மூலவ மற்றும், தனி சிவலிங்கம், ராதாகிருஷ்ணர், அனுமான் சன்னதிகளும் உள்ளன.

ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். எல்லா விஷேசங்களும், விழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. 

புதுடெல்லி செல்பவர்கள் அவசியம் இவ்வாலயத்தை சென்று தரிசித்து வருகிறார்கள். 

#பயணஅனுபவக்குறிப்புக்கள்: 

இவ்வாலயங்கள் அருகில் Bus Stoping உள்ளது. இவ்வாலயம் செல்வதற்கு மட்டும் Taxi புதுடெல்லி Airport லிருந்து ரூ.300 ஆகிறது. 

7.04.2022 
நன்றி. 

#ஆலயதரிசனம்
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...